பொங்கலோ பொங்கல்..!
Post date: Jan 14, 2013 1:45:11 AM
ஆதவன் அருள்கொடுக்க மகரத்தில் அடியெடுக்கும்
பாதையைக் காட்டி-ஒளியின் போதனை ஊட்டிமற்றும்
வேதனை போக்கும்-நெஞ்சில் இன்பமும் சேர்கக்குமிந்த
தைத்திரு நாளாம்-பொங்கல் நல்லவோர் நாளில்நகரின்
தெய்வமாம் வல்லப கணபதி ராமதூதன்
மெய்விளை வீரம்கொண்டு பொய்களை ஆஞ்சநேயன்
கொய்கவே விரைந்துவந்து செய்கவே மங்கலங்கள்
நெய்விளை ஜோதிபோல செழிக்கவே நன்மனங்கள் ..!
_________________________