மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவை மீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் திங்கள்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவை மீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் செவ்வாய்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறைநிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் புதன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் வியாழன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் வெள்ளி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் சனி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் திங்கள்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறைநிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் புதன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வியாழன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வெள்ளி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறைநிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் சனி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் திங்கள்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் புதன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடை வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் வியாழன்:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் வெள்ளி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறைநிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, நிலையான மீட்பின் உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: மீட்பு அளிக்கும் திருநாள் நெருங்கி வரும் இவ்வேளையில் நாங்கள் மேன்மேலும் இறைப்பற்றுடன் உம் திருமகனுடைய பிறப்பின் மறைநிகழ்வைத் தகுதியான முறையில் கொண்டாட முன்னேறுவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 17:
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, விண்ணகக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உம் ஆவியாரால் தூண்டப்பெற்று, வரவிருக்கும் உம் கிறிஸ்துவின் திருமுன் சுடர் விட்டு எரியும் விளக்குகளாக ஒளிர நாங்கள் பேராவல் கொள்ளச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 18:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நீர் உறையும் இக்கோவிலில் உமது இரக்கத்தைப் பெற்றுக்கொள்வோமாக; வரவிருக்கும் எங்கள் மீட்பின் கொண்டாட்டங்களை நாங்கள் தகுந்த வணக்கத்துடன் எதிர்நோக்கிச் செல்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.. ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 19:
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, நீர் எங்களுக்கு அளித்த கொடைகளுக்காக நன்றி கூறும் எங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; வரவிருப்பவைமீது விருப்பம் கொள்ளவும் அதனால் எங்கள் மீட்பரின் மாட்சிமிகு பிறப்பைத் தூய்மை பெற்ற மனதோடு வரவேற்கவும் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 20:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணகக் கொடையால் புதுப்பிக்கப்பெற்றவர்களை உமது உதவியால் பாதுகாத்தருளும்; அதனால் அவர்கள் உம் மறைநிகழ்வுகளை அனுபவித்து உண்மை அமைதியில் மகிழ்வுறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 21:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் மறைநிகழ்வுகளின் பங்கேற்பு உம் மக்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பாய் இருப்பதாக; அதனால் முழு இறைப்பற்றுடன் உமது மாட்சிக்கு அடிபணிந்து உள்ளத்துக்கும் உடலுக்கும் உரிய மீட்பை அவர்கள் மிகுதியாகப் பெற்றுக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 22:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட உமது அருளடையாளம் எங்களைத் திடப்படுத்துவதாக; அதனால் வரவிருக்கும் மீட்பரை, உகந்த செயல்களுடன் எதிர்கொள்ளவும் பேற்றின் பரிசுகளைப் பெறவும் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 23:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணகக் கொடைகளால் நிறைவு பெற்ற எங்களுக்கு உமது அமைதியைக் கனிவாய் அளித்தருளும்; அதனால் பெரும் மகிழ்ச்சி தரும் உம் திருமகன் வரும்போது எரியும் விளக்குகளோடு அவரை எதிர்கொள்ளத் தகுதியுடன் காத்திருப்போமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 24:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது வியப்புக்கு உரிய இக்கொடையால் புத்துயிர் பெற்றுள்ள எங்களுக்கு வரம் அருளும்; அதனால் உம் திருமகனின் பிறப்பை வணக்கத்துடன் கொண்டாட முன்வருவதைப் போன்று அவருடைய என்றென்றுமுள்ள கொடைகளையும் மகிழ்வுடன் பெற்றுக்கொள்வோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மன்றாடுவோமாக! ஆண்டவரே, இவ்விண்ணக மறைநிகழ்வில் உண்டு, பருகிய நாங்கள் உம் ஒரே திருமகனின் வரவிருக்கும் பிறப்பினால் புத்துயிர் பெற எங்களுக்கு அருள்புரிவீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, எங்கள் மீட்பரின் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்; இவ்வாறு மேன்மையான உறவுகளால் நாங்கள் அவரது விண்ணகத் தோழமைக்கு வந்து சேரும் தகுதி பெற்றிட எங்களுக்கு அருள்புரிவீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் திருமகனின் பிறப்பினை மகிழ்ச்சி நிறைந்த இறைப்பற்றுடன் நாங்கள் கொண்டாடுகின்றோம்; ஆழமான பொருளுள்ள இம் மறைநிகழ்வுகளை முழு நம்பிக்கையுடன் கண்டுணரவும் மிகுந்த அன்பு ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளவும் அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இரக்கமுள்ள இறைவா, இன்று உலகின் மீட்பர் பிறந்துள்ளார்; அதனால் எங்கள் இறைப் பிறப்புக்கு ஊற்றாக அவர் இருப்பது போல எங்களுக்கு அழியா வாழ்வை அளிப்பவராகவும் இருப்பாராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும் அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அதன் நிலையான தோழமையைப் பெறுவார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 29:
