அன்புப் பணியினை வாழ்வென ஏற்றிடும் நேரம்🎶
அரிய நேரம் அல்லவா – இந்த
நேரத்திலே, புது இராக்கத்திலே எழும்
அனந்தம் நாம் சொல்லவா – அன்பு
இயேசுவின் அணியில், எளியவர் பணியில், எழுபவர் வாருங்களே
நேசத்தின் துணையில், நடந்திட உலகில், முனைபவர் சேருங்களே
பேசரும், இந்த பேரருள் கண்டு இறைவனைப் பாருங்களே – 2
நன்கு இறைவனைப் பாருங்களே – அன்பு
பாரினில் நலன்கள், சேர்ந்திட மலர்ந்த, புதுமலர் பாருங்ளே
நீதியின் அரசை, நிறுவிட முழங்கும், புதுக்குரல் கேளுங்களே
பேரருள் நதி பாய்ந்திடும் இந்த திருப்பலி சேருங்களே – 2
இந்த திருப்பலி சேருங்களே – அன்பு
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே - உம்🎶
அன்புப்பலிப் பீடத்திலே தியாகமாகுவேன் (2)
உன் பாதையிலே பயணமாகுவேன்
உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்
1. உள்ளங்கள் உயர்ந்துவாழ உம்மோடு பாடுபட
என்னை எந்நாளும் அளிக்கின்றேன் (2)
இதய உணர்வுகள் இன்ப ராகங்கள் - 2
எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்
2. வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில்
வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் (2)
வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து - 2
தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமாகுவேன்
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் உள்ளமும், என் உடலும் என்றும் உள்ள இறைவனை நாடுகின்றது
அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்கு கூடும் – (2)
உம் ஆலய மாடங்களில், வாழ்கின்ற இடமாக அமைகின்றதே
ஏழை நான் உம்மை, ஏக்கம் தீர காண, உம் இல்லத்தில், ஓர் இடம் தா
வேறிடத்தில், ஆயிரம் நாள், வாழ்வதில் பயன் இல்லையே – (2)
தூயவரே, உம் ஆலயத்தில், ஒரு நாளே வாழ்வது சுகமானது
ஏழை நான் உந்தன், திருமுன்னில் வாழ, உம் இல்லத்தில், ஓர் இடம் தா
ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்🎶
ஆனந்தம் ஆனந்தம் என் மனதில் ஆண்டவா உனைப்பாட
ஆண்டவா உனைப்பாட ஆண்டவா உனைப்பாட
1. வான்முகிலும் உயர்மலையும் உந்தன் புகழ்பாட
தேன் பொழியும் நறுமலர்கள் உன் பெயர் சுவை பாட (2)
வான் பொழியும் நீர்த்துளிகள் உந்தன் அருள்பாட
யான் உனது திருப்புகழை கவியால் தினம்பாட
ஆண்டவா உனைப் பாட ...
2. பகலொளியும் பால் நிலவும் ஒளியால் உனைப்பாட
அலைகடலும் அதன் சிறப்பும் கருணையை தினம்பாட
மழலைகளின் தேன்மொழிகள் தூய்மையின் நிறம்பாட
யான் உனது திருப்புகழை கவியால் நிதம் பாட
ஆண்டவா உனைப் பாட ...