Search this site
Embedded Files

ஞாயிறு திருப்பலி
Tamil Mass
  • தமிழ் திருப்பலி
    • திருவிருந்துப் பல்லவி
    • தொடக்கவுரைகள்
    • வருகைப் பல்லவி
  • 01. திருக்குழும மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • 03. காணிக்கை மீது மன்றாட்டு
  • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • SINHALA MASS
Tamil Mass
  • தமிழ் திருப்பலி
    • திருவிருந்துப் பல்லவி
    • தொடக்கவுரைகள்
    • வருகைப் பல்லவி
  • 01. திருக்குழும மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • 03. காணிக்கை மீது மன்றாட்டு
  • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • SINHALA MASS
  • More
    • தமிழ் திருப்பலி
      • திருவிருந்துப் பல்லவி
      • தொடக்கவுரைகள்
      • வருகைப் பல்லவி
    • 01. திருக்குழும மன்றாட்டு
      • திருவருகைக்காலம்
      • தவக்காலம்
      • புனித வாரம்
      • பாஸ்கா காலம்
      • பொதுக்காலம்
    • 03. காணிக்கை மீது மன்றாட்டு
    • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
      • திருவருகைக்காலம்
      • தவக்காலம்
      • புனித வாரம்
      • பாஸ்கா காலம்
      • பொதுக்காலம்
    • SINHALA MASS

தவக்காலம்

| திருநீற்றுப் புதன் | முதல் வாரம் | 2ஆம் வாரம் | 3ஆம் வாரம் | 4ஆம் வாரம் | 5ஆம் வாரம் |

திருநீற்றுப் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, இத்திருவிருந்து எங்களுக்கு உதவ வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நோன்புகள் உமக்கு ஏற்புடையனவாகி நாங்கள் நலம் அடைய உதவுவனவாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, விண்ணகக் கொடையின் ஆசியால் நிறைவு பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது ஆசி என்றும் எங்களுக்கு இரக்கம், மீட்பு ஆகியவற்றின் ஊற்றாய் இருப்பதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, இம்மறைநிகழ்வில் பங்கேற்பதன் வழியாக நாங்கள் குற்றங்கள் அனைத்திலிருந்தும் தூய்மை பெற உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பரிவிரக்கத்தின் பயன்களை அடைய நாங்கள் தகுதி பெறுவோமாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக வாழ்வின் கொடைகளால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இம்மையில் நாங்கள் கொண்டாடும் மறைநிகழ்வுகள் எங்கள் நிலைவாழ்வுக்கு உதவுவனவாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

தவக்காலத்தின் முதல் ஞாயிறு:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, புத்துயிர் தரும் விண்ணக உணவினால் எங்கள் நம்பிக்கை ஊட்டம் பெறவும் எதிர்நோக்கு வளரவும் அன்பு உறுதி அடையவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உயிருள்ள, உண்மையான உணவாம் கிறிஸ்துவை நாங்கள் ஆர்வத்துடன் நாடக் கற்றுக்கொள்வதோடு உமது வாயினின்று புறப்படும் எல்லா வார்த்தைகளாலும் வாழ்ந்திட ஆற்றல் பெறுவோமாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் முதல் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது அருளடையாளத்தைப் பெற்றுக்கொண்டதால் எங்கள் மனதுக்கும் உடலுக்குமான உதவியைக் கண்டுணர் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனதிலும் உடலிலும் மீட்பு அடைந்து விணணக உதவியின் முழுமையால் மாட்சி அடைவோமாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் முதல் செவ்வாய்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, இம்மறைநிகழ்வுகளில் பங்குபெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வுலக ஆசைகளை நாங்கள் கட்டுப்படுத்தி விண்ணுலகு சார்ந்தவற்றை அன்பு செய்யக் கற்றுக்கொள்வோமாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் முதல் புதன்:

