2025 Sec 1 - TL Project Work
2025 Sec 2 - TL Project Work
2024 Sec 3 - Project Work
உயர்நிலை 3 விரைவு மற்றும் வழக்கநிலை மாணவர்கள் சேட்ஜிபிடியைக் கொண்டு வாய்மொழித் திறனை வளர்த்தல் என்ற அடிப்படியில் WA2 திட்ட வேலையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்தத் திட்ட வேலையை குழுநிலையிலும் தனி நிலையிலும் திறம்பட செய்து முடித்தனர். மேலும் அவர்களது திட்ட வேலையை 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தாய்மொழக் கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டனர் (Mother Tongue Languages Symposium 2024)
உயர்நிலை 3 ( திரிஷ்னா 301)
தலைப்பு – தினை விதைப்பவன் தினை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் (பழமொழிக் கதைக் கட்டுரை)
ராமுவும் பாலனும் நகமும் சதையும்போல் நெருங்கிய தோழர்களாக இருந்தனர். அவர்கள் மூன்று வயதிலிருந்தே நெருங்கிய தோழர்களாக இருந்தனர். அவர்கள் என்ன வேலை செய்தாலும் ஒன்றாகவே செய்வார்கள். ஆனால் உயர்நிலை பள்ளிக்குச் சென்ற பிறகு பாலனுக்குப் புதிய தோழர்கள் கிடைத்தனர். அதனால், கொஞ்சம் கொஞ்சமாக ராமுவும் பாலனும் பிரிந்தனர். இருவரும் தனித்தனிப் பாதையில் சென்றனர். அவர்கள் மீண்டும் சந்தித்தனர். அது எப்படி? எந்தச் சூழலில் நடந்தது? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் எழுதுகிறேன்.
பாலனின் புதிய தோழர்கள் தீயவர்களாக இருந்தனர். அவர்கள் எப்போதும் பாலனைக் கெட்ட செயல்களைச் செய்ய வைப்பர். பாலனும், நண்பர்கள் சொல்வதை எண்ணிப்பார்க்காமல் எல்லாவற்றிற்கும் பூம்பூம் மாடு தலையாட்டுவதுபோல் கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்வான். இதனால் நாளாக நாளாக பாலனும் தீயவனாக மாறினான். அவன் வகுப்பிற்கு நேரத்திற்கு செல்லமாட்டான். வீட்டுப்பாடங்கள் எதையும் செய்ய மாட்டான். அவன் வகுப்பில் பயிலும் மாணவர்களை எல்லாம் கேலிச் செய்வான். இதை எல்லாம் ஆசிரியர் கண்டித்தால் அவரிடம் திமிராக நடந்துகொள்வான்.
ராமுவோ, பாலனைப்போல் இல்லை. அவன் வகுப்பில் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பது மட்டுமில்லாமல், ஆசிரியர் கேட்கும் பல கேள்விகளுக்குப் சரியாகப் பதில் சொல்வான். அவன் தன்னுடைய நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுச் செலவிடுவான். அதனால், அவனுடைய வீட்டுப்பாடங்களையெல்லாம் சரியான நேரத்தில் முடித்துவிடுவான். ஆகையால், அவன் பள்ளியில் மற்றப் பொறுப்புகளில் ஈடுபட்டு அவற்றையும் நன்றாக கையாள முடிந்தது. மேலும், அவன் தன் வகுப்பு நண்பர்களிடம் அன்பாக நடந்துகொள்வான். இதானல், அவனுடைய சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவனை மிகவும் பிடிக்கும்.
சில வருடங்களுக்குப் பிறகு ராமுவும் பாலனும் தங்களுடைய படிப்பினை முடித்துவிட்டு வேலைத்தேடிச் சென்றனர். பாலன் வேலைத்தேடிச் சென்றுகொண்டிருந்தபோது ஒரு முதியவர் அவ்வழியில் இருந்தார். அவர் நிறையப் பைகளைத் தூக்கிக் கொண்டிருந்ததால் போக்குவரத்துச் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார். அவர் பாலனைக் கண்டவுடன் அவனிடமிருந்து உதவி கேட்டார். ஆனால், பாலனோ அவருக்கு உதவி செய்யாமல் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். பிறகு அவன் முதியவரிடமிருந்த ஒரு பையை வாங்கி அதிலிருந்த பழங்களையெல்லாம் கீழே கொட்டிவிட்டுச் சென்றான்.
சிறிது நேரம் கழித்து ராமு அந்தப் பக்கமாக வந்தான். அப்பொது அந்த முதியவர் தரையில் கிடந்த பழங்களையெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த ராமு, உடனே அவரிடம் ஓடிச்சென்று அவருக்கு உதவினார். பிறகு ராமு முதியவரிடமிருந்த அனைத்துப் பைகளையும் வாங்கிக்கொண்டு போக்குவரத்துச்சாலையைக் கடக்க உதவினான். தனக்கு உதவிச் செய்த ராமுவுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால், ராமுவோ! மறுத்தான். அப்போது முதியவர் ராமுவிடம் அவன் என்ன வேலை செய்கிறாய்? என்று வினவினார். அவனோ, இப்போதுதான் தான் வேலை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினான். இதைக்கேட்ட முதியவர், ‘என் மகன் ஒரு பெரிய தொழிலதிபர். அவனிடம் உனக்கேற்ற வேலையைக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்கிறேன் என்றார். ராமுவோ! நடப்பது கனவா? நனவா? என்றெண்ணித் திகைத்து நின்றான்.
சில மாதங்கள் கழித்து, ராமு வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்திற்கு முன்னேறி வந்தான். ஒருநாள் ராமு வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவனிடம் பிச்சைக்கேட்டு ஒருவர் வந்தார். அவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்று யோசித்தான். மீண்டும் அவரை பார்த்தான், அதிர்ச்சியில் வாயைடைத்துப்போனான். அது வேறுயாருமில்லை பாலன், பாலா நீயா? நீ எப்படி இந்நிலைக்கு ஆளானாய்? என்று பதற்றத்துடன் அவனிடம் வீசாரித்தான்.
பாலன், ராமுவை முகம்கொடுத்துப் பார்க்க முடியால் கூனிக்குறுகி நின்றான். ராமு, உயர்நிலைப் பள்ளியில் நான் கண்மூடித்தனமா நான் நண்பர்களைத் தேர்ந்தெடுத்ததால் இந்நிலைக்கு ஆளானேன். மேலும், ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ள என்னிடம் நல்ல படிப்பும் இல்லை, நல்ல குணங்களும் இல்லை. ஆனால், நேரத்திற்கு இந்த வயிறு சாப்பாடு கேட்கிறது. அதனால்தான் நான் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றான்.
ராமு, உன்னை எண்ணிப் பெருமைப்படுகிறேன். சிறுவயதிலிருத்தே நீ பொறுப்புடனும் மற்றவர்களுக்கு உதவிசெய்தும் வாழ்ந்துவந்தாய். அதனால்தான் நீ நல்ல வேலை, நல்ல குடும்பம் என்று மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். நம் தமிழ்வகுப்பில் ஆசிரியர் ஒருமுறை ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழியைக் கதையாகக் கூறிக் கற்றுத் தந்தார். அதன் அருமை அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது என்றான் ஏக்கத்துடன். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் முடிந்தவரை நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம் என்று சூளுரைத்து இக்கதையை முடிக்கிறேன்.
தலைப்பு – உன் உறவினர் பிறந்தநாள் விழாவில் நீ கலந்துகொண்டாய். அங்கு நிகழ்ந்த ஒரு எதிர்பாராத சம்பவம் அனைவரையும் மன வேதனை அடையச் செய்தது. அச்சம்பவத்தை விவரித்தும் அதிலிருந்து நீ கற்றுக்கொண்ட படிப்பினையையும் விளக்கி எழுதவும்.
அன்று சூரியன் தன் பொற்கரங்களை நீட்டி உலகத்திற்கு ஒளி தந்து கொண்டிருந்தான். நான் என் உறவினர் வீட்டில் இருந்தேன். வீட்டில் இருந்த எல்லோரும் ‘கல கல’ வென்று மும்மரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ‘ஜெசிகா! நீ இந்த பலூனை அங்கே கட்டு,’ என்று என் அம்மா கூறியது போல் செய்தேன். நான் என் தலையை ஆட்டி அம்மா கூறியதுபோல் செய்தேன். நீங்கள் ஏன் நான் ஒரு பலூனை கட்டுகிறேன் என்று யோசிக்கலாம். அன்று என் அத்தையின் மகள், ரூபியின் பிறந்தநாள். அவளது பிறந்தநாளுக்கு என் அத்தையும் மாமாவும் எங்களை அவள் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருந்தனர். நாங்கள் புன்னகை தவழும் முகத்துடன் ரூபியின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றோம். நான் ரூபியின் வீட்டை அலங்கரிக்க உதவி செய்துக்கொண்டிருந்தேன். அன்று என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? என்னுடன் பயணியுங்கள் இக்கட்டுரையில் அன்று நடந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
அப்போது, என் அம்மாவின் பைக்குள் இருந்த தங்க மோதிரத்தை பார்த்தேன். அது ‘பள பள’ என்று மின்னிக்கொண்டிருந்தது. என் குடும்பத்தினரும் என் உறவினர்களும் சேர்ந்து வாங்கிய மோதிரம் அது. நாங்கள் ரூபிக்கு பிறந்தநாள் பரிசாக அந்த தங்க மோதிரத்தை வாங்கினோம். அந்த தங்க மோதிரத்தைப் பத்திரமாக பாதுகாக்கும்படி என் அம்மா என்னிடம் கூறினார். நான் மோதிரத்தை எடுத்துப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா மற்ற அலங்காரத்தை கட்டுவதற்கு என்ன அழைத்தார்.
சில மணி நேரங்கள் கழிந்தன. மாலை மங்கி, இருள் லேசாக கெளவத் தொடங்கியது. நாங்கள் ஒரு குடும்பமாக நாறைய விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தோம். என் உறவினர்களின் முகமெல்லாம் பல்லாக தெரிந்தன.
அடுத்து ரூபியின் பிறந்தநாள் பரிசைக் கொடுக்கும் நேரம் வந்தது. அம்மா என்னடம் அந்த தங்க மோதிரத்தை எடுத்து வரச்சொன்னார். நான் அவரது பை முழுவதும் தேடினேன். அந்த மோதிரம் பையில் இல்லை. எனக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. எனக்குப் பயத்தில் நெஞ்சு ‘பட பட’ வென்று அடித்தது. என் வயிற்றினுள் பயம் என்ற பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது. நான் ஒரு கணம் பனிகட்டிபோல் உறைந்துபோனேன்.
நான் உடனே என் உறவினர்களிடம் அதிர்ச்சியான செய்தியைக் கூறச்சென்றேன். ஆனால், என் வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டன. பிறகு நான் சோகமாக அவர்களிடம் கூறினேன். அவர்களால் நம்பமுடியவில்லை. பல்லாக இருந்த அவர்களின் முகங்கள் வேதனையில் சுருங்கிப்போனது. அவர்கள் தந்த காசு எல்லாம் வீணாக போய்விட்டது. மேலும், ரூபிக்குப் பிறந்தநாள் பரிசு இல்லையென்று எல்லோரும் மனவேதனை அடைந்தார்கள்.
