மன்றாடுவோமாக! ஆண்டவரே, புனித நோன்புகளின் வழியாகக் கிறிஸ்தவ வாழ்வின் போராட்டத்தைத் தொடங்க எங்களுக்கு உதவியருளும்; அதனால் ஆன்மீகத் தீமைகளுக்கு எதிராக நாங்கள் போரிட்டு, தன்னடக்கத்தின் உதவியால் காக்கப்படுவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்கள் தவச் செயல்கள் உம்மை நோக்கிய வண்ணம் இருக்கவும், அவற்றை நாங்கள் தொடர்ந்து ஆற்றவும் எங்களுக்கு உதவியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எப்பொழுதும் உம்மிடமிருந்து தொடங்கும் எங்கள் செயல்கள் அனைத்தும் உம் வழியாகவே நிறைவு பெறுவனவாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் தொடங்கி இருக்கும் தவ முயற்சிகளைத் தொடர்ந்து கடைப்பிடித்திடக் கனிவுடன் துணை புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உடலளவில் மேற்கொள்ளும் தவ முயற்சிகளை நேர்மையான மனதுடன் நிறைவேற்றுவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி:
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் வலுவின்மையை இரக்கத்துடன் கண்ணோக்கியருளும்; மாட்சிக்கு உரிய உமது வலக் கையை நீட்டி எங்களைப் பாதுகாத்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, ஆண்டு தோறும் நாங்கள் கடைப்பிடிக்கும் தவக்கால அருளடையாளச் செயல்களால் கிறிஸ்துவின் மறையுண்மைகளைப் புரிந்து கொள்வதில் முன்னேற எங்களுக்கு உதவியருளும்; அதனால் அவற்றின் பயன்களை எங்கள் நன்னடத்தையால் அடைவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் திங்கள்:
மன்றாடுவோமாக! இறைவா, எங்கள் மீட்பரே, எங்களை மனந்திருப்பியருளும்; இவ்வாறு விண்ணக நெறியை நாங்கள் கற்றுக் கொள்வதால் தவ முயற்சி எங்களுக்குப் பயன் அளிப்பதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் செவ்வாய்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது குடும்பத்தைக் கண்ணோக்கி அதற்கு உதவியருளும்; உடல் ஒறுத்தலால் எங்கள் மனங்கள் தூய்மை அடைந்து உம்மீது கொள்ளும் ஆவலால் சுடர்விடச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் புதன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் மக்களின் இறைப்பற்றைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: தவ முயற்சியால் தங்கள் உடலை அடக்கி ஆளும் அவர்கள் நற்செயலின் பயனால் தங்கள் மனதைப் புதுப்பித்துக் கொள்வார்களாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் வியாழன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, என்றும் நேர்மையானதையே நினைத்து அதையே உடனடியாகச் செயல்படுத்தும் உள்ளத்தை எங்களுக்குத் தந்தருள் உம்மை வேண்டுகின்றோம்: உம்மாலன்றி உயிர் வாழ இயலாத நாங்கள் உமக்கு ஏற்ப வாழ ஆற்றல் பெறுவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் வெள்ளி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டோர் பாஸ்காவைத் தகுந்த முறையில் கொண்டாட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் ஆர்வமுடன் ஏற்றுக்கொண்ட உடலின் தன்னடக்கம் அனைவரின் ஆன்மாக்களுக்கும் பயன் அளிப்பதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் சனி:
மன்றாடுவோமாக! என்றுமுள்ள தந்தையே, எங்கள் இதயங்களை உம்பால் திருப்பியருளும்; அதனால் நாங்கள் என்றும் தேவையான ஒன்றை மட்டுமே நாடி பிறரன்புச் செயல்களை ஆற்றி, உம்முடைய வழிபாட்டுக்கு எங்களையே அர்ப்பணித்தவர்களாய் வாழ அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! இறைவா, உம் அன்புத் திருமகனுக்கு நாங்கள் செவிசாய்க்க எங்களுக்குக் கட்டளையிட்டு உமது வார்த்தையினால் எங்கள் உள்ளத்துக்கு ஊட்டம் அளிக்கத் திருவுளம் கொண்டீரே; அகவொளியால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு உமது மாட்சியைக் கண்டு மகிழ்வோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் இரண்டாம் திங்கள்:
மன்றாடுவோமாக! இறைவா, எங்கள் ஆன்மாக்களின் நலனுக்காக உடலை ஒறுக்கக் கற்பித்தீரே; அதனால் நாங்கள் பாவங்கள் அனைத்தையும் விட்டு விலகவும் பரிவிரக்கத்துடன் நீர் தந்த உம் கட்டளைகளைக் கடைப் பிடிக்கவும் எங்கள் இதயங்களுக்கு ஆற்றல் தருவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது திரு அவையை முடிவில்லாப் பேரிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் உம்மால் அன்றிச் சாவுக்கு உரிய மனித இனம் வீழ்ச்சியுறும்; அது என்றும் உம் உதவிகளால் தீமைகளிலிருந்து விடுவிக்கப்படவும் மீட்புக்கு உரியவற்றுக்கு இட்டுச்செல்லப்படவும் அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் இரண்டாம் புதன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நற்செயல்களால் என்றும் பயிற்சி பெற்ற உமது குடும்பத்தைக் காத்தருளும்; இவ்வாறு அன்றாட உதவிகளால் ஆறுதல் அளித்து விண்ணகக் கொடைகளுக்கு அவர்களைக் கனிவுடன் இட்டுச்செல்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் இரண்டாம் வியாழன்:
மன்றாடுவோமாக! இறைவா, மாசின்மையை மீண்டும் தருபவரும் அதை அன்பு செய்பவருமானவரே, உம் ஊழியர்களின் இதயங்களை உம்மிடம் திருப்பியருளும்: அதனால் அவர்கள் உம் ஆவியார் மீது உள்ள பற்றினால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கையில் உறுதி மிக்கவர்களாகவும் செயலில் ஆற்றல்மிக்கவர்களாகவும் திகழச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் இரண்டாம் வெள்ளி:
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் ஆர்வமுடன் கடைப்பிடிக்கும் தவ முயற்சிகள் எங்களைத் தூய்மையாக்கிப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் வரவிருக்கும் புனித நிகழ்வுகளுக்கு நேர்மையான மனதோடு நாங்கள் வந்து சேரச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் இரண்டாம் சனி:
மன்றாடுவோமாக! இறைவா, மாட்சிமிக்க உதவியால் இதுவரை நீர் காத்துவரும் எங்களை விண்ணகக் கொடைகளின் உரிமையாளர்களாக இருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவ்வுலக வாழ்வில் நீர் எங்களை ஆண்டு நடத்தி ஒளியான உம்மிடமே அழைத்துச் செல்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! இறைவா, இரக்கப் பெருக்கத்துக்கும் முழுமையான நன்மைக்கும் காரணரே, பாவிகளின் உண்ணா நோன்புகள், இறைவேண்டல்கள், இரக்கச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்குகின்றீர்; எங்களது தாழ்ச்சிமிக்க பாவ அறிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கி மனச்சான்றினால் நொறுங்குண்ட எங்கள் உள்ளங்களை உமது இரக்கத்தால் என்றும் உயர்த்துவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் மூன்றாம் திங்கள்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, இடைவிடாத உமது இரக்கம் உமது திரு அவையைத் தூய்மைப்படுத்திக் காப்பதாக; ஏனெனில் உம்மால் அன்றித் திரு அவை பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதால் உமது கொடையினால் அது என்றும் ஆளப்படுவதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது அருள் எம்மை என்றும் கைவிடாதிருக்க உம்மை வேண்டுகின்றோம்: உமது புனிதப் பணிக்கு அது எங்களை அர்ப்பணிக்கச் செய்து எங்களுக்கு உமது ஆற்றலை என்றும் பெற்றுத் தருவதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் மூன்றாம் புதன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, தவக் கால முயற்சிகளால் பயிற்சியும் உமது வார்த்தையால் ஊட்டமும் பெறும் நாங்கள் புனித ஒறுத்தல் முயற்சிகளால் முழு இதயத்தோடு எங்களை உமக்கு அர்ப்பணித்து வாழ உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உம்மை நோக்கி மன்றாடு வதில் நாங்கள் என்றும் ஒன்றுபட்டிருக்கவும் அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் மூன்றாம் வியாழன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: மீட்பு அளிக்கும் திருவிழா எவ்வளவுக்கு மிக நெருங்கி வருகின்றதோ அவ்வளவுக்குப் பாஸ்கா மறைநிகழ்வை இறைப்பற்றுடன் கொண்டாட நாங்கள் அணுகிச் செல்வோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் மூன்றாம் வெள்ளி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்கள் இதயங்களில் உமது அருளைக் கனிவுடன் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் வரம்பு மீறிய மண்ணக நாட்டங்களிலிருந்து நாங்கள் என்றும் விடுவிக்கப்பட்டு, விண்ணகப் படிப்பினைகளைப் பற்றிக்கொள்ள உமது வள்ளன்மையால் ஆற்றல் பெறுவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் மூன்றாம் சனி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆண்டுதோறும் கொண்டாடும் இத்தவ முயற்சிகளில் மகிழ்வுறும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்காவின் மறையுண்மைகளை நாங்கள் கடைப்பிடித்து அவற்றின் முழுமையான பயன்களால் பேரின்பம் அடைவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! இறைவா, மனிதரான உம் வாக்கின் வழியாக மனிதக் குலத்தின் ஒப்புரவை வியத்தகு முறையில் செயல்படுத்துகின்றீர்; அதனால் ஆர்வமிக்க இறைப்பற்றாலும் உயிர்த் துடிப்புள்ள நம்பிக்கையாலும் வரவிருக்கும் பெருவிழாவுக்குக் கிறிஸ்தவ மக்கள் விரைந்திட ஆற்றல் பெற அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் நான்காம் திங்கள்:
மன்றாடுவோமாக! இறைவா, விவரிக்க இயலாத மறையுண்மைகளால் உலகத்தைப் புதுப்பிக்கின்ற உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திரு அவை நிலையான படிப்பினைகளால் பயன் பெற்று இவ்வுலகில் உம் உதவிகளை இழந்துவிடாமல் இருப்பதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் நான்காம் செவ்வாய்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, புனிதமான பற்றன்பு உள்ள முயற்சிகளைப் பெருமதிப்புடன் கடைப்பிடிப்பதால் உம் நம்பிக்கையாளரின் இதயங்களைச் செம்மைப்படுத்தியருளும்; அதனால் அவர்கள் தகுதியான மனதுடன் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்றுக்கொண்டு உமது மீட்பின் புகழைப் பறைசாற்றச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் நான்காம் புதன்:
மன்றாடுவோமாக! இறைவா, நேர்மையாளர்களுக்கு நற்செயல்களின் பரிசுகளையும் பாவிகளுக்கு மனம் திரும்புதலின் வழியாக மன்னிப்பையும் அளிக்கின்றீர்; உம்மை மன்றாடும் மக்கள் மீது நீர் இரக்கம் காட்டுவதால் எங்கள் பாவங்களுக்கான உமது மன்னிப்பைப் பெற எங்களது பாவ அறிக்கை ஆற்றல் பெறுவதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் நான்காம் வியாழன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, பணிவுமிக்க மன்றாட்டால் உமது கனிவை வேண்டுகின்றோம்: இவ்வாறு தவத்தினால் திருத்தப்பெற்று, நற்செயல்களில் தேர்ச்சி அடைந்த உம் அடியார்களாகிய எங்களை உம் கட்டளைகளில் நேர்மையுடன் நிலைத்து நிற்கச் செய்து பாஸ்கா விழாவுக்குத் தூய உள்ளத்துடன் வந்து சேரச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் நான்காம் வெள்ளி:
மன்றாடுவோமாக! இறைவா, எங்கள் வலுவின்மைக்கு ஏற்ற உதவிகளை நீரே செய்துள்ளீர்; அதனால் பாவக் கழுவாயின் விளைவை அக்களிப்போடு ஏற்றுக்கொண்டு மிகுந்த இறைப்பற்றுடன் மனம் திரும்பி அவ்வுதவிகளை நாங்கள் கண்டுணர அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் நான்காம் சனி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம்மால் அன்றி நாங்கள் உமக்கு மகிழ்ச்சி அளிக்க முடியாது; ஆகவே உமது இரக்கத்தின் செயல் எங்கள் இதயங்களை வழிநடத்த அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, உம் திருமகன் உலகை அன்பு செய்து சாவுக்குத் தம்மையே கையளித்தார்; உமது உதவியால் அதே அன்பில் நாங்களும் விரைந்து முன்னேறிச் செல்ல அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் ஐந்தாம் திங்கள்:
மன்றாடுவோமாக! இறைவா, சொல்லற்கரிய உமது அருளாலும் எல்லா ஆசிகளாலும் நாங்கள் செல்வராக்கப்பட்டுள்ளோம்; இவ்வாறு பழமையிலிருந்து நாங்கள் புதுமைக்கு மாறுவதன் வழியாக விண்ணரசின் மாட்சிக்கு எங்களையே தயார் செய்வோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் ஐந்தாம் செவ்வாய்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது விருப்பத்துக்கு ஏற்பப் பணிபுரிவதில் விடாமுயற்சியை எங்களுக்குத் தந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இக்காலத்தில் உமக்குப் பணிபுரியும் மக்கள் தகுதியிலும் எண்ணிக்கையிலும் பெருகுவார்களாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் ஐந்தாம் புதன்:
மன்றாடுவோமாக! பரிவுள்ள இறைவா, தவத்தால் புனிதம் அடைந்துள்ள உம் மக்களின் இதயங்களை ஒளிர்வித்தருளும்; இறைப்பற்றுடன் உம்மை மன்றாடுவோருக்குக் கனிவுடன் செவிசாய்த்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் ஐந்தாம் வியாழன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்து உம்மை மன்றாடும் மக்களோடு உடனிருந்து அவர்களைக் கனிவுடன் காத்தருளும்; அதனால் பாவ மாசுகளிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்ட அவர்கள் புனித வாழ்வில் நிலைத்திருந்து உமது வாக்குறுதியின் உரிமையாளர்களாய்த் திகழ்வார்களாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் ஐந்தாம் வெள்ளி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் மக்களின் குற்றங்களை மன்னிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் வலுக்குறைவால் நாங்கள் செய்த பாவங்களிலிருந்து உமது கனிவிரக்கத்தால் விடுதலை பெறுவோமாக. உம்மோடு. அல்லது இறைவா, இக்காலத்தில் புனித கன்னி மரியாவைப் பின்பற்றி உமது திரு அவை இறைப்பற்றுடன் கிறிஸ்துவின் பாடுகளைத் தியானிக்கச் செய்தீரே; அதே கன்னி மரியாவின் மன்றாட்டால் உம் ஒரே திருமகனை அன்றாடம் உறுதியாகப் பற்றிக்கொண்டு, அவரது அருளின் நிறைவுக்கு இறுதியில் வந்து சேர எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் ஐந்தாம் சனி:
மன்றாடுவோமாக! இறைவா, கிறிஸ்துவில் புதுப் பிறப்பு அடைந்துள்ள அனைவரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினராகவும் அரச குருக்களின் கூட்டத்தினராகவும் விளங்கச் செய்தீரே; இவ்வாறு நிலைவாழ்வுக்கு அழைக்கப்பட்ட இம்மக்கள் நீர் கட்டளையிடுவதை விரும்பவும் நிறைவேற்றவும் தங்கள் இதயங்களில் ஒரே நம்பிக்கையும் செயல்களில் பரிவிரக்கமும் உடையவர்களாய்த் திகழவும் அருள்வீராக.