தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 215A உட்பிரிவு 3 மற்றும் 4-ல் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக, தொழில் நிறுவன கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவதுகட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இப்பேரூராட்சியில் புதிய கட்டட அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்த பின்னரே உரிய கட்டிட அனுமதி வழங்கப்படும்.
முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கும் முன்பாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட்ட பின்னரே சொத்து வரி விதிக்கப்படும்.
உரிய கால அளவில் கட்டிட உரிமையாளரால் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாவிடில் பேரூராட்சியின் மூலமாக உரிய மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தி அதற்கான செலவினம் வசூலிக்கப்படும்.