உ
அத்வைத ஸாராம்ஸம்
ம. சத்ய ப்ரஸாத். 16 செப்டம்பர் 2020
பஃறொடை வெண்பா
ஒதுக்குஸம் ஸாரஸா கரத்தை இன்றே
ஒதுங்குஐம் புலசிறையி னிலடங் காமல்
ஒடுக்குஉ ணர்சியைஸா தனைகள் மூலம்
ஒடுங்குமுன் ஜெனுமவா சனைகட் டறுத்து
அடக்குஇச் சைதனையாத் துமனறிந் தே
அடங்குதா னென்றகங் காரமொ ழித்து
அடக்கமொடு முடங்கினால் நீயு முள்ளே
மிதக்குஸச்சி தானந்த வெள்ளத் தில்நீ
மிடுக்கொடுநீ யதுவேதா னென்றறி
------------
அடியேன் மேற்காணும் அதே செய்யுளை மாத்திரை கணக்கிட்டு கீழ் கண்டவாறு நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைத்துள்ளேன். ஐகாரக் குறுக்கங்கள் மாத்திரைகளை சிலவிடங்களில் குறைப்பது நோக்கத் தக்கது. மேலும், மாத்திரை ஒன்றாயிருக்கினும், அவை ஒலிக்கும் விதம் ஸந்தத்தை பாதிக்கின்றன. உதாரணமாக, “ஸா” என்பது 2 மாத்திரை. அது போல், “புல” என்பதும் 2 மாத்திரை. விதிப்படி, இவை இரண்டுமே ஒலிக்க ஒரே கால அளவை எடுக்கின்றன. ஆனால், செய்யுளில் வரும்போது, ஒலிக்கும் விதம் வேறுபட்டு, அதன் காரணமாக ஸந்தம் பாதிக்கப் படுகிறது. ஆகவே, ஸந்தத்திற்காக, ஒரு அடியிலுள்ள ஒரு சீர், அதற்கொத்த மற்றொரு அடியிலுள்ள சீருடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால் மாத்திரை வேறுபாடு இருக்கலாம்.
நிலைமண்டில ஆசிரியப்பா
3.5 4.5 5.5 3.5 (மாத்திரை)
ஒதுக்கு ஸம்ஸார ஸாகரத்தை இன்றே
ஒதுங்கு ஐம்புலசி றையிலடங் காமல்
ஒடுக்கு உணர்சியை ஸாதனைகள் மூலம்
ஒடுங்கு முன்ஜெனும வாசனைகட் டறுத்து
அடக்கு இச்சைதனை ஆத்துமன றிந்தே
அடங்கு தானென்ற அகங்கார மொழித்து
அடக்க மொடுமுடங் கினால்நீயு முள்ளே
மிதக்கு ஸச்சிதா னந்தவெள்ளத் தில்நீ
மிடுக்கொ டும்நீய துவேதான் என்றறி
---------------------
பதம் பிரித்துக் கீழ் கண்டவாறும் படிக்கலாம்
ஒதுக்கு ஸம்ஸார ஸாகரத்தை இன்றே
ஒதுங்கு ஐம் புல சிறையினில் அடங்காமல்
ஒடுக்கு உ ணர்சியை ஸாதனைகள் மூலம்
ஒடுங்கு முன் ஜென்ம வாசனை கட்டு அறுத்து
அடக்கு இச்சைதனை ஆத்துமன் அறிந்தே
அடங்கு தான் என்ற அகங்காரம் ஒழித்து
அடக்கமொடு முடங்கினால் நீயும் உள்ளே
மிதக்கு ஸச்சிதானந்த வெள்ளத்தில் நீ
மிடுக்கொடு நீ அதுவேதான் என்று அறி.
-------------
Back to table of contents