http://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
டி.கே.பட்டம்மாள் கச்சேரியில் பாடுவதற்கென்றே ‘கல்கி’ அவரிடம் நான்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவை : 1)குழலோசை கேட்டாயோ -கிளியே 2) பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள் 3) திரைகடல் தூங்காதோ 4) இன்பக் கனவொன்று துயிலினில் கண்டேன்.
இவை 1940-களில் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன.
டி.கே.பட்டம்மாள் திரைப்படங்களில் பாடியுள்ள பாடல்களையும் பலர் அறிவர். முதன் முதலில் எஸ்.எஸ்.வாசன் ’தியாகபூமி’யில் அவரைப் பாட அழைத்தபோது, டி.கே.பட்டம்மாள் போட்ட ‘கண்டிஷன்’ என்ன? அவரே சொல்லட்டும்!
”சினிமாவில் பாடுவதற்கு ஜெமினி நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வாசன் அவர்கள் தான் என்னை வரவேற்று உபசரித்தார்.
“எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நீங்களும் பாட்டுப் பாட வேண்டும். வருகிறீர்களா? “ என்று கேட்டார்.
”மிகவும் மகிழ்ச்சி” என்று சம்மதம் தெரிவித்ததோடு “ஒரேயொரு கண்டிஷன்” என்றேன்.
“என்ன” என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார் வாசன்.
“சினிமாவின் டூயட் பாடல்கள் பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசபக்தி மற்றும் பொதுவான பாடல்கள் பாடுகிறேன்” என்று சொன்னேன்.
வாசனும் சந்தோஷமாகத் தலையசைத்தார். அதன்பின் ‘தியாகபூமி’, ‘மிஸ் மாலினி’ உட்பட சில படங்களில் பாடியிருக்கிறேன்”
[ நன்றி : அமரர் வாசன் நூற்றாண்டு மலர், விகடன், 2004]
( பின் குறிப்பு: ‘மிஸ் மாலினி’க்காக டி.கே.பி ‘ஸ்ரீ ஸரஸ்வதி நமோஸ்துதே’ என்ற பாடலைப் பாடினார். ஆனால், வாசன் கடைசியில் அதைப் படத்தில் பயன்படுத்தவில்லை! ஏனென்றால் மாலினி என்ற அந்த பெண்மணியின் திரைப்படக் குணசித்திரப்படி அவள் அவ்வளவு அழகாக ஒரு பாடலைப் பாடி இருக்கமுடியாது என்று முடிவு செய்தார் ! இது ராண்டார் கை ஒரு கட்டுரையில் கொடுத்த தகவல்! )
‘தியாகபூமி’ படத்தில் ‘கல்கி’ யின் ‘பாரத புண்ணிய பூமி ‘, 'தேச சேவை செய்ய வாரீர்’, ‘பந்தம் அகன்று’ ஆகிய மூன்று பாடல்களையும் டி.கே.பட்டம்மாள் பாடியிருக்கிறார்.
இதோ இன்னும் சில திரையுலகப் பாடல்கள் பற்றிய தகவல்கள்:
[ நன்றி: ஸரிகமபதநி, டிசம்பர் 2000 ]
“பிழைக்கும் வழி” என்ற படத்தில் டி.கே.பி. பாடிய ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! மதுரை சுந்தர வாத்தியார் எழுதிய பாடல்.
எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு
பேரின்ப ஞான வீடு (எங்கள்)
கங்கை யமுனை பொருனை
காவேரியும் பாயும்
திங்களும் மும்மாரி பெய்து தீங்கனிகள் ஈயும் (எங்கள்)
தெள்ளுதமிழ் வேதம் தரும் வள்ளுவர் இந்நாடு
அள்ளும் கவி ஔவை கம்பன் அவதரித்த நாடு
சாந்தி தனில் நீந்தும் உயர் காந்தியர் இந்நாடு
தேர்ந்த ஞானி ராஜாஜி நேரு இந்த நாடு
தேர்ந்த வீரர் நேதாஜி நேரு இந்த நாடு (எங்கள்)
பின் குறிப்பு:
TAMIL RARE D.K. PATTAMMAL SONG-- Bharatha punya boomi(vMv)--THIYAGA BOOMI 1939
https://www.youtube.com/watch?v=V5tWnLDzoKE&feature=youtu.be
( தொடரும்)
தொடர்புள்ள பதிவுகள் :
from an article in 'kunkumam' thanks to
pasupathy blog.
-----------------------------------------------
கொத்தமங்கலம் சீனு- விஜயகுமாரி நடித்த ‘மகாத்மா உதங்கர்’ படத்தில் ‘காண ஆவல் கொண்டேங்கும் என் இருவிழிகள்…’ என்ற பாடலைப் பாடினார். அதே படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் - வீணை ராமநாதன் இசையில் ‘குஞ்சிதபாதம் நினைந்துருகும்…’ என்கிற பக்தி ரசத்தையும் பொங்கவைத்தார் பட்டம்மாள்.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த ‘தியாகய்யா’வில் ‘ராதிகா கிருஷ்ணா…’ மற்றும் ‘நினைந்துருகும் என்னை…’ என இரண்டு பாடல்கலைப் பாடினார்.
இந்தியிலிருந்து ‘ராம ராஜ்யா’வை தமிழுக்குக் கொண்டு வந்தார் ஏவி.மெய்யப்பச் செட்டியார். அதில் அருணாசலக் கவிராயரின் ‘எனக்குன் இருபதம்…’ என்கிற டைட்டில் பாடலைப் பட்டம்மாள் பாடினார். அந்த ஆறுநிமிடப் பாட்டில் ராமாயணத்தின் முன்கதை சொல்லப்பட்டதை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.
‘வேதாள உலகம்’ படத்தில் சுதர்சனம் இசையில் அவர் பாடிய ‘தீராத விளையாட்டுப் பிள்ளை…’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதே படத்தில் ‘தூண்டிற் புழுவினைப்போல்…’ பாடலும் ரசிக்கப்பட்டது.
--------------------------------------------
ஜி.அஸ்வத்தாமா இசையில் ‘பிழைக்கும் வழி’ படத்தில் சுந்தர வாத்தியார் எழுதிய
‘எங்கள் நாட்டுக்கெந்த நாடு …’ பாடலின் நிறைவில் ‘நேரு எங்கள் நாடு…’ என்று பட்டம்மாள் குரலில் ஒலித்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் கைதட்டி வரவேற்றார்கள். அந்தப்படத்தில் ‘முதலை வாயில்…’,
‘கோட்டை கட்டாதேடா…’ என இரண்டு பாடல்களையும் பாடினார்.
---------------------------------------------
‘வாழ்க்கை’ படத்தில் பாடிய ‘பாரத சமுதாயம் வாழ்கவே…’ பாடல் அவரது புகழுக்கு மேலும் மெருகூட்டியது.
-----------------------------------------
‘லாவண்யா’ படத்தில் இடம்பெற்ற
‘பழம் பாரத நன்நாடு…’ பாடலில் ஏழைகளின் குரலை ஏற்ற இறக்கத்தோடு ஒலித்து, பாராட்டுப்பெற்றார் பட்டம்மாள்.
-----------------------------------------------
ஜெமினியின் ‘நாட்டிய ராணி’ பட விளம்பரத்தில் ‘பாடல்கள்: டி.கே.பட்டம்மாள்’ என்று பெரிய எழுத்துக்களில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டு, பெருமை சேர்த்தது.
-----------------------------
லலிதா-பத்மினி நடனமாடிய ‘நாடு செழித்திடவும் உள்ளமே நாடு…’ பாடல், பட்டம்மாள் குரலில் ‘வனசுந்தரி’ படத்தில் ஒலித்து, வசீகரித்தது.
---------------------------------------------------
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
https://sites.google.com/site/dkpattammalfilmsongs/mp3/
=================================
dkp-1
baratha samuthayam vaazhkave
vaazhkkai
==================================
dkp-2
vetri ettu dhikkum etta
naam iruvar
==================================
dkp-3
aaduvome paaduvome
naam iruvar
==================================
dkp-4
theeraadha vilaiyaattu
vedhaala ulakam
==================================
dkp-5
enga naattukku entha naadu eedu?
pizhaikkum vazhi
vembar manivannan mp4 upload
( does not work in this browser)
---------------------------------------------------
dkp-6
thanga uru nizhal illaiye
LAAVANYA
laavanya
mp3-given by natarajan
-------------------------------------
dkp-7
pazham perum baaratha naadu
LAAVANYAA
given by natarajan
---------------