FB POSTS BY RSR IN APRIL-2016
=============================
1-4-2016
BLOODY ASSES, LIKE A.MARX , ARE MAKING FUN OF 'VANDHE MATHARAM' AND 'BARATH MATHA KI JAI'....AS IF THESE SACRED WORDS ARE OF SANGH PARIVAR ONLY. NO!
THESE ARE SACRED WORDS TO EVERY PATRIOT IN INDIAN NATIONAL CONGRESS AND EVEN GENUINE LEFT WING WORKERS. ..LET US SEE HOW JAWAHAR INTERPRETS THESE WORDS. THIS IS FROM HIS DISCOVERY OF INDIA...THE CHAPTER ON HIS ELECTION TOURS(RSR)
'Bharat Mata' Often, as I wandered from meeting to meeting,
I spoke to my audience of this India of ours,
of Hindustan and of Bharata, the old Sanskrit name derived
from the mythical founder of the race.
1 seldom did so in the cities, for there the
audiences were more sophisticated
and wanted stronger fare.
But to the peasant, with his limited outlook,
I spoke of this great country for whose free- dom we were struggling, of how each part differed from the other and yet was India, of common problems of the peasants from north to south and east to west, of the Swaraj that could only be for all and every part and not for some.
I told them of myjourney- ing from the
Khyber Pass in the far north-west to Kanya Kumari or Cape Comorin in the distant south,
and how everywhere the peasants put me identical questions, for their troubles were the same — poverty, debt, vested interests, landlords, moneylenders, heavy rents and taxes, police harassment, and all these wrapped up in the structure that the foreign government had imposed upon us — and relief must also come for all.
I tried to make them think of India as a whole,
and even to some little extent of this wide world of which we were a part.
I brought in the struggle in China, in Spain, in Abyssinia, in Central Europe, in Egypt and the countries of Western Asia.
I told them of the wonderful changes
in the Soviet Union and
of the great progress made in America.
The task was not easy;
yet it was not so difficult as I had imagined, for our ancient epics and myths and legends,
which they knew so well, had made them familiar with the conception
of their country, and some there were always who had traveled far and wide to the great places of pilgrimage situated at the four corners of India.
Or there were old soldiers who had served in foreign parts in World War I or other expeditions. Even my references to foreign countries were brought home to them by the consequences of the great depression of the 'thirties. ************************************************* Sometimes as I reached a gathering,
a great roar of welcome would greet me:
Bharat Mata kt Jai —
'Victory to Mother India.' I would ask them unexpectedly what they meant
by that cry, who was this Bharat Mata, Mother India,
whose victory they wanted?
My question would amuse them and surprise them, and then, not knowing exactly what to answer,
they would look at each other and at me.
I persisted in my questioning.
At last a vigorous Jat, wedded to the soil from immemorial generations, would say that it was the dharthi, the good earth of India,
that they meant.
What earth?
Their particular village patch, or all the patches in the district or province,
or in the whole of India?
And so question and answer went on, till they
would ask me impatiently to tell them all about it.
I would endeavor to do so and explain that
India was all this that they had thought, but it was much more.
The mountains and the rivers of India,
and the forests
and the broad fields,
which gave us food, were all dear to us,
but what counted ultimately were
the people of India, people like them and me,
who were spread out all over this vast land.
Bharat Mata, Mother India,
was essentially these millions of people,
and victory to her meant victory to these people. You are parts of this Bharat Mata,
I told them, you are in a manner yourselves
Bharat Mata,
====================================================
2
SHARING AN ANALYSIS BY A READER
1971ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தை கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூன்றே முதல்வர்கள்தான் ஆட்சி நடத்தியுள்ளனர். நடுவே நடந்த சட்ட போராட்டங்களின்போது, பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு வந்தாலும், அது ஜெயலலிதா அனுமதியோடு நடந்த விஷயம் என்பதால் அதுவும் ஜெயலலிதா கணக்கில் சேருகிறது.அதேநேரம், விஜயகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக தேர்ந்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றது அரசியல் பார்வையாளர்களை அவரது கட்சி பக்கம் திருப்பியது.திமுக ஆளும் போது ஏற்படும் கசப்புகளால், அதிமுக அடுத்த தேர்தலில் பலன்பெறுவதும், அதிமுக ஆட்சி முடியும்போது, அதனால் திமுக பலன்பெறுவதும் என்று பல காலமாக இருந்த நிலை மாறி, அதிருப்தி வாக்குகளை முதல்முறையாக பெரிய அளவில் சிதறடித்தவர் விஜயகாந்த்.2011ல் அதிமுகவோடு கூட்டணி வைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது தேமுதிக. அதேநேரம், 2014 லோக்சபா தேர்தலில் பாஜக, பாமக, மதிமுகவுடன் கூட்டணி வைத்து 3வது அணியாக களமிறங்கியது தேமுதிக. இந்த தேர்தல் முடிவுகளையும், தேமுதிக வாங்கிய வாக்குகளையும், வைத்து பார்த்தால்தான் திமுகவுக்கு அது எவ்வளவு பாதிப்பை கொடுத்துள்ளது என்பது புரியும்.2014 லோக்சபா தேர்தலில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 84 சட்டசபை தொகுதிகள் அடங்கியிருந்தது. அந்த 84 சட்டசபை தொகுதிகளில், 78 தொகுதிகளில் அதிமுக, திமுக மற்றும் தேமுதிக இடையே நேரடி போட்டி இருந்தது.இதில் கட்சிகள் வாங்கிய வாக்குகளை வைத்து பார்க்கும்போது, திமுகவின் வாக்குகளை தேமுதிக அதிகமாக இழுத்துள்ளது தெரியவருகிறது. அதிமுகவில் இருந்து தேமுதிக இழுத்த வாக்குகளைவிட இரண்டரை மடங்கு அதிகமாக திமுகவிடமிருந்துதான் வாக்குகளை காந்தம் போல இழுந்துள்ளது விஜயகாந்த்தின் கட்சி.உதாரணத்திற்கு, தேமுதிக பெற்ற 100 வாக்குகளில், திமுகவிடமிருந்து கிடைத்தது 25 வாக்குகள் என்றால், அதிமுக இழந்தது 10 ஓட்டுக்களைத்தான். அதேநேரம், பாஜக-அதிமுக-திமுக நேரடியாக மோதிய தொகுதிகளில், திமுகவிடமிருந்து பாஜகவுக்கு சென்ற வாக்குகளைவிட, அதிமுகவிடமிருந்துதான் அதிக வாக்குகள் போயுள்ளன.கொள்கை அளவில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், குறிப்பிட்ட சதவீத மக்கள் ஒரே மாதிரியாகத்தான் கணிக்கிறார்கள். எனவேதான், அவ்விரு கட்சிகளும் நேரெதிராக நிற்கும்போது, அவற்றின் வாக்குகள் சிதறுகின்றன. அதே நிலைதான், திமுகvsதேமுதிக என்று வரும்போதும் நிகழ்கிறது.2014 லோக்சபா தேர்தலில், 19 சட்டசபை தொகுதிகளில், தேமுதிக 10 விழுக்காட்டுக்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 49.3-ஆகவும், திமுகவின் வாக்கு சதவீதம் 33.7-ஆகவும் உள்ளது.29 சட்டசபை தொகுதிகளில் தேமுதிக 10 முதல் 15 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அங்கு அதிமுக வாக்கு சதவீதம் 47.3-ஆகவும், திமுக வாக்கு சதவீதம் 30.8-ஆகவும் குறைந்துள்ளது.18 சட்டசபை தொகுதிகளில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 15 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தது. அந்த தொகுதிகளில், அதிமுகவின் வாக்கு சதவீதம் 47.3-ஆகவும், திமுக வாக்கு சதவீதம் 27.2-ஆகவும் குறைந்தது.7 சட்டசபை தொகுதிகளில் தேமுதிக வாங்கிய வாக்கு சதவீதம் 20 முதல் 25 சதவீதத்திற்குள் இருந்தது. அங்கு அதிமுக 44.8 சதவீத வாக்குகளையும், திமுக 23.4 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.இதேபோல, 5 சட்டசபை தொகுதிகளில், தேமுதிக 25 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 41.4. அதேநேரம், திமுகவுக்கு கிடைத்தது 21.2 சதவீதம்தான்.எங்கெல்லாம் தேமுதிக வாக்கு சதவீதம் அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் அதிகமாக வாக்குகளை இழப்பது திமுகதான் என்பது லேட்டஸ்ட் நிலவரம். எனவே இம்முறையும், தேமுதிக-திமுக நேரடியாக மோதும் சட்டசபை தொகுதிகளில் திமுக வாக்குகளை தேமுதிக கபளீகரம் செய்ய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.விஜயகாந்த், மக்கள் நல கூட்டணியோடு இணைந்து போட்டியிடுவது எப்படி பார்த்தாலும், அதிமுகவைவிட திமுகவுக்குதான் பெரும் வாக்கு வங்கி இழப்பை ஏற்படுத்திக்கொடுக்கப்போகிறது என்பதுதான் நிதர்சனம். இதை ஈடு செய்ய கருணாநிதி பல்வேறு வியூகங்களை கையில் எடுக்க கூடும் என்கிறது கள நிலவரம்.
-------------------------------------------------------
3
JETHMALANI ;இவர் யாருக்கெல்லாம் கடந்த பல ஆண்டுகளாக வாதாடியுள்ளார் என்று ஒரு பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், ஊரறிந்த குற்றவாளிகள்தாம் அதிகம். .சட்டம் என்பது எப்போதுமே நீதியை நிலை நாட்டிவிடமுடிவதில்லை. அதிலும் குறிப்பாக, criminal law தொடர்பான வழக்குகளில், சட்ட வரைவு எதுவும், திட்டவட்டமாக இல்லை. முந்தைய முன்னுதாரணங்கள் தாம் , வழக்குரைஞர்களும், நீதிபதிகளும், கணக்கில் கொள்கின்றனர். பல தசாப்தங்களாக , இம்மாதிரியான criminal cases பற்றியும், அதில் உள்ள சந்து பொந்துகள் மூலம் தப்பிக்கும் வழிகள் பற்றியும், திறம்பட எடுத்துரைக்கும் ஜெத்மலானி , பல குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க துணை நின்றுள்ளார்." ..ஒரு குற்றவாளி தப்பித்தால் பரவாயில்லை, ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது " என்ற கொள்கை நீதித்துறையில் உள்ளது. இது எப்போதுமே சரியானதல்ல...அங்குதான், நீதிபதியின் அறம் சார்ந்த நிலை வெளிப்பட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும். போதிய evidence இல்லை என்று எத்தனை குற்றவாளிகள் தப்பியுள்ளனர்! இழுத்தடிக்கப் படும் வழக்குகள், இறுதியில், நீதிக்கு எதிராக அமைகின்றன. கண்கூடான உண்மை !
------------------------------------------
4
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு...............................
இந்தக் கூட்டணி அருமையாக அமைந்ததற்கு , முழுமுதல் காரணம், கனிமொழி அவர்கள்.! ...அவரோடு முழு ஒத்துழைப்பு தந்த ஸ்டாலின் அவர்களும். !..தமிழ்நாட்டின் இந்திய தேசிய காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்டு வழிகாட்டிவரும், கலைஞரின் திமுக. !.. சிதம்பரம் அவர்கள், தமிழ்நாட்டின் காங்கிரசை திமுகவின் ஒரு பகுதியாக கருதுகிறார் என்று ஒரு கட்டுரையாளர் கூறியதை , மாற்றி வாசிப்போம். ,,,திமுகதான், இந்திய தேசிய இந்திரா காங்கிரசின் தமிழகப் பிரிவாகச் செயல்பட்டு வந்திருக்கிறது . வாழ்க.! வளர்க!. வெல்க!.
----------------------------
4
பீட்டர் அல்போன்ஸ் போன்ற தலைவர்கள், உடனடியாக வாசன்
கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைய வேண்டும். ..காங்கிரஸ் தேசிய தொண்டர்கள் அனைவரும், தாங்கள் ஒரு தனி நபரின் தவறான அரசியலால், படுகுழிக்கு அழைத்துச் செல்லப்படுவதை உணர்ந்து, காங்கிரஸ் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு முனைப்புடன் உழைத்து, இயக்கத்தின் பெருமையை நிலைநாட்டி வரலாறு படைக்க வேண்டும். அதிமுகமும், மதிமுகமும் தேச விரோத சக்திகள். கம்யூனிஸ்டுகள், மதிமுக கூட்டணியிலிருந்து உடனடியாக வெளியேறவேண்டும்.மிகப் பெரும்பான்மையான மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களின் மன நிலை இதுதான். .. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி அமைக்கவிருக்கும், முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது நிச்சயம். மார்க்சிஸ்ட் கட்சி அந்தக் கூட்டணியில் பங்கெடுக்கப் போவதும், கூட்டணி அரசிலும் அங்கம் வகிப்பதும் சர்வ நிச்சயம். மார்க்சிஸ்ட் கட்சி என்றால் அது மேற்கு வங்க கட்சிதான். மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள். தனித்துப் போட்டியிடுங்கள்...வைகோ போன்ற நபர்களுக்கு செங்கொடி விளம்பரம் தருவது களங்கம். .அவமானம்
-----------------------------------------------------------
5
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் இணைவதால் மட்டுமே தேமுதிகவை காப்பாற்ற முடியும் என்றும், மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது தற்கொலை முடிவு என்றும் சந்திரகுமார் கூறினார்.
-----------------------------------------------------------------------------
5
மதுரை அருகே உசிலம்பட்டி பகுதியில், வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பிரமலைக் கள்ளர் பிரிவினர் அனைவரையும், அந்த கொடுங்கோல் ஆட்சி குற்றப் பரம்பரை என அறிவித்து ,பல அடக்குமுறைகள் செய்து வந்தது. இப்போது கலைத் திறமை மிக்க திரைப்பட இயக்குனர்கள் பாலாவும், பாரதிராஜாவும், போட்டி போட்டுக் கொண்டு இதைப்பற்றிய திரைப்படம் எடுக்கப் போவதாக செய்திகள். ..அந்த நாட்களில், ஜார்ஜ் ஜோசப் என்ற பிரபல வழக்குரைஞர் ( வழக்கறிஞரும் கூட) *BAR-AT-LAW " காங்கிரஸ் இயக்க தலைவர், பாரதி, காமராஜர் போன்றோருக்கு குரு, வைக்கம் போராட்டத்தை தொடங்கி வைத்து அதை அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாபெரும் இயக்கமாக மாற்றி அமைத்தவர். ஜார்ஜ் ஜோசப். அவரது தியாக வாழ்க்கை பற்றி இந்த இயக்குனர்கள், தங்கள் படைப்பில் சிறிதேனும், மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். மீண்டு வரவேண்டும் அந்த சத்ய யுகம்.
---------------------------------------------------------
வாசன் அவர்களே! ..நீங்கள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், உங்கள் கட்சிக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது. திண்ணம். .இந்த நிலையில், தனியாக நின்று தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுங்கள். ..ஒரு கட்சிக்கு எவ்வளவு சதவீதம் மக்கள் ஆதரவு உள்ளது என்பதை, இந்த ஊடகங்கள், அந்தக் கட்சி வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலேயே தீர்மானித்து பிரச்சாரம் செய்கின்றனர். எத்தனை 'தலைவர்கள்' வெற்றி பெறுகிறார்கள், எத்தனை இடங்கள் கிடைக்கின்றன என்பதைவிட, எவ்வளவு சதவீத மக்கள் உண்மையிலேயே உங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்ற கணிப்பு, பொதுமக்களுக்கும் , அரசியல் நிபுணர்களுக்கும், ஏன் ! உங்களுக்கும் கூட உண்மை நிலை அறிய ஒரு பொன்னான வாய்ப்பு. ..! ஓசியில் கிடைக்கும் கூட்டணி வாய்ப்பு கேவலம் இல்லையா? அதையும் விட சிறந்த மாற்று.. பேசாமல், கட்சியைக் கலைத்துவிட்டு , இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து, மீண்டும் காங்கிரஸ் தேசிய இயக்கத்தில் இணைவது.தான். , உங்கள் இயக்கத்தின் ஒரு சிலருக்கு ( பீட்டர் போன்றவர்கள்) வாய்ப்பு உண்டு ..உங்களுக்கு அல்ல.
-----------------------------------------------------------------------------------------
6
இதே போன்ற எரிமலை வெடிப்பு , மார்க்சிஸ்ட் கட்சியில் வரவிருக்கிறது என்று நம்புகிறோம். ..விஜயகாந்துடன் சேர்ந்ததற்கு அல்ல. வெகுளி .விஜயகாந்தின் பெயரைச் சொல்லி, பினாமி முதல்வராக ஆக வைகோ வின் சூழ்ச்சியை முறியடிக்க. ! முதல் வேலையாக வைகோவை மக்கள் நலக் கூட்டணியில் இருந்து துண்டியுங்கள்..காரணம் தெரிய வேண்டுமானால், ஏப்ரல் முதல் தேதி மாலை பத்திரிகையில் இந்த பேர்வழி , ராஜீவ் காந்தி கொலை பற்றி பேசியுள்ளதைப் படித்துவிட்டு, இவர் கூறியதை, விஜயகாந்தும், மார்க்சிஸ்ட் கட்சி யும் ஏற்க மனசாட்சி இடம் தருகிறதா என்று உரக்க குரல் எழுப்புங்கள். இல்லாவிடின், விஜயகாந்த் நிருபர்களை நோக்கி அன்று கூறிய அதே தூ' தான் உங்களுக்கும்.
---------------------------------------------------------------------------
6
கொள்கை என்று ஏதேனும் இருந்தால், வாசன் , பி.ஜே.பி. கட்சிக்குப் போக முடியாது. ...மக்கள் நலக் கூட்டணி , வைகோ கூட்டணி. .போக்கிடம் இல்லாத கூட்டணி , அவசரம் அவசரமாக கடைசி நேரத்தில், தமிழக அரசியலில் துடைத்து எறியப்படுவதைத் தவிர்க்க, அப்பாவி விஜயகாந்துக்கு முதல்வர் ஆசை காட்டி, அவரது துணைவியார் மூலம், வைகோ பினாமி முதல்வர் ஆகும் சதித்திட்டம் , அது இல்லாவிடினும், அதிமுகம் மீண்டும் அரியணையில் ஏற துணை செல்ல , உழைப்பாளி வர்கத் தொண்டர்களை தவறான வழியில் கொண்டுசெல்லும் அற்பக் கூட்டணி. வாசன் அங்கு இணைவது , மிகவும் கேவலம். ..மூன்று வழிகள்தான் உண்டு. 1) கட்சியைக் கலைத்து அரசியல் துறவறம். 2) இந்திய தேசியக் காங்கிரசின் தலைமையிடம் மன்னிப்பு கோரி கடிதம் கொடுத்துவிட்டு, ஒரு ஐந்தாண்டுகள் அடிமட்டத் தொண்டனாக கட்சியை வளர்ப்பது. 3) கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் வரவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தவறாது வாக்களிக்க பகிரங்க வேண்டுகோள் அறிவிப்பு. ..பாவ மன்னிப்பு கிடைக்கும்.
---------------------------------------------------------------------------------
6
கட்சியின் தலைவர்கள், பெரும்பாலும், கட்சி ஆதரவாளர்களின் மன நிலையை உருவாக்குபவர்கள். ..மட்டுமல்லாமல் எதிரொலிப்பவர்களும் கூட. ..அப்படிப் பார்த்தால், இன்றைய நிலைமைப்படி, ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டு மக்களும் வெறுக்கும் ஒரே நபர் யாரென்று தெரியவில்லையா? 1) தி.மு.க 2) இந்திய தேசிய காங்கிரஸ் 3) அதிமு அதிருப்தியாளர்கள் 4) தேதிமுக 5) வைகோ 6) மார்க்சிஸ்ட் 7) கம்யூனிஸ்ட் 8) அனைத்து சிறுபான்மை இன அமைப்புகள்-கட்சிகள் 9) வாசன் கட்சியினர் 10) தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 11) ஜான் பாண்டியன் கட்சி 12) பாட்டாளி மக்கள் கட்சி 13) பி.ஜே.பி. 14) திருமா கட்சி ....போதுமா இல்லை இன்னமும் வேண்டுமா?
----------------------------------------------------------
7
sharing an article
தமிழகத்தில் அண்மைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நாகஸ்வரக் கலைஞர் காருக் குறிச்சி அருணாசலம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருக்குறிச்சி எனும் ஊரில் 1907-ம் ஆண்டில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை பலவேசம் நெல்தானிய அளவை செய்யும் பணியைச் செய்துவந்தவர்.
ஒரு முறை காருகுறிச்சியிலுள்ள பெரும் பண்ணையார் ஒருவர் இல்லத் திருமணத்துக்கு கூறைநாடு நடேசபிள்ளை எனும் பிரபல நாகஸ்வர வித்வான் நாகஸ்வரம் வாசிக்கச் சென்றிருந்தார், அப்போது அருணாசலத்தின் தந்தை பலவேசம், அந்த நாகஸ்வர வித்வான் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மாலைகள் கட்டிக்கொண்டிருந்தார். “மாப்பிள்ளை புறப்படத் தயார், உங்களை அழைத்துவரச் சொல்கிறார்கள்” என்று நடேசபிள்ளைக்கு ஆள் வந்தது. “பத்து நிமிடங்களில் கிளம்பி வருகிறோம் என்று சொல்” என்று அவர் வந்த ஆளிடம் சொல்லியனுப்பினார்.
இதுபோலப் பல ஆட்கள் வந்தழைப்பதும், “இதோ கிளம்பிவிட்டோம்” என்று நடேசபிள்ளை சொல்வதுமாகவே இருந்தது. அந்தப் பண்ணையார் தனது வார்த்தைக்கு யாரும் கட்டுப்படவில்லையென்றால் அவர்களைக் கொன்றுபோடக் கூடத் தயங்க மாட்டார். “இந்த நாகஸ்வரக்காரர் இப்படி அலட்சிய மாகயிருக்கிறாரே, என்ன ஆகப் போகிறதோ” என்ற கவலை மிகந்தது பலவேசத்துக்கு இறுதியாகப் பண்ணையாரே நேரில் வந்துவிட்டார். “இதோ வந்துகொண்டே இருக்கிறோம், நீங்கள் முன்னால் போய்க்கொண்டிருங்கள்” என்று அப்போதும் நடேசபிள்ளை கூறியபோது, “அதற்கென்ன, தங்கள் சௌகரியம் போல் வாருங்கள்” என்று சிறிதும் கோபமற்றவராகப் பண்ணையார் கூறிச் சென்றதைக் கண்ட பலவேசத்துக்கு இது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.
‘ஆஹா! இவர் ஒரு பெரிய நாகஸ்வர வித்வான்; இவரிடமுள்ள கலை எவ்வளவு மதிப்புடையதாயிருந்தால் நமது பண்ணையார் இவ்வாறு சிறிதும் கோபம் கொள்ளாதிருப்பார்! இந்தக் கலையைப் பயில வேண்டும், அப்போதுதான் நமக்கும் மதிப்பு கிடைக்கும்’ என்ற முடிவு செய்த பலவேசம், சேரன்மகாதேவியிலிருந்த நாகஸ்வரக் கலைஞர் ஒருவரிடம் சீடரானார். வயதும் இதரச் சூழ்நிலைகளும் அவரது ஆசைக்கு இடையூறாக இருந்தன. தன்னால் சாதிக்க முடியாதவொன்றைத் தன் மகன் அருணாசலமாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு.
அருணாசலத்தை, சுத்தமல்லி சுப்பையா கம்பரிடம் நாகஸ்வரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் கற்றுக்கொள்வதற்காகச் சேர்த்துவிட்டார். ஓரளவு தேர்ந்த பின், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கச்சேரிகளும் அருணாசலத்துக்குக் கிடைத்தன. எனினும், உலகிலேயே நாகஸ்வரத்தில் ஈடிணையற்ற சக்கரவர்த்தியாக விளங்கும் திருவாவடுதுறையார் போன்ற ஒருவரிடம் சீடனாக ஆனால் தனது கலை மேன்மை பெறும் என்றும், அப்படியொரு நல்வாய்ப்பு தனக்குக் கிட்டுமா? என்றும் சிந்தனைவயப்பட்டார் அருணாசலம்.
ஈடேறிய கனவு
ஒருமுறை காருக்குறிச்சியிலுள்ள ஒரு பண்ணையில் நாகஸ்வரம் வாசிக்க வந்திருந்தார் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவருடன் வாசித்து வந்த ‘கக்காயி’ நடராஜசுந்தரத்துக்கு உடல்நலமில்லை. “யாரேனுமொரு பையன், அவன் சும்மா சத்தம் கொடுத்தால் போதும். ஒத்தாசைக்குக் கிடைப்பானா?” என்று தம் நண்பர்களிடம் கேட்டார் திருவாவடுதுறையார். மணிசர்மா என்பவர் உடனே ஓடிச் சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகம் செய்வித்தார்.
“பையன் தேவலாமே. இவன் சில காலம் என்னோடு இருக்கட்டும்” என்று ராஜரத்தினம் பிள்ளை கூறினார். இவ்வாறு 26.6.1935 அன்று ராஜரத்தினம் பிள்ளையின் சீடராக ஆனார் அருணாசலம். தனித்து, அமர்ந்து, முறைப்படியெல்லாம் கற்பிப்பவரல்ல திருவாவடுதுறையார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் வாசித்துக்கொண்டிருப்பார். அதைக் கவனமாகக் கேட்பது, கச்சேரிகளில் கூட அமர்ந்து கேட்பது இவைதான் பயிற்சி. கற்பதைக் காட்டிலும், இசையில் ‘கேள்வி’ பெரும் பயனைத் தரும்.
இப்படியாக, ராக ஆலாபனை செய்வது, அழகாகக் கீர்த்தனைகளை வாசிப்பது போன்ற பல அம்சங்களில் நிகரற்றவராக ஆனார் அருணாசலம். பாராட்டுகளும் பட்டங்களும் சன்மானங்களும் வந்து குவிந்தன. ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின்பு, மிக உயர்வான ஸ்தானம் அவருக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட நிலையிலும் சிறிதும் கர்வமில்லாமல், எல்லோரிடத்தும் அன்புடனும் பண்புடனும் பழகிவந்தார் அருணாச்சலம்.
தன்னை மறக்கும் கலை
ஒருமுறை சென்னை பனகல் பார்க் அருகே திருமண விழா ஒன்றில் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புக்கு நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வர கச்சேரி. சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமும் அவருக்கு அமோக செல்வாக்கு. ராஜரத்தினம் பிள்ளை நாகஸ்வரம் வாசிக்கும்போது அநேகமாகத் தன்னை மறந்து கண்களை முடிக்கொள்வார். தன்னை மறந்த அந்த நிலையிலேயே, மிக எளிதில் சில ஸ்வரங்களை உதவியாகக் கொண்டு வாசித்துக்கொண்டிருப்பார்.
இந்தத் திருமண நிகழ்விலும் அவர் தன்னை மறந்த நிலையில் வாசித்துக்கொண்டிருந்தார். திடீரென அவரது வாசிப்பு நின்றது. ஆனால், கண்களை மட்டும் திறக்கவில்லை. அருகிலேயே அவரது சிஷ்யப்பிள்ளை காருக்குறிச்சி தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்து வாசித்துக்கொண்டிருந்த அருணாச்சலத்துக்கு கை, கால் உதறல் எடுக்கத் தொடங்கிவிட்டது. வாசிப்பில் தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ என்று அவருக்குள் ஒரு பயம். பயந்தபடியே தனது குருநாதரை ஏறிட்டுப் பார்த்தார். குருநாதரோ ரசித்துக்கொண்டிருந்தார்.
தேடிவந்த பிராபல்யம்
ரசிகர்களுக்குக் காருக்குறிச்சியாரிடம் இருந்த மதிப்புக்கும் அன்புக்கும் ஈடுகூற முடியாது. ஒருமுறை, சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசை விழாவில் நடைபெற்ற அருணாசலத்தின் நாகஸ்வரக் கச்சேரியை வானொலி நிலையத்தினர், வழக்கத்துக்கு மாறாக, நள்ளிரவு 12 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பினார்கள் என்றால், மக்களுக்கு அருணாசலத்தின் இசையின் மீது இருந்த மதிப்பே காரணமாகும்.
காருக்குறிச்சியாரிடம் புகழ்பெற்ற தவில் கலைஞர்கள் பலர் வாசித்து வந்தனர். திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை, யாழ்ப் பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்றோரை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
அருணாசலம் தனது நாகஸ்வர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்ப தோடு, சில திரைப்படங்களிலும் வாசித்துள்ளார். ‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்படத்தில் எஸ். ஜானகி பாட அருணாச்சலம் நாகஸ்வரம் வாசித்துள்ள ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. ‘அனார்கலி’ என்ற இந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் ஒரு பாட்டு பாடுவார். அந்தப் பாடலை காருக்குறிச்சி தனது நாகஸ்வரத்தில் இசைத்திருப்பார்.
புகழேணியின் உச்சியை எளிதாகவும், விரைவாகவும் எட்டிப்பிடித்த சிறந்த நாகஸ்வர விற்பன்னரான காருக்குறிச்சி அருணாச்சலம் 8.4.1964 அன்று தன் கோவில்பட்டி இல்லத்தில், இயற்கையைத் தழுவி, இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கினார்.
காருக்குறிச்சி வாசிப்பில் உள்ள சுகம் ரசிகர்களுக்கு ஒரு போதை. நாகஸ்வரம் இருக்கின்ற வரையில், இசை இருக்கின்ற வரையில் அவருடைய பெயர் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகா வித்வான் அவர்!
----------------------------------
8
இசை வேளாளர் பற்றி , அதிலும் நாகஸ்வர வித்வான்கள் பற்றி சமஸ் அவர்களின் கூற்று மிகவும் தவறானது. கி.பி. 1500க்கு முன்னால் எப்படி இருந்தது என்று தெரியாது. ஆனால், 1500ல், ( அது கிருஷ்ணதேவராயர் ஆண்ட காலம்) .. புரந்தர தாசர் கன்னடத்தில் ஆயிரக் கணக்கான கீர்த்தனைகள் இயற்றினார். ஒரு வகையில், கர்நாடக சங்கீதம் என்ற பிரிவு அதில் தொடங்குகிறது. வட இந்தியாவில், அது மொகலாய அரசின் தொடக்க காலம். அதற்கு முந்தைய இஸ்லாமிய அரசர்களின் கொடுமைகள் பற்றி ஜவஹர்லால் நேருவே விவரித்துள்ளார். அப்போது ஜாதியம், தீண்டாமை போன்ற தீமைகளை எதிர்த்து, ராமானுஜர் வழியிலும், மாத்வாச்சாரியார் வழியிலும், பக்தி இயக்கம் நாடெங்கும் தோன்றியது...உத்தரப் பிரதேசத்தில் ராமானந்தர் , கபீர்தாஸ், சூர்தாஸ், வங்காளத்தில் சைதன்ய மகாபிரபு, ஒரிஸ்ஸாவில் ஜெயதேவர், ராஜபுதனத்தில் மீராபாய், பஞ்சாபில் குரு நானக், ஆந்திராவில் பத்ராசலம் ராமதாசர், மராட்டியத்தில், ஞானதேவர் , துகாராம், ராமதாஸ், இவ்வாறு ஏராளமான பக்தி இயக்க கவிஞர்கள் தோன்றி இடைவிடாது, ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் ஒன்று என்றுதான் போதித்தனர். கருத்தைப் பரப்புவதற்கு இசை வடிவம் சிறந்தது என்ற சரியான அணுகுமுறையினால், அவர்களின் இசை ,முழுவதும், சாதாரண மக்களைச் சார்ந்திருந்தாலும், மிக உயர்ந்த கலை நயம் கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலும், முதலில், விஜயநகர் ஆட்சி, பின்னர் மதுரை, தஞ்சை, வேலூர் நாயக்கர் ஆட்சி, பின்னர் தஞ்சை மராட்டியர் ஆட்சி என நீண்ட காலம் ( சுமார் 300 ஆண்டுகள்) பிராமண அமைச்சர்கள் மேற்பார்வை இருந்தது. அவர்கள் காலத்தில், தியாக ராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஷ்யாமா சாஸ்த்ரி போன்ற இசை வல்லுனர்கள் இன்றும் என்றும் போற்றப்படும் பக்தி கீர்த்தனைகளை இயற்றினார்கள். பிராமண குடும்பங்களில், அண்மைக் காலம் வரை, அனைவருமே இந்த கீர்த்தனைகள் மூலம் கர்நாடக சங்கீதம் அறிந்தவர்களாக இருந்தனர். 1850 தொடங்கி, பக்தி தொடர்பான சாஸ்த்ரிய இசை பயில்வது ,பயிற்றுவிப்பது என்பது, அரசர், ஜமீன்,செல்வந்தர் ஆதரவால், வாழ்க்கை முறையாக சிலரால் ஏற்கப்பட்டது. நாகஸ்வரம் , கடினமானதால், அதைத் தவிர மற்ற புதுமைகளை பிராமணர்கள் புகுத்தினார்கள். நாகஸ்வர வித்வான்கள் , பிராமணர்களால், பெரிதும் போற்றப்பட்டனர். இன்றும் போற்றப்படுகின்றனர். ...ஜானகிராமன் கதைகள் ( நாவல் அல்ல) (.உண்மை அறிய )படியுங்கள்
-------------------------------------------------------------
8
நிலக்கோட்டை, சோழவந்தான் தொகுதிகள், இரண்டும், காலம் காலமாக காங்கிரஸ் கட்சியின் உறுதியான கோட்டைகள். ..போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. எப்போதுமே தென் தமிழகத்தில், காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பேராதரவு உண்டு. வரிசையாகச் சொன்னால் , திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, தேனி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள். ..2011 சட்டமன்றத் தேர்தலில், இந்த மாவட்டங்களில், காங்கிரஸ் வேட்பாளர்கள், மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். .. ..ஏ.எஸ்.பொன்னம்மாள் தொகுதியான நிலக்கோட்டையை மற்ற கட்சிக்குத் தாரை வார்க்க எப்படி மனம் வந்தது? எப்போதுமே , மேற்கு தமிழ்நாட்டில், அதிமுகம் வலுவான கட்சி. அங்குதான், காங்கிரசுக்கு அதிக இடங்கள் தரப்பட்டுள்ளன. கடுமையான சவால் . வெற்றி பெற்று சாதனை படைத்து, அதிமுக கோட்டைகளை நொறுக்கி எடுக்க வாழ்த்தும் அதே நேரத்தில், பாரம்பர்யமான காங்கிரஸ் தேசிய இயக்கத் தொகுதிகளை மீண்டும் கலைஞரிடம் பேசி , வென்று எடுங்கள்.
---------------------------
8
நான்கு தொகுதிகளிலும் புதிய தமிழகம் மாபெரும் வெற்றி பெறும் .வாழ்த்துக்கள். மன நிறைவுடன் பங்கேற்கிறோம் என்ற சொற்களின் பாங்கு , மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் வெற்றி பெற்று , தென் மாவட்டங்களில் இன்றும் நீடித்து வரும், ஜாதிய அடக்குமுறைகளை வெளிக்கொணர்ந்து, போராடி தீர்வு காணுங்கள். இதுதான் சரியான நேரம்.
--------------------------------------
==================================================
9
மதச் சார்பு இல்லாத இந்திய தேசியத்தின் உருவகம் , இந்திய தேசிய காங்கிரஸ். அது மட்டுமல்லாமல், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை ,பல்வேறு இனக்குழுக்களுக்கு மரியாதை, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் போன்ற பல அருமையான கொள்கைகள் கொண்டது காங்கிரஸ். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, மிகப் பெரும் காலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வருவது காங்கிரஸ். அத்தகைய பாரம்பர்யம் மிக்க கட்சியை , பிரிவினை , வன்முறை, கொலை அரசியல், நடிப்பு, நேரத்திற்கொரு பாசாங்கு , வெறிப்பேச்சு போன்றவைகளை இயல்பாகக் கொண்டுள்ள வைகோ , பதவி ஆசையினால் அவருக்கு அடிமையாகிப்போன விஜயகாந்த , துணைபோகும் இடதுசாரிகளின்
மக்கள் முன்னேற்றக் கூட்டணியில் இணைக்காதீர்கள். மதிமுகம் இருக்கும் திசையில் அண்டவே கூடாது. .தனியாகப் போட்டியிடுங்கள். வெற்றி தோல்வி பற்றி கவலைப் படாதீர்கள். . 234 தொகுதிகளில், எங்கெல்லாம், காங்கிரஸ் போட்டியிடவில்லையோ அங்கெல்லாம், நீங்கள் போட்டியிடுங்கள். மற்ற இடங்களில் தாய்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுங்கள். உங்கள் கொள்கைகளுக்கு அது இசைவாக அமையும்.
=======================================
9
காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு மக்களிடையே உள்ள ஆதரவை , சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கொண்டு முடிவு செய்வது தவறு. தமிழ்நாட்டு மக்கள் , நாடாளுமன்றத் தேர்தலையும், மாநிலத் தேர்தலையும் , மிகவும் கவனமாக பிரித்துப் பார்த்து வாக்களிக்கின்றனர். உண்மையான நிலவரம் தொகுதிவாரியாக தெரிய வேண்டுமானால், 2001, 2006,2011 ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், வாக்குகள், கூட்டணி விவரங்கள் பற்றி தொகுத்து, அணுக வேண்டும். ...2001ல் அதிமுக அணியில், காங்கிரஸ்,மூப்பனார் காங்கிரஸ், பாட்டாளிமக்கள் கட்சி, இடதுசாரிகள்,அனைவரும் அதிமுக கூட்டணியில் இருந்தனர். !.....திமுக உண்மையில் தனித்துத்தான் போட்டியிட்டது. ...ஏனெனில் அந்தக் கூட்டணியில் சிறிய கட்சிகள்தாம் இருந்தன. ....2006 தேர்தலில், காங்கிரஸ் -திமுக கூட்டணி வென்றது. திமுக , காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. ...
===================================================
9
மக்கள் ஆதரவு தருவது, கட்சிக்குத்தானே தவிர , கட்சியின் வேட்பாளருக்கு அல்ல. ..கட்சியின் பின்புலம் இல்லாமல் எத்தனை சமூக ஊழியர்கள், தனித்து சுயேட்சையாக நின்று வெல்ல முடியும்? மன்மோகன் சிங் போன்ற பொருளாதார வல்லுனர்கள் கூட , கட்சியின் ஆதரவோடுதான் அரசியலில் ஒளி வீச முடியும். மண்ணின் மைந்தர் என்று வாதித்தால், சிவகங்கை ராஜசேகரன் என்று ஒரு 60 ஆண்டு கால முழுநேர காங்கிரஸ் தேசபக்தர்... நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. தற்போது முதலமைச்சர் போட்டியிடும் ஆர். கே. நகர். தொகுதியில் வென்றார். ...இளங்கோவன் அறிவுறுத்தும்படி, ஜோதிமணி பொறுமை காக்க வேண்டும். வேண்டுமானால், கலைஞரிடம் ஒப்புதல் பெற்று தொகுதியைப் பெற முயற்சி செய்யலாம். கிட்டாவிடின், எந்தத் தொகுதி கிடைக்கிறதோ அங்கு போட்டியிட்டு வெல்லலாம். அதையும் விட சிறப்பாக, தங்களது பேச்சுத்திறன் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பயனுற பங்காற்றலாம். புகழ் கூடும். வெற்றி கிட்டும்.
----------------------------------------------------------------
9
இன்றைய தினத்தந்தியில், இளங்கோவன் அவர்களின் விரிவான நிருபர் கலந்துரையாடல் வெளிவந்துள்ளது. தா.மா.க. கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் சேர , தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் அந்தப் பேட்டியை முழுவதுமாக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்து பரப்ப வேண்டு.ம்
---------------------------------------------------------------------
9
மற்ற கட்சிகள் போலல்லாமல், சிவகாமி I.A.S. அவர்கள், தலித் மக்களின் பிரச்னைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்தும் ஆட்சி அனுபவத்திலும் நன்கு உணர்ந்தவர். குறிப்பாக நில உடமைப் பிரச்னை பற்றி யும், பஞ்சமி நிலம் அபகரிப்பு பற்றியும் போராடியுள்ளவர் . தேர்தலில் வென்று சமூக நீதி வென்றெடுக்க வாழ்த்துக்கள்.
----------------------------------------------------------------------
9
sites.google.com
முகப்பில் ஜ்வலிக்கும் நமது எம்.எஸ். அம்மா வின் தொடக்க கால தீங்குரல் பாடல்கள் , இசைத்தட்டுகளாக வெளிவந்தன. அவற்றில் பல ரத்னங்கள் , மாறிவரும் ரசனையால், மறைந்து போகும் அபாயம் உள்ளது. மற்ற சமகால சங்கீத சாம்ராட்களின் பாடல்களுக்கும் அதே கதி !. எம்.எஸ். அம்மாவின் இசைத் தட்டுக்கள், அவரது மிகவும் அரிய புகைப்படங்கள், செய்திகள் தாங்கி , எளியேன் ஒரு வலைப்பக்கம் அமைத்துள்ளேன் http://sites.google.com/site/homage2mssubbulakshmi/.( .'மன்னும் இமயமலை ' என்ற அற்புதம் இங்கு உள்ளது. கேட்டுப் பாருங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னமும் பணி முடியவில்லை. தங்களது கருத்தினை அனுப்புங்கள்.
======================================================
10
நமது நாடு முழுவதிலும், தமிழகத்திலும், 1991 முதலான ஆண்டுகள், (கடந்த 25 ஆண்டுகள்) , சோவியத் யூனியன் சிதறல், சீனாவில் அரசியல் திசை மாற்றங்கள்,சர்வதேச அரசியல், பொருளாதார, ராணுவ மாற்றங்கள் இவற்றிற்கேற்ப , இங்கும், பல கட்சிகளின் கொள்கைகள், நடவடிக்கைகள், உறுப்பினர்-தலைவர்கள் தகுதி, மக்களின் மனப்போக்கு, பிராந்திய சக்திகளின் ( வர்க்க அடிப்படையில், பிராந்திய முதலாளித்துவம், கிராமப்புற பணக்கார 'விவசாயிகள்' ) ஏற்றம் போன்ற பல காரணங்களினால், அரசியலின் தரமும், பொதுவாழ்க்கையில் பங்கெடுப்போரின் இலக்குகளும், முழுமையாக மாறிவிட்டன. இது ஒரு புதிய தலைமுறை. எனவேதான், 1900க்கு முன்பு நடந்த விஷயங்கள் இளைய சமுதாயத்திற்கு சற்றும் ஈர்ப்ப்பில்ல்லாமல் போய்விட்டது. பொதுக்கூட்டங்களிலும், எழுத்திலும், திமுக அதிமுக ,ஏன் காங்கிரஸ் தலைவர்களும் கூட, காமராஜர் காலத்தில் தவறுகள் செய்திருக்கலாம். .அரசியல் பாதை பற்றிய கருத்து வேறுபாடுகள் தவறல்ல. ஆனால், கடந்த 25 ஆண்டுகளில், பொறுப்புள்ள கட்சித் தலைவர்கள், யாருமே தரமற்ற தவறான நிலைப்பாடுகள் எடுக்கவில்லை. .பொய்யும் புரட்டலுமே அதிமுக மதிமுக ஆர் எஸ் எஸ்
===================================================
10
"காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவிட்டு விஜயகாந்தை முதல்–அமைச்சர் ஆக்கும் தலைமையை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று ஜி.கே.வாசன் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஜி.கே.வாசனின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் இதுகுறித்து மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:–
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று எடுத்த தேர்தல் கூட்டணி முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
பொதுவாக காங்கிரஸ் கட்சியாக இருக்கட்டும், த.மா.கா.வாக இருக்கட்டும் குமரிஅனந்தனின் கா.க. தே.க., மூப்பனாரின் த.மா.கா. இவை எல்லாவற்றையும் நாங்கள் காங்கிரஸ் கட்சியாகத்தான் பார்க்கிறோம்.
எங்களை பொறுத்தவரை எங்கள் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்தான். காங்கிரஸ் என்று சொன்னாலே பெருந்தலைவர் காமராஜர்தான் நினைக்கு வருவார்.
காமராஜர் ஆட்சி அமைப்போம். அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம். அவரது கொள்கை கோட்பாடுகளை பின்பற்றுவோம் என்று த.மா.கா. தொடங்கும்போது ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேசினார்.
ஆனால் இப்போது அந்த கொள்கை கோட்பாட்டிற்கு நேர் எதிராக மக்கள் நலக்கூட்டணி தே.மு.தி.க.வை சேர்ந்த தலைமையிலான விஜயகாந்தை முதல்– அமைச்சர் வேட்பாளராக சொல்லும் இந்த கூட்டணியில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.
இவ்வளவு நாட்களாக ஒரு தலைமையின் இருட்டறையில் இருந்தோம். ஜி.கே.வாசன் எடுத்த முடிவு தவறானது. நாங்கள் காங்கிரஸ்காரர்கள். காமராஜர் வழியில் வந்த வர்கள்.
தலைமை எடுத்த தவறான முடிவால் பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் த.மா.கா.வில் இருந்து வெளியேறுகிறோம். ஒத்த கருத்துடைய நாங்கள் ஓரிரு நாட்களில் நல்ல முடிவை எடுத்து அறிவிப்போம்.
காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேருவது பற்றியோ, தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பது பற்றியோ இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்."
----------------------------------------------------------------------------
10
97th Birth Anniversary Padma Vibhushan Smt D. K. Pattammal.
kalki's family
===========================================
10
sharing an earlier post
ஆயுத போராட்டமா அல்லது சட்ட மன்ற போராட்டமா அல்லது காந்திய சத்யாக்ரஹ போராட்டமா? இந்திய சுதந்திரமா? அல்லது சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பா? வெறும் அரசியல் சுதந்திரமா? அல்லது பொதுவுடைமை சமுதாயமா? தேசிய விடுதலை போதுமா ,அல்லது, பாட்டாளிவர்க்க சர்வதேசியமா?
காந்தியையும் நேருவையும் ஊன்றிப்படித்தால், அவர்கள் இருவருமே , வெறும் இந்திய தேச பக்தர்கள் இல்லை என்பது தெளிவாகும். இருவருக்கும் , இந்திய தேசபக்தியை தாண்டிய சர்வதேச பார்வை இருந்தது. அதனால்தான், இரண்டாம் உலக போரில் , எதிரிக்கு எதிரி எனது நண்பன் ' என்ற சிந்தனையில், அவர்கள், ஹிட்லர் பக்கம் சேர வெறுத்தார்கள். சுபாஷ் அத்தகைய சர்வதேச பார்வை கொண்டிருக்கவில்லை.
காந்திஜி மிக ஆழமான டால்ஸ்டாய் பக்தர். கிருஸ்துவ அராஜ்ய வாதம் என்ற கொள்கை அவருடையது. ஒரு வகையில் அவர் தனிச்சொத்துரிமையையும், முதலாளித்துவத்தையும் எதிர்த்தார். ஆனால், சோஷலிசத்தை மக்களிடையே மேலிருந்து திணிப்பது
நிரந்தர பயன் தராது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், நேரு , லெனின் பக்தர் ஆனதால், சோவியத் மாடல் பலன் தரும் என்று கருதினார். இருந்தாலும், சர்வாதிகாரம் , தவறான நபர்களின் கையில் சிக்க வாய்ப்புண்டு என்பதால், முடிந்தவரை , அரசியல் சட்ட ஜனநாயக முறையிலேயே பயணிக்க முடிவெடுத்தார். ரஷ்யாவில் கம்யூனிச முயற்சி உன்னதமாயினும், தோல்வியுறலாம் என்றும் அவ்வாறு தோல்வி அடைந்தால், அது எந்த விதத்திலும், அந்த முயற்சியின் அறவழி மேன்மையை தாழ்த்த முடியாது என்றும் அவர் தனது சுய சரிதையில் கூறியுள்ளார். .
-------------------------------------------------------------------
10
2009 லோக்சபா தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வாங்கிய சட்டசபை தொகுதிகள்:
தொகுதி - ஓட்டுக்கள் -
உளுந்துார்பேட்டை - 26,042
கள்ளக்குறிச்சி - 26,722
நத்தம் - 24,326
திருமங்கலம் - 24,603
ரிஷிவந்தியம் - 24,512
ஓமலுார் - 24,449
கிருஷ்ணகிரி - 20,662
சிவகாசி - 23,545
செஞ்சி - 22,848
திருக்கோவிலுார் - 22,770
கும்மிடிப்பூண்டி - 22,201
தர்மபுரி - 22,122
பண்ருட்டி - 21,996
ஏற்காடு - 21,949
சேலம் மேற்கு - 21,881
வானுார் - 21,696
ஊத்தங்கரை - 21,413
விக்கிரவாண்டி - 21,346
சங்கராபுரம் - 21,140
திருப்பரங்குன்றம் - 20,888
மாதவரம் - 20,847
பெரம்பலுார்(தனி) - 20,709
குமாரபாளையம் - 20,679
ஆத்துார் - 20,571
விருதுநகர் - 20,404
எடப்பாடி - 20,269
செங்கல்பட்டு - 20,039
-------------------------------------------------------------------------
10
WONDERFUL WRITING BY CHARU NIVEDHITHA.. "நாவலில் ஜார்ஜ் ஜோஸஃப் என்ற ஒருவர் வருகிறார். சுதந்தரப் போராட்டத்தின் காந்தி சகாப்தம் 1919 ஏப்ரல் 6-ம் தேதி ரௌலட் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எதிர்ப்பாகத் துவங்குகிறது. கடையடைப்பு, வேலை நிறுத்தம், பொதுக்கூட்டம், உபவாசம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலமாக அகில இந்திய கண்டன தினம் கொண்டாடும்பபடி ஆணையிடுகிறார் மகாத்மா. அந்த ஆணையை ஏற்று ஜார்ஜ் ஜோஸஃப் தலைமையில் சுந்தரம் பிள்ளை, கிருஷ்ண குந்து, சீனிவாச வரதன், மௌலானா சாஹேப் முதலியோர் மதுரையில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தைத் திகைக்க வைத்தனர். செல்லப்பா குறிப்பிடும் இந்தப் பிரமுகர்கள் அனைவரும் நிஜத்தில் வாழ்ந்தவர்கள். நான் ஓர் ஆய்வாளனாக இருந்தால் இவர்களின் வரலாற்றையும் தேடிப் போகவேண்டும்.
யுத்த காலத்தில் (முதலாம் யுத்தம்), தான் பிரிட்டிஷாருக்கு செய்த உதவிக்காக பாராட்டப்பட்டு அளிக்கப்பட்ட விருதுகளை வைஸ்ராய்க்கு, தான் மதிக்கவும் அபிமானம் காட்டவும் இயலாத ஒரு சர்க்கார் அளித்த இந்தச் சின்னங்களை அணிய என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று சொல்லித் திருப்பித் தந்து விட்டார் ஜார்ஜ் ஜோஸஃப். அதோடு தான் பார்த்து வந்த வக்கீல் தொழிலையும் உதறினார்.
1928-ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரம், பங்குனி பிறந்து சில நாட்கள்தான் ஆகியிருக்கின்றன. அன்றைய தினம் கல்லூரி முடிந்து சிவராமனும் (செல்லப்பா) அவனுடைய வகுப்புத் தோழன் சதாசிவனும் பேராசிரியரோடு வெளியே வருகிறார்கள். அப்போது கல்லூரியின் சுற்றுச் சுவரின் மேலே ஏறி நின்றபடி ஒருவர் பேச மாணவர்கள் பெரும் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்தான் ஜார்ஜ் ஜோஸஃப். பார் அட் லா. சைமன் கமிஷன் பகிஷ்காரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அப்போது ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை அப்படியே நாவலில் கொடுத்திருக்கிறார் செல்லப்பா. அந்த உரையின் ஒரு பகுதி இது:
‘…நாம் இப்போது சீர்திருத்தங்கள் கேட்டுப் போராடவில்லை. அந்தக் காலம் மிதவாதிகளோடு போய் விட்டது. நாம் இப்போது கேட்பது பூரண சுயேச்சை. இப்போது அதைக் கொடுக்காவிட்டால் நாளை நாம் ஏகாதிபத்தியத்தின் தலையையே கேட்க வேண்டி வரும். எனவேதான் பிரிட்டனுக்கு ஒரு கடைசி எச்சரிக்கையாக இந்த பகிஷ்காரம். நம் தகுதியை நிர்ணயிப்பதற்கு இவர்கள் யார்? யார் இந்த ஏழு பேர்? அவர்கள் திரும்பிப் போய் சொல்லட்டும் தங்களை அனுப்பியவர்களிடம், இந்தியாவின் முப்பத்தைந்து கோடி ஜனங்களும் ஒரே முகமாக பிரிட்டாஷாரை வெறுக்கிறார்கள் என்று! அந்த வெறுப்பைக் காட்டத்தான் இந்த பகிஷ்காரம். நாளை மறுநாள் நம் நகருக்கு அவர்கள் வருகிறார்கள். மாணவர்களே, நீங்கள்தான் இந்த நாட்டு எதிர்காலப் பிரஜைகள். நாட்டை உருவாக்க வேண்டியவர்கள். இப்போது உங்களை வேறொன்றும் கேட்கவில்லை. 1920-ல் மகாத்மா காந்தி ‘கலாசாலைகளை விட்டு வெளியேறுங்கள்’ என்று சொன்னது போல் படிப்பை உதறி விட்டு வெளியே வரச் சொல்லவில்லை. நாளை மறுநாள் கமிஷன் அங்கத்தினர்கள் – அவர்களில் ஓர் இந்தியர் கூடக் கிடையாது என்பதையும் நீங்கள் கவனிக்கவேண்டும் – நம் வீதிகள் வழியே போகையில் நகரின் தெருக்களில் நின்று கருப்புக் கொடி காட்டி, ‘ஸைமனே திரும்பிப் போ’ (Simon go back!) என்ற கோஷத்தை எழுப்பவேண்டும். அன்று கலாசாலைகளுக்குப் போகாமல் ஹர்த்தாலில் கலந்து கொள்ள வேண்டும். இது மகாத்மாவின் வேண்டுகோள். மாணவர்களே, நான் பேசிவிட்டேன். செயல் புரிய வேண்டியது நீங்கள். நாட்டின் விடுதலைக்கு உங்கள் பங்கைச் செலுத்த வேண்டிய வாய்ப்பைத் தவற விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஞாபகம் இருக்கட்டும். நீங்கள் எழுப்ப வேண்டிய ஒரே கோஷம், Simon Go Back! அதுக்கு மேல் ஒரு வார்த்தை கூடாது. அதுக்குக் குறைவாகவும் கூடாது. இதுதான் மகாத்மாவின் செய்தி. அவர் இயக்கத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும் உங்கள் செய்கை. நான் முடித்துவிட்டேன். இது இன்று என் முப்பதாவது கூட்டம். இன்னும் பேச வேண்டிய இடங்கள் பல… வருகிறேன்’ என்று தொப்பென கைப்பிடிச் சுவரிலிருந்து குதித்து கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டார்."
----------------------------------------------------------------------------
10
Do the TMC leaders and cadres realize that both ADMK and Vaiko , justify the gruesome killing of our beloved Rajeev Gandhi whose solution for the Tamils in Srilanka , would have spared untold tragedy for over 25 years? Even four days back, Vaiko has boasted that he warned that Rajeev cannot leave Tamilnad alive and within two days, Rajeev was killed. Vasan has tarnished the image of Mooppanaar beyond repair. by begging ADMK and then joining hands with Vaiko.
-------------------------------------------------------------------------------
11
எந்த ஒரு 'தேசியக்' கட்சியுடனும் ( இடதுசாரிகள் உட்பட) , கூட்டணி வைத்துப் போட்டியிட மறுக்கும் அதிமுக ( நாடாளுமன்றத் தேர்தலிலும் ) ஏன் அந்தப் பாதையில் செல்கின்றது என்பது , மேலோட்டமாக அல்லாமல் , ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டிய விஷயம். இரண்டாவதாக, வைகோ வின் கடந்த 25 ஆண்டுகளில் , அரசியல் நிலைப்பாடு ( தனி ஈழம்,USA போன்று USI) என்ற பிரச்சாரம், அதிமுகம், மதிமுகம் இரண்டுமே மைய அரசுடன் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமக்களோடு கூட கொண்டிருக்கும் பகைமை உணர்வு, , பிரச்சாரம், ....கம்யூக்களின் நெடு நாளைய நிலைப்பாடு, இந்தியா என்ற தேசிய அமைப்பை மொழி அடிப்படையில் பல துண்டுகளாக உடைத்து, அதன் மூலம் ஒரு சில பகுதிகளையேனும் தங்களது அரசியலுக்கு தளமாக அமைத்துக் கொள்ளுதல். அகில இந்தியப் புரட்சியை வென்றெடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை, எனவே பிரிவினைவாதம் இன்றைய இடதுகளுக்கு ஏற்புடையதாகத் தோன்றுகிறது. இந்த சூழலில், கலைஞரின் திமுக மட்டுமே , பொறுப்புள்ள தேசிய நலனில் அக்கறை கொண்ட ,பிராந்தியக் கட்சியாக நீடித்து செயல்பட்டுவருகிறது. இதுதான் சரியான பாதை
-------------------------------------------
11
comment on Ramachandra Guha "why maoists should read Gandhi'..."1)காஷ்மீரில் நடக்கும் ஆயுதப் போராட்டம், மக்கள் ஆதரவு இல்லாத , மதவெறிப் பயங்கரவாதிகள் நடத்தி வரும் கெரில்லா தாக்குதல்கள். .. காஷ்மீர் பள்ளத்தாக்கில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கட்சிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், பி.ஜே.பி.க்கு ஒரு இடம் கூட அங்கு இல்லை. அங்கு அப்துல்லா , மப்டி கட்சிகள் இரண்டுமே , இந்திய தேசியத்தை ஆதரிக்கும் கட்சிகள். 2) மாவோயிஸ்டுகள் ஏன் காந்தியைப் படிக்கக் கூடாது, மாறாக லெனின், ஸ்டாலின் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசிரியர் எழுதியிருக்க வேண்டும். ..அதைவிட நேருவின் சுய சரிதையைப் படிக்க வேண்டும் என்று கூறியிருக்க வேண்டும். "அடிப்படையான சமூக பொருளாதார மாற்றங்களுக்கு , ..காந்திஜியின் அஹிம்சை மார்க்கம் , நடைமுறை சாத்தியமல்ல. ..உடைமை வர்கத்தின் அரசு வன்முறையும் , புரட்சியாளர்களின் ஆயுதப் போராட்டமும் வெவ்வேறு தரத்திலானவை. ..அரசாங்கம் என்றாலே, அது ஜனநாயக அரசாக இருந்தாலும் கூட,தனது திட்டங்களை ஒரு விதமான வன்முறை மூலம் தான் நிறைவேற்ற முடியும். " (நேரு) அந்த நூலின் இறுதி அத்தியாயங்களில், நேரு LENIN'S STATE AND REVOLUTION
கருத்தை தருகிறார்.
-------------------------------------------------------
11
முற்றிலும் உண்மை. !..புதிய பாதை. !..கடந்த காலத் தவறுகளைக் களைந்து மதம், ஜாதி ,மொழி வெறி மாய்த்து , பொறுப்பான மாநில அரசாக மிளிர்ந்து, அனைத்து மாநிலங்களோடும், குறிப்பாக நமது அண்டை மாநிலங்களோடு சிறப்பான நட்புறவு வளர்த்து, கலைஞர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அளித்துள்ள அறிக்கைப் படி, தமிழ்நாட்டின் மக்கள் வாழ்க்கை செழிக்க, வென்று வரலாறு படைக்க வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------
11
திமுக காப்பியடித்த பாமக தேர்தல் அறிக்கை திட்டங்கள்: ராமதாஸ் பட்டியல்.........."உங்களது திட்டங்கள் அருமையானவை என்பதினால், கலைஞர் அவற்றை ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கிறார். .இதில் உங்களுக்கு ஏன் எதிர்ப்பு? ஆட்சிக்கு வந்து நடைமுறைப் படுத்தும் வல்லமை உள்ளவர் கொடுக்கும் தேர்தல் அறிக்கை ! அற்புதமான அறிக்கை.! ஆனால், உங்கள் கட்சி என்றுமே ஆட்சிக்கு வரமுடியாது. என்பதினால், உங்களது அறிக்கைக்கு மதிப்பு ஏதும் கிடையாது. .ஆண்டிகள் கட்டும் மடம் போன்றது.! .வரப்போகும் காங்கிரஸ் அறிக்கையில் இதைவிட நல்ல திட்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. பேசாமல், திமுக அறிக்கைதான் எங்களது அறிக்கை என்று கூறிவிட்டு , ஒத்துழைப்பது நல்லது . அனைவருக்குமே!
-------------------------------------------------------------------
===============================================
12
WALKING TALL! "வாரிசுகளுக்கு தொகுதி கேட்டு அழுத்தம் கொடுக்கும் நபர்களை சமாளிப்பதற்காக, தன் மகன் திருமகன் ஈவேராவுக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்று இளங்கோவன் முடிவெடுத்துள்ளார்.
வாரிசுகளுக்கு சீட் கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகளிடம், “இந்த தேர்தலில் எனது மகனுக்கே சீட் கொடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிக எண்ணிக்கையில் சீட் ஒதுக்கினால்தான் கட்சியை வளர்க்கும் பணியில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். நாடா ளுமன்ற தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்த வேண்டுமெனில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதனால் இந்தமுறை கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாத வாரிசுகளுக்கு சீட் வழங்க முடியாது” என்று கறாராக பேசி வருகிறார். எப்படியிருந்தாலும் இந்த முறை குறைந்தபட்சம் 50 சதவீதம் தொகுதிகள் மாவட்ட தலைவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். "
-----------------------------
நேர்மை , நாணயம் எல்லாம் எப்படி இருக்கும் என்பது ஆட்சிக் கட்டிலில் அமரும்போதுதான் வெளியாகும். தமிழகத்திற்கு வேண்டுமானால், பி.ஜே.பி. இதுவரை ஆட்சியில் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், மத்ய பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில்,பயங்கர ஊழல் மலிந்து, அதை மறைக்க கொலைகளும் நடந்துள்ளன . சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. தனது கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்த கட்சிகளின் தலைவர்களை சற்று பாருங்கள். இவர்களுடைய கொள்கை ,பி.ஜே.பி,யின் கொள்கைக்கு எங்கு இணைந்து சென்றது?
-----------------------------------------------------------------------------
"கருணாநிதி மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டி".....முதலமைச்சர் தொகுதி என்ற சிறப்பு பெற்று , தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள அனைத்து திட்டங்களும், மிக விரைவாக முடிக்கப்படும். ..கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்ட மன்றத்தில் மாற்றுக் கட்சியினர் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்பது நீங்கள் அறியாதது அல்ல. ..மேலும், கலைஞர் சட்டமன்றத்திற்கு வந்துதான் , இவற்றை சொல்லவேண்டும்/ நினைவுறுத்த வேண்டும் என்றுஅவசியம் இல்லை. ..அவர் எழுதாத நாட்களே இல்லை எனலாம்
-------------------------------------------------------------------------------
அவர்தான் நேரு! அவர்தான் பாபு ராஜேந்திர பிரசாத் ! ...மற்றவரைப் பற்றி நாம் அறிந்ததுதான். குலக்கல்வி!
----------------------------------------------------------------
12
மாமண்டூர் கூட்டம் கூட மாலை 4 மணிக்கு தொடங்கியது என அறிகின்றோம். மாலை 6-30 மணிக்கு பொதுக்கூட்டங்கள் தொடங்குவது இந்தக் கடும் கோடை காலத்தில் அவசியம். ..வாக்குப் பதிவு நாளன்று வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்க முகாந்திரம் ஏதும் இல்லை, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், தற்காலிகமான கீற்றுக் கொட்டகையும், தண்ணீர் பந்தலும் அமைக்க வேண்டும். .இது அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிறைவேற்றவேண்டிய கடமை. இல்லாவிடின், வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறையும். எதிர்பாராத விளைவுகள் ஏற்படும்.
-------------------------------------------------------------------
12
50 ஆண்டுகால 'திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் ' தமிழ்நாடு கெட்டுவிட்டது என்று மாமண்டூர் மேடையில் முழங்கிய வாசன் அவர்களுக்கு ,அதிமுகமும், திமுகவும் தான் திராவிடக் கட்சிகள், மதிமுகமும், தேதிமுகமும் திராவிடக் கட்சிகள் இல்லை என்ற கருத்து உள்ளதா? அதன் அடிப்படை ?
13
மற்ற ' எதிர்க்கட்சிகள் ', உண்மையிலேயே அதிமுகவை எதிர்க்கும் கட்சிகளாக இருந்தால், குஷ்பு வை ஆதரிக்கவேண்டும். அங்கு காங்கிரஸ் மற்றும் அதிமுக விற்கு நேரடியான இருமுனைப் போட்டி அமையவேண்டும். மற்ற தொகுதிகளில் எப்படி இருந்தாலும், கடந்த இடைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஒருவர், இந்த போட்டியில் தோற்கடிக்கப் பட்டால், அதன் psychological effect அபாரமாக இருக்கும். ..குஷ்பு கண்டிப்பாக திமுக ,காங்கிரஸ் தவிர மற்ற பல நடுநிலை மக்களின் ஆதரவை எளிதில் பெறுவார். அவரால் நிச்சயமாக் வெற்றி பெற்று ஆணவத்தின் மொத்த உருவத்திற்கு சம்மட்டி அடி கொடுத்து ஆட்டம் காண வைக்க முடியும்... சிந்தியுங்கள். தமிழக அரசியலின் வரலாற்றுத் திருப்பு முனையில் நிற்கின்றோம். மக்கள் நலக் கூட்டணியை பாருங்கள். வாசன் , இடதுகள், வைகோ , ஏன் திருமா கூட அம்மையாரின் அடிமைகள்தான். இவர்கள் எப்படி எதிரணியாக இருக்க முடியும்? விஜயகாந்த் ஏமாற்றப் பட்டுள்ளார்.
=================================================
14
மாயாவதி மீது சொத்து வழக்கு பாயுமா?
dinamalar.com
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'மாயாவதிக்கு எதிராக, தனியாக சொத்து குவிப்பு வழக்கை, பதிவு செய்து விசாரிக்கலாம்' என, 2013 மே மாதம் தீர்ப்பளித்தது.இதன் தொடர்ச்சியாக, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் நிர்வாகி கமலேஷ் வர்மா என்பவர், மாயாவதிக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், 'மாயாவதிக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்வதற்கு, புதிய ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை' எனத் தெரிவித்தனர்.
------------------------------------------
CHAMELEON VAIKO
This is VAIKO! ".!"Vaiko says MDMK won't support BJP
With party loyalties beginning to blur as talk of a hung parliament gathers force, there is one Tamil Nadu party that has ruled out even outside support to the Bharatiya Janata Party (BJP).
MDMK chief Vaiko said in the textile town of Coimbatore that his party would not support the BJP in future “even from outside.” The MDMK, DMK, PMK had left the National Democratic Alliance (NDA) coalition just before elections were announced and are now partners with the Congress in the Democratic Progressive Alliance. The AIADMK has tied up with the BJP. Said Vaiko, who is also known as V Gopalasamy: “If the swing seen in the three phases of elections is any indication, chances of the Congress forming a government is very bright.”
The MDMK has put up four candidates in the parliamentary elections, but Vaiko is not contesting.
He has also announced that his party would never be in any government in New Delhi. Reacting to BJP leaders' comments that parties that had left the NDA would do a rethink once the party emerged victorious, Vaiko said he did not expect any shift in positions of parties even if there was a hung parliament. This was particularly true in Tamil Nadu.
Responding to BJP president M Venkaiah Naidu's remarks that former NDA allies from Tamil Nadu would repent when the alliance wins the '04 elections, the MDMK leader said, “Yes. We are repenting now for extending support to the BJP.”
Vaiko also challenged chief minister J Jayalalitha's statement in a public rally in Sivakasi on what he and PMK leader S Ramadoss would do if Congress chief Sonia Gandhi became prime minister and sent Indian troops to capture LTTE supremo V Prabhakaran.
“If Sonia Gandhi is chosen to be the prime ministerial candidate by the Congress, the MDMK will welcome it and we are firm on our stand,” he said.
The state goes to the polls on May 10 to elect 39 MPs.
Source: The Economic Times
-------------------------------------------------------------------------
அம்பேத்கரின் தலையாய பங்களிப்புடன், அரசியல் நிர்ணய சபை, உண்மையிலேயே தலித் மக்கள், ஆதிவாசிகள், மத சிறுபான்மையினர் அனைவரும், எந்தவொரு வேறுபாடும் இன்றி தேர்தல் அரசியலில் பங்கேற்று முன்னேற வழி வகுத்துள்ளது. அடிப்படை உரிமைகள் என்ற சாசனம் உள்ளது. ..அடிப்படையான பொருளாதாரப் பிரச்னையைக் கவனியுங்கள். . உ.பி. , பீகார், வங்கம் போன்ற வட இந்திய மாநிலங்களில் ( 35 கோடி) , தலித் மக்களும், இஸ்லாமியரும், ஏறத்தாழ 40% உள்ளனர். இவர்களுள், நமது அரசியல் நிர்ணய சபை , முழு மனதுடன் கொடுத்த தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் பயனாக ஒரு சிறிய பகுதி மக்களேனும், professionals, businessmen, intellectual path breakers ஆகியிருக்க முடிந்துள்ளது. ஆனால், பெரும்பான்மை மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவது சாத்தியமல்ல. ஏன்? வேலை வாய்ப்புகள் இல்லை. இருக்கும் வேலைகளில் அவர்களுக்கு தனியார் துறை வாய்ப்பளிக்கவில்லை. அப்படியே அளித்தாலும், கோடிக்கணக்கான தலித் மக்களுக்கு அவர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்ததும், உண்மையில் அந்த துறையின் உயிர்நாடியுமான விவசாயத் தொழிலில் அவர்களுக்கு சொந்த நிலம் இல்லை
.2)உழைக்கும் மக்கள் நகர்ப்புற தொழிலாளர்களாக மாறும்போது, சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஜாதிய சிந்தனை ஓரளவு மறையத்தான் செய்கிறது. கிராமத்தில் இருந்த ஆச்சாரமான பார்பனர்களுக்கும், நகர்ப்புறத்திற்கு குடிபெயர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட பார்ப்பனர்களுக்கும், இன்று வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்ட்வர்களுக்கும் பண்பாடு,விழுமிய வேறுபாடு, தெளிவு. வாழ்வாதாரத் தொழில் ,இத்தகைய அடிப்படை மாற்றத்தைக் கொணர்ந்தது கிராமப் புறங்களில், 'உழுபவருக்கே நிலம்' என்ற திட்டத்தால், குத்தகை விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் ( தலித்) கைவிடப் பட்டனர். இதுதான் அடிப்படைப் பிரச்னை. தீர்வு என்ன? 1) கடுமையான நில உச்சவரம்பு வேண்டும். 2) நிலத்தில் நேரடியாக இறங்கிப் பாடுபடாத எவருக்கும் நில உடமை கூடாது. 3) உபரி நிலம் அரசுடமையாக்கி ,அங்கு அரசு பண்ணைகளில், தலித் மக்கள் அனைத்து கல்வி, மருத்துவ வசதிகளுடன் வாழ வேண்டும். 4) ஒவ்வொரு பகுதியிலும் தலித் மக்கள் மற்ற சமூகத்தால் சூழப்பட்டிருக்கும் நிலை
மாற்றப்பட்டு, தலித் பெரும்பான்மை பகுதிகள்அமையவேண்டும
--------------------------------------------------------------------------------
14
Elections 1996: AIADMK citadel crumbles as DMK-TMC alliance sweeps to power in Tamil Nadu
indiatoday.intoday.in
--------------------------------------------
14
1) 1996 தமிழக சட்ட மன்றத் தேர்தலில், வைகோ கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் ( சங்கரையா பொறுப்பில் இருந்தும் கூட!), கூட்டணி வைத்துப் போட்டியிட்டன. ..திமுக மற்றும் அதிமுக வுக்கு மாற்றாக மதிமுகம் என்ற சாக்கில் இந்தக் கூட்டணி அமைந்தது. நினைவிருக்கட்டும், 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் அமைந்தது இந்த கூட்டணி. அந்தப் படுகொலையை இன்றளவும் நியாயப் படுத்திப் பேசித்திரியும் நபர் இந்த வைகோ. .. அந்தத் தேர்தலில், கலைஞரின் திமுகவும், மூப்பனாரின் த.மா.க. வும் கூட்டணி வைத்து மாபெரும் வெற்றி பெற்றனர். அதிமுக பயங்கரத் தோல்வி கண்டது. ..மதிமுகத்தின் முதல் தேர்தல முயற்சி எப்படி என்று பார்ப்போம்!.. மதிமுகம் 177 தொகுதியிலும், மார்க்சிஸ்டுகள் 40 தொகுதிகளிலும், ஜனதாதளம் 16 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ...வைகோ கட்சிக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை. வைகோ விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலும், சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலும் தோற்றார். மார்க்சிஸ்டுகளும், ஜனதாதளமும் ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற்றன. ! ஆனால் வைகோ கட்சி மாபெரும் முட்டை. ( -> 2)
---------------------------------------------------------------------------------
15
ABOUT PMK MANIFESTO...திமுக -காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்று , அந்தக் கூட்டணிக் கட்சிகளின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள பொதுவான திட்டங்களை , நிறைவேற்றப் பாடுபடுங்கள். மாபெரும் மாற்றம் நிகழும்.
-----------------------------------------------------------------------------------
15
இன்றைய தினகரன் செய்தி.. " காங்கிரஸ்-த,மா.க. 9 தொகுதிகளில் நேரடிப் போட்டி. " 1) மயிலாப்பூர் 2) ராயபுரம் 3) சங்ககிரி 4) நாமக்கல் 5) முசிறி 6) பாபநாசம் 7) ஸ்ரீவைகுண்டம் 8) தென்காசி 9) கிள்ளியூர் . ..இந்தத் தொகுதிகளில், முந்தைய இரண்டு தேர்தல்களில் , காங்கிரஸ், திமுக வாக்குகள் எப்படி இருந்தன ? இந்த முறை இந்த ஒன்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
----------------------------------------------------------------------------------
15
THIRUMA BUILDUP BY CHAMAS.....COMMENT .""அறிவுஜீவித்தனமாகவும் இல்லை'. ..'அனைத்து ஏழை விவசாயத் தொழிலாளர்கள்' பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை. அம்பேத்கர் வழி என்பார்... "தேர்தல் பாதை திருடர் பாதை 'என்பார். புத்தர் என்பார். வன்முறை பரப்புவார். விடுதலைப் புலிகள் ஆதரவு என்பார். வெறும் அரசியல்வாதி. காதல் திருமணம் பிரச்னைகள்தான் இன்று இவர் போன்றவர்களுக்கு முக்கியம். ..கோபி லக்ஷ்மண ஐயர் என்ற காங்கிரஸ் தேசபக்தரின் வாழ்க்கை எல்லாம் இவர்கள் கண்களில் படாது. ..கலாம் அவர்களின் சிந்தனையை சற்றும் புரிந்து கொள்ள இவர்களால் இயலவில்லை. .ஏதாவது ஒரே ஒரு ஆக்க பூர்வ தீர்வு தருகிறாரா? அந்த அளவுக்கு திறந்த மனதும் சிந்தனையும் இருக்கிறதா? கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் மாதிரி இவரால் எதுவும் செய்ய முடியுமா? கடைசியில், தலித் விடுதலை அரசு ஒப்பந்தக்காரர் வேலை கிடைக்க வேண்டும் என்று முடிந்துவிட்டது.
---------------------------------------------------------------------------
http://www.amazon.in/Fidel-Religion-Castro-Conversation-Betto/dp/1920888454
கடந்த 50 ஆண்டுகளில் , தமிழ்நாட்டில் பெருகி வந்துள்ள 'மெத்தப் படித்த' அறிவாளிகள், இடது ,'மனித உரிமை ' இடக்கு எழுத்தாளர்களின் கொட்டம் தாங்கமுடியாது. .. எடுத்துக்காட்டாக 'மாபெரும்'படிப்பாளி', 50க்கும் மேலான ஆண்டுகளாக இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு , இன்றும் கூட அகில இந்திய something something ல் தலைமை , அவருடைய முகநூல் பக்கத்தில் 'LIBERATION THEOLOGY' பற்றி பெரிய்ய்ய்யய கட்டுரை !.. ஒரு சிறிதேனும் பொது அறிவும் , உலகக் கண்ணோட்டமும் இருந்தால், இப்போது ஓரளவு வலுவிழந்தாலும், சென்ற இருபது ஆண்டுகளில், FIDEL CASTRO வினால் முன்னெடுக்கப்பட்டு , தென் அமெரிக்க நாடுகள் அனைத்திலும், கத்தோலிக்க திருச் சபையின் குருமார்களும்,ஊழியர்களும், பொதுவுடைமை இலக்கிற்காக , ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலை இறையியல் என்ற பெரும் புரட்சித் தீ , அதன் மாபெரும் தாக்கம், இப்போது உள்ள போப் ஆண்டவர் , முதல் தென் அமெரிக்க போப் , இதெல்லாம் தெரியாமல் இருக்க முடியாது....மார்க்சியத்தின் சாரம் தனிச் சொத்துரிமை ஒழிப்பு. இந்த இலக்கை நோக்கி வருபவர்கள், materialist ஆகவோ அல்லது idealist ஆகவோ இருக்கலாம். .தனிச் சொத்துரிமை இலக்கை நோக்கி செயல்படுவோர் அனைவருமே நமது தோழர்கள் தாம் என்று மாவோ கூறினார். "the fight between materialism and idealism' is not yet resolved. The result is not certain. என்றார். மாவோ. ..'LIBERTY, EQUALITY AND FRATERNITY' என்று இங்கு ஒரு அரைவேக்காட்டுப் புரட்சிப்புயல் எதோ பாஸ்டில் சிறைத் தகர்ப்புத் தலை போன்று பொதுக்கூட்டங்களில் முழங்குவது ...வேடிக்கையாக இருக்கும். .கார்ல் மார்க்க்ஸ் சிந்தனையின் அடிப்படையே , இந்த பிரெஞ்சுப் புரட்சியின் கூப்பாடு, பூர்ஷ்வா வர்க்கக் கூச்சல் , பாட்டாளி வர்க்கம் இதில் ஏமாறக் கூடாது. என்பதுதான். 'மதம் ஒரு அபின்' என்று கிளிப்பிள்ளை போல் பிதற்றுவோர்தாம் இன்று முற்போக்காளர்கள் என்று தனக்குத்தானே பெயர் கொள்கிறார்கள். பெயரே 'ஞானி' அல்லவா! கவனி. ! 'FIDEL AND RELIGION' என்ற (Fidel and Religion: Fidel Castro in Conversation with Frei Betto Paperback )புத்தகம் மூலமாக படிப்பதை விட்டு இவருடைய சுயபுராணம் தான் கட்டுரை முழுதும். தோழர் வினோத் மிஸ்ரா மட்டுமே , கட்சிக் கல்விக் ட்சிக் கல்விக் வகுப்பில், இதன் சாரத்தை நயமாக கூறியுள்ளார். நீங்களும் படியுங்கள் ..தனிச் .சொத்துரிமையை விடாமல் பிடித்துத் தொங்கும் இறை மறுப்பாளர் , இறைவன் உத்தரவே தனிச் சொத்துரிமை ஒழிப்பு என்று கருதுவோர்.. இவர்களில், யார் உண்மையில் சமூக நலம் விழைபவன்? இனி உங்கள் தீர்ப்பு. 1000 கோடி ரூபாய்க்கு மாளிகை .மறுபுறம் தாராவிக் குப்பம்.
---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
15
GREAT MANY WONDERFUL PHOTOS OF
FIDEL CASTRO
WITH LEADING PROGRESSIVES OF THE WORLD
http://geopolis.francetvinfo.fr/fidel-castro-55-ans-de-rencontres-au-sommet-61677
---------------------------------------------------------------
15
. சிங்களரிடையே தீண்டாமை இல்லை.சாதிப்பெயர் சொன்னால் என்ன (உ-ம்) வரதராஜுலு நாயுடு(முற்காலத்தில் ஹிந்து மகா சபையில் இருந்தார்!), ஈ.வே.ரா.நாயக்கர், திரு.வி.க .முதலியார்,வ.உ.சிதம்பரம் பிள்ளை, ராமசாமிப் படையாச்சி, தீர்த்தகிரி கௌண்டர், முத்துராமலிங்கத் தேவர், தேசிகவிநாயகம் பிள்ளை , கார்மேகக் கோனார், ம.பொ .சிவஞான கிராமணியார், .... தேசியத் தலைவர்களில், இடதுசாரிகள் உட்பட, ஈ.எம்.எஸ்.நம்பூட்ரிபாத் , ஜோதி பாசு, சுர்ஜித்சிங்,சாரு மஜும்தார், ஹரிக்ருஷ்ண கோனார், கனுசன்யால், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சி.ராஜேஸ்வர் ராவ், எஸ்.எ.தங்கே , வினோத் மிஸ்ரா, ஜவஹர்லால் நேரு பண்டிட், வி.பி.சிங், என்.டி ராமராவ், மமதா பானெர்ஜி, சுபாஷ் போஸ், வினோபா பாவே,மகாத்மா கார்வே, மகாத்மா காந்தி, ஜோதிபா பூலே , சூர்யா சென், எம்.என்.ராய், லஜபதி ராய், ரவீந்திரநாத் தாகூர், சித்தரஞ்சன் தாஸ், பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, பந்துலு, லோஹியா, சரண்சிங், மொரார்ஜி தேசாய், பி.சி.ராய், நாகபூஷன் பட்நாயக், அஜய் கோஷ், ....பட்டியல் நீளும். ..ஜாதி வேறு ...தீன்ப்டாமை வேறு. இதுகூடத் தெரியாத இவர் எந்த உலகத்தில் இருக்கிறார்
-------------------------------------------------------------------
16
ABOUT THIRUMAVALAVAN
1962ல் பிறந்தவர். ..1968ல் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது. சம காலத்துப் போராளிகள் பலரும், முதுகுளத்தூர் நிகழ்வுகள், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், கக்கன் போன்றோரும், ஸ்ரீனிவாச ராவ் போன்ற பொதுவுடைமை இயக்கத் தோழர்களும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஆற்றிய அபார பணிகளை இன்றும் நினைவில் கொண்டுள்ளனர். இவருடைய பிறப்பிடம் அப்படி ஒன்றும் வேறு மாநிலம் அல்ல. சில நூறு மைல்களில் நிகழ்ந்த வர்கப் போராட்டத்தைப் பற்றி இவருக்கு போதுமான தெளிவு, அவருடைய அரசியல் பிரவேச நாட்களில் சுத்தமாக இல்லை. காரணம், இவருக்கு தலித் பிரச்னையைவிட இன அரசியல்தான் தொடக்கமாக இருந்திருக்கிறது. இன்றும் கூட அப்படியே. பொருளாதார வர்க்க அடிப்படை பற்றி இவர் சிந்தித்து இருந்தால், அவருடைய அரசியலும் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அம்பேத்கரை ஏன் இழுக்கிறார்? இவருடைய இன ,மொழிக் கொள்கைகளுக்கும் அம்பேத்கருக்கும் சற்றும் தொடர்பு கிடையாது. அம்பேத்கர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழி என்று கூறியுள்ளார். அவர் இந்திய தேசிய ஆதரவாளர். ஹிந்தி அனைவரும் படிக்க வேண்டும் என்றார். அவர் பிரிவினைவாத எதிரி.
------------------------------------------------------
16
1) சிறுபான்மை மக்கள், அனைத்துவித சமூக உரிமைகளும் அடிப்படை மனித உரிமைகளும் பெற்று வாழவும், வாழ்க்கையில் முன்னேறவும், அம்பேத்கர் அவர்களே இயற்றிய நமது அரசியல் சட்டம் ,வழி தந்திருக்கிறது. இதை மறுப்பது, அம்பேத்கர் அவர்களையே அவமதிப்பதாகும். 2) வைணவ சம்ப்ரதாயம் ஜாதிய வேறுபாடுகளை அதிலும் குறிப்பாக தீண்டாமையை அறவே வெறுத்து ஒதுக்கியிருக்கிறது. அதன் தொடக்கம் திருக்கோஷ்டியூரில் ராமானுஜர் . (கி.பி. 1100).. ( குலோத்துங்க சோழன் காலம்! சைவ ஆகம மடங்களும் அதன் பின் நிற்கும் ஜாதிகளும், அன்றே ராமானுஜரை எதிர்த்தன குலோத்துங்கனின் ஆணையால், தப்பிவிட்ட ராமானுஜருக்கு பதிலாக, பெரிய நம்பி என்ற சீடரின் கண்களைத் தோண்டி எடுத்ததுதான், சோழப்பேரரசு.) தமிழ்மண்ணில் ஆழ்வார்கள் காலத்தில் ( கி.பி. 700 ) தோன்றிய ஜாதி மறுப்பு பக்தி இயக்கம், ராமானுஜர் மூலம் வட இந்தியா முழுதும் பரவியுள்ளது. நமது சுதந்திர இயக்கத்தின் தலைவர்கள் பலரும் வைணவர்கள். ஏன்! அம்பேத்கர் அவர்கள் கூட, மராட்டிய பக்தி இயக்கத்தின் வழி வந்தவர்தாம். மராட்டிய நக்சல் இயக்கம் , ஜாதி ஒழிப்பில் பக்தி இயக்கத்தின் பங்கை ஏற்கிறது
--------------------------------------------------------------------
==============================================
17
MANMOHANSINGH ON NON-INTERVENTION
(திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011
"வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும்.
‘ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது.
ஆனால் ஒரு நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமுல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.
ஒரு நாட்டின் ஒற்றுமை பிரதேச ஒருமைப்பாடு இறையாண்மை சுதந்திரத் தன்மையை மதிக்கும் வகையிலும் காப்பாற்றும் வகையிலும் தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டி கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது.
இதுதான் ஜனநாயகத்தின் அடி நாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது."
WELL DONE! PRIME MINISTER!
-------------------------------------------------
17
தமிழ்நாட்டில் காங்கிரஸ் முடிந்துவிடவில்லை. 1991ம் ஆண்டு ,சட்ட மன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி முயற்சியில், மூப்பானரை முதல்வராக முன்னிறுத்தி,ஒன்றிணைந்த இந்திய தேசிய காங்கிரஸ் , எந்தக் கட்சியோடும் கூட்டணி வைக்காமல், அனைத்து தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிட்டு, 21 % க்கும் அதிகமான வாக்குகள் பெற்றதையும், அதோடு கூட, சிவாஜி கணேசன் கட்சியிலும், காங்கிரஸ் வாக்குகள் குறைந்தது 4% ஏனும் இருந்திருக்கும் என்பதையும் மனதில் கொள்வோம். ...அந்தத் தேர்தல் நடந்த காலம், இந்திய அமைதிப் படை இலங்கையில், தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் நிலவரத்தைத் தோற்றுவிக்க நடவடிக்கை காலம். ..ராஜீவ் காந்தியின் தமிழக தேர்தல் பிரசாரத்தில் ,இலங்கைப் பிரச்னை பற்றிய சொற்பொழிவை மொழி பெயர்த்து மக்களுக்கு கூறியவர் சிதம்பரம் அவர்கள். ..எதோ காங்கிரசின் இலங்கைத் தமிழர் பற்றிய நிலைப்பாடு மக்கள் ஏற்காததினால், கட்சி பலவீனம் அடைந்தது என்பது உண்மைக்கு மாறானது. ராஜீவ் உயிர்த்தியாகத்தை தமிழக மக்களுக்கு சரியாக எடுத்துச் செல்லவில்லை. அடுத்து வந்த தேர்தலில், திமுக-த.மா.க..போல ,இப்போது காங்கிரஸ் கூட்டணி வெல்லும்.
---------------------------------------------------------------
-----------------------------------------
18
JOTHIMANI DECIDES NOT TO CONTEST IN ARAVAKKURICHI
நல்ல முடிவு.! தாங்கள் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் தொடங்கும் போது , கூட்டணி முடிவாகவில்லை. அந்த நிலையில், கூட்டணி திருப்திகரமாக அமையாமல் போனால், உண்மையில் அனைத்துத் தொகுதிகளிலும் ,காங்கிரஸ் இயக்கம், பிரசாரத்திற்கு பல குழுக்கள் அமைத்துத் தொடங்கியிருக்க வேண்டும். ..எந்தத் தொகுதியிலும் கட்சிதான் வேட்பாளர். ..நிலைமைக்கு ஏற்ப கடைசி நேரத்திலும்கூட, வேட்பாளர்கள் மாற்றப் படுவது உண்டு. இன்றுகூட, தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளில் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. வேட்பாளர் மாற்றப் படுவது, வெற்றி வாய்ப்பு , கூட்டணி நிலைமை, போன்ற பல காரணிகளால் நேர்வது. .மாநிலத் தலைமை, மேலிடத் தலைமை போன்றவர்களுக்கு உள்ள நிர்பந்தங்களை புரிந்துகொண்டு தேவைப்பட்டால், வேட்புமனுவை வாபஸ் வாங்குவது கூட, தேர்ந்த அரசியல் ஊழியர்களுக்கு பெருமை சேர்க்கும் . ..தங்களது அர்ப்பணிப்பும், வாதத் திறமையும், பேச்சுத் திறனும், தமிழகத் தேர்தலில், ஒவ்வொரு பட்டி, தொட்டியிலும் முழங்கட்டும். கட்சியின் மாநில கொள்கை பரப்பு ஊழியராக செயல்பட்டு, தங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெருமை சேருங்கள். வளமான எதிர்கால்ம் உள்ளது.
---------------------------------------------------
----------------------------------------------------------------------------------
18
SUPERB WRITING BY SAMAS IN THINDU TODAY" சமீபத்தில் கோழிக்கோடு பக்கத்திலுள்ள நடைக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. மேடையை நோக்கி நடந்த அவரை, ‘உம்மன் சாண்டி’ என்று சத்தமாகப் பெயரிட்டுக் கூப்பிட்டிருக்கிறார் ஒரு பார்வையாளர். உடன் வந்தவர்களுக்கு ஒரே திகைப்பு. கூப்பிட்ட மனுஷி ஷிவானிக்கு வயது 7; இரண்டாம் வகுப்பு மாணவி.
உம்மன் சாண்டி வாஞ்சையாக, அவளை அருகில் அழைத்து, குனிந்து “என்னம்மா?” என்று கேட்டிருக்கிறார். ‘’என்கூடப் படிக்கும் மாணவன் அமல் கிருஷ்ணனின் அம்மா, அப்பா இரண்டு பேரும் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் குடியிருக்க ஒரு வீடு வேண்டும்” என்று சொல்லியிருக்கிறாள். “நடவடிக்கை எடுக்கிறேன் அம்மணி” என்ற உம்மன் சாண்டி உடனே இதுபற்றி விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். கையோடு அந்தக் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் பணமும் ஒதுக்கியிருக்கிறார்.
இந்த மாதம் புனித வெள்ளியன்று தேவாலயத்துக்குப் போனார் உம்மன் சாண்டி. தேவாலயத்தில் ஒரே கூட்டம். உள்ளே இடம் இல்லை. மனிதருக்கு என்ன அசதியோ, வாசல் படியிலேயே உட்கார்ந்துவிட்டார். செருப்புகள் கிடக்குமிடத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் உட்கார்ந்திருந்த புகைப்படத்தைப் பார்த்தபோது அது வாசல் படியாகத் தெரியவில்லை. மக்கள் மனம் என்னும் சிம்மாசனமாகத் தெரிந்தது.
----------------------------------------------------------------------------
19
"எம்.எஸ்.சுப்பு லட்சுமி கதாநாயகியாக நடித்த படம் ‘மீரா’. இந்தப் படத் தில் எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்துள்ளார்."....தமிழ் மீராவில் ' சராசரம் ' என்று தொடங்கும் எஸ்.வி வெங்கடராமன் மெட்டமைத்த கல்கியின் ஹிந்துஸ்தானி ராக ( சந்திரகான்ஸ்)அற்புதப் பாடல் ...அக்பரும், அவரது மந்திரி ராஜா மான்சிங்கும் , மாறு வேடத்தில், பக்தர்கள் கூட்டத்தில் அமர்ந்து பாடலை பக்தி சிரத்தையுடன் கேட்பார்கள்.பாடல் முடிந்தவுடன் மயங்கி சோர்ந்திருக்கும் மீராவிடம், அவரது பிரிய கிரிதாரிக்கு அணிவிக்க ரத்ன மாலைகளை அளிப்பார்கள். அதற்குள் சித்தூர் ரானா அங்கு வந்து சண்டையிட தொடங்குவார் . அதில் ராஜா மான்சிங் வேடத்தில் உள்ளது எம்.ஜி.ஆர். !
19
Maharashtra panchayat polls: BJP gets only 5 seats, Congress gets 21; Shiv Sena, NCP get 20...
www.dnaindia.com
Maharashtra Panchayat Polls:
Congress - 21
NCP - 20
Shiv Sena - 20
BJP - 5
The writing is on the wall for crony capitalists
--------------------------------------------------------------------------------
========================================
20
இந்த கட்டுரையாளர், வேண்டுமென்றே , குழப்பம் விளைவிப்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றைய தினத் தந்தியில் வெளிவந்துள்ள செய்தியைப் படியுங்கள். வேட்பாளர்கள் தேர்வு ,தலைவர்கள் அனைவரும் கூடி இருந்து, விவாதித்து, அதற்கேற்ப நடந்துள்ளது. .மீதமுள்ள எட்டுத் தொகுதிகளில், எந்த வேட்பாளர் வெற்றி பெற முடியும் என்று நன்கு யோசித்து முடிவெடுக்க தாமதம் ஆவது இயல்புதான். சிண்டு மூட்டி விடுவது , மக்கு முன்னணி வேலை.
------------------------------------------------------------------
20
மற்ற கட்சிகள் எல்லாம், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், பொதுக்கூட்டம் , நடை பயணம்,மக்கள் சந்திப்பு , துண்டுப் பிரசுரம் விநியோகம் என்று சுறுசுறுப்பாக இருக்கையில், காங்கிரஸ் கட்சி , வேட்பாளர் தேர்வைக்கூட முடிக்க முடியாமல், இருப்பது சரியல்ல.!... விழித்துக் கொள்ளுங்கள்..... வரலாறு திரும்புவதில்லை..... இந்த முறை தவறினால், இனி என்றும் வர வாய்ப்பில்லை
-----------------------------------------------------------
20
இந்திய தேசிய காங்கிரசின் , தமிழக தலைவர்களும், தொண்டர்களும், ஆதரவாளர்களும், சிந்திக்க !. காங்கிரஸ் -திமுக கூட்டணி அமைய , சிறந்த நெடுநோக்கு கொண்ட சமூக சிந்தனையாளராக முதல் படி எடுத்தது கனிமொழி அவர்கள்...... நேரடியாக சோனியா காந்தியுடன் தொடர்பு கொண்டு, தந்தை கலைஞரையும், சகோதரன் ஸ்டாலினையும் தெளிவு படுத்தி, பக்குவமாக அதே நேரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறாத வகையில், கூட்டணியை ஏற்பாடு செய்து முடித்தவர் கனிமொழி..... பிரசாரத்தில் கண்ணியம் காத்து செயல்பட்டு வருகிறார். அதே போன்று , இப்போது நாம் காணும் ஸ்டாலின் , உண்மையிலேயே வியத்தகு பண்பாளராக மிளிர்கிறார். இதுவரை தமிழ்நாட்டின் எந்த ஒரு கட்சியும் செய்ய முயலாத வகையில், நமக்கு நாமே என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை அமைதியாகச் செய்து இப்போது இரண்டாம் கட்டப் பிரசாரத்தில் மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில், பிரசாரப் பயணம், நடை பயணம் மேற்கொண்டு வருகின்றார். ....பெரம்பலூர் தொகுதியில், சிவகாமி ஐ.,ஏ.எஸ். திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்காக அவர் தொகுதியில் ஸ்டாலின். நடந்தே பிரச்சாரம் செய்துள்ளார். இன்று !.காங்கிரஸ்?
-------------------------------------------------------------------------
20
சில நேரங்களில், வர்க்க எதிரிகளோடு கூட கூட்டணி அமைய அவசியம் நேருகிறது. தேர்தலில் பங்கெடுப்பது அல்லது தவிர்ப்பது, ஒரு tactical question and not a strategic question என்று தெளிவாக லெனினிஸ்ட் பார்வையில் விளக்கமளித்துள்ளார் வினோத் மிஸ்ரா. ..(CPI-ML-LIBERATION).1) அடிப்படைப் பிரச்னை பிரிவினைவாதமா, இந்திய தேசிய ஒற்றுமையா 2) ஏகாதிபத்திய எதிர்ப்பா அல்லது மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் எடுபிடி அல்லது கூட்டாளியா ? 3) கனரகத் தொழில்களில் பொதுத் துறை வளர்ச்சியா அல்லது முதலாளித்துவ வளர்ச்சியா ( உள்நாட்டு முதலாளியம்/ வெளிநாட்டு முதலாளித்துவம் ). 4) கிராமப் புறங்களில், பண்ணையார்கள் + குலாக்குகள் ஆதரவா அல்லது ஏழை விவசாயிகள் + நிலமில்லா விவசாயத் தொழிலாளர் வர்க்க ஸ்தாபனமா? 5) கொள்கைப் பிரச்சாரம் போராட்டம் முதன்மையா அல்லது பெயருக்கு இரண்டொரு இடம் பிச்சையாகப் பெறுவதா? 6) நமது தலைமையில் கூட்டணியா அல்லது வர்க்க எதிரிகளின் தலைமையில் கூட்டணியா? சிந்தியுங்கள் .
-------------------------------------------------------------------------
20
சுதந்திரப் போராட்ட காலத்தில், காந்திஜியே, கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் , ஸ்தாபன அடிப்படையில் இல்லாமல், தனி நபராக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தேசிய இயக்கத்தில் பங்களிக்க வாய்ப்பளித்தார். அப்படி பிரபலமானவர்கள்தாம், கேரளம் ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள். ..ஆனால், தவறான, கணிப்பினால், சுதந்திரத்துக்குப் பிந்தைய நேரு அரசை , எதிர்த்து அரசியல் செய்தனர்...மொழிவழி குறுகிய தேசியம், பிராந்திய வாதம் போன்றவற்றை முன்வைத்து, தியாக சீலர்களான காங்கிரஸ் முதலமைச்சர்களை எதிர்த்து, எந்தவித அரசியல் நாகரிகமோ, கொள்கையோ, இல்லாத கும்பல்களோடு கூட்டணி வைத்துச் சீரழிந்தனர். 'தேர்தல் பாதை திருடர் பாதை ' என்பது, 'property is theft' என்ற anarchist Proudhan கொள்கையின்படி சரிதான்..எனினும், எந்தவித சமரசமும் இல்லாமல்,தேசிய , பிரதேச பூர்ஷ்வா கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்காமலோ அல்லது ஆத்ரிக்காமலோ வர்க்கக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 70 ஆண்டுகள் செயல்பட்டிருந்தால், இன்று தமிழ்நாடு செங்கொடிக் கோட்டையாக இருந்திருக்கும். எடுபிடி அரசியல் மார்க்சியமாகுமா?
---------------------------------------------------------------------------
20
உண்மையில் கட்சித் தலைவர்கள் , தேர்தலில் போட்டியிடக் கூடாது. அவசியமானால், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, இடைத் தேர்தலில் வெல்லலாம். ஆரோக்யமான அரசியல் நாகரிகத்துக்கு வழி பிறக்கும். ..கட்டுரை ஆசிரியர், தமிழ்நாட்டின் 234 தொகுதிகள் பற்றியும், 1996 முதல் நடந்த ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தல் (1996,2001,2006,2011) வாக்குகள் பற்றியும் முடிவு பற்றியும் , சென்னை, வடக்கு மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்கள், ஒவ்வொரு தொகுதியிலும், ஜாதி வாரியான உத்தேச கணக்கு, போன்ற புள்ளிவிபரங்களோடு , வரை படமும் தந்து , ஒரு கட்டுரைத் தொடர் தந்தால் , மிகவும் சிறப்பான பணியாக அமையும்
----------------------------------------------------------------------------
-------------------------------------------------
21
காங்கிரஸ் வேட்பாளர் காளிமுத்துவை ஆதரித்து தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யும் கனிமொழி.
----------------------------------------------------------
21
"… The 1927 session of the INC [Indian National Congress] held in Madras played a significant role in rousing the interest of the city youth in left nationalism. Singarevelu and the communist delegates from North India participated actively in the proceedings of the Congress presided over by Jawaharlal Nehru who has just returned from Europe full of ideas dominant then in European socialist and communist circles. He pushed through many leftist resolutions including the declaration of complete independence as the goal of the Congress. "
--------------------------------------------------------------
21
A NICE BLOG ON N.C.VASANTHAKOKILAM
http://hamletram.blogspot.in/2014/02/a-spring-in-memorythe-vasanthakokilam.html
---------------------------------------------------------------
21
FOR INFO... THIRUMA VALAVAN IS CONTESTING FROM KATTUMANNAARKOIL (SC) இங்கு ஆதிதிராவிடர்கள் 40 சதவீதம் பேரும், வன்னியர்கள் 35 சதவீதம் பேரும், முஸ்ஸிம்கள் மற்றும் பிற சமூதாயத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதம் பேர் உள்ளனர். வீராணம் ஏரி இந்த தொகுதியில் உள்ளது. இது விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கிவருகிறது.வீரநாராயண பெருமாள் கோவில், அனந்தீஸ்வரர் கோயில் ,மேலகடம்பூர் அமர்தகடேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளது.
1996 இ.ராமலிங்கம்(திமுக) 47000.(WITH TMK)
இளையபெருமாள் (மனித உரிமை கட்சி) 37000.
-
2001 பி. வள்ளல்பெருமான்( ஜனநாயகப்பேரவை- திமுக கூட்டணி) 55000. ஆர்.சச்சிதானந்தம்(காங்கிரஸ்) 38000
-----------------------------------------------------------------
2006 டி.ரவிக்குமார் (VC)57000. பி.வள்ளால்பெருமான்(காங்கிரஸ்) 43000
---------------------------------------------------------------
2011 முருகுமாறன்( அதிமுக)83000.
டி.ரவிக்குமார்(vc) 52000
----------------------------------------------------------
21
6% அகவிலைப்படி உயர்வாம்...உயர் வருவாய் அதிகாரிகளுக்கு இதன் மூலம், மாதம் 4000 ரூபாய் வரை கூடுதலாகக் கிடைக்குமாம். ..ஐயா! உங்களுக்குத் தெரியாதா? பல ஆயிரக் கணக்கான கலை/ அறிவியல் பட்டதாரிகள், பொறி இயல் பட்டதாரிகள், 4000 ரூபாய் மாத சம்பளத்தில் வேலை பார்த்து வருகின்றனர். லட்சக்கணக்கானவர்களுக்கு அதுவும் இல்லை! அகவிலைப்படி உயர்வுப் பலன் மாதம் 500க்கு மிகாமல் உச்ச வரம்பு விதிக்க வேண்டும். ...இதை எப்படி ஆசிரியர் பரிந்துரைப் பகுதியில் திண்டு வெளியிடுகிறது? வெட்கம்!
------------------------------------------------------------------------------
22
RAJEEV GANDHI 1991 TAMILNAD ELECTION MEETING
----------------------------------------------------------------------------
22
பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி , 1916ல் பிறந்தவர். .தனது 17வது வயதிலேயே , மதராஸ் ம்யூசிக் அகடெமி (1933), கச்சேரி மூலம், பிரபல வித்வான்களின் பாராட்டும், ஆசியும் பெற்றவர். 1938ல் (22 வயது) சேவாசதனம், திரைப்படத்தில் 1940ல் தேசபக்தர் சதாசிவத்தை ராஜாஜியின் ஆசியுடன் மணம் புரிந்து சகுந்தலை திரைப்படத்தில், பின்னர் 1941ல் கல்கி பத்திரிகை தொடங்க மூலதனத்திற்காக சாவித்ரியில் நாரதர் வேடத்தில் ( ப்ரூஹி முகுந்தேதி ' கேட்டிருப்பீர்கள்) .இவற்றிற்கெல்லாம் உச்சமாக 1945ல் ( வயது 29) மீரா படத்தில், கல்கியின் பாடல்களும், எஸ்.வி.வெங்கடராமன், இசை அமைப்பும் கொண்ட காலத்தால் அழியாப்புகழ் பெற்ற திரைக் காவியத்தில் அன்றைய தமிழ்நாட்டின் மக்களை கட்டிப்போட்டவர். 1947 நாடு சுதந்திரம் அடைத்த நாட்களில், ஹிந்தி மீரா மூலம், நாடு முழுவதும் இன்றளவும், பரம பக்தர்களைக் கொண்டவர். ஹிந்துஸ்தானி ராகங்களை அருமையாக கையாண்டவர். இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம். அவரது இசைத்தட்டுக்கள் நாட்டுடைமை ஆக்கப்படவேண்டும். ..இல்லாவிடின், அவரது தேனினும் இனிய இளம்வயதுக் குரலில் பாடிய அற்புதப் பாடல்கள் மறைந்தே போகும்!
---------------------------------------------------------------------------
22
சுதந்திரப் போராட்ட நாட்களில், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மூலம் பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றிய அனைவருக்கும், ஆதர்சம் காந்திஜியை விட, ஜவஹர்லால் தான். !. காந்திஜியின் ஹிந்து-முஸ்லிம்-கிறிஸ்தவர் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, ஆகிய இரண்டு கொள்கைகளை ஆதரித்தாலும், மற்றபடி, மார்க்ஸ்-லெனின்-ஸ்டாலின்-வழியில் சோவியத் ஆதரவு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலிய கொள்கைகளை நோக்கி காங்கிரஸ் இயக்கத்தைத் திருப்பியதில், கராச்சி காங்கிரசில் நேரு முன்வைத்த சுதந்திர இந்தியாவின் சமூக பொருளாதார சமத்துவ இலக்குகள் , தீர்மானகரமாக காங்கிரஸ் இயக்கத்தை வெறும் சிறு முதலாளியஅரசியல் விடுதலை இயக்கமாக இல்லாமல், தெளிவான சோஷலிச இலக்குடன் பயணிக்க வகை செய்தது. காந்திஜியின் கிராமக் கைத்தொழில் , கனரகத் தொழில் எதிர்ப்பு, தர்மகர்த்தா முறை, "வன்முறை' தவிர்த்தல், போன்ற கொள்கைகளை ,நேருவினாலும், சோவியத் யூனியனின் சாதனைகளாலும் முற்றிலும் கவரப்பட்ட தேசபக்தர்கள் அனைவருமே எதிர்த்தார்கள் . தமிழக சி.பி.எம். ,சந்தர்ப்பவாத தேர்தல் அரசியல் நடத்தி சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி வைத்து வழி தவறியது. ..மீளவில்லை .வைகோவுடன் கூட்டு!
------------------------------------------------------------------
==============================================
23
விருதுநகரில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணத்தை பறித்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
----------------------------------------
----------------------------------------------
TAKE CARE! AMERICAN SAINTS WILL HOWL 'HUMAN RIGHTS VIOLATION' IN TAMILNAD
------------------------------------------------------------------------------
23
முதலாளித்துவ, கிராமப்புறத்து நாட்டாமைகள் , பேட்டை ரௌடிகள், நிரம்பிய எந்த ஒரு சமுதாயத்திலும், உண்மையான ஜனநாயகம் இருக்க முடியாது . வெல்லும் வேட்பாளரை மட்டுமே எந்தக் கட்சியும் தேர்ந்தெடுக்க முடியும். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக , விஜயகாந்த் கட்சி, வைகோ கட்சி, இடதுகள் கட்சி, திருமா கட்சி வேட்பாளர்களின் தரம், அவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்று அடுத்த கட்டுரை கொடுத்தால், கட்டுரை ஆசிரியரின் அரசியல் புரிதலின் குறை வெளிப்படும். . எந்த நேரமும் ஊழல், ஊழல் என்று கூப்பாடு போட்டுப் பலனில்லை. தேர்தல்கள், ஆழ்ந்து நோக்கினால், ஒரு சில ஆதாரமான அரசியல் நிலைப்பாடுகள், இலக்குகள நோக்கி நடக்கின்றன. .அவ்வகையில், அதிமுகம், மதிமுகம், வைகோவின் பொறியில் சிக்கிக்கொண்டு ஒழியப்போகும் விஜயகாந்த் கட்சி, செங்கொடியை அடகு வைத்து வைகோவுக்கு துணை போகும் இடதுகள், அம்பேத்கர்,புலித்தலை இருவரையும் ஆதரிப்பதில் எந்த ஒரு முரண்நகையும் இல்லை என்று உதிர்க்கும் திருமா.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அரசியல் இலக்கு உள்ளது. அது பதவி பற்றியது அல்ல. நாட்டின் ஒருமைப்பாடு பற்றியது
-----------------------------------------------------
23
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு சிறிதும் ஆதரவு இல்லை. எனவே, அதில் பணியாற்றிவரும் இந்திய தேசிய பற்றாளர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் அகில இந்திய தேசியம் பெரும்பான்மை மக்களிடம் மீண்டும் பரவ செயல்படவேண்டும். .எண்ணிப் பார்த்தால், இரண்டு கட்சிகளுக்கும் பெருத்த கொள்கை வித்தியாசம் எதுவும் இல்லை. காங்கிரஸ் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு விரோதி இல்லை. அதுபோல கட்சி அளவில், பி.ஜே.பி.யும் கிருஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு எதிரி இல்லை. காந்தியை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். .நாடாளுமன்றத்தில் நேருவையும், இந்திரா காந்தியையும் புகழ்ந்து எடுத்துக்காட்டுகள் தருகின்றீர்கள். நேருவின் சோஷலிசம் கசக்கிறது என்றால், இன்று காங்கிரசிலேயே அத்தகைய மாற்றம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குமரி அனந்தன் , வசந்த குமார் காங்கிரஸ்.. குமரி அனந்தன் மகள் பி.ஜே.பி.! 1990 க்கு முந்தைய நிலைப்பாடுகளை மறந்துவிட்டு, புதிய அத்தியாயம் தொடங்குங்கள். கலாம் அவர்களின் சிந்தனை அதுவே. கேரளம், வங்கம் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் +பி.ஜே.பி
***************************************
24
புதுமைப் பித்தன் கதைகள் மட்டுமே எழுதியவரில்லை. அருமையான கட்டுரைகளும் எழுதியுள்ளார். ... ..அரசியலும் கூட! அவர் வாழ்ந்த காலத்தில், இத்தாலியின் முசொலினி, ஜெர்மனியின் ஹிட்லர் , பாசிச , நாஜி கொள்கைகளின் கேடுகளை ,இரண்டு சிறு நூல்களில்,கடுமையாக விமர்சிக்கிறார்...அதே சமயம், ஹிட்லருக்கு எதிரான இரண்டாம் உலகப் போரில் தோழர் ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியன் நிகழ்த்திய அற்புத சாகசங்களையும் மிகவும் நேர்த்தியாக, உணர்வு பூர்வமாக ஒரு வரலாற்று ஆசிரியன் போன்று ஆதார விபரங்களைக் கொட்டி, ஆதரவுடன் எழுதியுள்ளார். ஜவஹர்லால் நேருவின் தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.( "ஸ்டாலினுக்குத் தெரியும்"). வெறும் எதிர்மறை விமர்சனம் தவிர்த்து, தான் விரும்பும் இலட்சிய சமுதாயம் எப்படி அமைய வேண்டும் என்பதையும் தெளிவாக மற்றொரு குறு நூலில் தருகிறார். இலங்கைத் தமிழ் ஆய்வாளர் நுஹ்மான் அவர்கள், புதுமைப்பித்தனின் இத்தகைய பன்முகப் படைப்புகள் பற்றி அருமையான கட்டுரைகள் அளித்துள்ளார். திரு வெங்கடாசலபதி முயற்சியில், காலச் சுவடு பதிப்பகம்,வெளியிட்டுள்ளது. அனைவரும் படித்துப் பரப்ப வேண்டும்.
--------------------------------------------------
24
சீனாவின் கலாசாரம் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுமியங்களுக்கு இசைந்துபோகக்கூடிய விதத்தில் அங்குள்ள மதக்குழுக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று அதிபர் ஷீ ஜிங்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைநகர் பீஜிங்கில், மதங்கள் தொடர்பான மாநாடு ஒன்றில் பேசிய அதிபர் ஷீ, மத நிறுவனங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாக்சிஸ கோட்பாடுகளுக்கும் விசுவாசமாக நடக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
அந்தக் குழுக்கள் தங்களின் மதக் கோட்பாடுகளில் சமூக நல்லுறவு மற்றும் முன்னேற்றம் போன்ற சோசலிஸ கொள்கைகளுடன் பொருந்தக்கூடிய விடயங்களில் கவனத்தை குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதங்களின் வழியாக 'வெளிநாட்டு ஊடுருவல்' என்று அவர் கூறும் நடவடிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் சீன அதிபர் மத நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
---------------------------------
***************************************************
25
சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் சற்று வில்லங்கமான கதைகள் எழுதுபவர் என்ற பிம்பம் அவரே ஏற்படுத்திக்கொண்டது. ஓரளவு உண்மையும் கூட. ...ஆனால், சி,சு,செல்லப்பா பற்றி அவர் தினமணி பத்திரிகையில் எழுதிவரும் தொடர் கட்டுரை அருமையிலும் அருமை. இப்போது 6 வது பகுதி வரை வந்துள்ளது. 'அறுவை அரசன்' ஜெமோ' வின் எந்தக் கட்டுரையிலும் இல்லாத நேரடியான நடை , மனம் கவர்கிறது. அந்தக் காலத்து விஷயங்களை ( சுதந்திரப் போராட்ட காலம் ) சி.சு.செல்லப்பாவின் சிறுகதை, நாவல் பின்புலத்தில் நாம் அறிந்திராத பல விஷயங்களை கூறுகின்றார். சற்றும் விகல்பம் இல்லை. நீங்களும் படித்துப் பாருங்களேன்!
CHARUNIVEDHITHA ON CI.SU.CHELLAPPAA - rsrshares
sites.google.com
https://sites.google.com/site/rsrshares/home/charunivedhitha-on-ci-su-chellappaa
------------------------------
25
inexplicable!...john jacob got 50000 votes and won both in 2006 and 2011 at killiyoor.. kumaradas ( admk) and got 14000 in 2006 and 10000 as independent in 2011....What is going on? I think that John Jacob is either joining INC or has backed out of the contest as he is sure to lose. Your take?
--------------------------------------------------
25
நேற்று : 'திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ,விளவங்கோடு வேட்பாளர் விஜயதரணி, கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து, களியக்காவிளையில் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். "...அதனுடைய விளைவாக vaasan party கிள்ளியூர் வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். ..ஜான் ஜேகப் பதிலாக குமாரதாஸ் மட்டும் வெற்றி பெற்றுவிடுவாரா?
-------------------------------------------------------------
25
ABOUT VAIKO BACKING OUT AT KOVILPATTI
மெத்த நன்றி!. கோவில்பட்டி , வலது மற்றும் இடது கம்யூனிஸ்டுகளின் பாரம்பர்யமான தொழிலாளர் தொகுதி. முந்தைய காலங்களில் (1994) , பிரிந்திருந்தும், அவர்கள் 50,000 வாக்குகள் பெற்ற தொகுதி. உங்களது தலையீட்டால், வலது மற்றும் இடது கம்யூனிஸ்டுகள் 40க்கும் மேலான அவர்களது வலுவான தொகுதிகளை இழந்துள்ளார்கள்...ஒரு யோசனை. ! நீங்கள் மக்கள் நலக்கூட்டனியிலிருந்து முற்றாக விலகி தேர்தலைப் புறக்கணியுங்கள். இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. இடதுசாரிக் கட்சிகள், உங்களது தொகுதிகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு போட்டியிடுவார்கள்...தமிழ்நாட்டின் எந்தக் கூட்டணியிலும் நீங்களும், உங்களது கட்சியினரும் பொருந்தாத நபர்கள். .போதும் உங்களது ஆரவார , அபத்த சொல்லாடல் நிரம்பிய தனி நபர் காழ்ப்பு சார்ந்த அரசியல்.! இடதுசாரிகளையும், இந்திய தேசிய ஒற்றுமை காப்பவர்களையும் வளர விடுங்கள். கலைஞர் நேற்று கடலூரில் ஆற்றியுள்ள உரையை படித்துப் பாருங்கள். .உங்களது பினாமி அரசியல் தெளிவாகப் புரிகிறது.
--------------------------------------------------------------------
HAPPY NEWS!....WILL BE HAPPIER IF ALL THE MDMK CANDIDATES DO LIKEWISE AND GO AND SETTLEDOWN IN COLOMBIO.
2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி அறிவிப்பு
பதிவு: ஏப்ரல் 25, 2016 14:02
-----------------------------------------------------------------
25
""மேலும், 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது." இப்படி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைத்த உத்தரவோடு நிறுத்தி இருந்தால் இத்தகைய வீண் குழப்பங்கள் நிகழ்ந்திருக்காது.( a reader)
================
மிகவும் சரியான கருத்து. இப்போதெல்லாம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது' என்ற கருத்து , போலி முற்போக்காளர்களால் முன் வைக்கப் படுகிறது.' "ஒருவன் குற்றம் செய்வது, அவனது மரபணு தொடர்பானது.." என்று ஒரு வாதம்! .ஒரு பைத்தியம் கொலை செய்தால், 'ஐயோ பாவம் ! பைத்தியம்' என்று அவனை ஒன்றும் செய்யாமல் வெளியே நடமாட விட்டால், மேலும் மேலும் கொலை செய்வான்! அதற்காக கொடும் குற்றவாளிகளை , சமூகத்திலிருந்து தனிமைப் படுத்துகிறோம். பைத்தியம் இல்லை எனில், அவன் மனம் திருந்தி வாழ வாய்ப்புக் கொடுக்கலாம் 'என்பதெல்லாம், குற்றத்தின் தன்மையைப் பொறுத்தது.மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர் லெனின், ஒரு வலதுசாரி SR (SOCIAL REVOLUTIONARY) பெண்ணால் சுடப்பட்டார். அதன் காரணமாக உடல் நலம் குன்றி , சில மாதங்களில் மறைந்தார். அவ்வளவு பெரிய இழப்பு! ஆனால், எவனாவது , ஹிட்லர் போன்ற மனித மிருகம் , வளர்வதற்கு முன்பே , political action எடுத்திருந்தால், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை நாசமடைந்திருக்காது. . அதுதான் முக்கியம்,. லெனின், காந்திஜி, மார்டின் லூதர் கிங் போன்றோரைக் கொலை செய்பவர்களை நாம் எப்படிப் பார்ப்பது?
-----------------------------------------------------------------
------------------------------------------------------------------------
26
N.C.VASANTHAKOKILAM.... 4 YEARS YOUNGER TO MS ...SNATCHED AWAY AT VERY YOUNG AGE ..HAD A VOICE AND VIDHVATH AS MUCH AS MS AND DKP. THERE ARE SOME UNMATCHED RENDERINGS ..EVEN MS COULD NOT EQUAL ! ( MAAYAE, PILLAIP PIRAAYATTHILAE. SAARASA DHALA NAYANA, AANANDHA NATANAM AADINAAL ) ETC
----------------------------------------------------------
https://www.youtube.com/embed/4DffiG16UXw
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/4DffiG16UXw" frameborder="0" allowfullscreen></iframe>
----------------------------------------------------------
26
ரோம் நகரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான கூட்டத்தில் போப் பிரான்சிஸ் சொற்பொழிவாற்றினர். அப்போது அவர், கடவுள் இல்லாத வாழ்க்கை என்பது சிக்னல் இல்லாத செல்போனை போன்றது. எனவே பள்ளியே, குடும்பமோ எங்கே சென்றாலும் இணைப்பு இருக்கும் இடத்துக்கு செல்லுங்கள்.
சுதந்திரம் என்பது நாம் நினைத்ததை செய்வதல்ல. அது நமக்கு கிடைத்த பரிசு, நாம் தான் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சிக்கு விலை என்பதே இல்லை. அதை வாங்கவோ விற்கவோ முடியாது. செல்போனில் ஆப்ஸ் தரவிறக்கம் செய்வது போல் அல்ல.
என்ன தான் புதிய பதிப்பாக இருந்தாலும் கூட நீங்கள் அன்பில் வளருவதற்கு அது உதவாது என்று பேசினார். சுமார் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.
------------------------------------------------------------------------
26
கடவுள் இருக்கிறாரா இல்லையா '... என்ற கேள்வியைவிட, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம், தமிழ்நாட்டில் நாத்திகப் பிரச்சாரம் நடந்துள்ளது ஆனால் ஒவ்வொரு நாளும், பத்திரிகைச் செய்திகளில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், கோவில்களில், திருவிழாக்கள்,குடமுழுக்கு , தேர் திருவிழா, பூக்குழி , நேர்த்திக்கடன், பால்குடம் , திருவிளக்கு பூஜைகள், செய்திகள், புகைப்படங்களுடன் வராத நாட்களே இல்லை எனலாம். அதுதான் போலும், "தெய்வத் தமிழ் நாட்டினிலே " என்று பாரதி பாடினான். தமிழ்நாட்டில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இவ்வளவு தொன்மையும் சிறப்பும் வாய்ந்த கோயில்கள் கிடையாது. இறை நம்பிக்கை ,எளிய மக்களுக்கு, மன தைர்யம் தருகிறது. .தவறான காரியங்களைச் செய்யாமல் தடை செய்கிறது. நல்வழிப் படுத்துகிறது. "விவிலியத்தின் புதிய ஏற்பாடுதான் மார்க்சியத்தின் சாரம்' என்கிறான் பாரதி!.. நீங்கள் இறை மறுப்பாளரா ,இல்லையா என்பது அல்ல பிரச்னை. உங்கள் இறை உணர்வு போலியானதா, சமூக உணர்வு இல்லாததா என்பதுதான் முக்கியம். ' மூட' நம்பிக்கையினால் , நல்ல பண்புகள் வளர்ந்தால் நல்லதுதான்-குறை என்ன?
------------------------------------------------------------------------------
26
thindu's mischief : "மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின்: குமரி திமுக தொண்டர்கள் ஏமாற்றம்
----------------------------------------
----------------------------------............"புகைப்படங்களைப் பார்க்கும்போது, மக்கள் கூட்டம் சிறப்பாக இருப்பது தெரிகிறது. குறிப்பாக, மொத்தம் 6 தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து 3 இடங்களில் பிரசாரம் நடத்தியுள்ளார். அவர் பிரச்சாரம் நடந்த கையோடு, வாசன் கட்சி, வேட்பாளர் ஜேகபை மாற்றியுள்ளது! ..இந்தத் தேர்தலில், ஸ்டாலின் மிகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார். ..மீண்டும் ஒரு முறை , "மக்கள் அதிகம் கூடும்" இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்வது ஒன்றும் கடினமே இல்லை. . அவசியம் வருவார்!. வெல்வார். !
-------------------------------------------------------
===================================================
27
'SOVIET COMMUNISM- A NEW CIVILIZATION' BY
SYDNEY AND BEATRICE WEB
It is this book which made Jawaharlal Nehru , an admirer of Soviet Union of Stalin era too. because the authors were famous Fabians Sydney Webb and Mrs.Beatrice Sydney Webb. Jawahar was a Fabian initially like George Bernard Shaw. In those decades, we had genuine intellectuals , not the yankee-manufactured fakes in hundreds like Ramachandra Guha, at best a cricket and mediocre hindi film and cine music fan. but the tragedy is that the pseudo left in India has given this .just a left-posing gossip monger.. the mantle of leading 'leftist' writer..
-------------------------------------------------------------------------------
27
உணர்ச்சிவயப்பட்டு எடுக்கும் முரண்பட்ட முடிவுகள்: சரியான நேரத்தில் தவறான திசையில் பயணம்
குள.சண்முகசுந்தரம்(thindu today)
************************************************************************
சிறந்த கட்டுரை. vaiko's திருகாணி எப்படிப்பட்டது என்று தெரியப்படுத்துவதில் !..தமிழ்நாட்டில் கலைஞரைவிட தான் மட்டுமே 'திராவிட' அரசியலை முன்னெடுத்துச் செல்பவன் என்ற ஆணவம் , திமிர் , மிக மிகச் சிக்கலான இலங்கைத் தமிழர் பிரச்னையை வைத்து, வன்முறை மூலம் இங்கும் தமிழ்நாட்டை ரணகளமாக மாற்ற திட்டமிட்டு , கட்சியின் அனுமதி பெறாமல், தெரிவிக்கக்கூட செய்யாமல், யாழ் சென்று , முதலில் தமிழ் ஈழம் பின்னர் தனித் தமிழ் நாடு என்று அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். யாருமே செய்யாததை நான் செய்து காட்டுகிறேன் பார்! என்ற 'மறுமலர்ச்சி ' யின் மறுபக்கம்தான் இந்தக் கூத்து. .இங்கு எப்படி ஸ்டாலினை வசை பாடுகிறாரோ அதே போன்று காரணம் இன்றி, ராஜீவ் காந்தியை தனிப்பட்ட அடிப்படையில் வெறுத்து அரசியல் செய்த ஆள். இன்றும் மாறவில்லை. .ஆதாரம். 1-4-2016 அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் இந்த ஆள் பேசியுள்ளது. ஒரு மாலைப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. ..வைகோ அரசியலிலிருந்து விலக்கப் படவேண்டும். இவருக்கு இமேஜ் கொடுத்துவரும் இடது கம்யூனிஸ்டுகள் வெட்கித் தலை குனிய வேண்டும். விகாந்த் கருத்தைக் காணோம?
----------------------------------------------------------------------
27
SIVAKAMI IAS AT PERAMBALUR : தங்களது வெற்றி உறுதி.! ஒரு எம்.எல். ஏ. எப்படிச் செயல்படவேண்டும் என்ற முன்னுதாரணமாக ,தங்களது அடுத்த ஐந்தாண்டுப் பணிகள் அமையட்டும். 1) உங்களது தொகுதி மேம்பாடு பற்றிய திட்டங்கள் அவை நிறைவேற நடவடிக்கைகள், , சட்டமன்ற உரைகள், பத்திரிகைக் கட்டுரைகள், தங்களது தொகுதி வாக்காளர்களும், ஏனைய நல்லோர்களும், தங்களை எளிதில் அணுகி பிரச்னைகள, கருத்துக்கள் பகிர்ந்து கொள்ள , facebook,website, email விபரங்கள் அமையுங்கள். அன்றாட செயல்பாடு,பற்றி ஒரு open diary maintain பண்ணுங்கள். ,,தாங்கள் அனுபவம் மிகுந்த ஒரு IAS அதிகாரி என்பதை , தங்களது செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்துங்கள்.( இலக்கிய நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுங்கள். ..பெரும்பாலும் வெட்டி வேலை.)... உங்கள் தொகுதியில் அடுத்த தேர்தலிலும் ..தாங்கள் போட்டியிடும்போது, மாற்று வேட்பாளர்கள் அவர்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதால், வேட்புமனு கூட தாக்கல் செய்ய துணியக்கூடாது . பெரம்பலூர் தொகுதியில் பிறந்தவர் என்ற செய்தி, மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள். நிலமில்லா விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வு சிறக்க பணியாற்றுங்கள்
-------------------------------------------------------
=====================================================
28
அந்தக் காலத்தில் , சிவகங்கை சேதுராஜன் என்று ஒரு mimicry expert இருந்தார். எல்லோர் மாதிரியும் குரலை மாற்றிப் பேசுவார். ..கூட்டத்திற்கு வருவோர் சிரித்து மாளாது. அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். மாலை 6 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை பிரச்சாரம் இருக்கும். ,இளங்கோவன் பேசுகிறார் என்றாலே சர வெடி படபடவென்று வெடிக்கும். கேலி, கிண்டலுக்குப் பஞ்சமே இருக்காது. இனிமேல்தான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை என்றால் என்ன என்பது மக்களுக்குப் புரியப்போகிறது. வாழ்த்துக்கள். ..நையாண்டி, நக்கல் , கண்டிப்பாக வேண்டும். கூட்டத்திற்கு வருபவர்கள் சிரித்துச் சிந்திக்க வேண்டும். ஆவேச வெத்துவேட்டுகளின் கோமாளிக் கூத்துகள் மக்கள் இந்த இரண்டு வாரங்களில் நன்றாகவே தெரிந்து கொண்டுள்ளார்கள். ..கேலியாகப் பேசும்போது, சற்றும் விரசம் சேர்ந்துவிடாமல் கவனமாக இருங்கள். ..சொல்லாமல் விட்ட கோடிட்ட இடங்களைப் பொதுமக்களே புரிந்துகொள்ளும்படி பேசுங்கள். 41 இடங்களையும் காங்கிரஸ் இந்த முறை வென்று காட்ட வேண்டும். கண்டிப்பாக முடியும். அரசியல்வாதிப் பெண்களைப் பற்றிப் பேசும்போது கவனம் தேவை. வெல்க.
-----------------------------------
28
Published on Aug 16, 2015
tamil notes by vembar manivannan
என் சி வசந்தகோகிலம்:
******************************
என் சி வசந்தகோகிலம் அவர்கள் 1919-ம் ஆண்டு கேரளாவில் கொச்சிக்கருகிலுள்ள இரிஞ்சாலக்குடா எனும் ஊரில் பிறந்தவர்...இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் காமாட்சி... சிறுவயதில் இவர் குடும்பம் தமிழ்நாட்டில் நாகப்பட்டனத்திற்கு குடிபெயர்ந்தது.. அங்கே கோபால ஐயர் என்பவரிடம் முறைப்படி சங்கீதம் பயின்றார்... காமாட்சிக்கு அருமையான குரல்வளம்... சிறுவயதிலேயே அவரின் கச்சேரிகளுக்கு ரசிகர்கள் திரண்டார்கள்...அவரின் வசந்தகால குயிலைப்போன்ற இனிய குரலுக்காகவே அவர் வசந்தகோகிலம் என அழகிய பெயரில் அழைக்கப்பட்டார்... என் சி வசந்தகோகிலம்--நாகப்பட்டினம் சந்திரசேகர வசந்தகோகிலம் என்பது முழுப்பெயர்.
1936-ல் அவரது 17ஆவது வயதில் குடும்பம் சென்னைக்குக் குடிவந்தது . பல கச்சேரிகள் செய்தும் இசைத்தட்டுகளில் பாடியும் மிகப்பெரும் புகழ் பெற்றார் வசந்தகோகிலம்...ஆனாலும் இசை வாழ்க்கையை விரும்பாத இவரது கணவரால் மணவாழ்க்கை தோல்வியில் முடிந்தது ...
தேன்குரலும்... தெள்ளிய ரூபமும் கொண்ட என் சி வசந்தகோகிலம் 1940-ல் "சந்திரகுப்த சாணக்கியா" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்... தொடர்ந்து அதே ஆண்டில் "வேணுகானம்" படத்தில் வி.வி.சடகோபனுடன் இணைந்து நடித்தார்.. 1942-ல் சி கே சதாசிவம் இயக்கிய "கங்காவதார்" படத்தில் பூமிக்கு வந்த கங்கையாக நடித்தார்.. சி கே சதாசிவம் அவர்களை மறுமணம் முடித்துக்கொண்டார்.. தொடர்ந்து 1944-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்", 1946-ல் ஹொன்னப்ப பாகவதர் நடித்த "வால்மீகி", "குண்டலகேசி" ஆகிய படங்களில் நடித்தார்.
இசை உலகிலும், தமிழ்த்திரை உலகிலும் புகழேணியில் ஏறிவந்த என் சி வசந்தகோகிலம் யாரும்எதிர்பாராதவண்ணம் 1951 நவம்பர் 8-ம தேதி சென்னையில் கோபாலபுரத்திலிருந்த அவரது வீட்டில் தனது 32-வது வயதில் மரணமடைந்தார்... தமிழ் திரை உலகிற்கும், இசைவுலகிற்கும் இதைவிட மிகப்பெரிய இழப்பு வேறெதுவும் இருக்க முடியாது...
1950-ல் வெளிவந்த "கிருஷ்ண விஜயம்" திரைப்படமே இவரது கடைசிப்படமாக அமைந்துவிட்டது... இதில் அவர் நாரதராக நடித்து தேவகானம் பாடியிருந்தார்.. தமிழிசை உள்ளவரை என் சி வசந்தகோகிலம் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்...
-------------------------------------------------------------------
28
இந்தத் தேர்தலில் பொதுத் தொகுதிகளில் சில தலித்துகளை நிறுத்தியுள்ளது மார்க்ஸிஸ்ட் கட்சி. ஆனால், எத்தனையோ கிராமங்களில் தலித்துகள் பெரும்பான்மையாக இருந்தபோதும், பொதுப் பிரிவு என்பதற்காக கட்சிக்காக உழைக்காத இடைநிலைச் சாதியினருக்குப் பொறுப்பு வழங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இரு பொதுவுடைமைக் கட்சியிலும் தத்துவம் சார்ந்த புதுப்பிப்பு சோடை போனதாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.
- ம.ஜீவானந்தம், சென்னை.
-------------------------------------------------------------------------------------
28
https://sites.google.com/site/arasiyalissues/home/panchami-lands-issue-ilangovan
--------------------------------------------------------------------------------------
=========================================================
29
------
தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நாடார் ஜாதியினர் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். .அவ்வாறிருக்க, திமுக அதிமுக இரண்டு கட்சிகளிலும், வெறும் 3% மட்டுமே கட்சி நிர்வாகிகள் உள்ளனர் என்ற செய்தி வியப்பளிக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் அனைத்துமே நாடார் மகா ஜனங்களின் சமூகம் ஒவ்வொரு ஊரிலும் செல்வாக்குடனும், திரளாகவும் கட்டுக்கோப்பாக உள்ளனர். ...பின் எப்படி அவர்கள், அமைதியாக தாங்கள் புறக்கணிக்கப் படுவதை ஏற்கிறார்கள்? இதே போன்று, தென் மாவட்டங்களில், தேவேந்திர குல வேளாளரும் குறிப்பிட்ட மாவட்டங்களில், பெருமளவு உள்ளார்கள். தலித் சமூகத்தில், ஓரளவு நில உடமை பெற்று , உயர் கல்வியும் பெற்று இன்று பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள். அதன் விளைவாக , கூடுதலாகவே சமூக் உணர்வும் போராட்ட உணர்வும் பெற்றுள்ளார்கள். ஆனால் அவர்களிடையே ஒன்றுபட்ட சரியான அரசியல் இல்லை. குறைந்தது 6 அணிகளாக உள்ளனர். இதன் காரணமாக , அதிமுக அரசின் வெளிப்படையான ஜாதிய அடக்குமுறைக்கு எதிராக அவர்களால் இதுவரை வெற்றிகரமாகப் போராட முடியவில்லை. காங்கிரஸ் வழி காட்டவேண்டும்
------------------------------------------------------------------
====================================================
30
இன்று தினகரன் பத்திரிகையில், வெளிவந்துள்ள மார்க்சிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணனின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய செய்தி வந்துள்ளது. அவர் கிரானைட் ஊழலில் முழுப் பொறுப்பும் அதிமுக தான் ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார். மிகவும் விபரமாக விளக்கியுள்ளார். ஆனால் திண்டு வேறுவிதமாக வெளியிட்டுள்ளது. கவனம்.
-------------------------------------------------------------------------------------
30
அரவக்குறிச்சி திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.99.11 கோடி .........ஜோதிமணி பிழைத்தார்! பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், சொத்து இருப்பவர்கள்தான் , தேர்தலில் போட்டியிடமுடியும் என்று இருந்தது. இப்போது,உண்மையான மக்களாட்சி மலரவேண்டுமாயின், சொத்து உள்ளவர்கள், தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சட்டம் அமைந்தால் நல்லது. ஒரு பக்கம் அதிமுக அமைச்சர். இன்னொருபக்கம் திமுக வேட்பாளர். ஜோதிமனியால் ஈடு கொடுத்திருக்க முடியுமா? எல்லாம் நன்மைக்கே.
------------------------------------------------------------------------------------
30
கம்யூனிஸ்டுகள் தலைமையில், மற்ற இயக்கங்களின் துணையோடு , ஒரு திட்டவட்ட இடதுசாரி அறிக்கையுடன் கூட்டணி அமைவதுதான் சிறப்பு. அப்படிப்பட்ட கூட்டணிகள் தான், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் அமைந்து வந்திருக்கின்றன. வெற்றியும் பெற்று வந்திருக்கின்றன. பீகாரில் கூட, அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில், cpi, cpi-m,cpi-ml(liberation) , suci மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. வெற்றி தோல்வியைவிட , தெளிவான மாற்றுக் கொள்கை அரசியல்தான் முதன்மை பெறவேண்டும். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் நேரடியாகத் தேர்தலில் பங்கெடுக்காத காலத்தில், இப்படித்தான் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. பெரும் செல்வாக்கு பெற்று திகழ்ந்தது. ஒரு சில இடங்களுக்காக சந்தர்ப்பவாதக் கூட்டணி அதுவும், ராஜாஜியின் சுதந்திராக் கட்சியுடன் ! அதிலிருந்து ஏற்பட்ட சரிவு ( 1967) மார்க்சிஸ்ட் கட்சி மீளவேயில்லை. .மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறவும் முடியாது. மார்க்சிஸ்ட் தலைவர் துணை முதல்வராகவும் முடியாது. நல்ல வேளை!
------------------------------------------------------------------------------------
30
இளங்கோவன் பேசுகிறார் என்றாலே சர வெடி படபடவென்று வெடிக்கும். கேலி, கிண்டலுக்குப் பஞ்சமே இருக்காது. இனிமேல்தான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை என்றால் என்ன என்பது மக்களுக்குப் புரியப்போகிறது. வாழ்த்துக்கள். ..நையாண்டி, நக்கல் , கண்டிப்பாக வேண்டும். கூட்டத்திற்கு வருபவர்கள் சிரித்துச் சிந்திக்க வேண்டும். ஆவேச வெத்துவேட்டுகளின் கோமாளிக் கூத்துகளை் மக்கள் இந்த இரண்டு வாரங்களில் நன்றாகவே தெரிந்து கொண்டுள்ளார்கள். ..கேலியாகப் பேசும்போது, சற்றும் விரசம் சேர்ந்துவிடாமல் கவனமாக இருங்கள். ..சொல்லாமல் விட்ட கோடிட்ட இடங்களைப் பொதுமக்களே புரிந்துகொள்ளும்படி பேசுங்கள். 41 இடங்களையும் காங்கிரஸ் இந்த முறை வென்று காட்ட வேண்டும். கண்டிப்பாக முடியும். அரசியல்வாதிப் பெண்களைப் பற்றிப் பேசும்போது கவனம் தேவை. வெல்க....AND PLEASE TAKE CARE OF YOUR HEALTH TOO. THIS SUMMER TOO HOT.
------------------------------------------------------------------------
30
திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: கருணாநிதி. ( thindu today) பண பலம், தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் உதவி, இல்லாமல் இருந்தால், அதிமுக மாபெரும் தோல்வி காண்பது உறுதி. இந்தத் தேர்தலில், திமுக சார்பாக ஸ்டாலின் செய்து வரும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள், அவரது மக்கள் தொடர்பு முறைகள், அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் , கூட்டணிக் கட்சியினருக்கும் சேர்த்து அவரும், கனிமொழியும் கட்சி வேறுபாடு கடந்து பல முறை சென்று தமிழகமெங்கும் நடத்திவரும் பிரச்சாரம், கண்டிப்பாக பலன் தரும். புதிய வாக்காளர்கள் ஒரு கோடியே இருந்தாலும் என்ன? அவர்கள் வரவேற்காத அம்சம் எதுவும், திமுக தேர்தல அறிக்கையில் உள்ளதா? பெண்கள்தான் அதிக எண்ணிக்கை என்கிறது தேர்தல் கமிஷன். .புதிய வாக்காளர்கள் அனைவரும் 'குடி' மகன்களாக இருப்பதை பெண்கள் விரும்புகிறார்களா? பொதுவாக தமிழக மக்கள் , கூட்டணி அரசை விரும்ப மாட்டார்கள் என்று கலைஞர் பலமுறை கூறியுள்ளார். அதற்கான தேவை ஏற்பட்டால் மட்டுமே கூட்டணி அரசு என்று தெளிவாக கூறியுள்ளார். .தேவை ஏற்படாது.! மைனாரிட்டி அரசாக இருந்தாலும் காங்கிரஸ் அவரை ஆதரிக்கவில்லையா?என்றும் ஆதரிக்கும். கடந்த காலத் தவறுகள் களையப்படும்.
-----------------------------------------------------------------
ILANGOVAN TODAY AT MADURAI "மக்கள் நலக் கூட்டணியில் 6 பேரும் ஒவ்வொரு திசையில் உள்ளனர். 4 பேர் பல்லக்கு தூக்க ஒருவர் சங்கு ஊத, மற்றொருவர் படுத்திருக்கிறார்"
---------------------------------------------------------------
30
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, கிரானைட் முறைகேடு நடந்தது திமுக ஆட்சியில்தான் என்றும், அந்த முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான் என்றும் கூறியுள்ளார். இது பொய்யான தகவலாகும். கடந்த 25 ஆண்டுகளில், அதிமுக 3 முறை ஆட்சியில் இருந்துள்ளது. இந்த காலகட்டத்தில்தான் கிரானைட் மலைகள் மொட்டையடிக்கப்பட்டுள்ளன.மதுரை மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனராக சண்முகவேல் இரண்டாண்டுகள் (29.8.2003 முதல் 1.8.2005) பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கீழவளவு, இடையபட்டி, கீழையூர், எரவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கிரானைட் நிறுவனங்கள் குத்தகை காலம் முடிந்த பிறகும், ெதாடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. திருவாதவூர் கிராமத்தின் புராதன சின்னங்களுக்கு அருகே குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டது.
இவை அனைத்தும் அதிமுக ஆட்சி காலத்தில்தான் நடந்தன. அதைப்போல, தாதுமணல் ெகாள்ளையும், ஆற்றுமணல் கொள்ளையும் இக்காலகட்டத்தில்தான் நடந்தன. இந்த முறைகேடுகளில் அதிமுகவுக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில், மதுரை கலெக்டராக இருந்த சகாயம், கிரானைட் முறைகேடு குறித்து ரகசியமாக ஆய்வு செய்து, ரூ.16 ஆயிரம் கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தார். சில தினங்களிலேயே சகாயம் மாற்றப்பட்டார். அதிமுக ஆட்சிக்காலத்தில்தான், மதுரை கலெக்டர்கள் சகாயம், அன்சுல் மிஸ்ரா போன்றவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.உண்மையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்திருந்தால், கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த கலெக்டர் சகாயத்தை ஏன் மாற்ற வேண்டும்? கிரானைட் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை வராமல் தடுக்கும் நோக்கில்தான், அதிமுக அரசின் நடவடிக்கைகள் இருந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார். - See more at:
-------------------------------------------------------------------
30
சரியான திசையில் மாற்றத்திற்கான தொடக்கம்? தோழர் ராமகிருஷ்ணன் அவர்களே! ? கிரானைட் கொள்ளையில், அதிமுக தான் முதல் பெரும் குற்றவாளி என்ற நிலைப்பாட்டில் நிலைத்து நில்லுங்கள். !
-------------------------------------------------------------------
http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=2762
-------------------------------------------------------------------
30
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 112 முதல் 124 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கும், அதிமுக அணிக்கு 67 முதல் 90 இடங்களும், மக்கள் நலக் கூட்டணிக்கு 5 முதல் 11 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 3 முதல் 7 தொகுதிகளும், பா.ஜ.க. கூட்டணி 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு 37 சதவீதம் பேர் ஆதரவும், அதேபோல் அதிமுக தலைமையிலான ஆட்சிக்கு 32 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் நம்பிக்கை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை மக்களிடையே 2-ம் இடம் பிடித்துள்ளது.
-------------------------------------------------------------------------
திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: கருணாநிதி. ( thindu today) பண பலம், தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் உதவி, இல்லாமல் இருந்தால், அதிமுக மாபெரும் தோல்வி காண்பது உறுதி. இந்தத் தேர்தலில், திமுக சார்பாக ஸ்டாலின் செய்து வரும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள், அவரது மக்கள் தொடர்பு முறைகள், அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் , கூட்டணிக் கட்சியினருக்கும் சேர்த்து அவரும், கனிமொழியும் கட்சி வேறுபாடு கடந்து பல முறை சென்று தமிழகமெங்கும் நடத்திவரும் பிரச்சாரம், கண்டிப்பாக பலன் தரும். புதிய வாக்காளர்கள் ஒரு கோடியே இருந்தாலும் என்ன? அவர்கள் வரவேற்காத அம்சம் எதுவும், திமுக தேர்தல அறிக்கையில் உள்ளதா? பெண்கள்தான் அதிக எண்ணிக்கை என்கிறது தேர்தல் கமிஷன். .புதிய வாக்காளர்கள் அனைவரும் 'குடி' மகன்களாக இருப்பதை பெண்கள் விரும்புகிறார்களா? பொதுவாக தமிழக மக்கள் , கூட்டணி அரசை விரும்ப மாட்டார்கள் என்று கலைஞர் பலமுறை கூறியுள்ளார். அதற்கான தேவை ஏற்பட்டால் மட்டுமே கூட்டணி அரசு என்று தெளிவாக கூறியுள்ளார். .தேவை ஏற்படாது.! மைனாரிட்டி அரசாக இருந்தாலும் காங்கிரஸ் அவரை ஆதரிக்கவில்லையா?என்றும் ஆதரிக்கும். கடந்த காலத் தவறுகள் களையப்படும்.
=====================================================
end of posts in april