தேவனின் வழியில் சிறந்து விளங்கும்
திருச்சபையின் நேச பக்தனே
புனித குரியாகோஸே (x2)
எளிமையாய் இருக்கும் நின் கர்த்தர்
பெயரில் பொழிவீர் அன்பு ஆசிரும்
புனித குரியாகோஸே
1) விண்ணக பிதாவே பரிசுத்த ஆவியே
உம்பாதம் நாங்களும் பின் தொடர்வோம்
எம் இருள் வழியினில்
உம் பிரசன்ன ஒளியில்
நல்ல மாதிரி... எங்களுக்கு
பொன் வெளிச்சம்
2) தேவ பிதாவை அப்பா என்று அழைக்க
அன்பு கொண்டு கூப்பிடும்...
அனைவருக்கும்
தியாக திருவிருந்தை திருசமுகமாக
ஏற்படுத்தி இங்கே... புதியதொரு உலகம் படைத்த
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே🎼
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது
என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன்
1. பசியால் வாடும் ஏழையின் நிலையில்
பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி
அருளமுதை ஈந்தார்
2. ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்
அணைத்திடவே வந்தார்
ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை
மாற்றிடவே வந்தார்
3. நண்பனுக்காய் தரும் உயிர்த் தியாகம் மிஞ்சும்
நட்பெதுவும் உளதோ
என் அன்பர் இயேசு சிலுவையில் மரித்து
எனைக் காத்தார் என் சொல்லவோ அருளானந்தரே - 2
ஓரியூரின் ஒளிவிளக்கே தன்னுதின்னல் காவலரே - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே - 2
இறைவன் அரசு பரவிடவே தன்னை முழுதாய் துறந்தவரே - 2
நீதியின் ஆட்சி மலர்ந்திடவே இன்னுயிர் தியாகம் புரிந்தவரே -2
இறை இயேசுவை உம்மை போல் ஏற்று தொடர்ந்திட அருள்புரிவாய் - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே – 2
எளிய வாழ்வில் பனி புரிந்து மறவ நாட்டில் கலந்தவரே - 2
செந்நிற பூமியில் நற்செய்திக்காய் தன்னையே இழந்து ஒளிர்ந்தவா - 2
இனி உம் வழியில் யாம் நடந்திட நீரே காவலாய் தயை புரிவாய் - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே - 2
திருச்சிலுவை பக்தரே
விவிலிய முனிவரே
யோசேப் வாஸ் அடிகளாரே
புகழ்கிறோம் பாடுகிறோம்
வேண்டுகிறோம் நாடுகிறோம்
எங்களை இறைமையில் வளர வையும்
யேசுவில் வாழசெய்யும்
இந்தியாவில் பிறந்தவரே
கோவாவில் வளர்ந்தவரே
இலங்கையின் திருத்தூதரே
கனாராவின் கர்த்தர் உருவே- புகழ்
மரியாளளின் பக்தரே
மாற்றத்தின் வித்தகரே
தேசங்களின் இறைதூதரே
மனிதரின் இறை காட்டியே-புகழ்
ஏழைகளின் போதகரே
நோயாளியின் மருத்துவரே
கஷ்டபடுவோரின் காவலரே
கல்விகண் திறந்தவரே-புகழ்
புதுமைகளின் நாயகரே
புரட்சிகளின் தலைவரே
வீழ்ச்சியின் எழுச்சியே
மலர்ச்சியின் மகிமையே-புகழ்
அணுகினோர் அடைக்கலமே
இறைவனின் கருணையே
தேடுபவர் பொக்கிஷமே
வாடுபவர் மகிழ்ச்சியே-புகழ்
வாழ்த்துகின்றோம் போற்றுகின்றோம்
உம்பெயரில் மகிழுகின்றோம் -3
எங்கள் புனிதரே தேவ சகாயமே-2
தன்னானே ...
நட்டாலத்தில் பிறந்தவரே எங்கள் புனிதரே-2
ஆயக்கலைகளிலே தேர்ச்சியும் பெற்றவரே
யோபுவின் கதையினாலே கிறிஸ்துவுக்குள் மாறீனீரே-2
கிறிஸ்துவில் நிலைத்துநின்று சாட்சியாய் மாறினேன்-2
தன்னானே....
பலரை மனமாற்றம் செய்தாரே புனிதரே -2
கிறிஸ்துவுக்காய் துன்பங்கள் நிறையவே தாங்கினீரே
கிறிஸ்துவில் அனைவருமே சரி சமம் என்றவரே
காற்றாடி மலையில் மறைசாட்சியானவரே-2
புனித ஜோசப் வாஸ்
புனித தேவசகாயம்
புனித அருளாநந்தர்
புனித அன்னை தெரேசாள்
புனித அன்னை தெரேசாள்
புனித கார்லோ அகுடிஸ்
புனித தோமையார்
புனித குரியாகோஸ்