Search this site
Embedded Files

ஞாயிறு திருப்பலி
Tamil Mass
  • தமிழ் திருப்பலி
    • திருவிருந்துப் பல்லவி
    • தொடக்கவுரைகள்
    • வருகைப் பல்லவி
  • 01. திருக்குழும மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • 03. காணிக்கை மீது மன்றாட்டு
  • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • SINHALA MASS
Tamil Mass
  • தமிழ் திருப்பலி
    • திருவிருந்துப் பல்லவி
    • தொடக்கவுரைகள்
    • வருகைப் பல்லவி
  • 01. திருக்குழும மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • 03. காணிக்கை மீது மன்றாட்டு
  • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
    • திருவருகைக்காலம்
    • தவக்காலம்
    • புனித வாரம்
    • பாஸ்கா காலம்
    • பொதுக்காலம்
  • SINHALA MASS
  • More
    • தமிழ் திருப்பலி
      • திருவிருந்துப் பல்லவி
      • தொடக்கவுரைகள்
      • வருகைப் பல்லவி
    • 01. திருக்குழும மன்றாட்டு
      • திருவருகைக்காலம்
      • தவக்காலம்
      • புனித வாரம்
      • பாஸ்கா காலம்
      • பொதுக்காலம்
    • 03. காணிக்கை மீது மன்றாட்டு
    • 04. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
      • திருவருகைக்காலம்
      • தவக்காலம்
      • புனித வாரம்
      • பாஸ்கா காலம்
      • பொதுக்காலம்
    • SINHALA MASS

 பாஸ்கா காலம்

| முதல் வாரம் | 2ஆம் வாரம் | 3ஆம் வாரம் | 4ஆம் வாரம் | 5ஆம் வாரம் | 6ஆம் வாரம் | 7ஆம் வாரம் | 

ஆண்டவருடைய உயிர்ப்பு ஞாயிறு:

மன்றாடுவோமாக! இறைவா, உம்முடைய ஒரே திருமகன் வழியாகச் சாவை வென்று நிலைவாழ்வின் கதவை எங்களுக்கு இந்நாளில் மீண்டும் திறந்து வைத்தீர்; அதனால் ஆண்டவருடைய உயிர்ப்பைப் பெருவிழாவாகக் கொண்டாடும் நாங்கள், உம்முடைய ஆவியாரால் புதுப்பிக்கப்பெற்று ஒளிமிக்க வாழ்வுக்கு உயிர்த்தெழ அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா எண்கிழமையில் திங்கள்:

மன்றாடுவோமாக! இறைவா, உமது திரு அவை புதிய மக்களைப் பெற்றெடுத்துத் தொடர்ந்து வளரச் செய்கின்றீர்; உம் அடியார்கள் நம்பிக்கையால் பெற்றுக்கொண்ட அருளடையாளத்தை வாழ்ந்து காட்டுவதில் நிலைத்து நிற்கச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா எண்கிழமையில் செவ்வாய்:

மன்றாடுவோமாக! பாஸ்கா மறைபொருளின் பயன்களை எங்களுக்கு அளித்த இறைவா, உம்முடைய மக்களை விண்ணகக் கொடைகளால் நிரப்பியருளும்; அதனால் முழுமையான விடு தலையைப் பெற்றுக்கொண்ட அவர்கள், இப்போது மண்ணுலகில் துய்க்கும் மகிழ்ச்சியை விண்ணுலகில் நிறைவாகப் பெற்றுக்கொள்ள அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா எண்கிழமையில் புதன்:

மன்றாடுவோமாக! இறைவா, ஆண்டவருடைய உயிர்ப்புப் பெருவிழாவால் ஆண்டுதோறும் எங்களை மகிழ்விக்கின்றீர்; அதனால் நாங்கள் கொண்டாடும் இக்காலத் திருவிழாக்கள் வழியாக நிலையான மகிழ்ச்சிக்கு வந்து சேரத் தகுதி பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா எண்கிழமையில் வியாழன்:

