எப்பொழுதும் இன்பமாக வாழவேண்டுமென்றால் ஒரு குருவிடம் சரணடைந்து வேதத்தை முறையாக படிப்பதை தவிர வேறு வழியில்லை.
வேதத்தின் முதல் பகுதியான கர்மகாண்டம் ஏன் என்று கேள்விகேட்டு அதன் பதில்களை முற்றாக ஆராய்ந்து உண்மையை அறியும் அறிவுக் கூர்மையற்றவர்களுக்காக கொடுக்கப்பட்டது.
வேதத்தின் இறுதி பாகமான வேதாந்தம் அறிவுக்கூர்மையுடன் மனப்பக்குவமடைந்தவர்களுக்காக கொடுக்கப்பட்டது.
வேதம் என்பது பல்வேறு முனிவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் தவவலிமையால் இறைவனின் வார்த்தைகளை கேட்டு தங்கள் சீடர்களுக்கு வாய்மொழியாக வழங்கினர். இவையனைத்தையும் தொகுத்து நான்கு வேதங்களாக அருளியவர் வியாசர்.
வேதங்களை முறையாக தொகுக்காமல் நேரடியாக மேற்கோள் காட்டி பல்வேறு மதங்கள் வியாசர் காலத்தில் நிலவி வந்தன. அவையனைத்தும் வேதத்தையே சார்ந்து ஆனால் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்கும் முகமாக பிரம்ம சூத்திரம் எழுதப்பட்டது.
படைப்பு,
படைப்பவன் (கடவுள்),
படைக்கபட்டவை (உயிரினங்களும் ஜடப்பொருள்களும்),
மனித குலத்தின் துயரத்தின் காரணம்,
துயரத்திலிருந்து விடுபட உபாயங்களும் வழிமுறைகளும்,
துயரங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு முக்தியடைந்த நிலையை பற்றிய விளக்கம்
ஆகிய ஆறு ஆன்மீக கருத்துக்களை எவ்வித முரண்பாடும் இல்லாமல் விவரிப்பதுதான் ஒரு மதத்தின் இலக்கணம். இது இப்படித்தான் என்று மட்டும் கூறாமல் இது ஏன் இப்படி இருக்கிறது என்பதன் முழு விளக்கமும் அளிக்க மதம் கடமைபட்டுள்ளது.
வேதம் கூறுவது இதுதான் என்று முறையாக மேற்கூறப்பட்ட ஆறு ஆன்மீக கருத்துக்களையும் விளக்கி 555 சூத்திரங்களுடன் கூடிய பிரம்ம சூத்திரம் என்ற நூலை அவர் எழுதினார்.
ஹிந்து மதம் என்று வழங்கப்படும் சனாதன தர்மம் இந்த ஆறு கருத்துக்களையும் வேதங்கள் மூலம் முறையாக விளக்கியுள்ளது.
ஒரு சிலர் தாங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக சரியான ஆசிரியரிடம் வேதம் பயின்று வாழ்வில் வெற்றியடைகிறார்கள். அதன் பின் முழுவேகத்துடன் வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கிறார்கள். இலக்கு எதனையும் அடைய வேண்டிய கட்டாயம் இல்லாததால் இவர்களுடன் ஓடுபவர்கள் விழுந்துவிட்டால் கை கொடுத்து காப்பாற்ற தயங்குவதில்லை. தனக்குபின் ஓடிவருபவர்கள் தடுக்கிவிழாவண்ணம் வழியிலிருக்கும் தடைகற்களை அகற்றுவதும் தனது கடமை என்பதை இவர்கள் அறிந்திருப்பார்கள்.
வேதத்தை முறையாக பயின்றால் நம் மனது மற்றும் எண்ணங்கள் பற்றிய முழு அறிவையும் பெற்று வெவ்வேறு எண்ணங்கள் மனதில் இருந்தாலும் நம் இயல்பான ஆனந்தத்தை தொடர்ந்து அனுபவிக்கும் ஆற்றல் நமக்கு கிடைக்கும். நமது முகம் தெளிவாகவும் அழககாகவும் உள்ளது என்று நமக்கு தெரிந்து விட்டால் கணணாடியில் இருக்கும் தூசியை நாம் பொருட்படுத்தப்போவதில்லை. அது போல இருமைகள் மாறி மாறி வந்தாலும் நமது வாழ்வில் இயல்பான ஆனந்தத்தை என்றும் அனுபவிக்க நாம் தெரிந்து கொள்வோம்.
சாந்தோக்கிய உபநிஷத் மந்திரம் ஒன்று 'நான் பலவாக ஆகுவேன்' என்று கூறுவதன் மூலம் எப்படி பரமன் இந்த உலகமாகவும் ஜீவராசிகளாகவும் கடவுளாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளான் என்பதை விவரிக்கிறது.
ஒன்றான பரமன் என்ற நான் பலவாக ஆகி
விளையாடும் விளையாட்டுத்தான் இந்த வாழ்க்கை.
விளையாட்டுதளம்தான் இந்த உலகம்.
உலகு அதில் தோன்றும் அத்தனை வித உயிரினங்கள் மற்றும்
உயிரற்ற ஜடப்பொருள்களின் மொத்த வடிவம்தான் கடவுள்.
அனைத்து மனிதர்களும் அவரவரின் பார்வையில் இந்த விளையாட்டின் கதாநாயகர்கள்.
விளையாட்டு என்றால் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தால்தான் சுவையாய் இருக்கும்.
ஆனால் இது விளையாட்டு என்று தெரியாமல் உண்மை வாழ்க்கை என்ற அறியாமையுடன் இருப்பதுதான் நம் துயரங்களுக்கு ஒரே காரணம்.
மனிதர்களின் அறிவு ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடுகிறது. வேதம் அனைத்து தரப்பினருக்கும் துன்பத்தை முற்றாக தவிர்க்கும் உபாயங்களையும் வழிமுறைகளையும் தருகிறது.
ஆக உலகில் உள்ள அனைத்து மக்களும் இன்பமாக வாழ வேதம் வழி காண்பிக்கிறது
வேதம் ஒரு வழிகாட்டி புத்தகம், என்றும் நம் வாழ்வை செம்மையாக வாழ அதன் துணை அவசியம்.
பாடம் 001: மாணவர்களின் தகுதி பாடல் 001 (I.1.1)
பாடம் 002: பரமன் உலகிற்கு ஆதாரம் பாடல்: 002 (I.1.2)
பாடம் 003: பரமனை அறியும் வழி பாடல்: 003 (I.1.3)
பாடம் 004: வேதங்களின் மெய்ப்பொருள் பாடல்: 004 (I.1.4)
பாடம் 005:பரமன் உணர்வு மயமானவன் பாடல் 005 - 011 (I.1.5-11)
பாடம் 006: பரமன் ஆனந்தமயமானவன். பாடல்: 012-019 (I.1.12-19)
பாடம் 007: அனைத்துமாக விளங்குபவன் பரமன். பாடல்: 020-021 (I.1.20-21)
பாடம் 008: ஆகாயம் பரமன் பாடல்:022 (I.1.22)
பாடம் 009: பிராணன் பரமன் பாடல்:023 (I.1.23)
பாடம் 010: பரமன் ஒளி வடிவானவன் பாடல்:024-027 (I.1.24-27)
பாடம் 011: நீதான் பரமன் பாடல்:028-031 (I.1.28-31)
பாடம் 012: மனமே பரமன் பாடல்: 032-039 (I.2.1-8)
பாடம் 013: உண்பவன் பரமன் பாடல்: 040-041 (I.2.9-10)
பாடம் 014: இருதயத்தில் இருக்கும் இருவர். பாடல்:042-043 (I.2.11-12)
பாடம் 015: பார்ப்பவை பரமன் பாடல்:044-048 (I.2.13-17)
பாடம் 016: உள்ளிருந்து ஆட்சி செய்பவன் பரமன் பாடல்: 049-051 (I.2.18-20)
பாடம் 017: காண முடியாதவன் பரமன் பாடல்: 052-054 (I.2.21-23)
பாடம் 018: கடவுள் பரமன் பாடல்: 055-063 (I.2.24-32)
பாடம் 019: விண்ணும் மண்ணும் பரமன் பாடல்: 064-070 (I.3.1-7)
பாடம் 020: உலகம் பரமன் பாடல்: 071-072 (I.3.8-9)
பாடம் 021: அழியாதவன் பரமன் பாடல்: 073-075 (I.3.10-12)
பாடம் 022: உயர்ந்த குறிக்கோள் பரமன் பாடல்: 076 (I.3.13)
பாடம் 023: சிறிய ஆகாசம் பரமனே பாடல்: 077-84 (I.3.14-21)
பாடம் 024: அனைத்தும் ஒளிருவது பரமனாலே பாடல்: 085-086 (I.3.22-23)
பாடம் 025: கட்டைவிரல் அளவினன் பரமன் பாடல்: 087-088 (I.3.24-25)
பாடம் 026: அனைவராலும் அறியத்தக்கவன் பரமன் பாடல்: 089-096 (I.3.26-33)
பாடம் 027: அனைவராலும் அறியமுடியாதவன் பரமன் பாடல்:097-101 (I.3.34-38)
பாடம் 028:அனைவரது நாடி துடிப்பது பரமனாலே பாடல்: 102 (I.3.39)
பாடம் 029: ஒளி பரமன் பாடல்: 103 (I.3.40)
பாடம் 030: வெளி பரமன் பாடல்: 104 (I.3.41)
பாடம் 031: பேரறிவே பரமன் பாடல்: 105-106 (I.3.42-43)
பாடம் 032: தேரின் நாயகன் பாடல்: 107-113 (I.4.1-7)
பாடம் 033: மூவண்ண ஆடு பாடல்: 114-116 (I.4.8-10)
பாடம் 034: இருபத்தியைந்து தத்துவங்கள் பாடல்: 117-119 (I.4.11-13)
பாடம் 035: முரண்பாடற்ற முதல் தத்துவம் பாடல்: 120-121 (I.4.14-15)
பாடம் 036: சூரியனையும் சந்திரனையும் உருவாக்கியது யார்?
பாடம் 037: கேட்பதும் பார்ப்பதும் யார்? பாடல்: 125-128 (I.4.19-22)
பாடம் 038: பிரபஞ்சத்தின் மூலப்பொருள் பாடல்: 129-133 (I.4.23-27)
பாடம் 039: ஒரே வழி பாடல்: 134 (I.4.28)
பாடம் 040: வேதத்தின் அடிப்படையில் அமையாதவை தவறான கருத்துக்கள் பாடல்: 135-136 (II.1.1-2)
பாடம் 041: யோகம் முக்தியை கொடுக்குமா? பாடல்: 137 (II.1.3)
பாடம் 042: ஜடமான உலகம் காரியமா காரணமா? பாடல்:138-145 (II.1.4-11)
பாடம் 043: தர்க்கம் முக்தியை தராது பாடல்:146 (II.1.12)
பாடம் 044: இருமை முக்தியை தராது பாடல்:147 (II.1.13)
பாடம் 045: உலகம் வேறல்ல பாடல்:148-154 (II.1.14-20)
பாடம் 046: சாத்தான் என்று யாருமில்லை பாடல்:155 -157 (II.1.21-23)
பாடம் 047: மூலப்பொருள் இல்லாமல் உற்பத்தி பாடல்:158-159 (II.1.24-25)
பாடம் 048: பாகங்கள் இல்லாத பன்மை பாடல்:160 -163 (II.1.26-29)
பாடம் 049: கருவிகளற்ற சர்வசக்திமான் பாடல்:164 -165 (II.1.30-31)
பாடம் 050: பரமனின் லீலை பாடல்:166 -167 (II.1.32-33)
பாடம் 051: கொடுமையோ பட்சபாதமோ அற்றவன் அவன்
பாடம் 052: படைப்புக்கு கடவுள் அவசியம் பாடல்:171 (II.1.37)
பாடம் 053: படைப்பிற்கு ஜடம் காரணமாக இருக்க முடியாது பாடல்:172 - 181 (II.2.1-10)
பாடம் 054: படைப்பிற்கு உணர்வுதான் காரணம் பாடல்:182 (II.2.11)
பாடம் 055: வேதம் தவறு என்றால் முக்தி கிடைக்காது பாடல்:183 ‐ 188 (II.2.12-17)
பாடம் 056: புத்த மதம் தவறு பாடல்:189 ‐ 198 (II.2.18-27)
பாடம் 057: இஸ்லாமிய மதம் தவறு பாடல்:199 ‐ 203 (II.2.28-32)
பாடம் 058: கிருத்துவ மதம் தவறு பாடல்:204 ‐ 207 (II.2.33-36)
பாடம் 059: அறிய முடியாதென்பது தவறு பாடல்: 208 ‐ 212 (II.2.37-41)
பாடம் 060: கடவுள் நம்பிக்கையின்மை தவறு பாடல்:213 ‐ 216 (II.2.42-45)
பாடம் 061: வெளி நித்தியமானதல்ல பாடல்:217 ‐ 223 (II.3.1-7)
பாடம் 062: காற்று வெளியிலிருந்து உண்டானது பாடல்:224 (II.3.8)
பாடம் 063: பரமன் தொடக்கமற்றவன் பாடல்:225 (II.3.9)
பாடம் 064: நெருப்பு காற்றிலிருந்து தோன்றியது பாடல்:226 (II.3.10)
பாடம் 065: நீர் நெருப்பிலிருந்து தோன்றியது பாடல்:227 (II.3.11)
பாடம் 066: நிலம் நீரிலிருந்து தோன்றியது பாடல்:228 (II.3.12)
பாடம் 067: தோற்றுவிப்பவன் பரமனே பாடல்:229 (II.3.13)
பாடம் 068: ஊழிக்காலத்தில் ஒடுங்கும் முறை பாடல்:230 (II.3.14)
பாடம் 069: ஊழிக்காலத்தில் மனிதர்கள் பாடல்:231 (II.3.15)
பாடம் 070: ஆத்மா அழியாதது பாடல்:232 (II.3.16)
பாடம் 071: ஆத்மா என்றுமிருக்கும் சத்தியம் பாடல்:233 (II.3.17)
பாடம் 072: ஆத்மா அறியமுடியா அறிவு பாடல்:234 (II.3.18)
பாடம் 073: ஆத்மா அளவிடமுடியா அனந்தம் பாடல்:235-248 (II.3.19-32)
பாடம் 074: ஆத்மாவும் அகம்பாவமும் பாடல்:249-255 (II.3.33-39)
பாடம் 075: ஆத்மா ஒன்றுதான் பாடல்:256 (II.3.40)
பாடம் 076: ஆத்மா பாகங்களற்றது பாடல்:257-258 (II.3.41-42)
பாடம் 077: ஆத்மாவும் பரமனும் பாடல்:259-269 (II.3.43-53)
பாடம் 078: புலன்கள் பரமனிடமிருந்து உருவானவை பாடல்:270-273 (II.4.1-4)
பாடம் 079: புலன்களின் எண்ணிக்கை பாடல்:274-275 (II.4.5-6)
பாடம் 080: புலன்கள் நுண்ணியவை பாடல்:276 (II.4.7)
பாடம் 081: பிராணன் பரமனிடமிருந்து உருவானது பாடல்:277 (II.4.8)
பாடம் 082: பிராணன் புலன்களிடமிருந்து வேறுபட்டது பாடல்:278-281 (II.4.9-12)
பாடம் 083: பிராணனின் அளவு பாடல்:282 (II.4.13)
பாடம் 084: புலன்களை ஆளுபவர் பாடல்:283 - 285 (II.4.14-16)
பாடம் 085: கரணங்களும் புலன்களும் பாடல்:286 - 288 (II.4.17-19)
பாடம் 086: படைப்பவர் கடவுள். ஜீவாத்மா அல்ல பாடல்:289 - 291 (II.4.20-22)
பாடம் 087: ஆசை உடன் பிறந்தது பாடல் 292-298 (III.1.1-7)
பாடம் 088: பிறப்பதற்கு காரணம் கர்மா பாடல் 299-302 (III.1.8-11)
பாடம் 089: தீவினை செய்வோரின் கதி பாடல் 303-312 (III.1.12-21)
பாடம் 090: மனிதனின் தன்மை பாடல் 313 (III.1.22)
பாடம் 091: பரமனுடன் ஒன்றாக ஆகும் காலம் பாடல் 314 (III.1.23)
பாடம் 092: தாமரை இலை மேல் தண்ணீர் போல பாடல் 315-318 (III.1.24-27)
பாடம் 093: கனவு உலக ஆசைகள் பாடல் 319-324 (III.2.1-6)
பாடம் 094: ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தம் பாடல் 325-326 (III.2.7-8)
பாடம் 095: விழித்த பின்னும் அதே ஆனந்தம் பாடல் 327 (III.2.9)
பாடம் 096: மயக்கமா கலக்கமா? பாடல் 328 (III.2.10)
பாடம் 097: பரமன் மேல் ஆசை பாடல் 329-339 (III.2.11-21)
பாடம் 098: நான் அவனில்லை பாடல் 340-348 (III.2.22-30)
பாடம் 099: இரண்டற்ற ஒன்று பாடல் 349-355 (III.2.31-37)
பாடம் 100: ஒன்றான கடவுள் பாடல் 356-359 (III.2.38-41)
பாடம் 101: கருமமும் கர்மயோகமும் பாடல் 360-363 (III.3.1-4)
பாடம் 102: அனைத்து வேலைகளும் அடிப்படையில் ஒன்றே பாடல் 364 (III.3.5)
பாடம் 103: வேலைகள் வேறுபட்டவை பாடல் 365-367 (III.3.6-8)
பாடம் 104: செய்வன திருந்தச்செய் பாடல் 368 (III.3.9)
பாடம் 105: ஊரோடு ஒத்துவாழ் பாடல் 369 (III.3.10)
பாடம் 106: செய்யும் தொழிலே தெய்வம் பாடல் 370-372 (III.3.11-13)
பாடம் 107: உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு பாடல் 373-374 (III.3.14-15)
பாடம் 108: நீயே அது பாடல் 375-376 (III.3.16-17)
பாடம் 109: வேலையின் நோக்கம் மனத்தூய்மை பாடல் 377 (III.3.18)
பாடம் 110: தியானத்தின் மூலம் மனத்தூய்மை பாடல் 378 (III.3.19)
பாடம் 111: தியானத்தையும் வேலையையும் சேர்க்க கூடாது பாடல் 379-381 (III.3.20-22)
பாடம் 112: இளமையில் கல் பாடல் 382 (III.3.23)
பாடம் 113: இல்லறமே நல்லறம் பாடல் 383 (III.3.24)
பாடம் 114: கிட்டாதாயின் வெட்டென மற பாடல் 384 (III.3.25)
பாடம் 115: துறவு இன்பத்துக்காக பாடல் 385 (III.3.26)
பாடம் 116: ஞானிகளின் துறவு பாடல் 386-387 (III.3.27-28)
பாடம் 117: சமூகத்தின் நான்கு பிரிவுகள் பாடல் 388-389 (III.3.29-30)
பாடம் 118: அனைவருக்கும் சமவாய்ப்பு பாடல் 390 (III.3.31)
பாடம் 119: இறைவனின் அவதாரம் பாடல் 391 (III.3.32)
பாடம் 120: பரமனை அடைய தியானம் பாடல் 392 (III.3.33)
பாடம் 121: தியானம் செய்வதன் நோக்கம் பாடல் 393 (III.3.34)
பாடம் 122: செய்யத்தகாதவை பாடல் 394-395 (III.3.35-36)
பாடம் 123: செய்யவேண்டியவை பாடல் 396 (III.3.37)
பாடம் 124: ஆசனமும் பிராணாயாமும் பாடல் 397 (III.3.38)
பாடம் 125: பிரத்யாகாரமும் தாரணமும் பாடல் 398 (III.3.39)
பாடம் 126: தியானமும் சமாதியும் பாடல் 399-400 (III.3.40-41)
பாடம் 127: உபாசன யோகம் பாடல் 401 (III.3.42)
பாடம் 128: மந்திர ஜபம் பாடல் 402 (III.3.43)
பாடம் 129: காயத்திரி மந்திரம் பாடல் 403 - 411 (III.3.44-52)
பாடம் 130: ஆத்மா உடல் அல்ல பாடல் 412 - 413 (III.3.53-54)
பாடம் 131: சடங்குகளின் அவசியம் பாடல் 414 - 415 (III.3.55-56)
பாடம் 132: விஸ்வரூப உபாசனை பாடல் 416 (III.3.57)
பாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன் பாடல் 417 (III.3.58)
பாடம் 134: சந்தியா வந்தனம் பாடல் 418 (III.3.59)
பாடம் 135: கர்மகாண்டமும் ஞானகாண்டமும் பாடல் 419 (III.3.60)
பாடம் 136: கர்மகாண்டத்தின் முடிவு பாடல் 420 – 425 (III.3.61-66)
பாடம் 137: ஞானத்தினால் மட்டுமே முக்தி பாடல் 426 – 442 (III.4.1-17)
பாடம் 138: சன்யாசம் அவசியம் பாடல் 443 – 445 (III.4.18-20)
பாடம் 139: தியானத்திற்கு பின் ஞானம் பாடல் 446 – 447 (III.4.21-22)
பாடம் 140: கதைகூறும் கடமைகளும் கருத்துக்களும் பாடல் 448 – 449 (III.4.23-24)
பாடம் 141: மதங்களின் அவசியம் பாடல் 450 (III.4.25)
பாடம் 142: முக்தியடைய வேலை செய்வது அவசியம் பாடல் 451- 452 (III.4.26-27)
பாடம் 143: உயிர் வாழ உணவு பாடல் 453- 456 (III.4.28-31)
பாடம் 144: முக்தி வேண்டாதவர்களுக்கும் கட்டுப்பாடுகள் அவசியம் பாடல் 457- 460 (III.4.32-35)
பாடம் 145: அனைவருக்கும் ஞானம் பாடல் 461- 464 (III.4.36-39)
பாடம் 146: முக்தியடைந்தவர்கள் துயரவாழ்வுக்கு திரும்புவதில்லை பாடல் 465 (III.4.40)
பாடம் 147: துறந்தவர்கள் மீண்டும் ஆசைப்படமாட்டார்கள் பாடல் 466-467 (III.4.41-42)
பாடம் 148: ஆசைப்படுபவர்களின் கதி பாடல் 468 (III.4.43)
பாடம் 149: பலவிதமான மக்கள் பாடல் 469 – 471 (III.4.44-46)
பாடம் 150: ஞானி குழந்தையை போன்றவன் பாடல் 472 – 474 (III.4.47-49)
பாடம் 151: குழந்தையை போல என்றால் குழந்தைத்தனம் அல்ல பாடல் 475 (III.4.50)
பாடம் 152: ஞானம் பெற தேவையான காலம் பாடல் 476 (III.4.51)
பாடம் 153: ஞானம் ஒன்றுதான் பாடல் 477 (III.4.52)
பாடம் 154: ஞானத்தின் பலன் பாடல் 478 – 479 (IV.1.1-2)
பாடம் 155: பரமன் நான் என்று தியானிப்பதன் பலன் பாடல் 480 (IV.1.3)
பாடம் 156: மூன்று வகை தியானங்கள் பாடல் 481 (IV.1.4)
பாடம் 157: கல்லை கடவுளாக காண்பதன் பலன் பாடல் 482 (IV.1.5)
பாடம் 158: ஞானத்தினால் விளையும் முக்தியனுபவம் பாடல் 483 (IV.1.6)
பாடம் 159: அலைபாயும் அமைதி பாடல் 484 – 487 (IV.1.7-10)
பாடம் 160: இடமும் காலமும் அமைதிக்கு தடையல்ல பாடல் 488 (IV.1.11)
பாடம் 161: வாழ்நாள் முழுவதும் தியானம் செய்யவேண்டும் பாடல் 489 (IV.1.12)
பாடம் 162: பாவபுண்ணியங்களிலிருந்து முழுவிடுதலை பாடல் 490 (IV.1.13)
பாடம் 163: ஆனந்தமாக இருக்க புண்ணியம் அவசியமில்லை பாடல் 491 (IV.1.14)
பாடம் 164: ப்ராரப்த கர்மம் அழிவதில்லை பாடல் 492 (IV.1.15)
பாடம் 165: ஞானி தன் கடமைகளை தொடரவேண்டும் பாடல் 493 – 494 (IV.1.16-17)
பாடம் 166: சமூக சேவையும் ஞானமும் பாடல் 495 (IV.1.18)
பாடம் 167: பரமனை அறிந்தவன் பரமனாகிவிடுவான் பாடல் 496 (IV.1.19)
பாடம் 168: ஞானி பேச மாட்டான் பாடல் 497-498 (IV.2.1-2)
பாடம் 169: ஞானியின் மனம் அடங்கிவிடும் பாடல் 499 (IV.2.3)
பாடம் 170: ஞானியின் பிராணன் ஜீவாத்மாவில் அடங்கிவிடும் பாடல் 500-502 (IV.2.4-6)
பாடம் 171: பாதை ஒன்று பயணங்கள் வேறு பாடல் 503 (IV.2.7)
பாடம் 172: பயணங்களின் முடிவு பாடல் 504-507 (IV.2.8-11)
பாடம் 173: ஞானியின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை பாடல் 508-510 (IV.2.12-14)
பாடம் 174: உபாசகனின் பிராணன் கடவுளுடன் கலந்து விடும் பாடல் 511 (IV.2.15)
பாடம் 175: ஞானி பரமனுடன் இரண்டறக் கலப்பதன் காரணம் பாடல் 512 (IV.2.16)
பாடம் 176: சுஷும்னா நாடி வழியே உயிர் பிரியும் பாடல் 513 (IV.2.17)
பாடம் 177: பிரம்மலோகத்துக்கு பயணம் பாடல் 514-515 (IV.2.18-19)
பாடம் 178: பயணம் நிச்சயம் பாடல் 516-517 (IV.2.20-21)
பாடம் 179: ஞானியின் பார்வை – ஏசு கிருஸ்து பாடல் 518 (IV.3.1)
பாடம் 180: ஞானியின் பார்வை – Dr. விஜய் S சங்கர் MD PhD. பாடல்: 519 (IV.3.2)
பாடம் 181: ஞானியின் பார்வை – ஓஷோ ரஜனீஷ். பாடல்: 520 (IV.3.3)
பாடம் 182: விஞ்ஞானியின் பார்வை – Dr. மணி பௌமிக். பாடல்: 521-523 (IV.3.4-6)
பாடம் 183: விஞ்ஞானியின் பார்வை – Dr. காகு. பாடல்: 524-531 (IV.3.7-14)
பாடம் 184: ஞானத்தின் பலன்கள் பாடல்: 532-533 (IV.3.15-16)
பாடம் 185: ஞானியின் தன்மைகள் பாடல்: 534-536 (IV.4.1-3)
பாடம் 186: ஞானியின் இன்பங்கள் பாடல்: 537 (IV.4.4)
பாடம் 187: ஞானியின் போதனைகள் பாடல்: 538-540 (IV.4.5-7)
பாடம் 188: ஞானியின் வாழ்வு பாடல்: 541-542 (IV.4.8-9)
பாடம் 189: ஞானியின் ஞானம் பாடல்: 543-547 (IV.4.10-14)
பாடம் 190: ஞானியின் சக்தி பாடல்: 548-549 (IV.4.15-16)
பாடம் 191: ஞானியின் நிறைவு பாடல்: 550-555 (IV.4.17-22)