அப்போது, மின்னலென ஒரு யோசனை பளிச்சிட்டது. மோதிரம் கீழே விழுந்திருக்குமோ? என்று யோசித்து மின்னல் மின்னும் வேகத்தில் மேசைக்கடியில் பார்த்தேன். என் கண்கள் அகல விரிந்தன. அந்த மோதிரம் அங்குதான் இருந்தது. சூரியனைக்கண்ட தாமரைப்போல் மலர்ந்தேன். உடனே என் உறவினர்களிடம் காட்டினேன். அவர்கள் பெருமூச்சி விட்டார்கள். நாங்கள் புன்னகையுடன் தங்க மோதிரத்தை ரூபியிடம் தந்தோம். அவள் மகிழ்ச்சி அடைந்தாள். அந்நிகழ்விலிருந்து, நான் எப்போதும் எந்த ஒரு பொருளையும் கவனமாகக் கையாள வேண்டுமென்று கற்றுக்கொண்டேன்.
தலைப்பு - நீ உன் உடல் நலம் பற்றி சிறிதும் அக்கறையின்றி ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றி வந்தாய் உன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சம்பவம் அந்த பழக்கத்தை மாற்றியது அந்த சம்பவம் என்ன என்பதையும் அதிலிருந்து நீ கற்ற பாடத்தைப் பற்றியும் விளக்கி எழுது.
சூரியன் தன் பொற்கரங்கள் விரித்து ஒளி வீசியது. அனைவரும் பணத்தால் சந்தோசத்தை வாங்க முடியாது என்பார்கள். ஆனால் அது தவறு என்று நான் நினைத்தேன். அதனால் நான் ஓட்டைக்கையனாக பணத்தை விரைவு உணவுகளில் நான் அதிகம் செலவு செய்தேன். என் அம்மாவின் பல அறிவுரைகள் செவிடன் காதில் சங்கை ஊதியது போல் நான் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் எனக்கு தெரியுமா அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும் என்று .
ஒரு நாள் பள்ளியில் ஓட்டப்பந்தயம் ஒன்று நடந்தது. அனைத்து மாணவர்களும் வருகையில் நன்றாக தயாரானார்கள். நானும் அவர்களைப் போல அதனைச் செய்தேன். அப்போது ஆசிரியர் ஒருவர் மூன்று, இரண்டு ,ஒன்று, ஓடலாம் என்று கூறினார் நான் உடனே ஓடினேன். நான் தான் முதலில் இருந்தேன். அது அதிக நேரத்திற்கு இல்லை. அனைவரும் என்னைத்தாண்டி மின்னல் வேகத்தில் ஓடினார்கள். இப்போது நான் கடைசி இடத்தில் இருந்தேன். அப்போது நான் அதிவேகமாக ஓடினேன். திடீரென்று நான் மயங்கி விழுந்தேன்.எனக்கு என்ன நடந்தது என்று ஞாபகமே இல்லை. நான் கண் விழித்த போது மருத்துவமனையில் இருந்தேன்.
அங்குள்ள மருத்துவர் எனக்கு அதிக கொழுப்பு உள்ளதாகவும் நான் அதிவேகமாக ஓடியதால் கொழுப்பு அதிவேக ரத்த ஓட்டத்தை தடுத்து என்னை மயங்க வைத்தது என்று கூறினார். மேலும் நான் இனிமேல் விரைவு உணவு அல்லது ஆரோக்கியமற்ற உணவை உண்ணக்கூடாது என்றும் இனிமேல் என் வாழ்க்கையில் ஓட இயலாது என்றும் கூறினார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில் ஒன்றைக் கண்டேன்.
அது 5 கிலோமீட்டர் மாரத்தான் அதில் வெற்றி பெறுபவருக்கு $10,000 வெள்ளி என்று எழுதி இருந்தது. அப்போது மருத்துவர் கூறிய சொற்கள் என் மனதில் வந்து சென்றன. நான் மருத்துவர் கூறியது தவறு என்று நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதிற்குள் உருவானது. அதனால் நான் அல்லும் பகலும் பாராமல் விடாமுயற்சியுடன் முயற்சி செய்தேன் நாளாக நாளாக நான் என் உடலில் மாற்றத்தை காண முடிந்தது மாதங்கள் கழித்து மாரத்தான் நாள் வந்தது.
