ஆண்டின் பொதுக்காலம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | பெருவிழாக்கள் |
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம்முடைய மக்களின் தாழ்மையான வேண்டல்களுக்குப் பரிவிரக்கத்துடன் செவிசாய்க்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் தாங்கள் செய்ய வேண்டியதை அறியவும் அறிந்ததை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஆற்றல் அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ஆண்டு நடத்துகின்றவர் நீரே; உம் மக்களின் வேண்டல்களை இரக்கத்துடன் கேட்டு எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியை அளித்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் செயல்களை உமது திருவுளத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தியருளும்; இவ்வாறு உம் அன்புத் திருமகனின் பெயரால் நாங்கள் மிகுதியான நற்செயல்கள் புரிந்திடத் தகுதி பெறுவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் முழு மனதுடன் உம்மை வழிபட வேண்டுகின்றோம்: அவ்வாறே எல்லா மக்களையும் நேரிய உள்ளத்துடன் அன்பு செய்யவும் அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உண்மையும் நேர்மையும் உள்ள நெஞ்சங்களில் நீர் குடி கொள்வதாக உறுதி அளித்துள்ளீரே; எங்கள் உள்ளங்களில் நீர் தங்குவதற்கு ஏற்றவாறு நாங்கள் வாழ எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் என்றும் நேரியவற்றை எங்கள் உள்ளத்தில் இருத்திச் சிந்திக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு உகந்தவற்றையே சொல்லாலும் செயலாலும் நிறைவேற்ற எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, இவ்வுலக நிகழ்வுகளை உமது அமைதியின் வழியில் நீர் நெறிப்படுத்து உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது திரு அவை அமைதியான இறைப் பற்றில் மகிழ்ந்திருக்க அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உமது பராமரிப்பின் திட்டம் ஒருபோதும் தவறுவதில்லை; அதனால் தீயவை அனைத்தையும் எங்களிடமிருந்து அகற்றி எமக்குப் பயன் அளிக்கும் அனைத்தையும் கனிவுடன் தந்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, நன்மையானவை அனைத்தும் உம்மிடமிருந்தே வருகின்றன; இவ்வாறு உமது ஏவுதலினால் நாங்கள் சரியானவற்றை உணரவும் உமது வழிநடத்துதலால் அவற்றையே நாங்கள் நிறைவேற்றவும் உம்மை வேண்டுவோருக்குக் கனிவுடன் அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உம்மை எதிர்நோக்கி இருப்போரின் ஆற்றலானவரே, உம்மால் அன்றி வலுவற்ற எங்களால் ஒன்றும் செய்ய இயலாது; எனவே உம் கட்டளைகளை நிறைவேற்றி எங்கள் விருப்பத்தாலும் செயலாலும் உமக்கு உகந்தவர்களாகிட உமது அருள் உதவியைக் கனிவுடன் எங்களுக்கு என்றும் அளிப்பீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம்மையே நம்பி, உம்முடைய அன்பில் நிலைத்திருப்பவர்களை நீர் என்றும் கைவிடுவதில்லை ; இவ்வாறு நாங்கள் உமது திருப்பெயரை எக்காலத்திலும் போற்றவும் உம்மை அன்பு செய்யவும் எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உமது அருளால் உம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நாங்கள் ஒளியின் மக்களாக இருக்க விரும்பினீரே; அதனால் நாங்கள் தவறு எனும் இருளில் சிக்கிக்கொள்ளாமல் உண்மையின் பேரொளியில் என்றும் சிறந்து விளங்க அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, வீழ்ச்சியுற்ற உலகை உம் திருமகனின் தாழ்ச்சியினால் மீண்டும் நிலைநிறுத்தினீரே; அதனால் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து நீர் விடுவித்த உம் நம்பிக்கையாளருக்குப் புனிதப் பேரின்பத்தைத் தந்து அவர்கள் என்றும் நிலையான மகிழ்ச்சி அடைந்திடச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, தவறி நடப்போர் நன்னெறிக்குத் திரும்பிவர அவர்களுக்கு உமது உண்மையின் ஒளியைக் காட்டுகின்றீர்; கிறிஸ்தவ நம்பிக்கையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தமது பெயருக்குப் பொருந்தாதவற்றை விலக்கவும் ஏற்றவற்றைச் செயல்படுத்தவும் செய்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நீர் உளம் கனிந்து உம் அடியார்களாகிய எங்களில் உம் அருள்கொடைகளைப் பெருகச் செய்தருளும்; இவ்வாறு நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றால் நாங்கள் பற்றியெரிந்து உம் கட்டளைகளை விழிப்புடனும் ஆர்வத்துடனும் கடைப்பிடிக்கச் செய்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! உம்மை நோக்கி மன்றாடும் உம் அடியார்களாகிய எங்களுடன் இருந்து உமது கனிவிரக்கத்தை என்றும் எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு எங்களைப் படைத்து, வழிநடத்துகிறவர் நீரே எனப் பெருமை கொள்ளும் எங்களுக்காக நீர் படைத்தவற்றைப் புதுப்பித்து, புதுப்பித்தவற்றைப் பாதுகாத்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் தூய ஆவியார் எங்களுக்குக் கற்றுத்தந்தவாறு, உம்மைத் தந்தை என அழைக்க நாங்கள் துணிவு கொள்கின்றோம்; நீர் வாக்களித்த உரிமைப் பேறான விண்ணக வீட்டுக்கு நாங்கள் வந்து சேரும்படி நீர் தேர்ந்து கொண்ட மக்களுக்கு உரிய மனப்பான்மையை எங்கள் இதயங்களில் பொழிந்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உம்மை அன்பு செய்வோருக்குக் கட்புலனாகாத பல்வேறு நன்மைகளை நீரே ஏற்பாடு செய்திருக்கின்றீர்; எங்கள் இதயங்களில் உமது அன்பின் நிறைவைப் பொழிவதால் நாங்கள் உம்மை அனைத்திலும், அனைத்துக்கும் மேலாகவும் அன்பு செய்து எல்லா வகை மனித எதிர்பார்ப்புகளையும் கடந்த உம் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்வோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆற்றல் வாய்ந்த இறைவா, சிறந்தவை அனைத்தும் நிறைந்தவரே, உம்மீது நாங்கள் உள்ளார்ந்த அன்புகொள்ளச் செய்தருளும்; அதனால் எங்களது சமயப்பற்றை வளர்த்து நன்மைகளைப் பெருகச் செய்து உம்மோடு. நீர் எங்களில் கருத்துடன் உருவாக்கியதைப் பராமரித்துக் காத்தருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எங்களுக்கு மீட்பும் பிள்ளைகளுக்கு உரிய உரிமையும் வழங்கும் இறைவா, உம் அன்புக்கு உரிய மக்களைக் கனிவுடன் கண்ணோக்கும்; அதனால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள உம் மக்களுக்கு உண்மையான விடுதலையையும் நிலையான உரிமைப் பேற்றையும் அளிப்பீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! அனைத்தையும் படைத்தவரும் ஆள்பவருமான இறைவா, எங்களைக் கண்ணோக்கியருளும்; அதனால் உமது பரிவிரக்கத்தின் செயலாற்றலை உய்த்துணர்ந்து உமக்கு முழு இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரிய அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உம்மையும் பிறரையும் அன்பு செய்வதில் திருச்சட்டத்தின் எல்லாக் கட்டளைகளும் அடங்கியிருக்கச் செய்தீரே; உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் நாங்கள் முடி வில்லா வாழ்வுக்கு வந்து சேரும் தகுதி பெற எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, எல்லாவற்றுக்கும் மேலாக மன்னிப்பு அளிப்பதிலும் இரக்கம் காட்டுவதிலும் நீர் எல்லாம் வல்லவர் என வெளிப்படுத்துகின்றீர்; இவ்வாறு உமது அருளை எங்கள் மீது நிறைவாகப் பொழிவதால் நாங்கள் உம் வாக்குறுதிகளை ஆர்வமுடன் நாடி விண்ணக நலன்களில் பங்குபெறச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ன்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் தகுதிக்கும் நாங்கள் விரும்பிக் கேட்பதற்கும் மேலாகவே உமது மிகுதியான பரிவிரக்கத்தால் எங்களுக்கு அருளுகின்றீர்; அதனால் எங்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிந்து மனச்சான்றுக்கு அச்சம் விளைவிப்பவற்றை மன்னித்து, நாங்கள் கேட்கத் தயங்கும் மன்றாட்டை நிறைவேற்றுவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது அருள் என்றும் எங்கள் முன் செல்லவும் எங்களைத் தொடர்ந்து வரவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நற்செயல் புரிவதில் என்றும் கருத்தாய் இருக்கச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் எப்போதும் உமது திருவுளத்துக்கு ஏற்ப வாழச் செய்தருளும்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு நேர்மையான இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரியச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்களில் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியன வளரச் செய்தருளும் அதனால் நீர் கட்டளையிடு வதை நாங்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை நாங்கள் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உமது அருள்செயலால்தான் உம் நம்பிக்கையாளர் உமக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஊழியம் புரிகின்றனர்; இவ்வாறு நீர் வாக்களித்தவற்றைப் பெற்றுக்கொள்ளத் தடையின்றி விரைந்து செல்ல எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, எங்களுக்கு எதிரானவற்றை எல்லாம் கனிவுடன் அகற்றியருளும்; அதனால் உள்ளத்திலும் உடலிலும் எழுகின்ற தடைகளை நீக்கி உவப்புடன் உமக்கு ஊழியம் புரிவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் விருப்பங்களைத் தூண்டியெழுப்ப உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் புனிதச் செயலின் பயனை மிகுந்த ஆர்வத்துடன் நாடி உமது பரிவிரக்கத்தின் பேருதவிகளைப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! தந்தையே இறைவா, உண்மையின் வார்த்தையையும் புனிதப்படுத்தும் தூய ஆவியாரையும் உலகுக்கு அனுப்பி உமது வியத்தகு மறைபொருளை மானிடருக்கு வெளிப்படுத்தினீர்; நாங்கள் உண்மையான நம்பிக்கையை அறிக்கையிடுவதன் வழியாக என்றுமுள்ள மூவொரு கடவுளின் மாட்சியை அறிந்து கொள்ளவும் உமது மாண்பின் பேராற்றலில் நீர் ஒருவராக இருக்கின்றீர் என ஏற்று வழிபடவும் எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, இந்த வியப்புக்கு உரிய அருளடையாளத்திலே உம்முடைய பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர்; உம் திரு உடல், திரு இரத்தம் ஆகியவற்றின் தூய மறைபொருளை வணங்கும் நாங்கள், உமது மீட்பின் பயனை இடைவிடாமல் துய்த்து உணர்ந்து மகிழ அருள்வீராக.
தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, அன்பார்ந்த உம் திருமகனின் இதயத்தை எண்ணிப் பெருமை கொள்ளும் நாங்கள் தம் அன்பினால் அவர் எங்களுக்குப் புரிந்து வருகின்ற வியத்தகு நன்மைகளை நினைவு கூருகின்றோம்; இவ்வாறு விண்ணகக் கொடைகளின் ஊற்றாகிய அத்திரு இதயத்திலிருந்து பொங்கி வழியும் அருளை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, அனைத்துக்கும் அரசரான அன்பார்ந்த உம் திருமகனில் அனைத்தையும் புதுப்பிக்கத் திருவுளமானீர்; அடிமைநிலையிலிருந்து விடுதலை அடைந்த படைப்பு அனைத்தும் மாண்புக்கு உரிய உமக்குப் பணி புரியவும் உம்மை முடிவின்றிப் புகழ்ந்தேத்தவும் அருள்புரிவீராக.