முடிவில்லாமல் தன்னையே தேடும் வழியே வாழ்க்கை!
மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விச்ஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது. எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வது தான். மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா. யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த ஞானம், ஆனந்தம் நாம் என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.
நினைவுக்கேறற்வாறு இயங்கு
==================================================================
நான் மிகவுஞ் செம்மையாய் இருக்கின்றேன். என் உடம்பின் உள்ளேயுள்ள உறுப்புகளுந் திருத்தமாகவுஞ் செவ்வையாகவும் நடைபெறுகின்றன. யான் துய்மையான நல்ல உணவை உண்பதானாலும், நல்ல தண்ணீரைப் பருகுவதனாலுந், துயகாற்றை உட்கொள்வதனாலும் என் தீனிப்பையும் நெஞ்சப்பையும் ஒழுங்காக இயங்கி இவற்றை நன்றாய்ச் செரிக்கச் செய்கின்றன. கழிவுகளை வெளிப்படுத்துங் குழாய்களும் பைகளும் உடனுக்குடன் அவற்றை வெளிப்படுத்தி என் உடம்பைத் துப்புரவாக வைக்கின்றன. யான் துய்மையாகவுஞ் செம்மையாகவும் மனமகிழ்ந்து இன்பத்தோடிருக்கின்றேன்.
அகம் புறம் என்னும் இரண்டிடத்துமுள்ள கருவிகள் அத்தனையும் நினைவால் உந்தப்படுங்கால் அந் நினைவுக்கேறற்வாறு இயங்குமென்றே கடைப்பிடித்தல் வேண்டும்.
பெரும்பாலும் மக்களறிவு புறப்பொருளையே நாடி நிற்றலால் அது புறப்பொருளை அறியவும் இயக்கவும் வல்லதாய் இருக்கின்றது. அங்கனமே அஃது அகப்பொருளையும் நாடி நிற்குமாயின் அங்குள்ளவற்றையும் அறியவும் இயக்கவும் வல்லதாகும்.
=============================================
தம்முயிரின் அகத்தேயள்ள எண்ணங்களை வெளித் தோற்றுவிக்குங் காலத்து அவற்றை அவ்வுயர்ந்த தன்மைகளின் வாயிலாகவே செல்லவிடுதல் வேண்டும்.
(எ.கா) ஒருவன் தன் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் முதலாயினாரையுந் தன்னையும் பாதுகாக்கும் பொருட்டு ஒரு தொழின் முயற்சியிலேனும் அல்லது ஓர் அலுவல் முயற்சியிலேனும் இறங்குங்குங்கால்
" என் ஆண்டவன் என்னை இவ்வுலகத்திற் பிறப்பித்ததும், என்னோடு இவ்வுயிர்களை மனைவி மக்கள் முதலான உறவினற் சேர்த்து வைத்ததும் நான் அவர்கட்கும், அவர்கள் எனக்குமாகத் துணை நின்று, இறுவரும் ஒருங்கு சேர்ந்து உலகத்திலுள்ள பல்வகை உயிர்கட்கும் பலதிறப்பட்ட உதவிகளைச் செய்தற் பொருட்டேயாம் இவ்வுதவிகளைப் பிறவுயிர்கட்குச் செய்யவும், இவற்றைச் செய்தற்குரிய எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இன்றியமையாது வேண்டப்படும் பொருளை எவர்க்குந் தீங்கு நிகழாமல் நான் தேடித் தொகுத்தல் வேண்டும். அங்ஙனந் தேடித் தொகுத்தற்கு ஒரு சிறந்த வழியாக இத் தொழின் முயற்சியில் அல்லது இவ்வலுவல் முயற்சியில் யான் புகுகின்றேன். இம் முயற்சி எல்லார்க்கும் பயனுடையதாய் நடைபெறல் வேண்டும். இதனால் வரும் வருவாய்ப் பொருள் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்க்கும் உலகத்தில் அரிய பெரிய நன்மைகள் பலவற்றைச் செய்தற்கும் உதவியாதல் வேண்டும்."
==================================================================