1. National Exam preparatory workshop
2. Learning festival - Umar Pulavar Tamil Language
3. DJ Engagement
3. Theatre Experience
4. Journalism & Translation workshops
5. Oral exam preparation workshop
தேசிய நிலைத் தேர்வை எதிர்நோக்கியிருந்த உயர்நிலை 4 விரைவு மற்றும் ஏட்டுக்கல்வி வழக்கநிலை மாணவர்களுக்காக இப்பயிற்சி பட்டறை காமன்வெல்த் பள்ளியில் நடைபெற்றது. அப்பட்டறையில் மற்ற பள்ளி மாணவர்களுடன் எங்கள் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். மேலும், அனுபவம்பெற்ற ஆசிரியர்களும் தேசியத் தேர்வில் இடம்பெறும் ஒவ்வொரு பகுதி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். மாணவர்கள் தங்களுக்குரிய சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள சிறந்த களமாக இப்பட்டறை அமைந்தது. இப்பட்டறையில் கலந்துகொண்ட மாணவர்கள் இதுபோன்ற பட்டறைகளை வருங்கால மாணவர்களுக்கும் நடத்த வேண்டுமென்று கருத்துத் தெரிவித்தனர்.
கற்போம் படைப்போம் என்ற கருப்பொருளில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற கற்றல் திருவிழாவில் மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள் இப்பயணத்தின் மூலம் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை (AI) தமிழ்மொழியில் எவ்வாறு இணைத்துப் பயன்படுத்த முடியுமென்று கற்றுக்கொண்டனர். மேலும், தமிழ்மொழியின் பாரம்பரியக் கலைகள், விளையாட்டுகள் பற்றி அறிந்ததோடு ஒயிலாட்டத்தை ஆடியும் கபடி விளையாட்டை விளையாடியும் நேரடி அனுபவம் பெற்றனர். பங்கேற்ற மாணவர்கள் இப்பயணம் மகிழ்வூட்டும் பயணமாக அமைந்தது என்றனர்.
உயர்நிலை 4 மாணவர்களுடன் ஒரு கல கலப்பான கலந்துரையாடலுக்காக, வானொலி படைப்பாளர் திரு ரஃபி (Mr Rafi - Oli 968) பள்ளிக்கு வந்திருந்தார். அவர் மாணவர்களிடம் சிங்கப்பூர் வானொலிகளைப் பற்றியும் வானொலி நிகழ்ச்சிகள் குறித்தும் கலந்துரையாடினார். மாணவர்கள் உற்சாகமாக அவரிடம் பேசி மகிழ்ந்தனர். மேலும், வானொலித்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் தமிழ்மொழியின் இனிமை குறித்தும், பள்ளிக்கு அப்பாலும் தொடர்ந்து தமிழ்ப்பேச வேண்டுமென்று மாணவர்களை ஊக்கப்படுத்திவிட்டுச் சென்றார். மாணவர்கள், இக்கலந்துரையாடல் மகிழ்ச்சியூட்டும் அனுபவமாக இருந்ததெனக் கூறினர்.
உயர்நிலை 4 மாணவர்கள் வாய்மொழித்தேர்வைத் தன்னம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்குப் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் ஆதரவில் சிறுகதை எழுதுதாளர், டோஸ்ட்மாஸ்டர் மேடைப்பேச்சாளர் திருமதி செல்வி மற்றும் டோஸ்ட்மாஸ்டர் மேடைப்பேச்சாளர் திருமதி சௌமியா அவர்களும் இப்பட்டறையை வழிநடத்தினர். இப்பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள், வாய்மொழித்தேர்வு குறித்த தங்களுக்கிருந்த ஐயங்களைப் போக்கிக்கொண்டதோடு, புதிய செய்திகளையும் கற்றுக்கொண்டர். மாணவர்கள், இப்பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருந்ததெனக் கூறினர்.
சிங்கப்பூரில், நாடகம் என்பது பல ஆண்டுகளாகப் பிரபலமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. காலம் சென்ற மகாபாரதம், சிலப்பதிகாரம், போன்ற சரித்தரக் கதைகளைக் கண்முன் காட்டும் சக்தி நாடகத்திற்கு உண்டு. அத்தகைய நாடகத்துறையில் சிறந்து விளங்கும் பல நடிகர்கள் சிங்கப்பூரில் உள்ளனர். அச்சிறப்புடைய நாடக அனுபவத்தை மாணவர்கள் பெற்றனர். மேலும், மாணவர்கள் தமிழ்மொழியின் பாரம்பரியத்தையும் மொழி ஆற்றலையும் கண்டு வியந்ததாகக் கூறினர்.
மாணவர்கள் இருமொழி ஆற்றலில் சிறந்து விளங்க வேண்டுமென்பதில் சிங்கப்பூர்க் கொள்கைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் TDP (Talent Development program) என்னும் பெயரில் தமிழ்மொழியில் அதீத ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து இப்பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி முடிந்ததும் குறிப்பிட்ட சில தினங்களில் இப்பயிற்சி வழங்கப்படும். இந்த வருடம் இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு செய்தித்துறை (Journalism) பற்றியும் ஆங்கில செய்தியைத் தமிழில் மொழிப்பெயர்க்கவும் (Translation) பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்பட்டன. இப்பட்டறைகளில் கலந்துகொண்ட மாணவர்கள், பாடப்புத்தகத்தைத் தாண்டி செய்தித்துரைப் பற்றியும் மொழிப்பெயர்ப்புத்துறைப் பற்றியும் அறிந்துகொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததாகக் கூறினர்.
Learning Fiesta @ Umar Pulavar
BLACSPICE Media's Tamil Bootcamp
Translation Workshop
Naanum Oru Padaipaali 2023