மன்றாடுவோமாக! இறைவா, உமது பெயரை அறிக்கையிடுவதில் பல மக்களினங்களை ஒன்றுசேர்த்தருளினீரே; திருமுழுக்குத் தண்ணீரால் புதுப் பிறப்பு அடைந்தவர்கள் மனங்களில் ஒரே நம்பிக்கையும் செயல்களில் ஒரே பரிவிரக்கமும் கொண்டிருக்க அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா எண்கிழமையில் வெள்ளி:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, மனிதக் குலத்தை ஒப்புரவாக்குவதற்காக நீர் நிறுவிய உடன்படிக்கையில் பாஸ்கா மறைபொருளை எங்களுக்குத் தந்தீரே; நாங்கள் அறிக்கையிட்டுக் கொண்டாடுவதைச் செயல்களில் வெளிப்படுத்த எங்கள் உள்ளங்களைத் தூண்டியெழுப்புவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா எண்கிழமையில் சனி:

மன்றாடுவோமாக! இறைவா, உமது அருள்பெருக்கால் உம்மில் நம்பிக்கை கொள்ளும் மக்களைப் பெருகச் செய்கின்றீர்; நீர் தேர்ந்தெடுத்தவர்களைக் கனிவோடு கண்ணோக்கி, திருமுழுக்கு என்னும் அருளடையாளத்தின் வாயிலாகப் புதுப் பிறப்பு அடைந்தவர்களைச் சாகாத்தன்மை எனும் பேற்றினால் அணிசெய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள இரக்கத்தின் இறைவா, மீண்டும் மீண்டும் நாங்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவிலே உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை நீர் தூண்டுகின்றீர்; நீர் வழங்கிய இவ்வருளைப் பெருக்குகின்றீர்: இவ்வாறு திருமுழுக்கினால் நாங்கள் கழுவப்பட்டுள்ளதையும் தூய ஆவியாரால் நாங்கள் புதுப் பிறப்பு அடைந்துள்ளதையும் இரத்தத்தால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளதையும் நாங்கள் சரியான முறையில் அறிந்து, புரிந்து கொள்ளச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் இரண்டாம் திங்கள்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருள் உதவிகளால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் மண்ணகப் பெற்றோரின் சாயலை நாங்கள் கடந்து சென்று விண்ணகத் தந்தையின் உருவில் வளர்வோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் இரண்டாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஆற்றலை அறிவிக்க எங்களுக்கு அருள் புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது கொடையின் பிணையை அவரில் பெற்றுக்கொண்ட நாங்கள், அதன் முழுமையான வெளிப்பாட்டினைக் கண்டுகொள்ளும் தகுதி பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் இரண்டாம் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் ஆண்டுதோறும் நினைவுகூரும் மறைநிகழ்வுகளால் தொடக்கத்திலிருந்த மனித இயல்பின் மேன்மை புதுப்பிக்கப்பட்டு உயிர்த்தெழுதலின் எதிர்நோக்கைப் பெற்றுள்ளது; அதனால் நாங்கள் நம்பிக்கையில் கொண்டாடுவதை முடிவில்லா அன்பில் பெற்றுக்கொள்ள உமது கனிவை அருள வேண்டுகின்றோம்.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் இரண்டாம் வியாழன்:

