சமகம்

November 2, 2023.    10:31 PM


பூஜை அறையில் தந்தை:

“ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே,

அனுகாமஸ்ச மே, காமஸ்ச மே, ஸெளமனஸஸ்ச மே,

பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே…”


மகன்: “அப்பா, என்ன ஸ்லோகம் சொல்லிண்டு இருக்க?”


அப்பா: “வேதத்துல சமகம் பாராயணம் பண்ணிண்டு இருக்கேன்! சமகத்துல எல்லாமே, ‘மே, மே’ன்னு முடியும்.”


சிறிது நேரம் கழித்து மகன் தன் தந்தையிடம் ஓடி வந்து: “அப்பா, நம்ம இஸ்திரி காரன் முனியாண்டி நன்னா சமகம் சொல்றான் பா!”


அப்பா (ஆச்சர்யத்துடன்): “என்னடா ராமு சொல்லற?”


மகன்: ஆமாம் பா! நான் துணி வாங்க அவனாத்துக்கு போனப்ப, கோவத்தோட அவன் பொண்டாட்டி கிட்ட சமகத்துல கத்திண்டு இருந்தான்.


“இன்னா மே, உன் தம்பி படவா ராஸ்கோல் மே,

துட்ட லவட்டிக்கினு பூட்டான் மே,

சுத்த சோமாரி மே, பேமானி மே,

கைத, கஸ்மாளம் மே,

படா பேஜாரு மே!”


அப்பா: !!!!!!!!!


(c) Dr M Sathya Prasad


Back to table of contents