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: புனிதமான இம்மறைநிகழ்வுகளின் ஆற்றலால் எங்கள் வாழ்வு என்றும் உறுதிபெறுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 30:
மன்றாடுவோமாக! இறைவா, உமது திருவிருந்தில் நாங்கள் பங்கேற்பதால் நீர் எங்களைத் தொடுகின்றீர்; இவ்வாறு அதனுடைய ஆற்றலின் விளைவை எங்கள் இதயங்களில் செயல்படச் செய்து அதே கொடையினால் உமது அருள் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 31:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, பல்வேறு உதவிகளால் வழிநடத்தப்படும் உம் மக்கள் கூட்டம் உமது பரிவிரக்கத்தின் உதவிகளை இக்காலத்திலும் வருங்காலத்திலும் பெறுவதாக; இவ்வாறு கடந்து செல்லும் இவ்வுலகப் பொருள்கள் தரும் தேவையான ஆறுதலால் ஊட்டம் பெறும் அக்கூட்டம் மிகுந்த நம்பிக்கையோடு நிலையானவற்றை அடைய முயற்சி செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவனின் தாய் புனித மரியா பெருவிழா - ஜனவரி 1:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக அருளடையாளங்களை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: என்றும் கன்னியான உம் திருமகனின் தாயும் திரு அவையின் அன்னையுமான மரியாவை அறிக்கையிடுவதில் மகிழ்வுறும் நாங்கள் நிலைவாழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல இவ்வருளடையாளங்கள் எம்மை வழிநடத்துவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக்குப் பின் வரும் 2-ஆம் ஞாயிறு:
மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, இம்மறைநிகழ்வின் செயலால் எங்கள் தீய பழக்கங்களை அகற்றப் பணிவுடன் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நேர்மையான விருப்பங்கள் நிறைவேறுவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருக்காட்சிப் பெருவிழா - திருவிழிப்புத் திருப்பலி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, புனித உணவால் புத்துணர்வு பெற்றுள்ள நாங்கள் உமது இரக்கத்தை வேண்டுகின்றோம்: உமது நீதியின் விண்மீன் எங்கள் உள்ளங்களில் என்றும் தோன்றுவதால் உமமை அறிக்கையிடுவது எங்கள் செல்வமாய் இருப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருக்காட்சிப் பெருவிழா - பகல் திருப்பலி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்கும், எப்பொழுதும் விண்ணக ஒளியாய் நீர் எங்கள் முன் செல்ல உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பங்கேற்க வேண்டும் என நீர் விரும்பும் மறைநிகழ்வைத் தூய்மையான உள்ளுணர்வுடன் கண்டுகொள்ளவும் தகுதியான ஆவலுடன் அறிந்துகொள்ளவும் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - திங்கள்:
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: புனிதமான இம்மறைநிகழ்வுகளின் ஆற்றலால் எங்கள் வாழ்வு என்றும் உறுதிபெறுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - செவ்வாய்:
மன்றாடுவோமாக! இறைவா, உமது திருவிருந்தில் நாங்கள் பங்கேற்பதால் நீர் எங்களைத் தொடுகின்றீர்; இவ்வாறு அதனுடைய ஆற்றலின் விளைவை எங்கள் இதயங்களில் செயல்படச் செய்து அதே கொடையினால் உமது அருள் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - புதன்:
மன்றாடுவோமாக! பல்வேறு உதவிகளால் வழிநடத்தப்படும் உம் மக்கள் கூட்டம் உமது பரிவிரக்கத்தின் உதவிகளை இக்காலத்திலும் வருங்காலத்திலும் பெறுவதாக; இவ்வாறு கடந்து செல்லும் இவ்வுலகப் பொருள்கள் தரும் தேவையான ஆறுதலால் ஊட்டம் பெறும் அக்கூட்டம் மிகுந்த நம்பிக்கையோடு நிலையானவற்றை அடைய முயற்சி செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - வியாழன்:
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: புனிதமான இம்மறை நிகழ்வுகளின் ஆற்றலால் எங்கள் வாழ்வு என்றும் உறுதிபெறுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - வெள்ளி:
மன்றாடுவோமாக! இறைவா, உமது திருவிருந்தில் நாங்கள் பங்கேற்பதால் நீர் எங்களைத் தொடுகின்றீர்; இவ்வாறு அதனுடைய ஆற்றலின் விளைவை எங்கள் இதயங்களில் செயல்படச் செய்து அதே கொடையினால் உமது அருள் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - சனி:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, பல்வேறு உதவிகளால் வழிநடத்தப்படும் உம் மக்கள் கூட்டம் உமது பரிவிரக்கத்தின் உதவிகளை இக்காலத்திலும் வருங்காலத்திலும் பெறுவதாக; இவ்வாறு கடந்து செல்லும் இவ்வுலகப் பொருள்கள் தரும் தேவையான ஆறுதலால் ஊட்டம் பெறும் அக்கூட்டம் மிகுந்த நம்பிக்கையோடு நிலையானவற்றை அடைய முயற்சி செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவருடைய திருமுழுக்குப் பெருவிழா:
மன்றாடுவோமாக! ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுக்கு நம்பிக்கையோடு செவிமடுக்கும் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக உண்மையில் அழைக்கப்பட்டு அதற்கு ஏற்ப வாழ்வோமாக.