(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மை எதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார்.
திருவருகைக்காலத்தின் முதல் திங்கள்
(எரே 31:10; எசா 35:4) மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லை வரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார். இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.
திருவருகைக்காலத்தின் முதல் செவ்வாய்
(செக் 14:5, 7) இதோ! ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்; அந்நாளில் பேரொளி தோன்றும்.
திருவருகைக்காலத்தின் முதல் புதன்
(அப 2:3; 1 கொரி 4:5) ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.
திருவருகைக்காலத்தின் முதல் வியாழன்
(திபா 118:151, 152) ஆண்டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால், தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.
திருவருகைக்காலத்தின் முதல் வெள்ளி
தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை வழங்கவும் ஆண்டவர் இதோ! மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.
திருவருகைக்காலத்தின் முதல் சனி
(திபா 79:42) கெருபுகளின் மீது வீற்றிருக்கும் ஆண்டவரே, வாரும்; உமது முகத்தை எங்களுக்குக் காட்டும்; நாங்கள் மீட்படைவோம்.
(எசா 30:19, 30) சீயோன்வாழ் மக்களே, இதோ மக்களினத்தாரை மீட்பதற்காக அவர் வருவார். உங்கள் இதயங்களின் மகிழ்வில் ஆண்டவர் தமது குரலைக் கேட்கச் செய்வார்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் திங்கள்
(எரே 31:10; எசா 35:4) மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லை வரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார். இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்
(செக் 14:5, 7) இதோ ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்; அந்நாளில் பேரொளி தோன்றும்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் புதன்
(அப 2:3; 1 கொரி 4:5) ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வியாழன்
(திபா 118:151, 152) ஆண்டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால், தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வெள்ளி
தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை வழங்கவும் ஆண்டவர் இதோ! மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் சனி
(திபா 79:42) கெருபுகளின் மீது வீற்றிருக்கும் ஆண்டவரே, வாரும்; உமது முகத்தை எங்களுக்குக் காட்டும்; நாங்கள் மீட்படைவோம்.
(பிலி 4:4, 5) ஆண்டவரில் என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், அகமகிழுங்கள்; ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் திங்கள்
(எரே 31:10; எசா 35:4) மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லை வரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார். இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்
(செக் 14:5, 7) இதோ ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்; அந்நாளில் பேரொளி தோன்றும்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் புதன்
(அப 2:3; 1 கொரி 4:5) ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் வியாழன்
(திபா 118:151, 152) ஆண்டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால், தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் வெள்ளி
தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை வழங்கவும் ஆண்டவர் இதோ! மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் சனி
(திபா 79:42) கெருபுகளின் மீது வீற்றிருக்கும் ஆண்டவரே, வாரும்; உமது முகத்தை எங்களுக்குக் காட்டும்; நாங்கள் மீட்படைவோம்.
(எசா 45:8) வானங்கள் மேலிருந்து பொழியட்டும்; மேகங்கள் நீதிமானைப் பொழியட்டும்; நிலம் திறக்க மீட்பர் தோன்றட்டும்.
திருவருகைக்காலம் டிசம்பர் 17:
(எசா 49:13 வானங்கள் மகிழ்வுறட்டும்; மண்ணுலகு அக்களிக்கட்டும். ஏனெனில் நம் ஆண்டவர் வருவார்; தம் ஏழையர்பால் இரக்கம் கொள்வார்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 18:
நம் அரசர் கிறிஸ்து வருவார்; "வர இருக்கும் செம்மறி இவரே" என்று யோவான் முன்னறிவித்தார்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 19:
(எபி 10:37) வரவிருக்கிறவர் வந்து விடுவார்; காலம் தாழ்த்தமாட்டார். நம் எல்லைகளில் இனி அச்சம் இராது. ஏனெனில் அவரே நம் மீட்பர்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 20:
(எசா 11:1; 40:5; லூக் 3:6) ஈசாய் என்னும் அடி மரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; ஆண்டவரின் மாட்சியால் உலகு அனைத்தும் நிரப்பப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 21:
ஆட்சி புரியும் ஆண்டவர் விரைவில் வருவார். அவரது பெயர் "இம்மானுவேல்" என அழைக்கப்படும். ஏனெனில் கடவுள் நம்மோடு.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 22:
(திபா 23:7) கதவுகளே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; நிலையான கதவுகளே, மேலெழுங்கள்; மாட்சியின் மன்னர் உள்ளே நுழைவார்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 23:
(எசா 9:5; திபா 71:17) ஒரு குழந்தை நமக்குப் பிறப்பார். அவர் "வலிமைமிகு இறைவன்" என அழைக்கப்படுவார். உலகின் எல்லாக் குலங்களும் அவரில் ஆசி பெறும்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 24:
(கலா 4:4) இதோ! காலம் நிறைவுற்ற போது கடவுள் தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார்.
(விப 16:6, 7) இன்று அறிந்து கொள்ளுங்கள்; ஏனெனில் ஆண்டவர் வருவார்; நம்மை மீட்பார். காலையில் நீங்கள் அவருடைய மாட்சியைக் காண்பீர்கள்.
(திபா 2:7) ஆண்டவர் என்னிடம் உரைத்தார்: "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்."
அல்லது
நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோம்; ஏனெனில் நம் மீட்பர் உலகில் பிறந்துள்ளார்; இன்று நமக்கு விண்ணகத்திலிருந்து உண்மையான அமைதி இறங்கி வந்தது.
(எசா 9:1, 5; லூக் 1:33) இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ "வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை" என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.
(எசா 9:5) ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் உள்ளது. அவரது பெயர் "மாண்புறு மன்றத்தின் தூதர்" என அழைக்கப்படும்.
(லூக் 2:16) இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
(யோவா 3:16) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
(சாஞா 18:14, 15) எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்து விட்ட வேளையில், ஆண்டவரே, எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையை விட்டு எழுந்து வந்தது.
(எசா 3:5) ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் உள்ளது. அவரது பெயர் "மாண்புறு மன்றத்தின் தூதர்" என அழைக்கப்படும்.
வாழ்க, புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்றும் ஆளும் அரசரைப் பெற்றெடுத்தவர் நீரே.
அல்லது
(எசா 9:1,5; லூக் 1:33) இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ "வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை" என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.
(சாஞா 18:14, 15) எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்து விட்ட வேளையில், ஆண்டவரே, எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையை விட்டு எழுந்து வந்தது.
(பாரூ 5:5) எருசலேமே, எழுந்திரு; கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை உன் மக்கள் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளதைப் பார்.
(மலா 3:1; 1 குறி 28:12) இதோ, பேரரசராம் ஆண்டவர் வருகிறார்; அரசும் ஆற்றலும் ஆட்சியும் அவரது கையிலே.
புனிதமாக்கப்பட்ட நாள் நம்மை ஒளிர்வித்தது; மக்கள் இனத்தாரே, வாருங்கள்; ஆண்டவரை வணங்குங்கள். ஏனெனில் பேரொளி மண்ணின் மீது இறங்கி வந்துள்ளது.
(திபா 117:26, 27) ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் ஆண்டவரே கடவுள்; அவர் நம் மீது ஒளி வீசினார்.
(எசா 9:1) காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.
(யோவா 1:1) தொடக்கத்திலும் காலங்களுக்கு முன்னும் கடவுள் வாக்காக இருந்தார்; அவரே உலகின் மீட்பராகப் பிறக்கத் திருவுளமானார்.
(திபா 111:4) இதயத்தில் நேர்மையுள்ளவர்களுக்கு இருளில் ஒளி தோன்றியது; அருளும், இரக்கமும், நீதியும் உள்ளவர் ஆண்டவர்.
(கலா 4: 4, 5) நாம் சொந்த மக்களின் உரிமையைப் பெறும்படி கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறக்குமாறு அனுப்பினார்.
(மத் 3:16, 17) ஆண்டவர் திருமுழுக்குப் பெற்றவுடனே வானம் திறக்கப்பட்டது; புறா வடிவில் ஆவியார் அவர் மீது தங்கினார்; "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று தந்தையின் குரல் ஒலித்தது.
(திபா 90:15, 16) என்னைக் கூவி அழைப்பவருக்கு நான் செவிசாய்ப்பேன்; அவரை விடுவித்துப் பெருமைப் படுத்துவேன். நீடிய ஆயுளால் அவருக்கு நிறைவளிப்பேன்.
தவக்காலத்தின் முதல் திங்கள்
(திபா 122:2, 3) ஊழியர்களின் கண்கள் தங்கள் தலைவர்களின் கைகளை நோக்கி இருப்பது போல, நீர் எமக்கு இரங்கும் வரை, எம் கண்கள் எங்கள் கடவுளும் ஆண்டவருமான உம்மையே நோக்கி இருக்கும். எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே! எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தவக்காலத்தின் முதல் செவ்வாய்
(திபா 89:1, 2) ஆண்டவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம். ஊழி ஊழிக்காலமாய் உள்ளவர் நீரே.
தவக்காலத்தின் முதல் புதன்
(திபா 24:6, 2, 22) ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; எங்கள் பகைவர்கள் எங்களை ஒரு போதும் அடக்கி ஆள விடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.
தவக்காலத்தின் முதல் வியாழன்
(திபா 5:2, 3) ஆண்டவரே, என் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்தருளும்; என் புலம்பலைக் கவனித்தருளும். என் அரசரே, என் கடவுளே, என் கூக்குரலைக் கேட்டருளும்.
தவக்காலத்தின் முதல் வெள்ளி
(திபா 24:17, 18) ஆண்டவரே, என் கவலைகளிலிருந்து என்னைக் காத்தருளும். என் தாழ்மையையும், சுமையையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
தவக்காலத்தின் முதல் சனி
(திபா 18:8) ஆண்டவரின் சட்டம் நேரியது; ஆன்மாக்களுக்கு மீட்பு அளிக்கும். ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பகமானது; சிறியோருக்கு அது ஞானம் அளிப்பது.
(திபா 26:8, 9) என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; உமது முகத்தைப் பார்க்க விரும்பினேன்; ஆண்டவரே, உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.
அல்லது
(திபா 24: 6, 2, 22) ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; எங்கள் பகைவர்கள் எங்களை ஒரு போதும் அடக்கி ஆள விடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே, எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.
தவக்காலத்தின் இரண்டாம் திங்கள்
(திபா 25:11, 12) ஆண்டவரே, என்னை மீட்டருளும், என் மேல் இரக்கமாயிரும்; எனெனில் என் கால்கள் நேர் வழியில் நிற்கின்றன; திரு அவையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.
தவக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்
(திபா 12: 4, 5) என் விழிகளுக்கு ஒளியூட்டும்; நான் சாவில் என்றும் உறங்காதிருப்பேனாக. அவனை மேற்கொண்டேன் என்று என் எதிரி என்றும் சொல்லாதிருப்பானாக.
தவக்காலத்தின் இரண்டாம் புதன்
(திபா 37:22, 23) ஆண்டவரே, என் கடவுளே, என்னைக் கைவிடாதேயும்; என்னிடமிருந்து அகன்றுவிடாதேயும். ஆண்டவரே! என் மீட்பின் ஆற்றலே! எனக்குத் துணை புரிய வாரும்.
தவக்காலத்தின் இரண்டாம் வியாழன்
(திபா 138: 23, 24) இறைவா! என்னை ஆய்ந்து அறியும், என் எண்ணங்களைச் சோதித்துப் பாரும். தீய வழிகள் என்னிடம் உள்ளனவா எனப் பாரும்; என்றுமுள்ள வழியில் என்னை நடத்தியருளும்.
தவக்காலத்தின் இரண்டாம் வெள்ளி
(திபா 30:2, 5) ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை கொண்டேன்; நான் ஒரு போதும் வெட்கம் அடைய விடாதேயும்; எனவே அவர்கள் வைக்க கண்ணியினின்று என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என் அடைக்கலம்.
தவக்காலத்தின் இரண்டாம் சனி
(திபா 144: 8, 9) ஆண்டவர் இரக்கமும் பேரன்பும் உடையவர்; பொறுமையும் பேரிரக்கமும் கொண்டவர்; ஆண்டவர் எல்லாருக்கும் இனிமையானவர்; தம் படைப்புகள் அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர்.
(திபா 24: 15, 16) என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன, ஏனெனில் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஆதரவற்றவன்; ஏழை.
அல்லது
(எசே 36: 23-26) நான் உங்களில் என் தூய்மையை நிலைநாட்டும்போது பல நாடுகளிலிருந்து உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் தூய நீரை உங்கள் மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் நீங்கள் தூய்மையாவீர்கள். புதிய ஆவியை உங்களுக்குக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.
தவக்காலத்தின் மூன்றாம் திங்கள்
(திபா 83:3) என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் இதயமும் உடலும் வாழும் இறைவனில் அக்களிக்கின்றது.
தவக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்
(திபா 16: 6, 8) இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் உம்மைக் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும். ஆண்டவரே, கண்ணின் மணி என என்னைக் காத்தருளும். உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னைப் பாதுகாத்தருளும்.
தவக்காலத்தின் மூன்றாம் புதன்
(திபா 118:133) உமது வாக்கின்படி என் நடத்தைகளை நெறிப்படுத்தும்; தீயது எதுவும் என்னை மேற்கொள்ள விடாதேயும்.
தவக்காலத்தின் மூன்றாம் வியாழன்
மக்களின் மீட்பு நாமே, என்கிறார் ஆண்டவர்: எத்தகைய இடுக்கண்களில் எம்மைக் கூவி அழைத்தாலும், நாம் அவர்களுக்குச் செவிசாய்ப்போம்; நாம் என்றும் அவர்களுடைய ஆண்டவராய் இருப்போம்.
தவக்காலத்தின் மூன்றாம் வெள்ளி
(திபா 85:8, 10) ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவரும் இல்லை; ஏனெனில் நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்.
தவக்காலத்தின் மூன்றாம் சனி
(திபா 102:2, 3) என் ஆன்மாவே ஆண்டவரைப் போற்றிடு. அவருடைய நன்மைகள் அனைத்தையும் மறவாதே. அவர் உன் குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்.
(எசா 36:10, 11) எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று கூடுங்கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள்; அதனால் ஆர்ப்பரியுங்கள்; நீங்கள் நிறைவாக ஆறுதல் பெற்று மகிழ்வடையுங்கள்.
தவக்காலத்தின் நான்காம் திங்கள்
ஆண்டவர் மீது நான் நம்பிக்கை வைப்பேன்; அவரது இரக்கத்தில் நான் அக்களிப்பேன், அகமகிழ்வேன்; ஏனெனில் நீர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினீர்.
தவக்காலத்தின் நான்காம் செவ்வாய்
(எசா 55:1) தாகமாய் இருப்பவர்களே, நீர் நிலைகளுக்கு வாருங்கள்; பணம் இல்லாதவர்களே, வந்து மகிழ்வுடன் குடியுங்கள் என்கிறார் ஆண்டவர்.
தவக்காலத்தின் நான்காம் புதன்
ஆண்டவரே, இறைவா, தக்க காலத்தில் உம்மை நோக்கியே உள்ளது என் மன்றாட்டு; உறுதியான அருள்துணைக்கு ஏற்ப, உமது இரக்கப் பெருக்கினால் எனக்குச் செவிசாய்த்தருளும்.
தவக்காலத்தின் நான்காம் வியாழன்
(திபா 104:3, 4) ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக! ஆண்டவரைத் தேடுங்கள், உறுதி பெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள்!
தவக்காலத்தின் நான்காம் வெள்ளி
(திபா 53:3, 4) கடவுளே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் என்னை விடுவித்தருளும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.
தவக்காலத்தின் நான்காம் சனி
(திபா 17:5-7) சாவின் புலம்பல்கள் என்னைச் சூழ்ந்தன; பாதாளத்தின் துயர்கள் என்னைச் சுற்றி இறுக்கின; என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; தமது தூய கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்.
(திபா 42:1, 2) கடவுளே, எனக்கு நீதி வழங்கும்; இறைப்பற்றில்லாப் பிற இனத்தாரோடு என் வழக்குக்காக வாதிடும். தீயவரும் வஞ்சகருமான மனிதரிடமிருந்து என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என் கடவுள், என் ஆற்றல்.
தவக்காலத்தின் ஐந்தாம் திங்கள்
(திபா 55:2) ஆண்டவரே, என் மீது இரக்கம் வையும். ஏனெனில் மனிதர் என்னை நசுக்குகின்றனர்; நாள் முழுவதும் சண்டையிட்டு என்னைத் துன்புறுத்துகின்றனர்.
தவக்காலத்தின் ஐந்தாம் செவ்வாய்
(திபா 26:14) ஆண்டவருக்காகக் காத்திரு; துணிவுடன் செயலாற்று; உன் இதயம் உறுதி கொள்வதாக. ஆண்டவரை எதிர்பார்த்திரு.
தவக்காலத்தின் ஐந்தாம் புதன்
(திபா 17:48, 49) ஆண்டவரே, சினந்தெழும் மக்களிடமிருந்து என்னை விடுவிப்பவர் நீரே; என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்துவீர். என்னைக் கொடுமைப்படுத்துபவரிடமிருந்து நீர் என்னைக் காத்திடுவீர்.
தவக்காலத்தின் ஐந்தாம் வியாழன்
(எபி 3:15) கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் வாக்களிக்கப்பட்ட நிலையான உரிமைப்பேற்றைப் பெறுவார்கள். இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
தவக்காலத்தின் ஐந்தாம் வெள்ளி
(திபா 30:10,16,18) ஆண்டவரே, எனக்கு இரங்கும். ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும் என்னை விடுவித்துக் காத்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மைத் கூவி அழைத்தேன்.
தவக்காலத்தின் ஐந்தாம் சனி
(திபா 21:20, 7) ஆண்டவரே, உமது உதவி என்னை விட்டுத் தொலைவில் போய்விடச் செய்யாதேயும்; எனக்குத் துணை செய்ய வாரும்; ஏனெனில் நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கும் மக்களின் இகழ்ச்சிக்கும் உள்ளானேன்.
(மத் 21:9) தாவிதின் மகனுக்கு ஒசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே! இஸ்ரயேலின் அரசரே! உன்னதங்களிலே ஒசன்னா! உன்னதங்களிலே ஒசன்னா!
(யோவா 12:1, 12, 13; திபா 23:3-10) பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள் இருக்கையில் ஆண்டவர் எருசலேம் நகருக்குள் வருகையில் சிறுவர் அவரை எதிர்கொண்டனரே; கைகளில் குருத்தோலை தாங்கி, அவர்கள் பெருங்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனரே: உன்னதங்களிலே ஒசன்னா! இரக்கப் பெருக்குடன் வருகின்ற நீர், ஆசி பெற்றவரே!
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவரே இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்: உன்னதங்களிலே ஒசன்னா! இரக்கப் பெருக்குடன் வருகின்ற நீர், ஆசி பெற்றவரே!
(திபா 34:1, 2; 139:8) ஆண்டவரே, எனக்குத் தீங்கிழைப்போருக்கு எதிராக வழக்காடும்; என் மீது போர் தொடுப்போரோடு போர் புரியும். கேடயமும் படைக்கலமும் எடுத்து வாரும்; எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்; ஆண்டவரே, நீரே என் மீட்பின் ஆற்றல்.
(திபா 26:12) ஆண்டவரே, என்னைத் துன்புறுத்துவோரின் விருப்பத்துக்கு என்னைக் கையளித்து விடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சி சொல்வோரும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.
(பிலி 2:10, 8, 11) இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; ஏனெனில் ஆண்டவர் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். அதனால் "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" தந்தையாம் கடவுளின் மாட்சியில் உள்ளார்.
(கலா 6:14) நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை பாராட்ட வேண்டும்; அவரிலே தான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு; அவர் வழியாகவே நாம் மீட்கப் பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.
(வருகைப் பல்லவி கிடையாது; இறைவாக்கு வழிபாட்டுடன் ஆரம்பமாகும்)
(வருகைப் பல்லவி கிடையாது; நேரடியாகத் திருவிழிப்புச் சடங்குகள் ஆரம்பமாகும்)
(திபா 138:18, 5, 6) உயிர்த்தெழுந்தேன், உம்மோடு இன்றும் இருக்கிறேன், அல்லேலூயா! உமது கையை என் மீது வைத்தீர், அல்லேலூயா! உமது அறிவு வியப்பாய் உள்ளது, அல்லேலூயா, அல்லேலூயா!
அல்லது
(லூக் 24:34; திவெ 1:6) மெய்யாகவே ஆண்டவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா! மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் அவருக்கே உரியன, அல்லேலூயா, அல்லேலூயா!
| முதல் வாரம் | 2ஆம் வாரம் | 3ஆம் வாரம் | 4ஆம் வாரம் | 5ஆம் வாரம் | 6ஆம் வாரம் | 7ஆம் வாரம் |
(விப 13:59) பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு ஆண்டவர் உங்களைக் சென்றார்; அதனால் ஆண்டவரின் சட்டம் என்றும் உங்கள் வாயில் இருக்கட்டும், அல்லேலூயா!
அல்லது
(லூக் 24:34; திவெ 1:6) மெய்யாகவே ஆண்டவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா! மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் அவருக்கே உரியன, அல்லேலூயா, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் திங்கள்
(திபா 138:18, 5, 6) உயிர்த்தெழுந்தேன், உம்மோடு இன்றும் இருக்கிறேன், அல்லேலூயா! உமது கையை என் மீது வைத்தீர், அல்லேலூயா! உமது அறிவு வியப்பாய் உள்ளது, அல்லேலூயா, அல்லேலூயா!
அல்லது
தாம் உரைத்தவாறே ஆண்டவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்; அனைவரும் அகமகிழ்ந்து அக்களிப்போம்; ஏனெனில் அவரே என்றென்றும் ஆள்கிறார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் செவ்வாய்
(சீஞா 15:3, 4) ஞானமாகிய நீரைப் பருக அவர்களுக்கு அளித்தார்; அவர்களில் அது தளர்வுறாமல் நிலைத்திருக்கும். அது அவர்களை எக்காலத்திலும் மேம்படுத்தும், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் புதன்
(மத் 25:34) என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியைப் பெற்றுக் கொள்ளுங்கள், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் வியாழன்
(சாஞா 10:20, 21) ஆண்டவரே, வெற்றி அளிக்கும் உமது கைவன்மையை ஒருமிக்கப் போற்றினார்கள். ஏனெனில் பேச முடியாதவர்களின் நாவை ஞானம் திறந்தது. குழந்தைகளின் நாவைத் தெளிவாக்கியது. அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் வெள்ளி
(திபா 77:53) ஆண்டவர் தம் மக்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றார்: அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூடிக்கொண்டது, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் சனி
(திபா 104:43) ஆண்டவர் தம் மக்களை அக்களிப்போடும், தாம் தெரிந்தெடுத்தவர்களை மகிழ்ச்சியோடும் வெளிக் கொணர்ந்தார், அல்லேலூயா!
(1 பேதுரு 2:2) புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல வஞ்சகமற்ற ஞானப் பாலை அருந்த ஆர்வம் உள்ளவராய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளர்வீர்கள், அல்லேலூயா!
அல்லது
(4 எஸ் 2:36, 37) உங்கள் மாட்சியில் பெருமகிழ்ச்சி கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் உங்களை விண்ணரசுக்கு அழைத்துள்ளார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் திங்கள்
(உரோ 6:9) இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் செவ்வாய்
(திவெ 19:7, 8) மகிழ்வோம், பேருவகையுடன் அக்களிப்போம்; கடவுளுக்கே மாட்சி செலுத்துவோம். ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்றார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் புதன்
(திபா 17:50; 21:23) உம் மக்களிடையே உம்மைப் போற்றுவேன். ஆண்டவரே, உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் வியாழன்
(திபா 67:8, 9, 20) கடவுளே! நீர் புறப்பட்டு உம்முடைய மக்கள் முன் நடந்து சென்று, அவர்களோடு தங்குகையில் பூவுலகு அதிர்ந்தது; வானம் மழையைப் பொழிந்தது, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் வெள்ளி
(திவெ 5:9, 10) ஆண்டவரே, உமது இரத்தத்தால் குலம், மொழி, மக்களினம், நாடு ஆகிய அனைத்தினின்றும் எங்களை மீட்டுக் கொண்டீர்; எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் எங்களை கடவுளுக்காக ஏற்படுத்தினீர், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் சனி
(1 பேது 2:3) உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மை மிக்க செயல்களை அறிவியுங்கள். அவர் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார், அல்லேலூயா!
(திபா 65:1, 2) அனைத்துலகோரே, கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள், அவரது பெயருக்கு இசை பாடுவீர்; அவரது புகழை மாட்சிப்படுத்துங்கள், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் திங்கள்
தம் ஆடுகளுக்காக உயிரைக் கொடுத்த, தமது மந்தைக்காக உளம் கனிந்து உயிரைக் கொடுத்த நல்லாயன் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் செவ்வாய்
(திவெ 19:5; 12:10) கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள். ஏனெனில் இதோ மீட்பும் வல்லமையும் நம் கடவுளின் ஆட்சியும் மெசியாவின் அதிகாரமும் வந்துவிட்டன, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் புதன்
(திபா 70:8, 23) உமது புகழால் என் வாய் நிரம்புவதாக; அதனால் நான் உமக்குப் புகழ் பாட இயலும்; நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் உதடுகள் மகிழ்வுறும், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வியாழன்
(விப 15:1, 2) ஆண்டவருக்கு நாம் புகழ் பாடுவோம்; ஏனெனில் அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல், அவரே என் விடுதலை, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வெள்ளி
(திவெ 5:12) கொல்லப்பட்ட, ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் சனி
(கொலோ 2:12) நீங்கள் திருமுழுக்குப் பெற்ற போது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள், அல்லேலூயா!
(திபா 32:5, 6) ஆண்டவரது இரக்கத்தால் பூவுலகு நிறைந்துள்ளது; ஆண்டவரது வாக்கினால் வானங்கள் நிலைபெற்றுள்ளன, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் திங்கள்
(உரோ 6:9) இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனி மேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் செவ்வாய்
(திவெ 19:7, 6) மகிழ்வோம், பேருவகையுடன் அக்களிப்போம்; கடவுளுக்கே மாட்சி செலுத்துவோம். ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்றார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் புதன்
(திபா 17:50; 21:23) உம் மக்களிடையே உம்மைப் போற்றுவேன். ஆண்டவரே, உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் வியாழன்
(திபா 67:8, 9, 20) கடவுளே, நீர் புறப்பட்டு, உம்முடைய மக்கள் முன் நடந்து சென்று. அவர்களோடு தங்குகையில் பூவுலகு அதிர்ந்தது; வானம் மழையைப் பொழிந்தது, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் வெள்ளி
(திவெ 5:9, 10) ஆண்டவரே, உமது இரத்தத்தால் குலம், மொழி, மக்களினம், நாடு ஆகிய அனைத்தினின்றும் எங்களை மீட்டுக் கொண்டீர்; எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் எங்களை கடவுளுக்காக ஏற்படுத்தினீர், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் சனி
(1 பேது 2:9) உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மைமிக்க செயல்களை அறிவியுங்கள். அவர் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார், அல்லேலூயா!
(திபா 97:1, 2) ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள், ஏனெனில் ஆண்டவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் திங்கள்
தம் ஆடுகளுக்காக உயிரைக் கொடுத்த, தமது மந்தைக்காக உளம் கனிந்து உயிரைக் கொடுத்த நல்லாயன் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் செவ்வாய்
(திவெ 19:5; 12:10) கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள். ஏனெனில் இதோ மீட்பும் வல்லமையும் நம் கடவுளின் ஆட்சியும் மெசியாவின் அதிகாரமும் வந்துவிட்டன, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் புதன்
(திபா 70:8, 23) உமது புகழால் என் வாய் நிரம்புவதாக; அதனால் நான் உமக்குப் புகழ் பாட இயலும்; நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் உதடுகள் மகிழ்வுறும், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வியாழன்
(விப 15:1, 2) ஆண்டவருக்கு நாம் புகழ் பாடுவோம்; ஏனெனில் அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல், அவரே என் விடுதலை, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வெள்ளி
(திவெ 5:12) கொல்லப்பட்ட, ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் சனி
(கொலோ 2:12) நீங்கள் திருமுழுக்குப் பெற்ற போது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள், அல்லேலூயா!
(எசா 48:20) ஆரவாரக் குரலெழுப்பி, முழங்கி அறிவியுங்கள் : உலகின் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள். ஆண்டவர் தம் மக்களை மீட்டு விட்டார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் திங்கள்
(உரோ 6:9) இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனி மேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் செவ்வாய்
(திவெ 19:7, 6) மகிழ்வோம், பேருவகையுடன் அக்களிப்போம்; கடவுளுக்கே மாட்சி செலுத்துவோம். ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்றார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் புதன்
(திபா 17:50; 21:23) உம் மக்களிடையே உம்மைப் போற்றுவேன். ஆண்டவரே, உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன், அல்லேலூயா!
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா - திருவிழிப்புத் திருப்பலி
(திபா 67:33, 35) உலகிலுள்ள அரசர்களே, கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். வானங்களின் மேல், தொன்மை மிகு வானங்களின் மேல் ஏறி வரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவரது மாண்பும் வலிமையும் மேக மண்டலங்களில் உள்ளன, அல்லேலூயா!
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா - பகல் திருப்பலி
(திப 1:11) கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் வியாழன்
(திபா 67:8, 9, 20) கடவுளே! நீர் புறப்பட்டு உம்முடைய மக்கள் முன் நடந்து சென்று, அவர்களோடு தங்குகையில் பூவுலகு அதிர்ந்தது; வானம் மழையைப் பொழிந்தது, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் வெள்ளி
(திவெ 5:9, 10) ஆண்டவரே, உமது இரத்தத்தால் குலம், மொழி, மக்களினம், நாடு ஆகிய அனைத்தினின்றும் எங்களை மீட்டுக் கொண்டீர்; எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் எங்களை கடவுளுக்காக ஏற்படுத்தினீர், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் சனி
(1 பேது 2:9) உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மைமிக்க செயல்களை அறிவியுங்கள். அவர் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார், அல்லேலூயா!
(திபா 26:7-9) ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் என் குரலைக் கேட்டருளும்; என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; ஆண்டவரே, உமது முகத்தைப் பார்க்க விரும்பினேன். உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் திங்கள்
(திப 1:8) மேலிருந்து வரும் தூய ஆவியாரின் வல்லமையை உங்களிடத்தில் பெறுவீர்கள்; உலகின் கடை எல்லை வரை எனக்குச் சாட்சியாய் இருப்பீர்கள், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் செவ்வாய்
(திவெ 1:17, 18) நானே முதலும் முடிவுமாய் இருக்கின்றேன்; வாழ்பவருமான நான் இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கிறேன், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் புதன்
(திபா 46:2) மக்கள் அனைவருமேm களிப்புடன் கைகொட்டுங்கள் ; மகிழ்ச்சிக் குரலுடன் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் வியாழன்
(எபி 4:16) அருளின் அரியணையை நம்பிக்கையுடன் அணுகுவோமாக. அதனால் நாம் இரக்கத்தைப் பெறுவோம்; ஏற்ற வேளையில் உதவும் அருளைக் கண்டடைவோம். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் வெள்ளி
(திவெ 1:5, 6) கிறிஸ்து நம் மீது அன்பு கூர்ந்தார்; தமது இரத்தத்தினால் நம் பாவங்களிலிருந்து நம்மைக் கழுவினார்; ஆட்சியுரிமைப் பெற்றவர்களாகவும் குருக்களாகவும் கடவுளும் அவரது தந்தையுமானவருக்கு நம்மை ஏற்படுத்தினார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் சனி
(திப 1:14) பெண்களோடும் இயேசுவின் தாய் மரியாவோடும், அவருடைய சகோதரர்களோடும் சீடர்கள் ஒரே மனதோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள், அல்லேலூயா!
பெந்தக்கோஸ்து ஞாயிறு - திருவிழிப்புத் திருப்பலி
(உரோ 5:5; 8:11) அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது, அல்லேலூயா!
பெந்தக்கோஸ்து ஞாயிறு - பகல் திருப்பலி
(சாஞா 1:7) ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது, அல்லேலூயா!
அல்லது
(உரோ 5:5; 8:11) அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது, அல்லேலூயா!
உயர்ந்த அரியணையில் வீற்றிருக்கும் ஒரு மனிதரைக் கண்டேன்; "அவருடைய ஆட்சியின் பெயர் என்றுமுளதாகும்" என எண்ணற்ற வானதூதர் ஒன்றாகப் பாடி, அவரை ஆராதிக்கின்றனர்.
(திபா 65:4) கடவுளே, உலகம் அனைத்தும் உம்மை ஆராதிக்கும்; உம் புகழ் பாடிடும்; உன்னதரே, உம் பெயருக்குப் பா ஒன்று இசைக்கும்.
(திபா 95:1, 6) ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகம் அனைத்துமே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆற்றலும் எழிலும் அவர் திருமுன் உள்ளன; மாட்சியும் புகழ்ச்சியும் அவரது திருத்தலத்தில் உள்ளன.
(திபா 105:47) எங்கள் கடவுளாகிய ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும். அதனால் நாங்கள் உமது திருப்பெயரை அறிக்கையிடுவோம்; உம்மைப் புகழ்வதில் மாட்சியுறுவோம்.
(திபா 94:6, 7) வாருங்கள்! கடவுளைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். ஏனெனில் அவரே நம் ஆண்டவராகிய கடவுள்.
(திபா 30: 3, 4) ஆண்டவரே, நீர் என்னைக் காப்பாற்றுபவராகவும் புகலிடமாகவும் இரும்; அதனால் நீர் என்னை மீட்டீர்; ஏனெனில் நீர் என் காறையாகவும் அடைக்கலமாகவும் உள்ளீர்; உமது பெயரின் பொருட்டு நீர் எனக்குத் தலைவராகவும் இருப்பீர்; எனக்கு உணவு அளிப்பீர்.
(திபா 12:6) ஆண்டவரே, நான் உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்தேன்; உமது மீட்பில் என் இதயம் அக்களித்தது; எனக்கு நன்மை செய்த ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்.
(திபா 17:19, 20) ஆண்டவர் என்னைக் காப்பாற்றுபவரானார்; நெருக்கடியிலிருந்து அவர் என்னை வெளிக் கொணர்ந்தார்; அவர் என்னை விரும்பியதால் அவர் என்னை விடுவித்தார்.
(திபா 24:16,18) ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும், என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஒர் ஆதரவற்றவன், ஏழை. என் தாழ்மையையும் சுமையையும் பாரும். என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும், என் இறைவா.
(திபா 26:1, 2) ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யார் முன் நான் அஞ்சி நடுங்க வேண்டும்? என் பகைவர்கள் என்னைப் தாக்கும் போது அவர்களே இடறி விழுந்தார்கள்.
(திபா 27:8, 9) ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே மீட்பு தரும் பாதுகாப்பு. ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; என்றென்றும் அவர்களை ஆண்டு நடத்தியருளும்.
(திபா 46:2) மக்கள் அனைவருமே, களிப்புடன் கைகொட்டுங்கள்; மகிழ்ச்சிக் குரலுடன் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
கடவுளே! உமது கோவிலின் நடுவில் நாங்கள் உமது இரக்கக்கைப் பெற்றுக் கொண்டோம்; கடவுளே! உமது பெயருக்கு ஏற்ப, உமது புகழும் உலகின் எல்லை வரை எட்டுவதாக. உமது வலக்கை நீதியால் நிறைந்துள்ளது.
நான் நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; உமது மாட்சியை நீர் வெளிப்படுத்தும் போது நான் நிறைவு பெறுவேன்.
(திபா 53:6, 8) இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் இருக்கின்றார்: தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன். ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன். ஏனெனில் அது நல்லது.
(திபா 67:6, 7, 36) கடவுள் தமது தூயகத்தில் உறைகின்றார்: தமது இல்லத்தில் மக்கள் ஒன்றுபட்டு வாழச் செய்கின்ற கடவுளே அவர்களுக்கு வலிமையையும் மனத்திடத்தையும் அளிப்பார்.
கடவுளே! எனக்குத் துணையாக வாரும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை ; நீரே என்னை விடுவிப்பவர். ஆண்டவரே! காலம் தாழ்த்தாதேயும்.
ஆண்டவரே, உமது உடன்படிக்கையை நினைத்தருளும். உம் ஏழையரின் ஆன்மாக்களை ஒரு போதும் கைவிடாதேயும். ஆண்டவரே! எழுந்து வாரும்! உமது வழக்கை நீரே நடத்தும். உம்மை நாடும் குரலை மறவாதேயும்.
(திபா 83:10, 11) எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்; நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். ஏனெனில் வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவிலின் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது.
ஆண்டவரே, என் மேல் இரக்கமாயிரும். ஏனெனில் நான் உம்மை நோக்கிக் கூக்குரலிட் கூக்குரலிட்டேன். ஏனெனில் ஆண்டவரே, நீர் இனியவர், பரிவுள்ளவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
ஆண்டவரே, நீர் நீதி உள்ளவர்; உமது தீர்ப்பு நேர்மையானது. உமது இரக்கத்துக்கு ஏற்ப உம் ஊழியனை நடத்தியருளும்.
(சீஞா 36:18) ஆண்டவரே, உமக்காகக் காத்திருப்போருக்கு அது அளித்தருளும்; அதனால் உம் இறைவாக்கினர்கள் தகுந்தவர்களாகக் காணப்படுவார்களாக. உம் ஊழியர்களின் மக்களாகிய இஸ்ரயேலரின் மன்றாட்டுகளுக்குச் செவிசாயும்.
மக்களின் மீட்பர் நாமே, என்கிறார் ஆண்டவர். எத்தகைய இடுக்கண்களில் என்னைக் கூவி அழைத்தாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்ப்பேன்; நான் என்றும் அவர்களுக்கு ஆண்டவராய் இருப்பேன்.
ஆண்டவரே, நீர் எங்களுக்குச் செய்த யாவற்றையும் உண்மையான தீர்ப்போடு செய்திருக்கிறீர். ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராக பாவம் செய்தோம். உம் கட்டளைகளுக்குப் பணிந்தோமில்லை அனால் உம் பெயரை மாட்சிப்படுத்தும்; உமது இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப எங்களை நடத்தும்.
(எஸ் 4:17) ஆண்டவரே, அனைத்தும் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன; உமது திருவுளத்தை எவராலும் எதிர்த்து நிற்க முடியாது. விண்ணையும் மண்ணையும் விண்ணின் கீழ் உள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்துக்கும் ஆண்டவர்.
(திபா 129:3, 4) ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார் தான் நிலைத்து நிற்க முடியும்? ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளே, உம்மிடமே மன்னிப்பு உள்ளது.
(திபா 16:6, 8) இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும். ஆண்டவரே, கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னைப் பாதுகாத்தருளும்.
(திபா 104:3, 4) ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக. ஆண்டவரைக் தேடுங்கள், உறுதி பெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள்.
(திபா 87:3) ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திரு முன் வருவதாக! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
(எரே 29:11, 12, 14) ஆண்டவர் கூறுகிறார்: நான் துன்பங்களின் எண்ணங்களை அல்ல, அமைதியின் எண்ணங்களை எண்ணுகிறேன். நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எல்லா இடங்களினின்றும் உங்களது அடிமைத்தனத்திலிருந்து உங்களை மீண்டும் அழைத்து வருவேன்.
(திபா 84:9) தம் மக்களுக்கும், தம் பற்று மிகு அடியாருக்கும் அவரிடம் மனம் திரும்புவோருக்கும் ஆண்டவர் நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.
தந்தையாகிய கடவுளும் கடவுளுடைய ஒரே திருமகனும் தூய ஆவியாரும் வாழ்த்தப் பெறுவாராக; ஏனெனில் அவர் நம் மீது தமது இரக்கத்தைப் பொழிந்தருளினார்.
(திபா 80:17) கோதுமையின் கொழுமையால் அவர் அவர்களுக்கு உணவளித்தார்; மலைத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்தார்.
(திபா 32:11,19) அவருடைய இதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாய் உள்ளன; அதனால் அவர்களது உயிரைச் சாவினின்று விடுவித்து, அவர்களுக்குப் பஞ்சத்திலும் உணவு அளிக்கின்றார்.
(திவெ 5:12; 1:6) கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது. இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன.