பழம் பாரத நல் நாடு
பசும்பொன் விளையும் நாடு
செழும் நெல் விளைவதிங்கே
கொடும் பசியால் முடிவதும் ஏனோ
பழம் பாரத நல் நாடு
பசும்பொன் விளையும் நாடு
வறுமைப் பிணியால் நொந்தே
பல இந்தியர் மாய்ந்து வந்தே
மிகுந்த ஆணவம் உடனே
வீண் விருந்தில் மூழ்குவர் செல்வர்.
பழம் பாரத நல் நாடு
பசும்பொன் விளையும் நாடு
ஏழைகள் என்றொரு ஜாதி
ஜெகதீசன் படைப்பினில் உண்டோ
சுக வாழ்வினிலே மனம் மூழ்கிடுவர்
பொருள் உள்ளவர் மனமும் கல்லோ
இனி தன்னலம் சேர் தனவந்தர்களால்
கொடும் பஞ்சமும் மிஞ்ச விடோமே
நெஞ்சில் இரக்கமிலா வணிகர்க்கு இனி
அஞ்சுகிலோம் பழி தீர்ப்போம்.
நாயினும் கேடென நாம் உயிர் வாழ்வது
ஆண்டவன் சம்மதமாமோ
நமதொற்றுமையால் எளியோரே
தனிவெற்றி அடைந்திடுவோமே
ஜெயக்கொடி நாட்டிடுவோமே
ஜெயபேரிகை கொட்டிடுவோமே
ஜெயவெற்றி முழக்கிடுவோமே