நான் 100 மக்களுடன் நின்று கொண்டிருந்தேன் திடீரென்று அனைவரும் ஓடியுடன் நானும் ஓட தயாரானேன். ஓட ஆரம்பித்தவுடன் நான் நன்றாக சென்று கொண்டிருந்தேன். ஆனால் 1 கிலோமீட்டர் வந்ததும் என் வயிற்றில் வலி இருப்பதை நான் உணர்ந்தேன். கண்டுகொள்ளாமல் ஓடிகொண்டிருந்தேன். ஆனால் 2 கிலோமீட்டர் வந்ததும் என் மனது அதிவேகமாக துடித்தது. ஆனால் அது என்னை தடுக்கவில்லை. நான் 4km வந்தது மயக்கமாக இருந்தேன். இந்நிலையில் நான் கடைசி இடத்தில் இருந்தேன். முடிவு இடத்தை தாண்டி நான் மயக்கம் அடைந்தேன். என் செவிகளுக்கு கை தட்டும் சத்தம் கேட்டது. நான் கண் விழித்தேன். அப்போது நான் விடாமுயற்சி என்ற விருதை பெற்று ஆயிரம் வெள்ளி பெற்றேன். அப்போதுதான் நம் வாழ்க்கையை நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களை முடிவு செய்ய விடக்கூடாது என்று உணர்ந்தேன்.
தலைப்பு - நீ உன் உடல் நலம் பற்றி சிறிதும் அக்கறையின்றி ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றி வந்தாய் உன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சம்பவம் அந்த பழக்கத்தை மாற்றியது அந்த சம்பவம் என்ன என்பதையும் அதிலிருந்து நீ கற்ற பாடத்தைப் பற்றியும் விளக்கி எழுது.
அன்று சனிக்கிழமை சூரியன் ஒளி மண்ணில் விழத் தொடங்கியது. நான் காலையில் 9:00 மணிக்கு எழுந்தேன். ஏனென்றால் நான் மாலத்தீவில் வேலை செய்வதால் விமானம் எடுத்து அங்கே செல்ல வேண்டும். நான் என் குடும்பத்தை பார்க்க முடியாது என்பதனால் மிகவும் கவலையாக இருந்தேன். எனது பெற்றோர்கள் தேம்பித் தேம்பி அழுது எனக்கு பிரியா விடை கொடுத்தனர். நான் விமான நிலையத்திற்கு சென்றேன்.
30 நிமிடங்களில் நான் விமானத்தில் அமர்ந்தேன். நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று தூங்குவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் தூங்க முடியவில்லை. ஒரு சிறு குழந்தை தேம்பித் தேம்பி அழுதபடியே இருந்தது. எனக்கு மிகவும் கோபமாக இருந்தது. ஒருவழியாக பயணம் முடிந்து மாலத்தீவை சென்றடைந்தேன். நான் என்னுடைய நண்பனின் வீட்டிற்கு சென்றேன்.
நான் எனது நண்பன் வீட்டில் தங்கி இருந்தாலும் உணவை நான் வெளியில் வாங்கி சாப்பிட்டேன். அங்கு எனக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை. நான் எனது பெற்றோரின் கையால் சமைத்த உணவை சாப்பிட மிகவும் ஏங்கினேன். எனது உடல் எடை அதிகரித்துக் கொண்டே வந்தது. நான் உடற்பயிற்சி மேற்கொண்டும் அது எந்த பயனையும் கொடுக்கவில்லை.
