https://sites.google.com/site/dkpattammalsongs/home/30-theeraadha-vilaiyaattu-pillai
தீராத விளையாட்டுப் பிள்ளை ,
கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை
----------------------------
தின்னப் பழம் கொண்டு தருவான் ,
பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னைய்யன் என்றால்
அதை எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(SINDHUBAIRAVI)
----------------------------------------------------
அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.
(KAMAJ) (தீராத)
------------------------------------------------------
பின்னலைப் பின்னின்றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.
(SHANMUGAPRIYA) (தீராத)
-------------------------------------------------------
புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.
(MAAND)
**********************************
SLIDES-WINDOWS MOVIE MAKER-UPLOADED TO TUBE IN SEPTEMBER
WORKING WELL AS IFRAME
தீராத விளையாட்டுப் பிள்ளை ,
தீராத விளையாட்டுப் பிள்ளை
கவிதை -சுப்பிரமணிய பாரதி
இசை-சுதர்சனம்
பாடியவர்- டி.கே.பட்டம்மாள்