செம்மறியின் விருந்துக்கு
செம்மறியின் விருந்துக்கு
அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க – 2
இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன – 2
உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் – 2
உவகை என்னும் ஒளி கொணர்ந்து என்னை ஆளுவாய்
வானம் பொழிய பூமி விளையும் வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே – 2
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே – 2
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே
கடல் கடந்து சென்றாலும்
கடல் கடந்து சென்றாலும்…தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை – நீ
கடந்திட நேர்ந்தாலும்
உன்னோடு நான் இருப்பேன் - 2
அஞ்சாதே கலங்காதே
1. தேவனின் பார்வையில் நீ மதிப்பு உள்ளவன்
பொன் விளை நிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை
உயர்ந்தது அவராலே – (2)
பால் நிணைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடி மேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே - அஞ்சாதே
2. பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான்படை ஆண்டவர் வாய்மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார் - (2)
பார்வை இழந்தவர் வாய் திறவாதோர்
யாவரும் நலம் அடைவார்
இறையாட்சியில் அவர் மாட்சியில்
மானிடம் ஒன்றாகும் - அஞ்சாதே
எனில் வாரும் என் இயேசுவே
எனில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீரின்றி ஒன்றில்லையே - இங்கு
நீர்தானே என் எல்லையே
என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா - 2
உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
1. அணைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் (2)
ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ -2
என் இனிய அன்பே எழுந்து வா
2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு (2)
ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ -2
என் இனிய நண்பா எழுந்து வா
3. பொய்மை மலிந்து மெய்மை மெலியும் நிலையைக் காண்கின்றேன்
தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மடிகின்றேன் (2)
எந்தன் தெய்வமே... உன் அன்பால் ஆனவா (2)
என் உள்ளம் நிறைந்து வாழ வா
நதியின் தாகம் கடல்மீது கடல் அலையின் தாகம் கரைமீது
நிலத்தின் தாகம் நீர் மீது இயேசுவே என் தாகம் உன் மீது
தணியாத தாகம் கொண்டேன் இயேசுவ உன்மீது தணியாத தாகம் கொண்டேன் அழியாத உன் உறவை காண
தணியாத தாகம் கொண்டேன்
நான் அமரும் போதும்
நடக்கும் போதும் உந்தன் நினைவில் தாகம் கொண்டேன்
விழுகின்ற போதும் எழுகின்ற போதும்
உந்தன் கரம் மேல் தாகம் கொண்டேன்
உன் வழி நல் வழி அவ்வழி செல்ல தணியாத தாகம் கொண்டேன்
உன் நிறைமொழி அருள்மொழி பொன்மொழி வாழ தணியாத தாகம் கொண்டேன் தாகம்
தணியா தாகம் தாகம் தணியா தாகம் நண்பன் இயேசுவே உந்தன் மீது தணியாத
தாகம் கொண்டேன்
1.
குல முதுவர் நம்பிக்கையில் தணியாத தாகம் கொண்டேன்
குறைவில்லா ஆபேலில் தணியாத தாகம் கொண்டேன்
மோசேயின் இறை பயத்தில் தணியாத தாகம் கொண்டேன்
நோவாவின் நேர்மையிலே தணியாத தாகம் கொண்டேன்
தாவீதின் புகழ் பாடலில் தணியாத தாகம் கொண்டேன்
இறை ஞானி சாலமோனில் தணியாத தாகம் கொண்டேன்
நம்பிக்கையோடு இவர்களின் வாழ்வில் தணியாத தாகம் கொண்டேன்
என் நம்பிக்கை உம்மில் நாளும் உயர தணியாத தாகம் கொண்டேன்
தாகம் தணியா தாகம் தாகம் தணியா தாகம் நண்பன் இயேசுவே உந்தன் மீது தணியாத தாகம் கொண்டேன்
2.
அன்னை மரி பணிவுதனில் தணியாத தாகம் கொண்டேன்
அன்புநிறை வெரோனிக்காவில் தணியாத தாகம் கொண்டேன்
வான் வீட்டின் திறவுகோலில் தணியாத தாகம் கொண்டேன்
வளனாரின் நீதியிலே தனியாத தாகம் கொண்டேன்
சகேயுவின் தேடலிலே தனியாத தாகம் கொண்டேன்
சான்று பகர்ந்த பவுலின் மீது தணியாத தாகம் கொண்டேன்
நம்பிக்கையோடு இவர்களின் வாழ்வில் தணியாத தாகம் கொண்டேன்
என் நம்பிக்கை உம்மில் நாளும் உயர தணியாத தாகம் கொண்டேன்
தாகம் தணியா தாகம் தாகம் தணியா தாகம் நண்பன் இயேசுவே உந்தன் மீது தணியாத தாகம் கொண்டேன்
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே
விண்ணோர் வணங்கிடும் விமல ராஜனே – 2
பாவத்தைப் போக்கவே பாரினில் வந்தாய்
சாபத்தை நீக்கவே மானிடன் ஆனாய் – 2
ராஜாதி ராஜனை தேவாதி தேவனைப் போற்றி துதித்துப் பாடிடுவோம் – 2
வானக வாழ்வையே வழங்கிட வந்தாய்
உலகெல்லாம் உயிர் பெற உண்மையை ஈன்றாய் – 2
ராஜாதி ராஜனை தேவாதி தேவனைப் போற்றி துதித்துப் பாடிடுவோம் – 2
அன்பினால் எம்மையும் ஆளவே வந்தாய்
உன்னத உவகையை உள்ளத்தில் தந்தாய்
ராஜாதி ராஜனை தேவாதி தேவனைப் போற்றி துதித்துப் பாடிடுவோம் – 2
ஒளியாம் இறையே வாரய்
ஒளியாம் இறையே வாராய் 🎼
எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்
1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக
2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால்
ஒளியே எழிலே வருக
3. அருளே பொங்கும் அமலா இருளே போக்க வா வா
குறையே நீக்கும் விமலா நிறையே வளர்க்க வா வா
ஒளியே எழிலே வருக
எனில் வாரும் என் இயேசுவே🎼
என்றும் என்னோடு உறவாடவே
நீரின்றி ஒன்றில்லையே - இங்கு
நீர்தானே என் எல்லையே
என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவ - தேவா எழுந்து வா ...
உயிர் தரும் உணவே இறைவா
என் உயிருக்குள் உயிராய் வா வா
அருள் தரும் ஊற்றே இறைவா
நல் ஆற்றலாய் என்னுள்ளம் வா வா
வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வா வா…
உயிருள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா வா – 2
நிரந்தர வாழ்வே என் தேவா – 2
நிம்மதி வாழ்வாய் எனில் வா வா (வா வா இறைவா வாழ்வின்)
அழியாத உணவே என் இறைவா
ஆன்ம ஒளியாய் என்னில் வா வா – 2
அன்பின் பகிர்வே என் தேவா – 2
அனுதின உணவாய் எனில் வா வா – 2
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க🎼
எனக்கென்ன கவலை என் இறைவா
இனி அச்சமென்ப தெனக்கில்லை
வழியெங்கும் தடையில்லை தலைவா -2
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே (ஆ…ஆ…)
இறையரசு நனவாகுமே (ஆ…ஆ…) -2
(உந்தன் வார்த்தை என் வாழ்வின்
உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே எந்தன் நெஞ்சுக்குள்ளே
எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்க வா)-2
1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் - வழி
காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ
(உந்தன் வார்த்தை...)
2. வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் - நான்
உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது (ஆ…ஆ…)
உயிர்த் துணையானது (ஆ…ஆ…) -2
(உந்தன் வார்த்தை...)
தேடும் அன்பு தெய்வம், என்னைத் தேடி வந்த நேரம்
கோடி நன்மை கூடும், புவி வாழும் நிலைகள் மாறும்
வாழும் நிலைகள் மாறும் – இந்த வானதேவன் தந்த வாழ்வுப்பாதை, எந்தன் வாழும் காலம் போதும் – 2
வார்த்தையாகி நின்ற இறைவன் – இந்த
வாழ்வைத் தேர்ந்த தலைவன் – 2
பாரில் எங்கும் புதுப்பார்வை தந்து - அந்தப்
பாதையில் அழைத்த அறிஞன் – 2
காலம் கடந்த கலைஞன், என் தலைவன்… இந்த வானதேவன்
அடிமை அமைப்பு இங்கு ஒழிய - எங்கும்
மனித மாண்பு நிறைய – 2
புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழி வகுத்து
புதுமை செய்த பெரும் புனிதன் – 2
வாழ்வைக் கடந்த இறைவன், என் தலைவன்… இந்த வானதேவன்
என் இதய தெய்வமே... என்னில் எழுந்து வா
என் இதய தெய்வமே... என்னில் எழுந்து வா (2)🎼
உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
1. அணைத்து காக்கும் தாயின் அன்பும்
ஒரு நாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை
அன்பும் அழியலாம் (2)
ஆனால் இயேசுவே உன் அன்பிற்கு அழிவுண்டோ (2) என் இனிய அன்பே எழுந்து வா
2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் இங்கு பலவுண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு (2)
ஆனால் இயேசுவே நல் நண்பன் நீயன்றோ (2)
என் இனிய நண்பா எழுந்துவா...
3. பொய்மை மலிந்து மெய்மை மெலியும்
நிலையைக் காண்கின்றேன்
தீமை நிறைந்த உலகில் இன்று
அழிந்து மடிகின்றேன் (2)
எந்தன் தெய்வமே... உன் அன்பால் ஆனவா (2)
என் உள்ளம் நிறைந்து வாழ வா...
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே 🎼
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
(என் சுவாசக் காற்றே...)
என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே – 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்
(என் சுவாசக் காற்றே...)
எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே – 2
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
(என் சுவாசக் காற்றே...)
கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்
கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்🎼
அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் (2)
1. குருவிகள் பறந்திடும் நேரத்திலே ஏணி தேவையில்லை -2
நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடிச் செல்வதில்லை -2
ஞாலம் தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் -2
2. காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை -2
நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும்
உள்ளம் ஏனோ உணர்வதில்லை (2)
தவறிச் செல்லும் ஆடு நானே என்னைத் தேடுவதேன் - 2
எனது நிழலாய் தொடரும் உறவாய்
எனது நிழலாய் தொடரும் உறவாய் 🎼
என்னை கண்டு கொண்டாய்
வாழ்வு முழுதும் விலகிடாமல்
என்னிலே இணைந்தாய்
உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா (2)
நாளும் பொழுதும் என்னைத் தேடி (2)
நீயும் உடனிருந்தாய் (2)
1. இதயம் எழுப்பும் ஓசை கூட
உனது உள்ளம் அறிந்திடும்
இமைகள் மூடும் ஒலியை கூட
உனது உணர்வும் புரிந்திடும் - 2
உந்தன் வருகை எந்தன் வாழ்வில்
வளமை என்றும் தந்திடும் - 2
பாதை தெரிந்தே விலகினாலும் - 2
கரங்கள் தானே காத்திடும் - உன
கரங்கள் தானே காத்திடும்
எனது சொந்தம் நீயே ஆனால்,
எனது சுமைகள் மாறிடும்.
எனது பலனே நீயே ஆனால்,
எனது பயமும் மாறிடும் - (எனது நிழலாய்)
2. பூவை போல மென்மையாக
என்னைத் தாங்க நின்றாய்
வாசம் நல்கும் சுவாசமாக
என்னில் நீ கலந்தாய் - 2
அன்பே உனது விருந்தில் நாளும்
புதிய ஆற்றல் காண்கிறேன் - 2
அருளை தந்து வாழ்வில் இணைந்தால் (2)
புதுமையாகி போகின்றேன் - 2
எனது வரமே நீயே ஆனால்,
எனது கவலை மாறிடும்,
எனது ஜீவன் நீயே ஆனால்,
எனது வாழ்வும் மாறிடும் - (எனது நிழலாய்)
உந்தன் கைகளில் நான் சின்னப் பிள்ளையாய்
உந்தன் கைகளில் நான் சின்னப் பிள்ளையாய்🎼
தவழ்ந்தாட வேண்டும் செல்ல மலராய் - (2)
எந்தன் உயிரே நான் உந்தன் நிழலில்
வளர்ந்தாக வேண்டும் வளர்பிறையாய் - 2
பெற்றதாயின் அன்புக்கு மேலாகவே
வற்றாத அருளை பொழிந்தாயே - (2)
உந்தன் கரத்தில் என்னை பொறிந்தாயே
என்னை முழுதும் நீ அறிந்தாயே
இருள்நிறை பள்ளத்திலும் விழ்ந்தாலும்மே
அணைத்துஎன்னை தோள்மேல் சுமந்தாயே - (2)
கருணையினை கற்றுத்தந்தாயே
உந்தன் வரத்தால் என்னை நிறைத்தாயே
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது🎼
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது
என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன்
1. பசியால் வாடும் ஏழையின் நிலையில்
பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி
அருளமுதை ஈந்தார்
2. ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்
அணைத்திடவே வந்தார்
ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை
மாற்றிடவே வந்தார்
3. நண்பனுக்காய் தரும் உயிர்த் தியாகம் மிஞ்சும்
நட்பெதுவும் உளதோ
என் அன்பர் இயேசு சிலுவையில் மரித்து
எனைக் காத்தார் என் சொல்லவோ
குறையாத அன்பு கடல்போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே - அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே (x2)
1) கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு
எனைக் காக்கின்றார் (x2)
உன்னை எண்ணாத என்னை
எந்நாலும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றார்
ஆ (x4) - நான் மண்மீது வாழ
வழி செய்சின்றார்
2) அடிவானம் தோன்றும் விடிவெள்ளி
என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே (x2)
மண்ணில் துடிக்கின்ற ஏழை
வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே (x2)
ஆ (x4) - கண்ணீர் துடைக்கின்ற இயேசு
அரசாகுமே
3) இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை
அனைத்தருள்வாய் (x2)
தீமை சிறை கொண்டு எந்தன்
உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய்
ஆ (x4) - நான் சிறை மீண்டு வாழ
வழிகாட்டினாய்
குயவனே குயவனே படைப்பின் காரணனே
குயவனே குயவனே படைப்பின் காரணனே🎼
களிமண்ணான என்னையுமே, கண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான், வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய், விளங்க செய்திடுமே – 2
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே
மண்ணாசையில் நான் மயங்கியே, மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன், கண்டேனில்லை இன்பமே – 2
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே
விலை போகாத பாத்திரம் நான், விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம கிருபையால், உகந்த தாக்கிடுமே – 2
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே
என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா? - 2🎼
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)
பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியான பாவி உனக்காய்-(2)
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
உன் பாவம் யாவும் சுமப்பேன்
என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னை
அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)