உ
ஸ்ரீமன் நாராயண பக்தி ரஸம்
ம. சத்ய ப்ரஸாத்
July 8, 2020 – 10:00 PM
--
--
மெட்டு
தா-தன-னன; தன-தன்-னன; தன-
தானன...தன்-நானன...
தானன-தன-தந்தன; தன-
தானன-தன-நானன
--
--
நூல்
பாற் கடலிலே, பலதலையுள்ள - ஒரு
பாம்பின் மேல் துயில் மாதவா!
பாரெனை, வந்து சேரெனை – இப்
பாரினில், கோடி ஆதவா!
--
மீனென, வேதம் மீட்டு நீ, அதை
வீணென விடவில்லயே!
வீணையை மீட்டும் நாரதர், அவர்
ஆணையே உன் நாமமே!
--
ஆமையாய் வந்து, அமுதினைத் தந்து,
ஆசையாய் தேவர் காத்தவா!
உன்பதம் பற்றும் பக்தன் நான், எனக்
அமுதமும் வேறு வேண்டுமோ!
--
பன்றியாய் புவி தூக்கி நீ, கடல்
வென்ற நீல வண்ணனே!
நன்றியால் நான் கரைகிறேன், உடன்
ஒன்றி நின்று கரை சேரவெய்!
--
பக்தன் பங்கமாய் வந்த இரண்யனை, நர
சிங்கமாய், அங்கம், அங்கமாய்,
மடியில் கிழித்து, ரத்தம் குடித்து முடித்து –
ப்ரஹலாதனின் உயிர் காத்தவா!
--
உன் பாதமே, வினோதமே – மூவ்
உலகளந்த, சிறு வாமனா!
பக்த ரக்ஷகா, ஆபத் பாந்தவா – ஆதி
சக்தியே, விஸ்வ ரூபமே!
--
உயர் அன்னையின் சிரம் அறுத்த பின்
உயிர் மீட்ட பரசு ராமனே!
ராமனே என் தலைவனாம், ஏய்
காமனே, நீ ஒழிந்திடு!
--
வில்லாளனே, செயல் வீரனே,
பொல்லாத என்வினை போக்கவா!
வேத மெய்ப்பொருள் ராமனே – என்
வேதனை நீ தீர்க்க வா!
--
பல, ராம நாமம் ஜபித்தே –
பலராமனான சேஷனே!
உருகினேன், நான் மருகினேன் – உடன்
அருகில் வா, என் ஐயனே!
--
யாதவா, இங்கு ஒடிவா - இக்
க்ஷணத்தில், பாடி ஆடிவா!
மாலனே, பக்தர் தோழனே – தவ
சீலனே, மாயக் கண்ணனே!
--
இருள் விலக்கினாய், அருள் பருகவே,
மருள் அழித்தெனை காக்கவா!
கலி கல்கியான பின்னும் - பக்தன்
கலங்கிடாமல் காப்பாய்!
--
உனதடிமை நான், உனதுடமை நான்,
உன் நாமம் ஒன்றே சொர்கமாம்!
என்றும் கோவிந்தா என்று கதறுவேன்,
உன்னுள் இரண்டர நான் கலந்திட!
--
--
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
--
-x-
Back to table of contents