கண்ணீர் எதற்கு ?

Post date: Feb 14, 2011 12:33:18 PM

உன் துக்கத்தில் பங்கெடுக்க ஒருவரும் இல்லயா

உன் கண்ணீர் துடைக்க ஒரு விரல் இல்லயா

உன் சோகத்தை சுமக்க ஓர் தோள் இல்லயா

நீ ஓய்ந்து விழும்போது பிடிக்க ஒரு பற்று மரம் இல்லயா

நீ தத்தளிக்கும் போது எட்டிபிடிக்க ஒரு பட்ட மரம் இல்லயா

பாவி நீ என்ன வாழ்ந்தாய் !

பயனில்லா பண்டம் போல

மற்றோர் துக்கத்தில் பங்கெடுக்க நினைத்து உண்டா ?

மற்றோர் கண்ணீர் துடைக்க மனதினில் எண்ணம் உண்டா ?

மற்றோர் சோகத்தை சுமக்க மனம்உண்டா ?

பிறர் ஓய்ந்து விழும்போது ஓடி பிடித்தது உண்டா ?

உன் பதில் "இல்லை" என்றால்

எப்படி நீ அழுவாய்

ஏர் பிடிக்க வரமாட்டாய்

விதைபோடவரமாட்டாய்

நீர் கட்ட வரமாட்டாய்

கதிர் அறுக்க வரமாட்டாய்

பொதி சுமக்க வரமாட்டாய்

ஆனால் .....................................

விளைச்சலில் பங்கு இல்லை என்றால்

வீரிட்டு அழுகின்றாய்

என்ன இது தருமம்

விதைத்தது தான் பலன் தரும்

இன்னும் காலம் இருக்கின்றது

இன்றே அன்பை விதை

வருகின்ற காலம் உனக்கு

வளமான பலனை தரும் ..............