Post date: Jan 8, 2012 1:14:23 PM
உலகைக் காக்கும் தாயே சண்டி
உலகைத் தாக்கும் தீமை போக்கி
பலனை நோக்கும் சேயாய் வேண்டி
புலரும் மலருன் பாதம் அண்டி
யாவும் உருகும் யாகம் மூட்டி
நாவும் மணக்கும் நாமம் சொல்லி
நாங்கள் வந்தோம் உன்னைத் தேடி
அணைத்தே அருள்வாய் அனைத்தும் தாயே..!
(390+ Photos)