மன்றாடுவோமாக! இறைவா, உலக மீட்புக்காகப் பாஸ்கா பலியை ஏற்படுத்திய நீர், உம் மக்களின் வேண்டல்களுக்குக் கனிவுடன் செவிசாய்ப்பீராக; அதனால் எங்கள் தலைமைக் குருவாம் கிறிஸ்து எங்களுக்காகப் பரிந்துபேசி, அவர் எங்களைப் போன்று இருப்பதால் எங்களை ஒப்புரவாக்கி, உமக்கு இணையாக இருப்பதால் எங்களை மன்னிப்பாராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் இரண்டாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! இறைவா, நேர்மையான மனத்தினரின் ஒளியும் எதிர்நோக்குமாக இருப்பவரே, உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: எங்கள் இதயங்கள் உமக்கு ஏற்ற மன்றாட்டைப் புரிவதாலும் என்றும் உமது புகழைக் கடமை உணர்வோடு பறைசாற்றுவதாலும் உம்மை என்றும் மேன்மைப்படுத்துவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் இரண்டாம் சனி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, பாவத்தின் சட்டத்தால் எழுதப்பட்ட கடன் சீட்டை உம் திருமகன் கிறிஸ்துவின் உயிர்ப்பு எனும் பாஸ்கா மறைநிகழ்வால் அழித்தீரே; எங்கள் உள்ளத்திலிருந்தும் நீரே அதை அகற்றுவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

அல்லது

மன்றாடுவோமாக! இறைவா, உம் நம்பிக்கையாளருக்குப் பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக, இரக்கத்தின் கதவைத் திறக்கத் திருவுள மானீர்; அதனால் நீர் காட்டிய உமது திருவுளத்தின் வழியை நாங்கள் பின்பற்றி வாழ்வின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாமல் இருக்க இரக்கத்துடன் எங்களைக் கண்ணோக்குவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! இறைவா, புதுப்பிக்கப்பெற்ற இளமை உணர்வுடன் உம் மக்கள் என்றும் அக்களிப்பார்களாக; அதனால் உம் சொந்த மக்கள் என்ற மாட்சியை மீண்டும் பெற்றுள்ள நாங்கள் உயிர்ப்பின் நாளுக்காகப் பேரின்பத்துடனும் உறுதியான எதிர்நோக்குடனும் காத்திருக்கச் செய்வீராக. 

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் மூன்றாம் திங்கள்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருள் உதவிகளால் கிறிஸ்துவின் இயல்புக்கு ஏற்ப எங்களை மாற்றியருள உம்மை வேண்டுகின்றோம்: ஆதலால் பழைய மனிதனுக்கு உரிய இயல்பைக் களைந்துவிட்டு அவருடைய வழிகளில் வாழ எங்களுக்கு வரம் அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் மூன்றாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! இறைவா, தண்ணீராலும் தூய ஆவியாராலும் மறு பிறப்பு அடைந்தவர்களுக்கு விண்ணக ஆட்சியின் நுழைவாயிலைத் திறந்துவிடுகின்றீர்; உம் அடியார்கள் மீது நீர் பொழிந்துள்ள அருளைப் பெருகச் செய்தருளும்: அதனால் அவர்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மைபெற்று உமது பரிவிரக்கத்தால் எவ்வித வாக்குறுதிகளையும் இழக்காதிருப்பார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் மூன்றாம் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது குடும்பத்தில் நீர் தங்கியிருந்து கனிவுடன் அதை வளரச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது நம்பிக்கையின் அருளைப் பெற்றவர்கள் உம் ஒரே திருமகனாய் உதித்தவரின் உயிர்ப்பில் நிலையான பங்குபெறச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் மூன்றாம் வியாழன்:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இந்நாள்களில் உமது பரிவிரக்கத்தை நாங்கள் விரைவாகப் பெற்று அதை முழுமையாய் உணர்ந்து கொள்வோமாக; அதனால் பொய்ம்மையின் இருளிலிருந்து நீர் எங்களை விடுவித்து உமது உண்மையின் படிப்பினைகளை நாங்கள் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் மூன்றாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, ஆண்டவருடைய உயிர்ப்பின் அருளை நாங்கள் அறிந்துகொள்ள எங்களுக்கு அருளுமாறு உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தூய ஆவியாருடைய அன்பால் புது வாழ்வுக்கு உயிர்த்தெழுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் மூன்றாம் சனி:

மன்றாடுவோமாக! இறைவா, உம்மை நம்புவோரைத் திருமுழுக்குத் தண்ணீரால் புதுப்பித்தீரே; கிறிஸ்துவில் புதுப் பிறப்பு அடைந்தவர்களுக்கு நீர் பாதுகாப்பை அளித்தருளும்; அதனால் அவர்கள் பொய்ம்மையின் எல்லாத் தாக்குதலையும் முறியடித்து உமது ஆசியின் அருளை உண்மையுடன் காத்துக்கொள்வார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணவரின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்ள எங்களை அழைத்துச் செல்கின்றீர்; அதனால் நல்ல ஆயராகிய கிறிஸ்து துணிவோடு முன்னரே சென்றுள்ள இடத்துக்குப் பணிவுள்ள மந்தையாகிய நாங்களும் வந்து சேர்வோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் நான்காம் திங்கள்:

மன்றாடுவோமாக! இறைவா, பேறுபெற்றோரின் முழுநிறை ஒளியே, பாஸ்கா மறைநிகழ்வுகளை இவ்வுலகில் நாங்கள் கொண்டாட அருள்கூர்ந்தீர்; இவ்வாறு உமது அருளின் முழுமையை நாங்கள் என்றென்றும் கொண்டாடி மகிழ்வுறச் செய்தருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் நான்காம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, ஆண்டவருடைய உயிர்ப்பின் மறைநிகழ்வுகளைக் கொண்டாடிய நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் மீட்பின் மகிழ்ச்சியை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறச் செய்தருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் நான்காம் புதன்:

மன்றாடுவோமாக! இறைவா, நம்பிக்கையாளரின் வாழ்வும், மனத்தாழ்மை உள்ளோரின் மாட்சியும், நேர்மையாளர்களின் பேறுமானவரே, உம்மைக் கெஞ்சி மன்றாடும் எம் வேண்டல்களைக் கனிவுடன் கேட்டருளும்: தாராளமாய் நீர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற ஆவல் கொண்டிருக்கும் எங்களை என்றும் உமது மிகுதியான கொடைகளால் நிரப்புவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் நான்காம் வியாழன்:

மன்றாடுவோமாக! இறைவா, உமது பரிவிரக்கத்தின் வியத்தகு அருளடையாளத்தால் மனித இயல்பைச் சீர்படுத்தி, தொடக்கத்தில் இருந்ததைவிட மேலான மேன்மையை மனிதருக்கு வழங்கியுள்ளீர்; இவ்வாறு மறு பிறப்பின் மறைநிகழ்வால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான அவர்களில் உமது முடிவில்லா அருளின் கொடையும் ஆசியும் நிலைபெறச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் நான்காம் வெள்ளி:

மன்றாடுவோமாக! எங்கள் விடுதலைக்கும் மீட்புக்கும் காரணரான இறைவா, உம்மை வேண்டுவோரின் குரலைக் கேட்டருளும்; உம் திருமகன் சிந்திய இரத்தத்தால் நீர் மீட்டுக்கொண்ட உம் மக்கள் உம்மால் வாழவும் உமது முடிவில்லாப் பாதுகாப்பில் மகிழவும் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் நான்காம் சனி:

மன்றாடுவோமாக! இறைவா, பாஸ்கா பெருவிழாவால் உலகுக்கு விண்ணக நலன்களையும் உமது திரு அவைக்கு மன்னிப்பையும் கனிவுடன் அருளுகின்றீர்; இன்றைய வாழ்வில் நாங்கள் கடைப்பிடிப்பவை நிலைவாழ்வுக்கு எங்களை இட்டுச்செல்வனவாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா மறைபொருளை எப்பொழுதும் எங்களில் நிறைவு பெறச் செய்தருளும்; இவ்வாறு புனிதத் திருமுழுக்கினால் நீர் புதுப்பிக்கத் திருவுளம் கொண்ட நாங்கள் உமது பாதுகாப்பின் உதவியால் மிகுந்த பயன் தந்து நிலைவாழ்வின் மகிழ்ச்சிக்கு வந்து சேர அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம்முடைய வலக் கையின் முடிவில்லா ஆதரவால் உமது குடும்பத்தை அரவணைத்துக் காத்தருள் உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு உம் ஒரே திருமகனின் உயிர்ப்பினால் தீமைகள் அனைத்திலிருந்தும் நாங்கள் பாதுகாக்கப்பெற்று, விண்ணகக் கொடைகளால் உம்மை நோக்கி முன்னேறிச் செல்வோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; உம் மக்களாகிய எங்கள் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் உறுதிப்படுத்தும்; அதனால் உம் வாக்குறுதிகள் உண்மையாக நிறைவேறும் என அறிந்திருக்கும் நாங்கள் அவற்றை மகிழ்வுடன் எதிர்பார்த்திருக்கச் செய்தருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் புதன்:

மன்றாடுவோமாக! இறைவா, மாசின்மையை மீண்டும் தருபவரும் அதை அன்பு செய்பவருமானவரே. உம் அடியார்களின் இதயங்களை உம்மை நோக்கித் திருப்புவீராக; அதனால் அவநம்பிக்கை எனும் இருளிலிருந்து நீர் விடுவித்த அவர்கள் உமது உண்மை எனும் ஒளியிலிருந்து ஒருபோதும் விலகிவிடாமல் இருப்பார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வியாழன்:

மன்றாடுவோமாக! இறைவா, இறைப்பற்று இல்லாத எங்களை உமது அருளால் நேர்மையாளர்களாகவும் இரங்குதற்கு உரிய எங்களைப் பேறுபெற்றவர்களாகவும் மாற்றுகின்றீர்; இவ்வாறு உம் செயலாலும் கொடைகளாலும் நீர் உடனிருப்பதால் நம்பிக்கையினால் ஏற்புடையோராக்கப்பட்டவர்கள் அதில் இறுதிவரை நிலைத்து நிற்கும் ஆற்றல் பெறுவார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பாஸ்கா மறைநிகழ்வுகளுக்கு ஏற்ப எங்கள் வாழ்வு அமைந்திட அருள்புரியுமாறு உம்மை வேண்டுகின்றோம்: என்றும் நிலைத்திருக்கும் உமது ஆற்றலால் எங்களைக் காத்து மீட்டருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் சனி:

மன்றாடுவோமாக! என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, திருமுழுக்கின் புதுப் பிறப்பால் விண்ணக வாழ்வை எங்களுக்கு அளிக்கத் திருவுளமானீர்; அழியாத் தன்மைக்குத் தகுதியுடையவர்கள் என நீர் ஏற்றுக்கொண்ட நாங்கள் உமது உதவியால் உமது மாட்சியின் நிறைவுக்கு வந்து சேர அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, உயிர்த்தெழுந்த ஆண்டவரது மாட்சியின் பொருட்டு பேரின்பத்தின் இந்நாள்களைப் பொருளுணர்ந்து ஈடுபாட்டுடன் கொண்டாட எங்களுக்கு அருள் புரியும்; அதனால் நாங்கள் நினைவுகூர்ந்து கொண்டாடுவதை என்றும் செயலில் கடைப்பிடிப்போமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஆறாம் திங்கள்:

மன்றாடுவோமாக! இரக்கமுள்ள இறைவா, பாஸ்கா விழாவைக் கொண்டாடிய நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா கொண்டாட்டத்தின் பயன்களை நாங்கள் எல்லாக் காலங்களிலும் துய்த்திடச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஆறாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, எங்களுக்கு உதவியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகன் கிறிஸ்துவின் உயிர்ப்பில் நாங்கள் உண்மையாகவே பங்குபெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஆறாம் புதன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, எங்களுக்கு உதவியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய உயிர்த்தெழுதல் மறைநிகழ்வைப் பெருவிழாவாகக் கொண்டாடியது போல அவரது வருகையின்போது புனிதர்கள் அனைவரோடும் மகிழ்ந்திருக்க நாங்கள் தகுதி பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஆறாம் வியாழன்:

மன்றாடுவோமாக! இறைவா, உம் மக்களை உமது மீட்பில் பங்குபெறச் செய்த நீர் எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் ஆண்டவருடைய உயிர்ப்பினை முன்னிட்டு நாங்கள் என்றும் மகிழ்ந்திருக்கச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா - திருவிழிப்புத் திருப்பலி:

மன்றாடுவோமாக! திருத்தூதர்கள் காண உம் திருமகன் இன்று விண்ணகத்துக்கு ஏறிச் சென்றார்; அதனால் தமது வாக்குறுதிக்கு ஏற்ப அவர் எங்களோடு என்றும் இவ்வுலகில் வாழ்வது போல நாங்களும் அவரோடு விண்ணகத்தில் வாழத் தகுதி பெற்றிட எங்களுக்கு அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா - பகல் திருப்பலி:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகன் கிறிஸ்துவின் விண்ணேற்றம் எங்களுக்கு ஒரு முன்னடையாளமாக இருக்கின்றது; தலையாகிய அவர் பெற்ற மாட்சிக்கே அவரது உடலாகிய நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம் எனும் எதிர்நோக்கை எங்களுக்குத் தருகின்றது; எனவே நாங்கள் உமக்கு அன்புடன் நன்றி கூறிப் புனிதமான மகிழ்ச்சியுடன் அக்களிக்கச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

அல்லது

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, இந்நாளில் உம் ஒரே திருமகனும் எம் மீட்பருமான கிறிஸ்து விண்ணகத்துக்கு ஏறிச் சென்றதை நம்புகின்றோம்; அதனால் நாங்கள் இப்பொழுதே மனத்தளவில் விண்ணகத்தில் வாழ்ந்திட எங்களுக்கு அருள்புரிவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஆறாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்து, உமது வலப் பக்கத்தில் அமர்ந்திருப்பவரும் எமது மீட்பின் ஊற்று மானவரிடம் எம்மை அழைத்துச் செல்வீராக; இவ்வாறு திருமுழுக்கினால் புதுப் பிறப்பு அடைந்த நாங்கள் எங்கள் மீட்பர் தமது மாட்சியில் வரும்போது பேறுபெற்ற சாகாத்தன்மையால் அணிசெய்யப்படுவோமாக. உம்மோடு.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

(வரும் ஞாயிறு அன்று விண்ணேற்றப் பெருவிழா கொண்டாடப்படும் பகுதிகளில்)

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் வார்த்தையான கிறிஸ்து வழியாக நீர் வாக்களித்த மீட்பு, நற்செய்திப் படிப்பினையால் எங்கும் நிறைவேறிட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவர் உண்மைக்குச் சான்று பகர்ந்து முன்னறிவித்த மீட்பை உரிமைப் பேறுடைய மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்வார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஆறாம் சனி:

மன்றாடுவோமாக! இறைவா, விண்ணகத்துக்கு ஏறிச் சென்ற உம் திருமகன் தம் திருத்தூதர்களுக்குத் தூய ஆவியாரை வாக்களிக்கத் திருவுளம் கொண்டார்: அதனால் அவர்கள் விண்ணகப் படிப்பினையின் பல்வேறு கொடைகளைப் பெற்றுக்கொண்டது போல நாங்களும் அருள்வாழ்வுக்கான கொடைகளைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

(வரும் ஞாயிறு அன்று விண்ணேற்றப் பெருவிழா கொண்டாடப்படும் பகுதிகளில்)

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நற்செயல்களால் எங்கள் மனங்களை என்றும் புதுப்பித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மேலானவற்றையே நாங்கள் என்றும் நாடி, பாஸ்கா மறைநிகழ்வை என்றும் கருத்தில் கொண்டிருப்போமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

பாஸ்கா காலத்தின் ஏழாம் ஞாயிறு:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் கெஞ்சி மன்றாடுவதைக் கனிவுடன் எங்களுக்குத் தந்தருள்வீராக; அதனால் மனிதக் குல மீட்பர் உமது மாட்சியில் உம்மோடு இருக்கின்றார் என நம்பும் நாங்கள் அவர் வாக்களித்தபடி உலக முடிவுவரை எங்களோடும் இருக்கின்றார் எனக் கண்டுணரச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஏழாம் திங்கள்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய ஆவியாரின் ஆற்றலை எங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை உண்மையான மனதுடன் பற்றிக்கொண்டு, அதை எங்கள் நன்னடத்தையில் வெளிப்படுத்தி வாழ்ந்திட ஆற்றல் பெறுவோமாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஏழாம் செவ்வாய்:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, வரவிருக்கும் தூய ஆவியார் எங்களிடத்தில் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் அவரது மாட்சியின் கோவிலாக மாறும் தகுதி பெற அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஏழாம் புதன்:

மன்றாடுவோமாக! இரக்கமுள்ள இறைவா, தூய ஆவியாரால் ஒன்றுசேர்க்கப்பட்ட உமது திரு அவை முழு இதயத்தோடு உம்மீது பற்றுதல் கொண்டிருக்கச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அத்திரு அவை தூய இதயத்துடன் உம்மோடு ஒன்றித்திருக்கச் செய்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஏழாம் வியாழன்:

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய ஆவியார் தமது ஆற்றலால் அருள்வாழ்வுக்கான உம் கொடைகளை எம்முள் பொழிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு உகந்த நன்மனதை அவர் எங்களுக்குத் தந்து நாங்கள் உமது திருவுளத்தை நிறைவேற்றச் செய்வாராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஏழாம் வெள்ளி:

மன்றாடுவோமாக! இறைவா, உம் கிறிஸ்துவின் மாட்சிப்படுத்துதலாலும் தூய ஆவியாரின் ஒளிர்வித்தலாலும் நிலைவாழ்வின் கதவை எங்களுக்குத் திறந்துவிட்டீர்; இத்தகைய பெரும் கொடையில் பங்கேற்பதால் நாங்கள் இறைப்பற்றில் முன்னேறவும் நம்பிக்கையில் வளரவும் எங்களுக்கு அருள்வீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பாஸ்கா காலத்தின் ஏழாம் சனி:

மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா விழாக்களைக் கொண்டாடிய நாங்கள் உமது அருளால் அவற்றை எங்கள் வாழ்விலும் செயலிலும் கடைப்பிடிக்கச் செய்வீராக. உ

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பெந்தக்கோஸ்து ஞாயிறு - திருவிழிப்புத் திருப்பலி:

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருளடையாளத்தை நாங்கள் ஐம்பது நாள் மறைநிகழ்வாகத் தொடர்ந்து கொண்டாடத் திருவுளமானீர்; பல்வேறு மொழி பேசுபவர்களாய் உம் மக்கள் சிதறுண்டிருந்தாலும் ஒரே மனத்தவராய் உமது பெயரை அறிக்கையிட விண்ணகக் கொடையால் ஒன்றுசேர்க்கப்படுவார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

-----------------------------------------

பெந்தக்கோஸ்து ஞாயிறு - பகல் திருப்பலி:

மன்றாடுவோமாக! எஇறைவா, இன்றைய பெருவிழாவின் மறைபொருளால் எல்லா மக்களிலும் நாடுகளிலும் உள்ள உமது அனைத்துலகத் திரு அவையைப் புனிதப்படுத்துகின்றீர்; உலகின் எத்திக்கிலும் தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்து, நற்செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட காலத்தில் நீர் செய்தது போல இக்காலத்திலும் தூய ஆவியாரின் அருளால் நம்பிக்கையாளரின் இதயங்களை நிரப்புவீராக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

புனிதர்கள் 
செபங்கள் 
Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse