RAMARAJYAM
D.K.PATTAMMAL SINGS THIS GREAT RAGAMALIKA SONG AS TITLE MUSIC IN THE FILM RAMARAJYAM -PRODUCED BY AVM AS A DUBBING OF MARATHI FILM.
WITH WONDERFUL SONGS.
=============================
Sri.VEMBAR maNivaNNan has done a great service by placing this rare gem in youtube.
He specializes in sharing OLD GEMS OF THE 1940-1950 decade.
எனக்குன் இரு பதம் நினைக்க வரமருள்வாய் - ஸ்ரீ ராமச்சந்த்ரா
https://youtu.be/1H3K_88l7rc?t=28
பல்லவி
எனக்குன் இரு பதம் நினைக்க வரமருள்வாய் - ஸ்ரீ ராமச்சந்த்ரா
எனக்குன் இரு பதம் நினைக்க வரமருள்வாய்
சரணங்கள்
எனக்குன் இருபதம் நினைக்க வரம் அருள்
இனித்த தசரதன் தனக்கு மகன் எனும்
மனத்தினுடன் அவதரித்து முனிவரன்
மகத்தில் அரக்கியை வதைத்த அரசே (1)
-----------
நடக்கையிலே அஹல்யைக்கு கிருபை செய்து
நடத்தி ஜனகன் வில் ஒடித்து ஜானகியைக் கை
பிடித்துப் பரசுராமனுக்கு மமதையைப்
பிரித்து நகரில் வந்திருக்கும் ஐயனே (2)
---
தரிக்கும் முடி பரதனுக்குதவி நதி
தடத்தில் குகனுடன் அடுத்து சித்ரகூட
வரைக்குள் ஜானகியோடிருக்கத் துணைவன் நல்
வணக்கம் செய்ய மகிழ் குணக்குஞ்சரமே (3)
-----
துடித்த பரதனும் ஒடுக்கமுடன் வர
தொடுத்த மிதியடி கொடுத்தரசு செய்ய
வடக்கில் அவனையும் விடுத்து நடுவிலே
வனத்தில் வரும் விராதனைக் கொன்றவனே (4)
விடுக்கரிய ஜடாயுவுக்கு உறவு சொல்லி
விடுத்துக் கொண்டு பஞ்சவடிக்கு சென்றவுடன்
அடுத்த சூர்ப்பனகை கொடுத்தகர தூ
ஷணத் திரிசிரர் முடி துணித்த ராகவா (5)
தனித்து வரு மாரீசனைக் கொன்றொரு
கவந்தனுக்கு அருளி ஹநுமனைக் கொண்டொரு
சுக்ரீவனுக்குதவி வாலி தனைப் பொருதி
வானரப் படையை ஆதரித்த துரையே (6)
இருக்கும் ஹனுமான் வந்துரைக்க நிசி சரர்
இருக்கை அறிந்தபின் எரித்த கடலிலே
பெருக்க அணை செய்து வருக்கம் வருக்கமாப்
பெலத்த அரக்கனைத் தொலைத்த தெய்வமே (7)
கொடிய இந்த்ரஜித்தன் ப்ரஹஸ்தன் முதலாகக்
கொள்ளும் மூல பல வெள்ள அரக்கர்தம்
முடியும் கும்பகர்ணன் முடியும் ராவணன்
முடியும் பொடியாக விடும் புங்கவனே
நினைத்தபடி விபீஷணர்க்கு அரசு பெற
நிறுத்தி ஒரு புஷ்பரதத்தில் ஏறி வந்து
தனத்தில் உயர் தரும் அயோத்தியிலே சிம்மா
தனத்திலிருக்கும் ரகு குல குமரனே (9)