8-5-2016
மதுரையில் நேற்று பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமான நிலையம் நோக்கி காரில் புறப்பட்டார். கூட்ட மேடையில் இருந்து 200 மீட்டர் தொலை வில் இருந்த தாகூர் நகரில் ஒரு சந்து வழியாக ராகுல் காந்தியின் கார் முன்னும், பின்பும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. சாலைகள், தெருக்களில் நின்றிருந்தவர்கள் ராகுல் காந்தியைப் பார்த்ததும் உற்சாகமாக கை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
அப்போது மணி என்பவர் தனது மனைவி, உறவினர்களுடன் ராகுல் காந் தியை பார்த்து மகிழ்ச்சியுடன் கை அசைத் தார். இதைக் கவனித்த ராகுல் காந்தி உடனே காரை நிறுத்தச் சொல்லி வேகமாக காரில் இருந்து இறங்கி மணியின் வீட்டை நோக்கி சென்றார். அங்கிருந்த அனை வரிடமும் கை கொடுத்து வணக்கம் தெரி வித்தார். இதனால் பதற்றமடைந்த பாது காப்பு அதிகாரிகள் ராகுல் காந்தியை சுற்றி நின்றனர். பின்னர் காரில் ஏறிய அவர் நத்தம் பிரதான சாலைக்கு வந்தார். அப்போது அவரைப் பார்க்க நின்றிருந்த ஏராளமான தொண்டர்கள், பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தி இருந்தனர். இவர்கள், ராகுல் காந்தியை பார்த்ததும் கரகோஷம் எழுப்பினர்.
உடனே மீண்டும் காரில் இருந்து இறங் கிய ராகுல் காந்தி தொண்டர் ஒருவருக்கு சால்வையை அணிவித்து சென்றார்.
பாதுகாப்புக் கெடுபிடியை மீறி ராகுல் இரண்டு முறை காரில் இருந்து இறங்கியதால் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். ராகுலை சந்தித்த மகிழ்ச்சியில் இருந்த தாகூர் நகரைச் சேர்ந்த மணி கூறும்போது, நாங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சம்பவம் இது. ராகுலை சந்தித்து கைகுலுக்கிய அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ராகுல் காந்தியை சந்தித்த சம்பவம் உண்மையா, கனவா என்பதுகூட தெரியாமல் இருக்கிறோம் என்றார்.
---------------------------------------------------------------------------------
8-5
திண்டு மிகவும் தரம் தாழ்கிறது. ..ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பேசிய முழு விபரம், தந்தி பத்திரிகையிலும், தினகரனிலும் வந்துள்ளது. . முதல் முறையாக ஸ்டாலினும் , ராகுல் காந்தியும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தது , அவர்களது மிகவும் அணுக்கமான பிரச்சாரம், அனைவரையும் கவர்ந்துள்ளது. திமுகவும், காங்கிரசும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்று ஸ்டாலின் அற்புதமாக விளக்கியுள்ளார். அதே போல , ராகுல் காந்தியும் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசுவதற்கு பெருமைப் படுவதாக பேசினார். ..சேது சமுத்ர திட்டம் சோனியா காந்தி மன்மோகன் சிங் ஆதரவுடன் தொடங்கி வைக்கப் பட்டது என்றும் அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம் , என்றுதான் ஸ்டாலின் கூறினார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், அரசியல் மர்ச்சர்யங்களுக்காக மாநிலத் திட்டங்களுக்கு உதவி மறுக்கப் படவில்லை என்றுதான் ஸ்டாலின் கூறினார். உண்மையில், தமிழகம் இந்திய தேசிய நீரோட்டத்திற்கு இந்த இரண்டு நாட்களில் கலைஞர், ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் பிரசாரப் பேச்சுகளால் , உறுதியாக மீண்டு வருகிறது.
----------------------------------------------------------------------------------------
8-5
"குருவி சேர்ப்பதுபோல இந்தக் கூட்டணியை மைத்துள்ளோம்..HELLO VAIKO . "ஊர்க் குருவி , கருடனாக முடியாது. ..இந்த ஆறுமுகக் கூட்டணியில், மூன்று தலைகள், தோல்வி நிச்சயம் என்று தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டனர். ( வாசன், மார்க்சிஸ்ட், வைகோ, ). விகாந்த், சி.பி.ஐ. ,திருமா மட்டும் போட்டியிடுகின்றனர். இந்த மூவருமே தோற்க இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆம்! மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டுகின்றனர் என்பது உண்மைதான். அதுதான் திமுக கூட்டணியின் வெற்றி !
-------------------------------------------------------------------------------
8-5
அகில இந்திய அடிப்படையில், காங்கிஸ் நீர்ர்த்துப் போனால், மாயாவதியின் பஹுஜன் சமாஜ் கட்சி அந்த இடத்தை நிரப்புவதற்கு முற்றிலும் தகுதியான கட்சி. ..ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், உங்க கட்சிக்கு ஆள் வருமா? இந்தியாவிலேயே வாக்குகள் சதவீதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது பஹுஜன் கட்சி. மொழிப் பிரச்னையால், தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. கேரளத்தில் கூட பஞ்சாயத் தேர்தலில் பங்கெடுத்து வெற்றி பெற்ற கட்சி. நாட்டின் அடுத்த பிரதமராக மாயாவதி வந்தால் வியப்பெதுவுமில்லை. அவருடைய வாழ்க்கை, கட்சியின் கொள்கை ,வளர்ச்சி பற்றி படித்துவிட்டு ,பதிவிடவும். வரவிருக்கும் உத்தரப் பிரதேசத் தேர்தலில், காங்கிரசும் ,பஹுஜன் கட்சியும் , மாயாவதியை முதல்வராக முன்னிறுத்தி போட்டியிட வாய்ப்பு உள்ளது. அது நடந்தால், 400 இடங்களிலும் அந்தக் கூட்டணி வெல்லும். மோடி கும்பலுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது
-----------------------------------------------------------------------
9-5
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி பேசியதாவது:-
தமிழக சட்டப்பேரவை தேர் தலில் கூட்டணி இல்லாமல் தனது சொந்த பலத்தில் தனித்துப் போட்டியி டுகிறோம். அனைத்து சமூகத்தினருக் கும் தேர்தலில் பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளோம். பாஜக அரசானது லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்க்ளை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டை அழிக்க சதி செய்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள். இந்த விஷயத்தில் காங்கிரசும் ஒன்றுதான். பணக்காரர்கள், பெரிய பெரிய தொழிலதிபர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வரும் இந்த கட்சிகள் அவர்களின் நலனுக்கான திட்டங்களையே தீட்டுகிறார்கள். தமிழகத்தில் சாதி ரீதியிலான வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழும் 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டு வாக்குறுதிகளை வழங்கு வார்கள். அந்த வகையில், தமிழகத் தில் திமுகவும், அதிமுகவும் இலவசங் கள் வழங்குவதாக சொல்லி தமிழக மக்களை பிச்சைக்கார்கள் ஆக்குகின் றன. இவ்வாறு மாயாவதி கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் வரவேற்றுப் பேசினார்.
--------------------------------------------------------------------------
9-5-2016
அருமையான கட்டுரை. ...இந்தத் தருணத்தில், சி.சு.செல்லப்பா வின் 'சுதந்திர தாஹம் ' என்ற நாவலுக்குத் தாங்கள் அளித்துள்ள அருமையான விமர்சனக் கட்டுரை (தினமணி) , அனைத்து வாசகர்களையும் சென்றடைய வேண்டும் என்றும் அந்த நாவல் எங்கே கிடைக்கும் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்
----------------------------------------------------------------------------
9
அன்புமணி குறிப்பிடும் தென் மாவட்டத் பட்டியல் இனத் தலைவர்கள்,முருகவேல் ராஜன், கிருஷ்ணசாமி, மற்றும் ஜான் பாண்டியன் மூவருமே தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள், மேலும் இந்த மூவருமே இப்போது இவருடன் இல்லை. ஆதி திராவிடர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் ஆகிய முப்பெரும் பிரிவினர் முறையே வடக்கு மற்றும் மத்திய தமிழகம், தென் தமிழகம் ,மேற்கு தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர் வடக்கு மற்றும் தென் ஆர்க்காடு பகுதியில் மட்டுமே உள்ளனர். அங்கு ஆதி திராவிடரும் உள்ளதால், அன்புமணியின் இயக்கம் ஆதிதிராவிடர்-வன்னியர் ஒற்றுமையை வளர்தேடுப்பதில்தான் தொடங்க வேண்டும். ..வன்னியருடன் ஒற்றுமை என்று சொல்லி யாரும் ஆதிதிராவிடர் இயக்கத்தில் ஆள் சேர்க்க முடியாது. அதே போல , ஆதி திராவிடருடன் ஒற்றுமை என்று கூறினால், வன்னியர்கள் மற்ற கட்சிகளுக்குப் போய்விடுவார்கள். இதுதான் நிதர்சனம். ..திமுக ,அதிமுக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை. , மற்ற கட்சிகள் , இவர்களுள் யார் நல்ல கொள்கைகள் கொண்டுள்ளனரோ அதில் இணைந்து பணியாற்றவேண்டும்.
------------------------------------------------------------------------
9
CHAMAS BLABBER CONTINUES.. நல்ல வேளை. ! சுதந்திர இந்தியாவுக்கு , நேருவின் தலைமை கிடைத்தது. அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசன உரிமைகளும் கிடைத்தன. அல்லாமல், காந்திய வழியில் சென்றிருந்தால், மீண்டும் நாடு அடிமைப் பட்டிருக்கும். மக்கள் தொகையைக் குறைக்க முடிகிறதா? நேரு மற்றும் அசோக மேத்தா அறிவுறுத்திய குடும்பக் கட்டுப்பாடு மக்கள் ஏற்க்கச் செய்ய முடிந்ததா? கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 20 கோடி மக்கள் தொகை இந்தியாவில் கூடியுள்ளது. அவர்களுக்கு உணவு வேண்டாமா? நீர்ப்பாசன வசதிகள் வேண்டாமா? அணைகள் வேண்டாமா? மின்சார உற்பத்தி? அணு சக்தி? அறிவியல் வளர்ச்சி? சாமியாராக மக்கள் இருக்கத் தயாரா? நவீன மருத்துவ வசதிகள்? நாட்டின் பாதுகாப்பிற்கு, ராணுவ தளவாடங்கள் அவற்றில் தன்னிறைவு? மேலும் மேலும் எப்படியாவது பணம் சம்பாதித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், அடிப்படை வசதிகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை, குடும்பச் சூழல், ஆரோக்யமான பொழுதுபோக்கு வசதிகள், பிரயாண வசதிகள், ..கூடிய அளவு சமத்துவம். நேரு காட்டிய திட்டமிட்ட பொருளாதாரமே சிறந்தது..THE BEST PATTERN IS DR.ABDUL KALAM'S P.U.R.A .
------------------------------------------------------------------------------
9
A lovely passage from Jawaharlal 's Discovery of India. " England came to India. When Queen Elizabeth gave a charter to the East India Company in 1600, Shakespeare was alive and writing. In 1611, the Authorized English edition of the Bible was issued. In 1608, Milton was born. There followed Hampden and Cromwell and the political revolution. In 1660, the Royal Society of England ,which was to advance the cause of science so much, was organized. A hundred years later, in 1760, the flying shuttle was invented and there followed in quick succession, the spinning jenny, the steam engine and the power loom...Which of these two Englands came to India? The England of Shakespeare and Milton, of noble speech and writing and brave deed, of political revolution and struggle for freedom, of science and technical progress or the England of savage penal code and brutal behavior, of entrenched feudalism and reaction? For there were two Englands,as in all countries!
-------------------------------------------------------------------------------
9
Population of INDIA was 112 crores in 2005. It will be 132 crores in 2016. ( 20 crores new arrivals in just 10 years! A catastrophe is looming large. And people are criticizing Sanjay Gandhi's Family planning drive during the emergency
----------------------------------------------------------------------------------
10-5-2016
நாம்' பிரிட்டிஷாரின்' காலனியாக இருந்ததினால்தான், ஓரளவேனும் காந்திய வழி மக்கள் இயக்கத்தைக் கட்ட முடிந்தது. ஏனெனில், இங்கிலாந்தில், 1800- 1885 காலத்தில் , பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கமாக ஆங்கிலேய உழைப்பாளி மக்களுக்கான சிந்தனையாளர்களும், இயக்கங்களும் தோன்றியிருந்தன. தங்களது தூய கிருஸ்தவ நம்பிக்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டி, QUAKERS எனும் பகுதியினர் ( காந்திஜியின் தத்துவம்) மன்னர் ஜேம்ஸ் காலத்தில் நாட்டை விட்டே வெளியேறி அமெரிக்க கடற்கரையில் அமைத்துக் கொண்டதுதான், இன்றைய அமெரிக்காவின் தொடக்கம் 1848 ல் சார்டிஸ்ட் இயக்கம். காந்திஜியே பயன்படுத்திய ஷெல்லியின் ' MASQUE OF ANARCHY என்ற போர்ப்பரணி. ஒத்துழையாமை இயக்கத்தின் தத்துவப்பாடல். 1800 முதல் 1850 வரை கும்பினி ஆட்சியில், வங்கத்தின் ARISTOCRATIC படித்த வர்க்கம், முற்போக்கான 'WHIG' சிந்தனைளை உள்வாங்கி அவர்களின் மூலமே போராடியது. 1848 இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும், எளிய மக்கள் , மிருகங்கள் போல நடத்தப் பட்ட ஆண்டுகள். . காந்திய வெற்றி? .பிரிட்டிஷ் தொழிற்கட்சி அளித்த வரம்!
---------------------------------------------------------------------------------
10
non-killing of living beings' is as ancient ideal in India as the times of Buddha and Mahavira. Actually, vedic brahmins reveled in animal sacrifice. It was due to the teachings of Buddha that latter day brahmins became strict vegetarians. and it became the norm. Saivite and Vaishnavite and even Murugan temples do not allow animal sacrifice and bloodshed in temple precincts. Have you read Kosambi? He says the importance given to ' kunkumam ' of red color is a substitute for blood. Manimekalai is totally against cow slaughter. Have you ever gone to so-called temple festivals where idiots slaughter goats and fowls in thousands in a single day and blood flows like water in the streets? do you call that a way of civilized life? If such practices still prevail, it shows that we are still primitive hunters. .It has become a fashion to attack healthy and cultured practices like non-killing, non-drinking and anti-promiscuity as brahminism. ! If you follow Thirukkurall , I suppose you will be branded as brahmin. Do you want all people to be barbarians? It is the evil effect of EVR propaganda, Tamil idiots would rather prefer EVR than THIRU,VI,KA ! It shows their cultural level irrespective of all party affiliations. There is no hope for Tamils !
--------------------------------------------------------------------
10
CHAMAS QUOTING THE SCRIPTURES! பூர்ஷ்வா ஜனநாயகத்திற்கு இவ்வளவு வக்காலத்து! ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை , உழைக்கும் மக்களை யார் ஏமாற்றுவது என்பதற்கு tender விடுவது இந்த போலி ஜனநாயகம் . தேர்தல் முறையில் சீர்திருத்தம் கண்டிப்பாக தேவை. கடினமான பிரச்னை .உண்மை. ஆனால், தங்களை அறிவுஜீவிகள், என்றும் காந்தியவாதிகள் என்றும் கூறிக்கொள்ளும் ' எழுத்தர்கள், ஆக்க பூர்வ மாக சிந்தித்து , நமது தேர்தல் முறையை எப்படி உண்மையான மக்களாட்சியாக மாற்றுவது என்ற விவாதத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும். வேட்பாளர்கள் என்று யாரும் இருக்கக் கூடாது. ராஜ்ய சபா வுக்கு நியமனம் போன்று கட்சிதான் சட்டசபை அங்கத்தினரை அனுப்ப வேண்டும். தேவைப் பட்டால், கட்சி அவரை திரும்ப அழைத்து வேறு ஒருவருக்கு அந்த கௌரவம் தரும். ஒரு அளவுக்கு மேல் சொத்து உள்ளவர்கள், சட்ட சபை அங்கத்தினராக அனுமதி கூடாது. முடிந்த அளவு, REFERENDUM முறை , வேண்டும். எதுவுமே 100% சரியான தீர்வாக இல்லாமல் போகலாம். விகிதாசாரம் வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்
--------------------------------------------------------------------------------------
10
தவறுகளை திருத்திக்கொள்ள தயார்: ஊழல் விவகாரத்தை முன்வைத்து மு.க.ஸ்டாலின் பேட்டி
tamil.thehindu.com
SEE THE DIFFERENCE .....BETWEEN THE JOKERS AND STALIN
-------------------------------------------------------------------------
10
தேர்தல் முறை மக்களாட்சி, அல்லது ஒரு கட்சியின் சர்வாதிகாரம் அல்லது ஒரு மன்னர் அல்லது தனி நபரின் சர்வாதிகாரம்.... இது எதுவுமே , நல்லதோ அல்லது கெட்டதோ அல்ல. ..மன்னராட்சிகளில் சிறப்பாக மக்கள் நலம் பேணிய ஆட்சிகளும் உண்டு. இந்தூரின் அஹல்யா பாய் பற்றி ஜவஹர்.! ..அம்பேத்கரை ஆதரித்தது ஷோலாபூர் ஜமீன் சாஹு மகாராஜ். அசோகர் ஆட்சி ஜனநாயகமெல்லாம் இல்லை. சமீப காலத்தில், தோழர் ஸ்டாலின்! ,சீனாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஜனநாயகம் இல்லை. ஆனால், 1948ல் இருந்த சீனாவையும், இன்றுள்ள சீனாவையும் ஏதேனும் பொது அறிவு இருந்தால், ஒப்பிட்டுப் பாருங்கள். நேருவின் உலக சரித்திர நூலில் 'ஜனநாயகமும் , சர்வாதிகாரமும்' என்ற தலைப்பில் உள்ள அத்தியாயத்தை ஊன்றிப் படியுங்கள். .பள்ளிக்கூடத்தில், மாணவர்களுக்குப் பிடித்த 'ஜனநாயக' பாடங்களை சொல்லிக்கொடுக்க முடியுமா? சினிமாக்காரன் , பத்திரிகை கதை பாட்டு எழுதிப் பிழைக்கும் கூத்தாடிகள் தான் ஜனநாயக பஜனை பாடுவான். ஆட்சி முறையில் அல்ல, யார் ஆள்கிறார்கள் என்பதும் அல்ல, யாருக்காக எப்படி என்பதுதான் முக்கியம்
--------------------------------
10
CHAMAS SPREADING VENOM ... ON SRILANKA
"இலங்கையில் ஜனநாயக அரசு இருக்கிறது. தமிழர்களின் உரிமைகளையும் சிங்களர்களின் உரிமைகளையும் சமமாகக் கருத முடியுமா?"....ஏன் முடியாது? நமது அரசியல் சட்ட தேர்தல் முறையை விட, சிறிலங்காவின் தேர்தல் முறை சிறப்பானது. அங்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறை உள்ளது. தமிழ்நாடு போல பரப்பளவு. ஆனால் மக்கள் தொகை 3 கோடி மட்டுமே. அதில் பல மாவட்டங்கள் . ஒவ்வொன்றுக்கும் தேர்தல் நடக்கிறது. அரசு ஒன்றுதான். போலிஸ், ரெவின்யூ எல்லாம் எந்த மாவட்டத்துக்கும் கிடையாது. எதோ தமிழ் மாவட்டங்களுக்கு மட்டுமே மறுக்கப் படுவதாக அயோக்கியப் பிரச்சாரம் நடக்கிறது. தமிழ்நாட்டில், ஒவ்வொரு மாவட்டமும் தனித்தனி போலிஸ் படை கொண்டுள்ளதா? தனியாக வரிவிதிப்பு, வரி வசூல் செய்கிறதா? அப்படிக்கேட்டால் தருவீர்களா? ஒரு மொழி பேசுவதால் மட்டும், இம்மாதிரி அமைப்பை மறுக்க முடியுமா? 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் , நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப் படவேண்டும் என்கிறார் மாயாவதி. அம்பேத்கர் கருத்தும் அதுதான். தெலுங்கானா பிரிக்கப் படவில்லையா? ஜார்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், .When you are prepared to grant 5 states instead of one state of tamilnadu ( pandyan, chola, kongu, pallava, and union state of Chennai) , you can venture to comment on SriLanka.
----------------------------
10
chamas blabber continues today also.. வெட்டிக் கட்டுரை! .பணக்காரப் பயல்கள், சினிமாக்காரன், மூளைச்சலவை செய்யும் பத்திரிகைகளின் சிந்தனைக்களம், பொறுக்கிச் சிந்தனையாளர்களின் சுய விளம்பரம், பொய்யும் புரட்டும் சேர்த்து அளிக்கும் அரைகுறைகளின் அறிவுக் கொளுத்துதல், சின்னத் திரை பொம்பளைச் செய்திகள், ஒரு ஊரோ நாடோ எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாமல் அதைப்பற்றி கமெண்ட் அடிக்கும் மடையர்கள், உருப்படியான எந்த ஒரு யோசனையும் தரமாட்டான். .. எங்களுக்கும் தெரியம் மக்களாட்சி நல்லதுதான் என்று ... எப்போது? லட்சமும் கோடிகளும் புரளும் தேர்தல் முறையில், விஷயம் தெரிந்தவன் எவனாவது வென்று நல்லது செய்ய முடியுமா? முதலில் மாற்றுக் கருத்துக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இருட்டடிப்பே தொழிலாகக் கொண்ட குப்பைக் கூட்டம். தப்பும் தவறுமாக உளறுவதற்கு இடம் கிடைத்துவிட்டால், ஊமைக்கு உளறுவாயன் சண்டப் பிரசண்டன். ஆதாரங்கள் கொடுத்தாலும் அதை கண்டுகொள்ள மாட்டான். அரசியல் போதனைகள் எவனுக்கு வேண்டும்? நேர்மை இல்லை. எந்த கிராமத்திற்கு எவன் , எப்போது போவதுபற்றி என்ன பயன்?
---------------------------------------------------------------------
11-5-2016
இன்னமும் தெளிவாக செயல்முறைத் திட்டத்தை விளக்க வேண்டும். நமது திட்டம் இப்படி இருக்கலாமா என்று சிந்தித்து விவாதித்துப் பாருங்கள். 1) நிலத்தில் இறங்கிப் பாடுபடாத எவருக்கும் நில உடமை கூடாது. 2) 2 ஸ்டாண்டர்ட் ஏக்கருக்கு மேல் எவருக்கும் நிலம் இருக்கக்கூடாது. அந்த வகையில் உச்ச வரம்புச் சட்டம் திருத்தப் படவேண்டும். 3) உபரி நிலம் அரசினால் கைப்பற்றப்பட்டு, அங்கு அரசின் விவசாயக் கூட்டுப் பண்ணை அமையவேண்டும் 4) அத்தகைய கூட்டுப் பண்ணைகளில், இப்போது நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் , அரசு ஊழியர்களாக நியமிக்கப் படவேண்டும். கூடிய அளவு, ஒவ்வொரு பண்ணையிலும் ஒரே ஜாதிக்காரர்கள் பணியில் அமர்த்தப் படவேண்டும். 5) நிலத்தை வாங்கவோ விற்கவோ சட்டத்தில் இடமிருக்கக் கூடாது. 6) நிலக்கிழார் என்று எவனாவது தன்னை சொல்லிக் கொண்டால், 5 ஆண்டு சிறைத் தண்டனை தரவேண்டும். 7) வெளியூரில் அரசு வேலையோ, அல்லது தனியார் கம்பனி வேலையோ பார்க்கும் நபர்களுக்கு நிலம் கிடையாது. ..விவாதித்துப் பாருங்கள். பரப்புங்கள்.
------------------------------------------------------
11
பியொங்யாங்: வடகொரியாவில் ஆளும் கட்சி மாநாட்டின் நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற பிரம்மாண்ட பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 36 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி மாநாடு நடைபெற்றது. தலைநகர் பியொங்யாங்கில் நடைபெற்ற 5 நாள் மாநாட்டின் நிறைவு விழா அணிவகுப்பு ராணுவ அணிவகுப்பையே மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது.
ஆளும் கட்சி தலைவராக அதிபர் கிம் ஜாங் உன் தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அப்போது கைளில் ஏந்தி வந்த தீப்பந்தங்களில் அதிபரின் பெயரை வடிவமைத்து கலை குழுவினர் அசத்தினர்.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனை பொருட்படுத்தாத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்கள் அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. DINAKARAN TODAY
------------------------------------------------------------------------
11
உங்கள் பத்திரிகையில் இந்தக் கட்டுரைக்கு பதில் அதே நாளில் அதே பத்திரிகையில் உள்ளது.. 'தமஸ் ' ! உமக்கு வெட்கமாக இல்லை? படிப்பது கிடையாதோ? "553 கோடீஸ்வரர்கள் போட்டி; 283 பேர் மீது கிரிமினல் வழக்கு - தமிழக வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு அமைப்பு தகவல்" ..இப்போதாவது படியுங்கள். (11-5-2016 thindu rag)
----------------------------------------------------------------------------
12-5-2016
TO THMAS TODAY. IN THINDU RAG .....ஐயோ பாவம், இந்த ஆள் படித்த 'பெரிய மனிதர்கள்' 'அறிவுரைகளைத்தானே மேற்கோள் காட்ட முடியும்? .. ..வேட்பாளர் யாரும் போட்டியிடக் கூடாது. கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும். கூட்டணி எதுவும் சட்ட விரோதம். ஒவ்வொரு கட்சியும் தனித் தனியாகத்தான் போட்டியிட வேண்டும். அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் அடிப்படையில், கட்சியின் மேலிடம், சட்ட மன்றத்திற்கு விஷய ஞானம் உள்ளவர்களை அனுப்பும். கட்சி மாற முடியாது. எந்த நேரத்திலும் கட்சி, வேறு ஒரு நபரை அனுப்ப முடியும். ஜாதி பிரச்னை ஒழியும். பணபலம் ஒழியும். தேர்தல் அறிக்கைகளுக்கு பொருள் உண்டாகும்., 100 குடும்பங்கள் மட்டுமே ஒரு தேர்தல் வட்டத்தில் இருக்கும். ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் முடிந்து விடும். இது கம்ப்யூடர் யுகம். !
------------------------------------------------------------------------
12
கருத்து மோதல், விவாதம், இல்லாமல் ஜனநாயகம் இல்லை. சரியான கருத்து என்பது எப்போதும் பெரும்பான்மையின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக ஏற்பட்டது ராஜ்ய சபா. கடந்த இரண்டு ஆண்டுகளில் , காவிக் கொடிக் காலிகளின் பல கேடுபயக்கும் திட்டங்கள், ராஜ்ய சபாவில் அந்தக் கும்பலுக்கு பெரும்பான்மை இல்லாததினால் , காங்கிரஸ் அவற்றை முறியடித்து நாட்டைக் காப்பாற்றியுள்ளது. ..மெத்தப் படித்த' ..ஆமாம். படிக்காமல், சிந்திக்காமல்., பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது?