திடீரென்று எனக்கு ஒரு யோசனை வந்தது. நான் உண்ணும் உணவை நானே சமைத்துக் கொண்டால் என்ன? என்று நினைத்தேன். அதன் பிறகு உணவு சமைக்கும் சில ஒலிக் காட்சிகளை பார்த்து நான் சமைக்க கற்றுக் கொண்டேன். அப்படிப் பார்த்து சமைத்த ஒரு கோழி சோறு எனது நண்பனிடம் கொடுத்தேன். அவன் சாப்பிட்டு பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டினான். ஒரு மாதத்திற்குப் பிறகு நான் மிகவும் ஆரோக்கியமாக இருந்தேன். ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் முக்கியம் என்பதனை நான் அறிந்து கொண்டேன்.
தனிமையில் அமர்ந்துள்ள பெண்ணே... எதிர்காலம் உனக்கானது எழு! எண்ணங்கள் உயர்ந்தால் உன் எதிர்காலமும் உயரும்! எதற்கும் கலங்காதே... உன் முயற்சிகளைத் தன்னம்பிக்கையாய் தூவி செயல் என்னும் உளியால் செதுக்கி... உனக்குள் உறங்கும் சிற்பியை உலகுக்கு உணர்த்த எழு! வீரத்துடன் வாழ்ந்த நம் தமிழ்ப் பெண்களின் வீரத்தை மீண்டும் விதைக்க எழு! பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக எழு! சோதனைகளை சாதனைகளாக்க எழு!... உலக மக்களும் உன்னைப் பின்தொடர வெற்றியுடன் எழு! பார்போற்றும் வகையில் சாதனைகளைப் படைக்க எழு!
~ Subashini (301)
மூத்தோர் சொல் அமிழ்தமாம்... என் அப்பா சொன்னார்! ஆனால் என் தாத்தாவோ முதியோர் இல்லத்தில்!? நம் மூத்தோரை மதிப்போம்... தாத்தா பாட்டிகளை முதியோர் இல்லம் எனும் நரகத்தில் சேர்க்காமல் நம் குடும்பத்துடன் குதூகலமாய் வாழ வழிசெய்வோம்... பெற்றோர்களுக்கு உணர்த்த ஒத்துழைக்க மறுப்போம்... ஆம் உழைத்து ஓடாய் தேய்ந்து பணிஓய்வு பெற்றதும் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் கொடுமையை இளம் மாணவச் செல்வங்களாகிய நாம் அதை எதிர்ப்போம்... தாத்தா பாட்டிகளுடன் ஒரே குடும்பத்தினராக வாழ்ந்து அவர்களின் அன்புநிறைந்த நீதிக்கதைகளைக் கேட்டு வாழ்வில் சிறப்போம்... தனிமரம் தோப்பாகாது! தாத்தா பாட்டிகளின் அன்புபோலாகாது.
~T. Sneha (302)
தாயின் கைகள் தன்னைக் காக்கும்! வறுமையில் நான் வாடினாலும் தாயின் பேரன்புமிகு செல்வம் எனக்குத் துணையுண்டு! தாய்ப்பாசம் போதும் நான் தரணி ஆள! தன்னம்பிக்கை எனும் அட்சயப்பாத்திரம் அம்மா! மற்றதெல்லாம் இவ்வுலகில் சும்மா! விலங்குகள் காட்டில் மட்டுமல்ல... நாட்டிலும்... மனிதநேயமற்ற மனித விலங்குகள்! கலங்காதே கண்மணி... கண்ணைப்போல உனைக் காக்க உன் அம்மா நானிருப்பேன்! கலங்காதே! கடலில் தவிக்கும் கலங்கள் கரைசேர ஒளிகாட்டும் கலங்கரை விளக்கம் போல.... உன் எதிர் காலம் ஒளிமயமாக உன்னுடன் நானிருப்பேன் நம்பிக்கை கொள்! மிகச்சிறந்த எதிர் காலம் உனக்கானது என சொல்! தாயின் தன்னம்பிக்கை வார்த்தைகளால் இந்த உலகத்தை வெல்!
~Kumaresan Harshini Hirthika (304)