ஆண்டின் பொதுக்காலம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | பெருவிழாக்கள் |
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் அருளடையாளங்களால் புத்துயிர் பெற்ற நாங்கள் உமக்கு ஏற்புடைய வாழ்வால் பணிபுரியக் கனிவுடன் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு ஒரே விண்ணக உணவால் நிறைவு பெற்ற நாங்கள் ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புத்துயிர் அளிக்கும் உமது அருளைப் பெற்றுள்ள நாங்கள் உமது கொடையை முன்னிட்டு என்றும் பெருமை கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடையால் வலுவூட்டப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் முடிவில்லா மீட்பின் இந்த உதவியால் உண்மையான நம்பிக்கை என்றும் வளர்ச்சியுறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் நாங்கள் பங்கேற்கத் திருவுள மானீரே; அதனால் கிறிஸ்துவுக்குள் நாங்கள் ஒன்றிணைக்கப்பெற்று உலகின் மீட்புக்காக நற்கனி தந்து மகிழ்ந்து வாழ எங்களுக்கு அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உண்மை வாழ்வை அளிக்கும் உணவின் மீது நாங்கள் என்றும் ஆவல் கொள்ளச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, இம்மறைநிகழ்வுகளின் வழியாக கிறிஸ்துவினுடைய மீட்பின் பிணையைப் பெற்றுக்கொண்டுள்ளோம்; இதன் பயனாக நாங்கள் அவருடைய மீட்பின் பயனைத் துய்த்துணர அருள் புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது இரக்கத்தை இறைஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் இம்மை வாழ்வில் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் இந்த அருளடையாளத்தால் நாங்கள் முடிவில்லா வாழ்வில் பங்கேற்கக் கனிவுடன் அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் திருமகனின் உடலையும் இரத்தத்தையும் விருந்தாக உட்கொள்ளும் எங்களை உம் ஆவியார் வழிநடத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் வார்த்தையாலும் நாவாலும் மட்டுமல்லாமல் செயலா லும் உண்மையாலும் நாங்கள் உம்மை அறிக்கையிட்டு, விண்ணரசுக்கு வந்து சேரத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நலம் அளிக்கும் உமது செயல் எங்களைத் தீய நாட்டங்களிலிருந்து விடுவிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்களை நேரிய வழியில் நடத்திச் செல்லக் கனிவுடன் அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட உமது இத்திரு உணவு நம்பிக்கையாளர் உம்மில் ஒன்றித்திருப்பதைக் குறித்துக்காட்டுகின்றது; அது போல உமது திரு அவையிலும் ஒற்றுமையை அது விளைவிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் திருமகனின் உயர்மதிப்புள்ள உடலாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெற்றுப் புதுப்பிக்கப்பட்ட நாங்கள் உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: இறைப்பற்றுடன் நாங்கள் அடிக்கடி நிறைவேற்றும் இப்பலியின் பயனாக எங்கள் மீட்பை உறுதியாய்க் கண்டடையச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.. ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுத்து உணவாக உட்கொண்ட இப்புனிதப் பலிப்பொருள் எங்களுக்கு வாழ்வு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் முடிவில்லா அன்பினால் உம்முடன் ஒன்றிணைக்கப்பட்டு என்றும் நிலைத்திருக்கும் கனி தர அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, மாண்புக்கு உரிய கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மீட்பு அளிக்கும் கொடைகளை நாங்கள் என்றும் பெற்றுக்கொள்ளவும் உம்மை இடையறாது புகழ்ந்தேத்தவும் அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம்முடைய அருள்கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இம்மறைநிகழ்வுகளில் நாங்கள் அடிக்கடி பங்கேற்பதால் அவற்றின் மீட்பு அளிக்கும் பயன் எங்களில் வளரச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் திருமகனுடைய பாடுகளின் நிலையான நினைவாகிய இத்திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு சொல்லற்கரிய அன்பினால் அவரே எங்களுக்கு அளித்துள்ள இக்கொடை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணகக் கொடையால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உமது முடிவில்லா உதவியையும் உடனிருப்பையும் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்; எங்களை என்றும் கனிவுடன் காக்கத் தவறாத நீர் நிலையான மீட்புக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களை உம்மோடு ஒன்றிக்கச் செய்து எங்களுக்கு மீட்பு அளிப்பதாக; அது எங்களை உமது உண்மையின் ஒளியில் உறுதிப்படுத்துவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, இவ்வருளடையாளங்களால் கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்த நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருந்து விண்ணகத்தில் அவருடன் தோழமை கொள்ளத் தகுதி பெறுவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது இரக்கத்தின் விருந்து எங்களுக்கு முழுமையான நலம் தரும் மருந்தாய்ச் செயல்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது இரக்கத்தில் முழுமையாக நிலைபெற்றிருந்து அனைத்திலும் உமக்கு உகந்தவர்களாக இருக்கத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இந்த அன்பின் உணவு எங்கள் இதயங்களை உறுதிப்படுத்தி எங்கள் சகோதரர் சகோதரிகளில் உமக்குப் பணிபுரிய எங்களைத் தூண்டியெழுப்புவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது வார்த்தையாலும் விண்ணக விருந்தாலும் உம் நம்பிக்கையாளருக்கு நீர் உணவு அளித்து வாழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் அன்புத் திருமகன் அளிக்கும் மாபெரும் கொடைகளால் நாங்கள் வளம் பெற்று அவரது வாழ்வில் என்றும் பங்கேற்கும் தகுதி பெறுவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட விண்ணகக் கொடைகளின் செயலாற்றல் எங்கள் மனதையும் உடலையும் ஆட்கொண்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாம இத்திருவிருந்தின் பயனுக்கு ஏற்ப வாழ்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே,
உம் அருளடையாளங்களால் புத்துயிர் பெற்ற எங்களுக்கு உமது இடையறாத உதவியைக் கனிவுடன் என்றும் அருள்வீராக; அதனால் மீட்பின் பயனை இம்மறைநிகழ்வுகளிலும் அன்றாட வாழ்விலும் பெற்றுக்கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வு எங்கள் மனதையும் உடலையும் சீர்படுத்துவதாக, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பை அறிவிப்பதால் அவருடன் இணைந்து அவருடைய மாட்சியில் பங்கேற்பவர்களாக இருப்போமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் பெற்றுக்கொண்ட கிறிஸ்துவின் அருளடையாளத்தால் புத்துணர்வும் ஊட்டமும் பெறுகின்றோம்; இவ்வாறு நாங்கள் அவராகவே மாறிட எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனிதமிக்க உடலாலும் இரத்தத்தாலும் எங்களுக்கு உணவு அளிப்பது போல எங்களை அவரது இறை இயல்பிலும் பங்குபெறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணகப் பலியில் நாங்கள் அடிக்கடி பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இவ்வுலக நலன்களின் உதவியால் மறுவுலக நலன்களை நாடக் கற்றுக்கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் அருளடையாளங்கள் தம்முள் கொண்டிருக்கும் அருள் எங்களில் நிறைவு பெறச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்போது அடையாள முறையில் கொண்டாடுவதை நாங்கள் உண்மையாகவே பெற்றுக்கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, ஆற்றல்மிகு உமது செயல் எம்மில் பெருகச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு விண்ணக அருளடையாளங்களால் ஊட்டம் பெற்ற நாங்கள் உமது கொடையால் அவை அளிக்கும் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளத் தயார்செய்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது புனித கொடையால் ஊட்டம் பெற்ற நாங்கள் கனிவுடன் உம்மை மன்றாடி நன்றி கூறுகின்றோம்; இவ்வாறு உம் ஆவியாரின் பொழிவால் நாங்கள் விண்ணக ஆற்றல் பெற்று உண்மையான அருள்வாழ்வில் நிலைத்து நிற்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, இப்புனித விருந்தில் நாங்கள் பங்குபெற்று மகிழச் செய்கின்றீர்; அதனால் நாங்கள் உம்மிடமிருந்து ஒருபோதும் பிரியாதிருக்க அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் நிலையான தூய மூவொரு கடவுள்தன்மையையும் பாகுபாடற்ற ஒருமையையும் அறிக்கையிடுகின்றோம்; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு உடல், உள்ள நலனை அளிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உயர்மதிப்புள்ள உம் திரு உடலையும் திரு இரத்தத்தையும் நாங்கள் இவ்வுலகில் உட்கொள்வது உமது இறைத்தன்மையைச் சுவைத்து இன்புறுவதன் முன்னடையாள மாய்த் திகழ்கின்றது; அதனால் நாங்கள் அப்பேரின்பத்தில் என்றென்றும் மகிழ்ந்திருக்க அருள் புரிவீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, இந்த அன்பின் அருளடையாளம் எங்களைப் புனித அன்புத் தீயால் பற்றியெரியச் செய்வதாக; இவ்வாறு நாங்கள் உம் திருமகனிடம் என்றும் ஈர்க்கப்பெற்று, எங்கள் சகோதரர் சகோதரிகளில் அவரையே கண்டு கொள்ளக் கற்றுக்கொள்வோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, சாகா வரம் தரும் உணவை உட்கொண்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அனைத்துக்கும் அரசராம் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் பெருமை கொள்ளும் நாங்கள் அவருடைய விண்ணக ஆட்சியில் அவரோடு என்றென்றும் வாழ ஆற்றல் பெறுவோமாக.