மன்றாடுவோமாக! இறைவா, உம் அருளடையாளங்களால் எங்களுக்கு ஊட்டம் அளிக்க நீர் தவறுவதில்லை; இவை அளிக்கும் புத்துணர்வு எங்களுக்கு நிலைவாழ்வை வழங்கிட அருள்புரிவீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் முதல் வியாழன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, எங்கள் மனந்திரும்புதலின் அரணாக புனிதமிக்க இம்மறைநிகழ்வுகள் விளங்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இக்காலத்திலும் வருங்காலத்திலும் இவற்றை எங்களுக்கு அருமருந்தாய் ஆக்குவீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் முதல் வெள்ளி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது அருளடையாளத்தின் புனிதமான உணவு எங்களுக்குப் புத்துயிர் அளிப்பதாக; பழைய பாவ நிலையிலிருந்து தூய்மை பெற்று மீட்பு அளிக்கும் மறைநிகழ்வின் பங்கேற்பாளர்களாக அது எங்களை மாற்றுவதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் முதல் சனி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது மறைநிகழ்வால் நீர் புதுப்பிக்கும் எங்களை முடிவில்லா ஆதரவால் தொடர்ந்து காத்தருள்வீராக; விண்ணகப் படிப்பினைகளால் நீரே நிரப்பியவர்களோடு உமது மீட்பு அளிக்கும் ஆதரவால் உடனிருப்பீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் நாங்கள் ஏற்கெனவே விண்ணுலக வாழ்வில் பங்குபெற அருள்கூர்ந்தீர்; மாட்சிக்கு உரிய மறைநிகழ்வுகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமக்குச் செலுத்தும் நிறை நன்றியை ஏற்றுக்கொள்வீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் இரண்டாம் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, இத்திரு உணவு எங்களைப் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்துவதாக; அதனால் அது விண்ணக மகிழ்ச்சிக்கு எங்களை உரிமையாளர்கள் ஆக்குவதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, புனித உணவு தரும் புத்துணர்வு எங்களுக்குப் பக்தியுள்ள நடத்தையில் முன்னேற்றத்தைத் தந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அது ஒப்புரவுக்கான உமது இடைவிடா உதவியையும் எங்களுக்கு அருள்வதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் இரண்டாம் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, இத்திருவிருந்து எங்களுக்கு நிலைவாழ்வின் அச்சாரமாக இருக்கத் திருவுளமானீரே; அதனால் நாங்கள் நிலையான மீட்புக்கு வந்து சேர் எங்களுக்கு அருள்புரிவீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் இரண்டாம் வியாழன்:

மன்றாடுவோமாக! இறைவா, இத்தியாகப் பலி எங்களில் செயலாக்கத்துடன் நிலைத்திருப்பதாக; இது ஆற்றலுடன் எங்களை உறுதிப்படுத்த அருள்வீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் இரண்டாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையான மீட்பின் அச்சாரத்தைப் பெற்றுக்கொண்ட நாங்கள் அதைத் தகுந்த முறையில் நாடச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் அம்மீட்பைக் கண்டடையச் செய்வீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் இரண்டாம் சனி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட உமது புனித உணவு எங்கள் இதயத்தின் ஆழத்தை ஊடுருவி நிரப்புவதாக; நாங்கள் இந்த அருளடையாளத்தில் ஆற்றலுடன் பங்கேற்க அருள்வீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணகத்தில் உள்ள மறைபொருள்களின் அச்சாரத்தையும் இவ்வுலகில் ஏற்கெனவே விண்ணக உணவால் வளமையையும் பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் மறைபொருளாக எங்களில் திகழ்வது செயலளவிலும் நிறைவு பெறுவதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் மூன்றாம் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: உமது திருவிருந்தில் நாங்கள் பங்கேற்பது எங்களுக்குத் தூய்மை அளித்து, ஒற்றுமையையும் வழங்குவதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது புனித மறைநிகழ்வில் பங்குகொண்ட எங்களுக்கு வாழ்வு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதே போன்று எங்களுக்குப் பாவ மன்னிப்பையும் ஆதரவையும் அது அளிப்பதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் மூன்றாம் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் விண்ணக விருந்து எங்களைப் புனிதப்படுத்துவதாக; தவறுகள் அனைத்திலிருந்தும் அது எங்களைத் தூய்மைப்படுத்தி மறு உலக வாக்குறுதிகளுக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் மூன்றாம் வியாழன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பட்டவர்களைக் கனிவுடன் உமது உதவியால் எழச் செய்தருளும்; அதனால் நாங்கள் மறைநிகழ்வுகளாலும் வாழ்வின் நெறிகளாலும் உமது மீட்பின் பயனை அடைவோமாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் மூன்றாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது ஆற்றலின் செயல் எங்கள் மனதிலும் உடலிலும் பொழியப்பட உம்மை வேண்டுகின்றோம்: இத்திருவிருந்தில் பங்கேற்று நாங்கள் பெற்றுக்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு முழுமையான மீட்பைத் தருவதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் மூன்றாம் சனி:

மன்றாடுவோமாக! இரக்கமுள்ள இறைவா, உம் அருள்கொடைகளால் இடைவிடாமல் எங்களை நிரப்பிட உம்மை வேண்டுகின்றோம்: உண்மையான வணக்கத்துடன் அவற்றைக் கொண்டாடவும் என்றும் பற்றுறுதி உள்ள மனதோடு அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் அருள்புரிவீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! இறைவா, இவ்வுலகுக்கு வரும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்ற நீர் எங்கள் இதயங்களை உமது அருளின் சுடரால் ஒளிர்வித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது மாண்புக்குத் தகுதியானதையும் விருப்பமானதையும் என்றும் நினைவில் கொண்டு உம்மை நேர்மையாக அன்பு செய்ய வலிமை பெறுவோமாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் நான்காம் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் அருள்கொடைகளால் நாங்கள் புதுப்பிக்கப்பெற்று வாழ்வு பெற்றிட உம்மை வேண்டுகின்றோம்: அவை எங்களைப் புனிதப்படுத்தி நிலையானவற்றுக்கு இட்டுச்செல்வனவாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் நான்காம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்கள் மனங்களைக் கனிவுடன் தூய்மைப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: விண்ணக அருளடையாளங்களால் எங்களைப் புதுப்பிப்பதன் வழியாகத் தொடர்ந்து இப்பொழுதும் வருங்காலத்திலும் எங்கள் உடலுக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்வோமாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் நான்காம் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணகக் கொடைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தண்டனைத் தீர்ப்புப் பெற நீர் அனுமதியாதிருக்க உம்மை வேண்டுகின்றோம்: உம் நம்பிக்கையாளருக்கு உதவி அளிப்பீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் நான்காம் வியாழன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட அருளடையாளத் திரு உணவு எங்களைத் தூய்மைப்படுத்தவும் உம் அடியார்களைக் குற்றங்கள் அனைத்திலிருந்தும் விடுவிக்கவும் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு குற்றமுள்ள மனச்சான்றினால் கட்டுண்டவர்கள் விண்ணக உதவியின் நிறைவால் மாட்சி அடைவார்களாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.. ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் நான்காம் வெள்ளி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்களுக்கு அருள் புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பழையவற்றிலிருந்து புதியவற்றுக்குக் கடந்து வந்தது போல, பாவங்களைக் களைந்துவிட்டுத் தூய்மை பெற்ற மனதினால் புதுப்பிக்கப்பட எங்களுக்கு அருள்வீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் நான்காம் சனி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் அருள்கொடைகள் எங்களைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அவற்றின் செயலால் நாங்கள் உமக்கு முற்றிலும் ஏற்றவர்களாய்த் திகழச் செய்வீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவர், எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்கின்ற நாங்கள் அவருடைய உறுப்பினர்களாக என்றும் விளங்குவோமாக.

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் ஐந்தாம் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் அருளடையாளங்களின் ஆசியால் வலிமை பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவற்றால் நாங்கள் எப்பொழுதும் குற்றங்களிலிருந்து கழுவப்பெற்றுக் கிறிஸ்துவைப் பின்பற்றி உம்மை நோக்கி முன்னேறி வருவோமாக.

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் ஐந்தாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு உரியவற்றைத் தொடர்ந்து நாடி விண்ணகக் கொடைகளை என்றும் அடையத் தகுதி பெறுவோமாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் ஐந்தாம் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட மறைபொருள்கள் எங்களுக்கு விண்ணக மருந்தாய் அமைவனவாக; அதனால் இவை எங்கள் உள்ளங்களின் குற்றங்களைக் கழுவி முடிவில்லாப் பாதுகாப்பில் எங்களை உறுதிப்படுத்துவனவாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் ஐந்தாம் வியாழன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது இரக்கத்தை இறைஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் இம்மை வாழ்வில் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் இந்த அருளடையாளத்தால் நாங்கள் முடிவில்லா வாழ்வில் பங்கேற்கச் செய்வீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் ஐந்தாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட உமது பலியின் நிலையான பாதுகாப்பு எங்களை என்றும் கைவிடாதிருப்பதாக; எங்களிடமிருந்து தீமை அனைத்தையும் அது என்றும் அகற்றுவதாக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

தவக்காலத்தின் ஐந்தாம் சனி:

மன்றாடுவோமாக! இஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனிதமிகு உடலாலும் இரத்தத்தாலும் எங்களுக்கு உணவு அளிப்பது போல உங்களை அவரது இறை இயல்பிலும் பங்குபெறச் செய்வீராக.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

புனிதர்கள் 
செபங்கள் 
Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse