Search this site
Embedded Files

ஞாயிறு திருப்பலி
Tamil Mass
  • தமிழ் திருப்பலி
    • திருவிருந்துப் பல்லவி
    • தொடக்கவுரைகள்
    • வருகைப் பல்லவி
  • 01. திருக்குழும மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • 03. காணிக்கை மீது மன்றாட்டு
  • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • SINHALA MASS
Tamil Mass
  • தமிழ் திருப்பலி
    • திருவிருந்துப் பல்லவி
    • தொடக்கவுரைகள்
    • வருகைப் பல்லவி
  • 01. திருக்குழும மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • 03. காணிக்கை மீது மன்றாட்டு
  • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • SINHALA MASS
  • More
    • தமிழ் திருப்பலி
      • திருவிருந்துப் பல்லவி
      • தொடக்கவுரைகள்
      • வருகைப் பல்லவி
    • 01. திருக்குழும மன்றாட்டு
      • திருவருகைக்காலம்
      • தவக்காலம்
      • புனித வாரம்
      • பாஸ்கா காலம்
      • பொதுக்காலம்
    • 03. காணிக்கை மீது மன்றாட்டு
    • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
      • திருவருகைக்காலம்
      • தவக்காலம்
      • புனித வாரம்
      • பாஸ்கா காலம்
      • பொதுக்காலம்
    • SINHALA MASS

திருவருகைக்காலம்

| முதல் வாரம் | 2ஆம் வாரம் | 3ஆம் வாரம் | 4ஆம் வாரம் |  கிறிஸ்து பிறப்பு |

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு மன உறுதியை அளித்தருளும்; அதனால் வரவிருக்கும் உம் கிறிஸ்துவை அவர்கள் நீதிச் செயல்களுடன் எதிர்கொள்ளவும் அவரது வலப் பக்கத்தில் சேர்க்கப்பட்டு விண்ணக அரசைப் பெற்றுக் கொள்ளவும் தகுதி பெறுவார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் முதல் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, உம் திருமகன் கிறிஸ்துவின் வருகையை நாங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கச் செய்தருளும்; அவர் வந்து தட்டும் போது நாங்கள் வேண்டலில் விழித்திருப்பதையும் மகிழ்வோடு அவரது புகழ் பாடுவதையும் அவர் காண்பாராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் முதல் செவ்வாய்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே இறைவா, எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; எங்கள் துன்பத்தில் உமது பரிவிரக்கத்தின் உதவியைத் தந்தருள வேண்டுகின்றோம்: வரவிருக்கும் உம் திருமகனின் உடனிருப்பால் நாங்கள் ஆறுதல் பெற்று, எங்களைத் தொற்றிக் கொண்டிருக்கும் பழைய பாவப் பழக்கங்களால் மீண்டும் பாதிக்கப்படாமல் இருப்போமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் முதல் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, உமது இறைத்தன்மையின் ஆற்றலால் எங்கள் இதயங்களைத் தயாரிப்பீராக; அதனால் உம் திருமகன் கிறிஸ்து வருகின்ற போது நிலைவாழ்வின் விருந்துக்கு நாங்கள் தகுதி உள்ளவர்களாகக் காணப்படவும் அவரே அளிக்கும் விண்ணக உணவைப் பெற்றுக் கொள்ளவும் உரிமைப் பேற்றை அடைவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் முதல் வியாழன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது வல்லமையை எம்முள் தூண்டியெழுப்பிப் பேராற்றலுடன் எங்களுக்கு உதவியருளும்; அதனால் எங்கள் பாவங்கள் தடைசெய்பவற்றை உமது மன்னிக்கும் அருளால் நாங்கள் விரைவாய்ப் பெற்றுக் கொள்வோமாக

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் முதல் வெள்ளி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது வல்லமையோடு விரைந்து வாரும்; எங்கள் பாவங்களை முன்னிட்டு நெருங்கி வரும் ஆபத்துகளிலிருந்து உமது அருள்காவலால் பாதுகாக்கப் பெற்று, நீர் அருளும் விடுதலையால் நாங்கள் மீட்பைக் காண்போமாக.

தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் முதல் சனி:

மன்றாடுவோமாக! இறைவா, பழைய அடிமை நிலையிலிருந்து மனிதக் குலத்தை விடுவிப்பதற்காக உம் ஒரே திருமகனை நீர் இவ்வுலகுக்கு அனுப்பினீர்; இறைப்பற்றுடன் அவரை எதிர்பார்த்திருப்போருக்கு உமது விண்ணகப் பரிவிரக்கத்தின் அருளை அளித்தருளும்: அதனால் நாங்கள் உண்மையான விடுதலையின் கைம்மாற்றைப் பெற்றுக் கொள்வோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் திருமகனை எதிர்கொள்ள விரைந்து செல்வோரை உலகம் சார்ந்த செயல்கள் எவையும் தடைசெய்யாதிருப்பனவாக; விண்ணக ஞானத்தின் படிப்பினையோ எங்களை அவருடன் தோழமை கொள்ளச் செய்வதாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் இரண்டாம் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்கள் விண்ணப்ப மன்றாட்டுகள் உம்மை நோக்கி எழுந்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் ஊழியர் நாங்கள் மாசற்ற தூய்மையோடு எழுப்பும் இறைவேண்டல்கள் உம் ஒரே திருமகன் மனிதர் ஆன மாபெரும் மறைநிகழ்வுக்கு வந்து சேர்வனவாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! இறைவா, உமது மீட்பைப் பூவுலகின் கடை எல்லைவரைக்கும் அறிவித்தீரே; அதனால் கிறிஸ்து பிறப்பு விழாவின் மாட்சியை நாங்கள் மகிழ்வுடன் எதிர்நோக்கிட எங்களுக்கு அருள் புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் இரண்டாம் புதன்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியைத் தயாரிக்க எங்களுக்குக் கற்பிக்கின்றீர்; எவ்வகை நோய்களாலும் தளர்வுறாமல் இருக்க விண்ணக மருத்துவரின் ஆறுதல் அளிக்கும் உடனிருப்பில் நாங்கள் நிலைத்திருப்போமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வியாழன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் வழிகளைத் தயாரிக்க எங்கள் இதயங்களைத் தூண்டியெழுப்பியருளும்; அவரது வருகையால் நாங்கள் தூய்மையாக்கப்பட்ட மனதுடன் உமக்கு ஊழியம் செய்யத் தகுதி பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகனின் வருகையை மிகுந்த விழிப்புடன் எதிர்பார்த்திருக்க உம் மக்களுக்கு அருள் தாரும்; அதனால் எங்கள் மீட்பின் ஊற்றாகிய அவரே கற்றுக் கொடுத்தது போல எரிகின்ற விளக்குகளுடன் அவரை எதிர்கொள்ள விழித்திருந்து விரைந்து செல்வோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் இரண்டாம் சனி:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, உமது மாட்சியின் பேரொளி எங்கள் உள்ளங்களில் உதித்தெழுவதாக; அதனால் இரவின் ஆட்சி அனைத்தும் நீக்கப்பட்டு, உம் ஒரே திருமகனின் வருகை எங்களை ஒளியின் மக்களாக வெளிப்படுத்துவதாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! இறைவா, இயேசுவின் பிறப்புப் பெருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உம் மக்களை நீர் கண்ணோக்குகின்றீர்; அதனால் இத்தகைய மாபெரும் மீட்பின் மகிழ்வுக்கு நாங்கள் வந்து சேரவும் இதைப் பெருமகிழ்வோடும் மேலான வேண்டலோடும் என்றுமே கொண்டாடவும் ஆற்றல் பெற அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் மூன்றாம் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்கள் குரலுக்குப் பரிவிரக்கமுடன் செவிசாய்க்க உம்மை வேண்டுகின்றோம்: எங்களைச் சந்திக்க வருகின்ற உம் திருமகனின் அருள் இருளடர்ந்த எங்கள் இதயங்களை ஒளிர்விப்பதாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! இறைவா, உம் ஒரே திருமகன் வழியாக நீர் எங்களைப் புதுப் படைப்பாக்கியுள்ளீர்; உம் இரக்கச் செயல்கள், உம் திருமகனின் வருகை ஆகியவற்றை முன்னிட்டு எங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; எங்கள் பழைய வாழ்வின் மாசுகள் அனைத்திலிருந்தும் எங்களைத் தூய்மைப்படுத்துவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் மூன்றாம் புதன்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, வரவிருக்கும் உம் திருமகனின் பெருவிழா இவ்வாழ்வின் சிக்கல்களிலிருந்து எங்களுக்கு விடுதலை வழங்கிட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அது நிலையான கைம்மாற்றையும் எங்களுக்குத் தருவதாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் மூன்றாம் வியாழன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்கள் செயல்களினால் விளைந்த பாவம் உம் தகுதியற்ற அடியார்களாகிய எங்களைத் துயரத்தில் ஆழ்த்துகின்றது; எனவே உம் ஒரே திருமகனின் மீட்பு அளிக்கும் வருகை எங்களை மகிழ்விக்க அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலத்தின் மூன்றாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, உமது அருள் என்றும் எங்கள் முன் செல்லவும் எங்களைப் பின்தொடரவும் செய்வீராக; உம் ஒரே திருமகனின் வருகைக்காக இதயத்தின் பேராவலுடன் காத்திருக்கும் நாங்கள் இன்றைய வாழ்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் தேவையான உதவியைப் பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது அருளை எங்கள் மனங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் மனிதர் ஆனதை வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்; அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மாட்சி பெற நீர் எங்களை அழைத்துச் செல்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலம் டிசம்பர் 17:

மன்றாடுவோமாக! இறைவா, மனித இயல்பை உண்டாக்கியவரும் மீட்டவரும் நீரே, என்றும் கன்னியான மரியாவின் வயிற்றில் உம் வார்த்தை மனித உடல் எடுக்க விரும்பினீரே; எங்கள் வேண்டல்களைக் கனிவுடன் கண்ணோக்கி உம் ஒரே திருமகன் எங்கள் மனித இயல்பை ஏற்றதன் வழியாக அவரது இறை இயல்பில் பங்குகொள்ள எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவாராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலம் டிசம்பர் 18:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, பழைய அடிமைத்தனத்தினால் விளைந்த பாவச் சுமையால் நாங்கள் அழுத்தப்படுகின்றோம்; நாங்கள் எதிர்பார்த்திருக்கும் உம் ஒரே திருமகனின் புதுமையான பிறப்பால் விடுதலை பெற அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலம் டிசம்பர் 19:

மன்றாடுவோமாக! இறைவா, புனித கன்னியின் மகப்பேறு வழியாக உமது மாட்சியின் பேரொளியை உலகுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானீரே; அதனால் மனிதர் ஆன இவ்வியத்தகு மறைநிகழ்வை முழுமையான நம்பிக்கையோடு தொழுது, இறைப்பற்றுதலுடன் என்றும் கொண்டாட எங்களுக்கு அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலம் டிசம்பர் 20:

மன்றாடுவோமாக! நிலையான மாண்புள்ள இறைவா, விண்ணகத் தூதரின் அறிவிப்பால் மாசற்ற கன்னி சொல்லற்கரிய உமது வார்த்தையை ஏற்றுக்கொண்டார்; இறை இயல்பின் இல்லமாகி, தூய ஆவியாரின் ஒளியால் நிரப்பப்பட்ட அவரது முன்மாதிரியால் நாங்கள் உமது திருவுளத்தைப் பணிவுடன் பற்றிக்கொள்ள ஆற்றல் பெற அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலம் டிசம்பர் 21:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் மக்களின் மன்றாட்டுகளை இரக்கமுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் மனித உடல் எடுத்து வரும் உம் ஒரே திருமகனின் வருகையில் மகிழ்வுறும் அவர்கள் அவர் தமது மாட்சியில் வரும்போது நிலைவாழ்வின் பரிசைப் பெற்றுக்கொள்வார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலம் டிசம்பர் 22:

மன்றாடுவோமாக! இறைவா, சாவுக்கு உட்பட்ட மனிதரைக் கண்ணுற்று உம் ஒரே திருமகனின் வருகையால் அவர்களை மீட்கத் திருவுளம் கொண்ட உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: அவர் மனிதர் ஆனதைத் தாழ்ச்சிமிகு இறைப்பற்றுடன் அறிக்கையிடும் அவர்கள் மீட்பராகிய அவருடன் தோழமை கொள்ளவும் தகுதி பெறுவார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலம் டிசம்பர் 23:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகன் மனிதர் ஆன பிறப்பு விழா நெருங்கி வருவதை உணர்ந்து உம்மை வேண்டுகின்றோம்: அதனால் கன்னி மரியாவிடமிருந்து மனிதராய்ப் பிறந்து எம்மிடையே குடி கொள்ளத் திருவுளமான எங்கள் ஆண்டவரும் இயேசு கிறிஸ்துவுமான வார்த்தை, உம் தகுதியற்ற அடியார்களாகிய எங்களுக்கு இரக்கத்தைத் தருவாராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருவருகைக்காலம் டிசம்பர் 24:

மன்றாடுவோமாக! ஆண்டவரே இயேசுவே, காலம் தாழ்த்தாது விரைந்து வர உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொள்வோர், உமது வருகையின் ஆறுதலால் தேற்றப்படுவார்களாக. 

தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - திருவிழிப்புத் திருப்பலி:

மன்றாடுவோமாக! இறைவா, ஆண்டுதோறும் எங்கள் மீட்பை எதிர்பார்த்திருக்கச் செய்வதனால் எங்களை மகிழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் ஒரே திருமகனை மீட்பராக மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்ற நாங்கள், நடுவராக வரும் அவரை நம்பிக்கையுடன் சந்திக்கவும் தகுதி பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - இரவுத் திருப்பலி:

மன்றாடுவோமாக! இறைவா, உண்மை ஒளியின் சுடரால் இப்புனிதமிக்க இரவை ஒளிரச் செய்தீர்; அதனால் இம்மண்ணகத்தில் அவரது ஒளியின் மறைநிகழ்வுகளை அறிந்திருக்கும் நாங்கள் விண்ணகத்திலும் அவரது மகிழ்ச்சியை அனுபவிக்க அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - விடியல் திருப்பலி:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, மனித உடல் எடுத்த உம் வார்த்தையின் புதிய ஒளியால் நிரப்பப்பட்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இது எங்கள் செயலில் சுடர்விட்டு எங்கள் மனதில் நம்பிக்கை வழியாய் ஒளிர்வதாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - பகல் திருப்பலி:

மன்றாடுவோமாக! இறைவா, மனிதத்தன்மையின் மாண்பினை வியத்தகு முறையில் படைத்து, அதனினும் வியத்தகு முறையில் சீர்படுத்தினீர்; எங்களது மனித இயல்பில் பங்குகொள்ள அருள்கூர்ந்த அவரது இறை இயல்பில், நாங்கள் பங்கு பெற அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருக்குடும்பம் பெருவிழா:

மன்றாடுவோமாக! இறைவா, எங்களுக்குத் திருக்குடும்பத்தின் சிறந்த எடுத்துக்காட்டை அளிக்கத் திருவுள மான உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: குடும்பப் பண்புகளிலும் அன்பின் பிணைப்புகளிலும் நாங்கள் அதைப் பின்பற்றி, உமது இல்லத்தின் நிலையான பரிசை மகிழ்வுடன் பெறச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 29:

மன்றாடுவோமாக! கட்புலனாகாதவரும் எல்லாம் வல்லவருமான இறைவா, உமது ஒளியின் வருகையால் உலகின் இருளை அகற்றினீரே; அமைதி தவழும் முகத்துடன் எம்மைக் கண்ணோக்க வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுடைய பிறப்பின் மாட்சியைத் தகுந்த முறையில் முழக்கமிட்டுப் புகழ்வோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 30:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பழைய அடிமைநிலையினால் விளைந்த பாவச் சுமையால் அழுத்தப்பட்டுள்ள எங்களை உம் ஒரே திருமகன் மனிதர் ஆன பிறப்பு நிகழ்வு விடுவிப்பதாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 31:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் பிறப்பில் முழுமையான மறைநெறியின் தொடக்கத்தையும் நிறைவையும் நிலைநிறுத்தத் திருவுளமான உம்மை வேண்டுகின்றோம்: மனிதர் அனைவருடைய மீட்பின் முழுமையும் அடங்கியிருக்கின்ற அவரது உரிமைச் சொத்தில் நாங்களும் பங்குகொள்ள அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

இறைவனின் தாய் புனித மரியா பெருவிழா - ஜனவரி 1:

மன்றாடுவோமாக! இறைவா, புனித மரியாவின் வளமையான கன்னிமையால் மனிதக் குலத்துக்கு நிலையான மீட்பின் பரிசுகளை வழங்கினீரே; அவரது பரிந்துரையை நாங்கள் உணரவும் அவர் வழியாக வாழ்வின் ஊற்றாகிய உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்க அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக்குப் பின் வரும் 2-ஆம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நம்பிக்கை கொண்டுள்ள ஆன்மாக்களின் பேரொளியாகிய நீர், உலகை உமது மாட்சியால் கனிவுடன் நிரப்பத் திருவுளம் கொண்டீரே; உமது ஒளியின் சுடரால் எல்லா மக்களுக்கும் உம்மை வெளிப்படுத்துவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருக்காட்சிப் பெருவிழா - திருவிழிப்புத் திருப்பலி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது மாண்பின் பேரொளி எங்கள் இதயங்களுக்கு ஒளியூட்ட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகின் இருளைக் கடக்கும் வலிமை பெற்று நிலையான மாட்சியின் நாட்டுக்கு வந்து சேர்வோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருக்காட்சிப் பெருவிழா - பகல் திருப்பலி:

மன்றாடுவோமாக! இறைவா, விண்மீன் வழிநடத்த உம் ஒரே திருமகனை இன்று பிற இனத்தாருக்கு வெளிப்படுத்திய நீர் கனிவுடன் வரம் அருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம்மை ஏற்கெனவே நம்பிக்கையால் அறிந்துள்ள நாங்கள் உமது மாட்சியின் தோற்றத்தைக் கண்டுகளிக்கும்வரை வழிநடத்தப்படுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - திங்கள்:

திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் மக்களின் நம்பிக்கைக்கு அசைக்கமுடியாத உறுதியை அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மோடு நிலையான மாட்சியில் இருக்கும் உம் ஒரே திருமகன் உண்மையாகவே எங்கள் மனித உடல் எடுத்துக் கன்னித் தாயிடமிருந்து பிறந்ததை அறிக்கையிடுவதால் அவர்கள் இன்றைய இன்னல்களிலிருந்து விடுதலை பெற்று நிலையான மகிழ்வில் சேர்க்கப்படுவார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்:
மன்றாடுவோமாக! இறைவா, உம் வார்த்தையின் முடிவற்ற தன்மை விண்ணக முற்றத்தை அழகுபடுத்த உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு கன்னி மரியா வழியாக எங்களது மனித உடலின் வலுவின்மையை ஏற்றுக்கொண்டு உண்மையின் சுடராய் எங்களில் தோன்றிய அவர் உலகின் மீட்புக்காக முழுமையான ஆற்றலோடு முன்செல்வாராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - செவ்வாய்:

திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முன்:
மன்றாடுவோமாக! இறைவா, புனித கன்னியின் பேறுபெற்ற மகப்பேற்றினால் உம் திருமகனின் பிறப்பை மனித இனத்தின் பாவக் கறை தீண்டாதிருக்கச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இப்புதுப் படைப்பினால் ஆட்கொள்ளப்பட்ட நாங்கள் எங்களைத் தொற்றிக் கொண்டிருக்கும் பழைய பாவப் பழக்கங்களிலிருந்து விடுதலை பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்:
மன்றாடுவோமாக! இறைவா, உம் ஒரே திருமகன் எங்களது மனித உடலின் தன்மையில் தோன்றினார்; இவ்வாறு தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை நாங்கள் கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்களுக்கு அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - புதன்:

திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முன்:
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்குக் கனிவாய் இரங்கியருளும்; அதனால் உலகின் மீட்புக்காகப் புறப்பட்ட விண்ணகப் புத்தொளி எப்பொழுதும் எங்கள் இதயங்களைப் புதுப்பிப்பதாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்:
மன்றாடுவோமாக! இறைவா, எல்லா மக்களையும் ஒளிர்விப்பவரே, முடிவில்லா அமைதியில் மகிழ உம் மக்களுக்கு அருள் தாரும்; எங்கள் முன்னோர்களின் மனங்களில் நீர் வீசிய பேரொளியை எங்கள் இதயங்களிலும் பொழிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - வியாழன்:

திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முன்:
மன்றாடுவோமாக! இறைவா, உம் ஒரே திருமகனின் பிறப்பினால் உம் மக்களுக்கு வியத்தகு முறையில் மீட்பின் பயனை அளிக்கத் தொடங்கியுள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியார்கள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்து தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாட்சியின் பரிசைப் பெற்றிட அவரின் வழிநடத்துதலால் வந்து சேர்வார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்:
மன்றாடுவோமாக! இறைவா, உம் திருமகன் வழியாக எல்லா மக்களிலும் உமது நிலையான ஒளியை ஏற்றினீரே; உம் மக்களின் உள்ளத்தில் மீட்பரின் ஒளி பெருகுவதால் அவரது முடிவில்லா மாட்சிக்கு அவர்கள் வந்து சேர்வார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - வெள்ளி:

திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டோரைக் கனிவுடன் ஒளிர்விக்க உம்மை வேண்டுகின்றோம்: அவர்களின் இதயங்களை உமது மாட்சியின் பேரொளியால் என்றும் பற்றியெரியச் செய்தருளும்; அதனால் அவர்கள் தங்கள் மீட்பரை இடைவிடாமல் ஏற்று உண்மையாகவே பற்றிக்கொள்வார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்:
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் உம்மிடம் மன்றாடுவதை எங்களுக்குக் கனிவாய் அளித்தருள உம்மை வேண்டுகின்றோம்: விண்மீனின் வழிகாட்டுதலால் அறிவிக்கப்பட்ட உலக மீட்பரின் பிறப்பு எங்கள் மனங்களுக்கு என்றும் வெளிப்படுத்தப்பட்டுப் பயன் அளிப்பதாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - சனி:

திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முன்:
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகனுடைய வருகையின் புத்தொளி சுடர்வீசிட நீர் திருவுள மானீரே; கன்னியின் மகப்பேறு வழியாக எங்கள் மனித உடலின் சாயலில் அவர் பங்குபெற்றதால் தகுதி அடைந்துள்ள நாங்கள் அவருடைய அருளாட்சியிலும் பங்குபெறத் தகுதி பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்:
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகன் வழியாக எங்களை உம் புதுப் படைப்புகளாக்கிய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது அருளினால் அவருடைய சாயலில் நாங்கள் காணப்படவும் அவரில் எங்கள் இயல்பு உம்மோடு இணைந்திருக்கவும் கனிவாய் அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

ஆண்டவருடைய திருமுழுக்குப் பெருவிழா:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்துவின் மீது தூய ஆவி இறங்கி வர, அவரை உம் அன்பார்ந்த மைந்தர் எனச் சிறந்த முறையில் அறிக்கையிட்டீரே; தண்ணீராலும் தூய ஆவியாலும் புதுப் பிறப்பு அடைந்துள்ள மக்களை உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட நீர் அவர்கள் உமக்கு ஏற்புடையவர்களாக என்றும் நிலைத்திருக்க அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

அல்லது

மன்றாடுவோமாக! இறைவா, உம் ஒரே திருமகன் எங்களது மனித உடலின் தன்மையில் தோன்றினார்; இவ்வாறு தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை நாங்கள் கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

புனிதர்கள் 
செபங்கள் 
Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse