------------------------------------------------------------------------------
15-5
உலகில் உள்ள சிறந்த அறிவாளிகள், பணக்காரர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்......இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க-இந்திய எரிசக்தி உச்சிமாநாட்டில் அவர் பேசியது: பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய ஒரு சமூகத்தை நாம் உலகம் முழுவதும் கட்டமைத்துள்ளோம். உலகில் உள்ள சிறந்த அறிவாளிகள், பணக்காரர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக ஏழைகளின் பிரச்னைகள் உரிய கவனம் பெறுவதில்லை. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படுவதில்லை.......இந்தியாவில் 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 30 கோடி பேர் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். அதேசமயத்தில் மென்மேலும் பணக்காரர்களாகி வருபவர்களை நாடு கொண்டாடி வருகிறது என்றார் சாம் பிட்ரோடா.
-----------------------------------------------------------------
15-5
ஒரு ஓட்டு எல்லாவற்றையும் மாற்றிவிடுமா?சமஸ்
======
தொடரும் சமஸின் பிலாக்கணம் ! 'ஒரு ஓட்டுல தோத்துட்டாராம்'. ..இது என்ன உளறல்? கட்டுரைத் தொடர் முழுவதும், இப்போதுள்ள தேர்தல் முறைக்கு வக்காலத்து வாங்கி, தவறு மக்களிடம்தான் ' என்றும் ;தேவன் வருவாரா?' என்று போலி ஏக்கமும் தான் உள்ளது. ..ஒரு தொகுதியில், ஒரு லட்சம் வாக்காளார்கள் இருந்தால், குறைந்தது 75% வாக்காளர்களாவது வாக்களித்திருக்க வேண்டும் , அதில் வெல்லும் வேட்பாளருக்கும் அடுத்து வரும் வேட்பாளருக்கும் குறைந்தது 10% வாக்குகள் வித்தியாசம் இருக்கவேண்டும் இல்லையேல் மறு தேர்தல் நடத்த வேண்டும் . புதிய கருத்துகள் எதையேனும் முன்வைக்காமல், பக்கத்தை வீணடிப்பது ஏன்? சுதந்திரப் போராட்டத் தலைமுறை வேறு. இந்தத் தலைமுறை வேறு. நமது நாட்டில், அனைத்து மாநிலங்களிலும், அனைத்து இயக்கங்கள், கட்சிகளையும் முதலாளித்துவ குலாக்குகள் சீரழித்து விட்டனர். நம் முன்னே இரண்டு வழிகள்தான் உண்டு . 1) இந்த போலி மக்களாட்சியை ஒதுக்கி, உழைக்கும் மக்களின் அரசை நிறுவ தேவையான இயக்கங்களை வளர்த்தெடுப்பது..2 ) அல்லது சீர்திருத்த யோசனைகளை ஆழ்ந்து சிந்தித்து முன்வைப்பது.! இங்கு இரண்டுமில்லை
-------------------------------------------------------------------
thindu ...பணநாயகத்தை ஒழித்துக்கட்டுவோம்!...... அரவிந்தன்
கே.கே.மகேஷ் BROTHER! இதெல்லாம் நடக்கிற காரியமில்லை. ஆனால், தீர்வு மிகவும் எளிது. எந்தக் கட்சிக்காரன் பணம் கொடுத்தாலும், வாங்கிக்கொண்டு, சத்தியமும் செய்து கொடுத்துவிட்டு, நமது இஷ்டம் போல வாக்களிக்க வேண்டும். நோட்டா உட்பட!. ..கோடிக்கணக்கில் கொடுத்தும் எவனுமே வாக்களிக்கவில்லை என்று தெரிந்தால், அடுத்த தேர்தலில் பணபலம் தோற்கும். மக்களுக்குப் பொய் சொல்லக் கற்றுக்கொடுங்கள்.! 'நன்மை பயக்குமெனின்' பொய் சொல்வது நல்லது என்பது வள்ளுவர் வாக்கு.! ..வாக்களிப்பிற்கும் பொருந்தும். பெட்டைப் புலம்பல் போருக்குத் துணையல்ல. ...மேலும், எந்த ஒரு மாநிலத்திலும் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு, ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் மாற்றப்பட்டு, மொழி தெரிந்த மாற்று மாநில அதிகாரிகள் , நிர்வாகத்தை ஏற்க வேண்டும். எந்த ஒரு மாநில உயர் நீதி மன்றத்திலும், அந்த மாநில நீதிபதி இருக்கக் கூடாது. மாநில போலிஸ் பணியை ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் மட்டுமே அந்த ஒரு மாதத்தில் செய்ய வேண்டும்.
---------------------------------------------------------------------------------
16-5
SHANMUGASUNDARAM INTERVIEW WITH DK VEERAMANAI. மிகவும் அருமையான பதிவு. ...95% சரியான விளக்கம். தந்துள்ளார் வீரமணி அவர்கள். ..இருந்தாலும், குலக் கல்வி முறையை ஒழித்து, கிராமத்து ஏழை பாழைகள் வீட்டுக் குழந்தைகள் எல்லாரும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வழி வகுத்தவர் காமராஜர். அது காங்கிரஸ் கட்சியின் சாதனை. அதனால்தான், பெரியார் , காமராஜருக்கு முழு ஆதரவு கொடுத்தார். அதே போல , பின்தங்கிய வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கையை ஏற்று நேருவின் மூலம் ,அரசியல் சாசனத்தில் முதல் முதல் திருத்தம் செய்து வழிகாட்டியதும் காமராஜரின் காங்கிரஸ். கூறப் போனால், திராவிட கட்சிகள், ( அறிஞர் அண்ணா, கலைஞர் , எம்.ஜி.ஆர்) காமராஜரின் சீரிய திட்டங்களைத்தான் நடைமுறைப் படுத்தி வருகின்றன. இந்திரா காந்தியும் அவ்வாறே, திராவிடக் கட்சித் தலைவர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருந்தார். உலகம் மாறி வருகின்றது. 1990 க்குப் பிறகு, கலைஞரின் திமுக ,காங்கிரஸ் இரண்டும், அண்மையில் ஸ்டாலின் குறிப்பிட்டது போல , ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்'. . அம்மணி, வைகோ பாதை வேறு!
-------------------------------------------------------
17-5
இறுதி முடிவு இன்னமும் வெளிவரவில்லை எனினும்.. 1) ஆறுமுக கூட்டணியும், மருத்துவர் கட்சியும் , குறிப்பிடத்தக்க இடங்கள் பெறாவிடினும், 5% வாக்குகள் கூடப் பெறவில்லை எனின், அவர்களது நித்திய அறிக்கைகள், நடவடிக்கைகளை ,ஊடகங்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். ..குறிப்பாக திண்டு! . கடந்த 25 ஆண்டுகளாக , தமிழக மக்கள் இந்த அரசியல் வாதிகளை , தொடர்ந்து தள்ளி வைத்துள்ளார்கள். 2) இம்முறை கலைஞர் ஆட்சி அமைந்தால், ( நிச்சயம் அமையும் !), கீழ்க்கண்டவற்றை பின்பற்றினால், அதிமுக அராஜகத்திற்கு உண்மையான மாற்று சட்டமன்றம் அமையும். a) சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் விடியோ செய்யப்பட்டு ஒளி பரப்பப்பட வேண்டும். b) அவை archive செய்து காப்பாற்றப் படவேண்டும். c) ஒவ்வொரு மாதமும், இறுதி வாரத்தில், ஐந்து நாட்களும் சட்டமன்ற விவாதம் நடக்க வேண்டும். d) மாற்றுக் கட்சினர் பேசும்போது , கண்டிப்பாக 'மௌன விரதம் ' பூண வேண்டும். ஒவ்வொரு அமர்விலும், ஆளும் கட்சியின் தலைவர் தனது கட்சியினருக்கு இந்த எச்சரிக்கை கொடுக்க வேண்டும் நாட்டிற்கே சிறந்த முன்னுதாரணமாக திகழும் +ஒரு வேளை , அம்மணியும் சட்டமன்றத்தில் புகுந்து விட்டால், கண்டிப்பாக , அன்றாடம் கூச்சல், குழப்பம், கலாட்டா, மேஜை தட்டல், ..இன்னமும் நாம் அறியாத பல விதங்களிலும் , திமுகவை எரிச்சல் அடையச் செய்வார்கள், . எனவே, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களும், அவர்களுக்கு கொடுத்துவிட்டு, வியாழன் வெள்ளி அன்று ஆளும் கட்சியினர் பதில் கூறும்படி ,விதிகள் அமைத்துக் கொண்டு மீறுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். விடியோ இருந்தால், மக்களே எந்தப் பக்கம் நியாயம் என்று தெரிந்து கொள்வார்கள். மேல்சபை வருகிறது. துறை வல்லுனர்கள், அங்கு தங்களது யோசனைகளை முன்வைப்பார்கள். அது போதுமானது. . உண்மையில், இந்த காலத்தில் , எல்லா மாநிலங்களிலும், சட்ட மன்றம் ( ஏன் ! நாடாளுமன்றமும் கூட, வெறும் சந்தைக்கூடம். மட்டுமே! ). அவைத் தலைவரால், ஒழுங்கு பராமரிக்க முடியவில்லை. குறுக்கே பேசுவது, நக்கல் அடிப்பது, இல்லையெனில், வேண்டுமென்றே கொட்டாவி விட்டுத் தூங்குவது போல நடிப்பது, அவைத்தலைவர் இருக்கை முன்பு கூச்சல் போடுவது... இதுதான் இன்றைய மக்களாட்சி. ..மாற்றம் வரவேண்டும்.
------------------------------------
17-5
அனுபவம் மிகுந்த அரசியல் தொண்டர் கூற்றுப்படி, மாற்றம் வேண்டும் என்று விரும்பியவர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர்! ..விரக்தியிலும், சோம்பலினாலும் ( டைப் செய்கையில் 'சொம்பு' என்று வருகிறது! ) others ...வாக்களிக்க வரவே இல்லை! .."இன்னும் இரண்டு நாட்களில் தெரியத் தானே போகிறது! ". பிறகு கமெண்ட் அடிப்போம்
-------------------------------------------------------------------------------
17-5
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய பகுதிகளிலும் பலத்தமழை பெய்ததால் ஏரியில் அதிக அளவு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 120 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:–
தாமரைப்பாக்கம்-37, செங்குன்றம்-30,பொன்னேரி-32,அம்பத்தூர்-26, திருவள்ளூர் - 15,பூண்டி-14, திருத்தணி-12
பலத்த மழை காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
காஞ்சீபுரத்தில் இன்று காலை 3 மணி அளவில் திடீரென பலத்த மழை கொட்டியது. பின்னர் சாரல் மழையாக விடிய விடிய நீடித்தது. இதனால் மேட்டுத் தெரு, மூங்கில் மண்டபம், பஸ்நிலையம் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய
---------------------------------------------------------------------------------
17-5
A RARE GOOD POST FROM A.MARX புவனேஸ்வரத்தில் சீனியர் ஜர்னலிஸ்ட் ரபிதாசுடன்.
நக்சல்பாரி இயக்கங்களின் எதிர்காலம் பற்றிப் பேச்சு வந்தது. மா ஓயிஸ்டுகளைப் பற்றிப் பேசும்போது அவர்களுக்கு மக்களுடன் உறவாட அணிகள் இல்லை என்றார். ஆமாம் அவர்களிடம் 'கேடட்' கள்தான் உள்ளனர் ' கேடர்' கள் இல்லை என்றேன். ரசித்தார்.
சிபி ஐ எம் எல் லிபரேஷனைப் பற்றிக் கேட்டேன். ஒருகாலத்தில் பலமாகத்தான் இருந்தார்கள். இப்போது உடைந்து கொண்டே போகிறார்கள என்றார். தமிழ் நாட்டில் எப்படி என்றார். அங்கும் உடைந்துதான் போயுள்ளார்கள். ஆனால் உடைந்துபோனவர்கள் மார்க்சீயத்தை விட்டே போய்விட்டார்கள் என்றேன். திகைத்தார். வாட் வாட் என்றார். அவர்கள் தமிழ்த் தேசியத்துக்குப் போய்விட்டார்கள் they are more Tamil nationalists than Tamil nationalists என்றேன்.
ஒ.... என்றார்.
----------------------------------------------------------------------------------
17-5
சற்று மாற்றித்தான் யோசிப்போமே! இது கணினி யுகமல்லவா! குறிப்பாக, smart phone இல்லாத குடும்பங்களே இல்லை. அரசு மனம் வைத்தால், அனைவருக்கும், இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் phone மிகவும் குறைந்த விலையில் தர முடியும். எப்படி ஆதார்அட்டை
கட்டாயம் என்று சொல்கிறோமோ அதே போல, ஸ்மார்ட் போனும் கட்டாயம் எனலாம். லட்சக் கணக்கான கணினித் துறை 'விற்பன்னர்கள்' நிறைந்த நமது நாட்டில், ஸ்மார்ட் போன் மூலம் தேர்தல் நடத்தினால் என்ன? இதை முறைகேடுகள் எதுவும் இல்லாமல் நடத்துவது எப்படி என்ற ஆராய்ச்சிக்கு மத்திய அரசு முதன்மை கொடுத்து முயற்சியை தொடங்கினால் என்ன? வங்கி பணப் பரிவர்த்தனையே இவ்வாறு நடக்கும் போது , தேர்தல் நடத்த முடியாதா? எவ்வளவோ நன்மைகள் அதில் உண்டு.! கட்சிகளுக்கும், வேட்பாளருக்கும், மக்களுக்கும் ,அரசாங்கத்துக்கும் செலவு மிகவும் குறையும். மேலும், தேர்தல் வாக்களிப்பு காலம் ஒரு வாரம் வரை தர முடியும். அவசரம் ஒன்றுமில்லை. அவரவர் சௌகர்யப்படி வாக்களிக்கலாம். போலிஸ், பறக்கும் படை, பூத் ஏஜென்ட், ராணுவம், அதிகார துஷ்பிரயோகம், போன்ற பத்தாம்பசலி மௌடிகம் ஒழியும்.
-------------------------------------------------------------------------------
18-5
Bhupendranath Datta...பூபேந்த்ரநாத் தத்தா "Bhupendranath Dutta is the pioneer in spreading the ideals of Marx and Lenin in India, though he was not a member of the Communist Party. He started his career as a ‘nationalist revolutionery’ Bhupendranath Dutta. He was imprisoned for being the editor of the agazine,’Jugantar’. After his release he secretly went to the USA, and in the beginning of the First World War, an organization, known as ‘Berlin Committee’ came up with the Indian students and youth living abroad, whose aim was to free India from British rulers. Bhupendranath joined them, and later became the secretary of the organization. On his return to India in 1925 he established a number of organizations for the workers and peasants of the country. Bhupendranath Dutta, brother of Swami Vivekananda, took to writing to spread his socialistic ideals.
---------------------------------------------------------------------------------
18-5
தந்தி டிவி கணிப்பு.. ....அதிமுக வெற்றி பெறும் என்று கூறப்படும் தொகுதிகளில், பின்வரும் 15 தொகுதிகள் இல்லை. 1) ஹோசூர் 2) ஊட்டி 3) செய்யாறு 4) காட்டுமன்னார்கோயில் 5) ஸ்ரீபெரும்புதூர் 6) காரைக்குடி 7) வேதாரண்யம் 8) குளச்சல் 9) கிள்ளியூர் 10) ஆத்தூர் 11) விளவங்கோடு 12) நாங்குநேரி 13) நன்னிலம் 14) சோளிங்கர் 15) திருத்தணி ...அனைத்து கருத்துக் கணிப்புகளும் , அதிமுக வுக்கும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் மட்டுமே உண்மையான போட்டி என்று கணித்திருக்கின்றன. ..மேற்கூறிய 15 தொகுதிகளிலும் , திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே , இந்த 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி மிகவும் உறுதி. .இதற்கு மேலும் வெற்றிகள் கிடைக்க வாய்ப்புண்டு. மொத்தம் 41 தொகுதிகளில், போட்டியிட்டு 20 தொகுதிகளிலேனும் காங்கிரஸ் வெற்றி பெறுவது, நிச்சயம் தமிழ்நாட்டில் ஒரு திருப்புமுனை. மேலும் வளரும்........ வாசன் கூட்டம் கேலிக்கிடமாகி கரைந்து மறைந்துவிடும்
---------------------------------------------------------------
19-5
CHE ON STALIN. . .
"My duty, as a Marxist-Leninist Communist is to unmask the reactionaries hidden behind revisionism, opportunism, and trotskyism; and to teach comrades (both in theory and practice) not to accept as valid those judgments against Stalin formulated by the bourgeoisie, the social-democrats, and especially those pseudo-communist lackeys of reaction whose true goal is to destroy the workers' movement from within." -che
-----------------------------------------------------------
19-5
1)நமது தேர்தல் முறை முற்றிலும் தவறு என்பதை, இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப் படுத்துகின்றன. விகிதாசாரப் பிரதிநிதித்வம் கண்டிப்பாக வேண்டும். ..2) திமுக தேர்தல் அறிக்கை, ஸ்டாலின் மற்றும் கனிமொழியின் அற்புத தேர்தல் பிரசார முறை ..இவற்றிற்கு பலன் இல்லாமல் போகவில்லை. விரைவில் தெரியும். 3) வைகோ அமைத்த கூட்டணி , பினாமி கூட்டணி என்பதும் அதன் முதல் நோக்கமே அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து,அம்மணி வெற்றி பெற உதவுவதுதான் என்பது தெளிவாகியுள்ளது. 4) இறுதியான, வாக்கு விபரங்கள் ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு மேஜர் கட்சிக்கும் கிடைத்த பின்னர், வெற்றி பெற்ற கட்சிக்கும், அடுத்து வந்த கட்சிக்கும் , மூன்றாவதாக வந்த கட்சிக்கும் கிடைத்த வாக்குகளை கவனமாகப் பரிசீலித்து பார்த்தால், வைகோ கூட்டணியின் விஷமம் வெளிவரும். 5) விஜயகாந்த் கட்சி போட்டியிட்ட இடங்களில், அதிமுக வெற்றி மார்ஜின் எவ்வளவு என்பதும் இதை உறுதிப்படுத்தும். 6) காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்களில் அருமையாக வெற்றி பெற்றுள்ளது. . .7) தமிழக மக்களுக்கு வைகோ இழைத்தள்ள துரோகம்
------------------------------------------------------------------------------------
19-5
இளங்கோவன் கூறியுள்ளது அனைத்தும் உண்மை. ...தமிழ்நாடு காங்கிரசின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கிருஷ்ணசாமியும், ராமதாசும், சம்பந்திகள்! 234 தொகுதிகளிலும் வெல்வோம் என்று ராமதாசும், வைகோவும் கூவியது எல்லாம் அடுத்த தேர்தலில், அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படவேண்டும். இந்த இருவருக்கும் விக்குக்கும் இனி எந்த ஊடகமும் விளம்பரம் தரக்கூடாது. மேலும், அதிமுகவில் அதிருப்தி நிறையவே உள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள், அதிமுக உடைய வேண்டும். அதுவே உடைந்தாலும் உடையும். முயற்சி திருவினையாக்கும்.
------------------------------------------------------------------------------------------
19-5
ஜெ. வெற்றிக்கு விஜயகாந்த், ராமதாஸ் காரணம்: இளங்கோவன்
---------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
20-5
IN WEST BENGAL , WHILE WE ARE NOT AVERSE TO CONGRATULATE MAMTHA BANERJI, ( AFTER ALL, HER THRINAMOOL CONGRESS IS A BRANCH OF INC TRADITION, THAT TOO OF INDIRA GANDHI), IT SHOULD BE NOTED THAT CONGRESS HAS WON 44 SEATS WHILE THE LEFT FRONT HAS WON 32 ONLY ( OF THIS CPM 26!)....ONLY BLIND FOOLS WILL MISS THE SIGNIFICANCE. INDIAN NATIONAL CONGRESS IS REGAINING CONTROL OF WEST BENGAL! REMEMBER THAT IT WAS CPM WHICH TOOK THE INITIATIVE TO FORGE ALLIANCE WITH CONGRESS.
-----------------------------------------------------------------------------
20-5
திமுக , அதிமுக இரண்டும் சேர்ந்து 72 % ஆகிறது. .காங்கிரஸ் கட்சி அடுத்து குறைந்தது 18% உள்ளது . பி.ஜே.பி. இங்கு காலூன்ற முடியாது. இடதுசாரிக் கட்சிகள் மக்களிடையே மதிப்பிழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. திமுக, அல்லது அதிமுக இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்துப் பெற்றவைதான், இதுவரை கடந்த 50 ஆண்டுகளாக பெற்ற இடங்கள். பாட்டாளி மக்கள் கட்சி கனவுலகில் சஞ்சரிக்கிறது. விஜயகாந்த் கட்சி இதோடு க்ளோஸ். ..வைகோ கட்சிக்கு மதிப்பு என்றோ சரிந்துவிட்டது. இனி மீண்டெழ சிறிதும் வாய்ப்பில்லை. ...ஆனால், திமுக வில் அழகிரி மற்றும் சில மாவட்ட செயலர்கள், கட்சியை பிளக்க சதி செய்துகொண்டுதான் உள்ளார்கள். அதே போல அதிமுகவில், அனைவரும் அறிந்துள்ளபடியே , ஐவர் அணிக்கும் ,தோழி அணிக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இப்போதுள்ள திமுக, அதிமுக கட்சிக் கோப்பு இன்னும் ஐந்தாண்டுகளில் இப்படியே நீடிக்கும் என்று கருத இடமில்லை. அகில இந்திய அளவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தேசிய கட்சி காங்கிரஸ்.- திமுக alliance வெல்லும். நீடிக்கும்
-------------------------------------------------------------------------------------
20-5
-----
HEARTY CONGRATULATIONS TO INC PARTY WORKERS, ESPECIALLY, VIJAYADHARANI FOR THE SPLENDID SWEEP AMIDST MULTI-PRONGED ATTACK FROM BJP, AND ADMK ... ...OF THE 8 WON BY INC, APART FROM THE THREE IN KUMARI DISTRICT, NANGUNERI, KARAIKKUDI, MUTHUKULATTHOOR ARE ALL IN SOUTH ZONE , EVEN IN THENKASI AND SRIVAIKUNDAM, THE MARGIN OF LOSS IS SLENDER. ADMITTEDLY, THE WEST IS A KNOWN STRONGHOLD OF ADMK. ( WONDERING..WHY?)...BUT INC CAN MATCH IT IN ITS STRENGTH IN THE SOUTH. THE PARTY SHOULD IMMEDIATELY FORM ZONAL COMMITTEES FOR SOUTH AND BUILD UP AN IMPREGNABLE CONGRESS BASTION
-----------------------------------------------------------------------------------
-----------------------
21-5
அதிமுக அறிவிலிகளின் கவனத்திற்கு...
16 தொகுதிகளின் முடிவை நிர்ணயித்த NOTA..
விபரம் வருமாறு. ஆவடி , பர்கூர் , சிதம்பரம் , கரூர்
, காட்டுமன்னார்கோயில் ,கிணத்துக்கடவு
கோவில்பட்டி ,மொடக்குறிச்சி ஓட்டபிடாரம் பெரம்பூர்
பேராவூரணி ராதாபுரம் தென்காசி திருப்போரூர் தி.நகர்
விருகம்பாக்கம்.......தொகுதி WINNER LOSER MARGIN NOTA
1 ஆவடி ADMK DMK 1395 4994
2 பர்கூர் ,, DMK 982 1382
3 சிதம்பரம் ,, DMK 1506 1724
4 கரூர் ,, காங்கிரஸ் ,, 3154 3595
5 காட்டுமன்னார்கோயில் ,, VC 87 1025
6 கிணத்துக்கடவு ,, DMK, 1382 3884
7 கோவில்பட்டி ,, DMK 428 2350
8 மொடக்குறிச்சி ,, DMK, 2222 2715
9 ஓட்டபிடாரம் ,, P.T. 393 2612
10 பெரம்பூர் ,, DMK 519 3167
11 பேராவூரணி ,, DMK 995 1294
12 ராதாபுரம் ,, DMK 49 1821
13 தென்காசி ,, ,,காங்கிரஸ் 462 3391
14 திருப்போரூர் ,, DMK 950 2116
15 தி.நகர் ,, DMK, 3155 3570
16 விருகம்பாக்கம் ,, DMK 2333 3897
-------------------------------------------------------------------------------------
21-5
HUMBLE HOMAGE TO RAJEEV GANDHI ...A VICTIM OF DASTARDLY CRIME ABETTED BY TAMIL SEPARATISTS . TODAY IS HIS MARTYRDOM DAY. WE WILL AVENGE
--------------------------------------------------------------------------
21-5
வடக்கு மாவட்டங்களில், ராஜாஜி காலத்திலேயே வன்னியர் சமுதாயக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் பின்னர் அவர்களை கட்சிக்குள்ளேயே கொண்டுவந்தது காங்கிரஸ். இதன் மூலம், அந்த மாவட்டங்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் ஆதரவை இழந்தது. அந்நாட்களில், வடக்கு மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சி பெற்று ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாக இடம் பெற்று படிப்படியாக 1967 ல் , காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தது. பின்னர் இந்திரா காந்தி, கலைஞர், எம்.ஜி.ஆர், காலங்களிலும், திமுக ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாகவே விளங்கி வந்துள்ளது. ... வன்னியர்கள் பா.ம.க.வில் ,மட்டும் இல்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக எல்லாவற்றிலும் உள்ளார்கள். அதே போல , வட மாவட்டங்களின் தலித்துகள், திருமா பின்னர் இல்லை. திமுக , காங்கிரஸ் பின்னால்
உள்ளார்கள். தமிழக அரசியலைப் புரிந்துகொள்ள, அது மைய அரசில் நேரும் மாற்றங்களோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை உணரவேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் , மாநில அரசியல் நிகழ்வுகளில் எப்போதும் தாக்கம் கொள்கிறது. பா.ம, க, உருவானது , எதற்காக, என்று தெளிவில்லை
----------------------------------------------------------------------------
21-5
தமிழ்நாட்டில், கடந்த 100 ஆண்டுகளில் ( 1915-2015), மூன்று அரசியல் கருத்தாக்கங்கள் போட்டியிட்டு வந்துள்ளன. 1) காங்கிரஸ் இயக்கத்தின் இந்திய தேசியம் 2) இந்திய தேசியத்திற்கு எதிரான திராவிட பிரிவினை இயக்கம் 3) சோஷலிச, பொதுவுடைமை இயக்கம். ..நாடு சுதந்திரம் அடையும் முன்பு, இந்திய தேசிய இயக்கமும் , பொதுவுடைமை இயக்கமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் பொதுவாக ஒத்துழைத்து பணியாற்றின பெரும் செல்வாக்கு பெற்றன. .. பிரிவினைவாத இயக்கம் மக்களால் புறந்தள்ளப்பட்டது. ..மக்களின் மன நிலை அறிந்த அறிஞர் அண்ணா , திராவிட தேசிய பிரிவினை கோரிக்கையை கைவிட்டு நேருவின் இந்திய தேசியத்திற்கு உட்பட்ட தமிழ் தேசியமாக திமுக வை தோற்றுவித்தார். காமராஜர் ஆட்சி அமைந்தவுடன், ஈ.வே.ரா. அவர்களின் சமூக நீதி கொள்கைகள் பலவும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது... நேரு மறைந்து ,இந்திரா ஆட்சி மலர இடைப்பட்ட காலத்தில் ( 1964-1966) , வடநாட்டு காங்கிரஸ் பிற்போக்காளர்களின் ஹிந்தித் திணிப்பினால், 1967 ம ஆண்டு , ஆட்சி மாற்றம் நேர்ந்தது.. இரண்டு ஆண்டுகளுக்குள் அறிஞர் அண்ணா மறைந்துவிட்டார். கலைஞர் தலைமையில் ஆட்சி ஏற்பட்டது. , அதூல்ய கோஷ், எஸ்.கே.பாட்டில், நிஜலிங்கப்பா ,மொராஜி தேசாய், போன்ற பிற்போக்கு தலைவர்களை முறியடித்து காங்கிரஸ் கட்சியை நேரு பாதையில் மீண்டும் கொண்டு சென்ற சாதனையில், இந்திரா காந்திக்கு முழு ஆதரவு கொடுத்து , கலைஞர் , தமிழ்நாட்டின் முற்போக்கு மக்களின் மாபெரும் தலைவராக அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். ..முதலாளித்துவ, மதவாத அமெரிக்க ஆதரவு கும்பல் , 1974 முதல் கலவரம் செய்தபோது,அவர்களை ஒடுக்க இந்திரா அவசர நிலை கொண்டுவந்தபோது ,. கலைஞர் சற்று தடுமாறிவிட்டார். எம்.ஜி.ஆர். அப்போது , திராவிட இயக்கத்தை சரியான பாதையில் முன்னெடுத்துச் சென்றார். இந்திராவும் மறைந்து, எம்.ஜி.ஆரும் மறைந்த சூழலில், ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில், மீண்டும் காங்கிரஸ் வலுப்பெற பெரும் முயற்சி செய்தார். இன்று அவர் உயிர்த்தியாகம் செய்த நினைவு நாள். எம்ஜியார் , ராஜீவ் மறைந்த பின் கலைஞர் மீண்டும், காங்கிரஸ் இயக்கத்தின் நம்பகமான நட்பு சக்தியாக தொடர்கிறார். ஆனால், அதிமுகமும், மதிமுகமும் பிரிவினை வாதிகள் கவனம்.இடதுகள் ?.. INC should respect DMK and its young and mature leaders. ITS PRIMARY DUTY IS TO TAKE UP THE FIGHT AGAINST ADMK, AND THE VAIKO FRONT IN THE WESTERN ZONE AND SOUTHERN ZONE.
-----------------------------------------------------------------------
21-5
ஒரு தொடக்கப் பள்ளி மாணவனைக் கேட்டாலும் கூட, தமிழ்நாட்டில், கடந்த 25 ஆண்டுகளாக, அதிமுக முதற்பெரும் கட்சி, திமுக இரண்டாவது பெரிய கட்சி ,காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சி மற்றவையெல்லாம், இந்தத் தேர்தல் வரை, ஊறுகாய் கட்சிகள் என்று சரியாக கூறுவான். .. கடந்த மூன்று தேர்தல்களில், தேதிமுகம் மூன்றாவது இடத்திற்கு வருவது போல இருந்தது. இனி அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இப்போது, கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய வேண்டிய முதல் காரியம், வைகோ , ராமதாஸ், தேதிமுகம் மூவரையும் கனவிலும் நினைக்காமல், ( இந்த மூன்று கட்சிகளுமே, சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. கூட்டணியில் இருந்தவர்கள். என்பதை நினைவில் கொள்ளவும்!) இந்த மக்கள் நலக் கூட்டணி என்ற பினாமிக் கூட்டணியை கலைத்துவிட்டு வெளியேறி, கலைஞர்-காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக நிலை எடுத்து, தமிழ்நாட்டில் நாஜிகள் புகுவதைத் தடுப்பதுதான். தென் மாவட்ட , கிழக்கு மாவட்ட தொகுதிகளில், இந்த பினாமிகள் , அதிமுக வெற்றிக்குத் துணை போகியுள்ளனர் என்பது வாக்கு விவரங்களை ஆராயும்போது தெளிவாக தெரிகிறது.
--------------------------------------------------------------------------------
21-5
இன்னமும் கதை முடியவில்லை. ..வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. மேலும், காங்கிரஸ் மைய அரசில் பதவி ஏற்கும்போது, சட்டசபை நிலைமை மாறும். எனவே துவளாமல், தாக்குதலை மக்கள் திரள் போராட்டம் மூலம் சென்னையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெடுத்துச் செல்லுங்கள். தேர்தல் பிரச்சாரம் போலவே , வாரந்தோறும், அதிமுகவின் அக்ரமங்களை மீண்டும், மீண்டும் மக்களுக்கு எடுத்துச் சென்று போராட்டங்களைக் கட்டமையுங்கள். குறைபாடுகள் ஒன்றிரண்டல்ல. ஏராளம்.
------------------------------------------