Tamil Language
Students' Achievements
Students' Achievements
In Queensway, I'm Possible!
தமிழ்மொழி பண்பாட்டுக்கழகம் 2024 ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் விழா போட்டியில் உயர்நிலை விரைவு மாணவி இரண்டாம் பரிசை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இவர் இருபது திருக்குறளை மனப்பாடம் செய்த்தோடு அக்குறள்கள் சிங்கப்பூர்ச் சூழலுக்கு எவ்வாறு பொருந்தி வருகிறது என்ற விவரத்தையும் நீதிபதிகளின் முன் விவரித்தார்.
Budding Writers’ Program
சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த நானும் ஒரு படைப்பாளி போட்டியில் உயர்நிலை 3 விரைவு மாணவி திரிஷ்னா கோப்பையும் சான்றிதழும் பெற்றார். இவர், சிறுகதை எழுதும் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டார். அப்பயிற்சியின் மூலம் அப்போட்டியில் வழங்கப்பட்ட தலைப்பிற்குப் பொருத்தமான கதைக்களம், கதைமாந்தர்கள், கதைத்திருப்பம், எதிர்ப்பாராத முடிவு என்று திறம்பட சிறுகதை எழுதியிருந்தார். நடுவர்களால் சிறந்த எழுத்தாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற நற்றமிழ் உரைக்களத்தில் உயர்நிலை 3 மாணவர்கள் பங்கேற்றனர். இப்பயிலரங்கில் பலர் முன்னிலையில் எவ்வாறு திறம்பட பேசவேண்டும் ? அதற்கு எவ்வாறு தம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டனர். மேலும் போட்டியன்று நீதிபதிகளின் முன் தன்னம்பிக்கையுடன் தங்கள் உரையை வெளிப்படுத்தினர். இறுதியில், பங்கேற்ப்புச் சான்றிதழ் பெற்றனர். மாணவர்கள் இந்தப் பட்டறையில் கலந்து கொண்டது சிறந்த அனுபவமாக இருந்தது என்று பகிர்ந்துகொண்டனர்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய கம்பன் விழா 2024 போட்டியில் உயர்நிலை 4 விரைவு நிலையைச் சேர்ந்த நஃபிஸ் (Nafis Hasan Ali - 404) மூன்றாம் பரிசை வென்றார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய கம்பன் விழா 2024 போட்டியில் உயர்நிலை 4 விரைவு நிலையைச் சேர்ந்த இம்ரான் கான் (Imran Khan 401) சேர்ந்த - 404) ஊக்கப் பரிசு வென்றார்.