Post date: May 08, 2016 10:4:29 AM
கூர்ந்து ஆலோசித்தால் இன்றைய இரத்தப் பிரிவுகளான எ, பி, எபி, ஓ என்ற நான்கும் அதன் பண்புகளும் வர்ணாசிரமத்தில் பிரிந்த அந்த நாற்குலங்களின் அடிப்படைக் குணங்களுடன் ஒத்துப் போவதை நாம் உணரலாம்.
அடே அப்பா! என்ன ஆராய்ச்சி? என்ன விளக்கம்? இவரது கருத்துப்படி,
இரத்தப் பிரிவு _ எ(A) பார்ப்பன(பிராமண)ர்களுக்கு உரிய பண்புகள் கொண்டது.
இரத்தப் பிரிவு _பி (B) சத்திரியப் பண்புகள் கொண்டது.
இரத்தப் பிரிவு எபி (AB) வைசியப் பண்புகள் கொண்டது.
இரத்தப் பிரிவு ஓ (O) சூத்திரப் பண்புகள் உடையது.
அதாவது, இரத்தப் பிரிவுகள் (Blood Groups) நான்கும் நான்கு வர்ணத்தார்களிடம் இருக்கும். மாறி இருக்காது!