------------------------------------------------------------------------------
12
ஒரு கோடி என்பது, இன்றைய காலத்தில், பெரிய சொத்து இல்லை. சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில், வெறும் வீட்டு மனை மட்டுமே கோடி ரூபாய்க்கு வந்து விட்டது. .ஐடி துறையில் பணியாற்றி வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பத்தினர் , தங்களது 'செல்வங்கள்' அனுப்பும் தொகையை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர். ! .குற்றப் பின்னணி உள்ளவன் எவனும் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை என்கிறதா உங்கள் ஜனநாயகம்? எந்தக் கேடியிடம் ஏமாறலாம் என்பதற்கு மட்டுமே வாக்காளர்களுக்கு உரிமை தரப்பட்டுள்ளது. தேர்தல் செலவினத்தை மிக மிக குறைப்பதற்கு வழி காணவேண்டும்., தேர்தல் முறை மாறவேண்டும். ஒரு நபர் யாரும் தீர்வு காண முடியாது. சமூக சமத்துவம் , பொருளாதார சமத்துவத்தினால் மட்டுமே ஏற்படும். முதலில் சோஷலிசம் , அதன் பின்னர்தான் உண்மையான ஜனநாயகம். அதனால் தான், இந்திரா காந்தி, 'சொத்துரிமை அடிப்படை உரிமை அல்ல,' என்றும் சோஷலிசப் பாதையில் செல்ல நாடாளுமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் , எந்த நீதிமன்றமும் நிராகரிக்க கூடாது ' என்றார்.
----------------------------------------------------------------------------------
12
காங்., வேட்பாளர் மீது ஆசிட் வீச்சு மே 11,2016 3 : சென்னை அம்பத்தூர் தொகுதி காங்., வேட்பாளர் அசன் ஆரூண் சென்ற கார் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தி.மு.க., மற்றும் காங்., தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
----------------------------------------------------------------------------------
13-5-2016
CHAMAS! USELESS LAMENT. LEAVE SUCH SERIOUS PROBLEMS TO REALLY MATURE THINKERS. .. 'power corrupts...absolute power absolutely!'... கேள்விப் பட்டதில்லையா? சோவியத் யூனியனில் , லெனின் காலத்திலேயே , கட்சிக்குள் துதிபாடிகள், புல்லுருவிகள், அதிகாரத்தை தனது சௌகர்யங்களுக்காக பயன்படுத்திக் கொண்டவர்கள், , சொகுசு வாழ்க்கை, அதிகாரம், அற்ப சுகங்கள் அனுபவித்தவர்கள் , ஐந்தாம்படைகள் ( malinavsky ) உள்ளே புகுந்து விட்டனர். 'எல்லா விதமான வர்க்க எதிரிகளையும் ஒழிப்பதில் வெற்றி கண்டோம். ஆனால்,லஞ்சத்தை மட்டும்' எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை என்று இறுதிக் காலத்தில் மனம் வருந்தினார் மாமேதை லெனின். சீனாவில், கலாசாரப் புரட்சி காலங்களில் நடந்த அநியாயங்கள் எண்ணிலடங்கா. எந்த மாவோ, மாபெரும் 'நீண்ட பயணம்' நடத்தி சாகசங்கள் நிகழ்த்தினாரோ , அதே மாவோதான் , தனிமனித புகழ்பாடிகளுக்கும் இடம் கொடுத்து அரசியல் மாற்றுக் கருத்தினரை கொச்சைப்படுத்தி அவமானப் படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு 'மக்கள் திரள்' அரசியல் நடத்தினார். திரை மறைவில் நிக்சனுடன் பேச்சு! லஞ்சம் தவிர் ' முழக்கம் கலாம் அவர்களால் கூட நிறைவேற்ற முடியவில்லை.புலம்பல் தவிர்.
-------------------------------------------------------------------------------
13
பூர்ஷ்வா தேர்தல் ஆட்சி மாபெரும் மோசடி. பெரிய திரை, சின்னத் திரை, போதைகள் , பொதி கழுதைகள் , 'சிந்தனைக் களங்கள்' இருக்கும் வரை மூளைச் சலவை இருக்கும். ஊழல் இருக்கும். இன்னும் பத்து ஆண்டுகளில், மேலும் ஒரு 30 கோடி மக்கள் தொகை இருக்கும். சீர்திருத்தம் உடனடியாகத் தொடங்கு. இல்லாவிடின் பஞ்சப் பட்டாளம் பொசுக்கி எரியும் அனைத்தையும்
-------------------------------------------------------------------------
13
வெள்ளத்தனைய மலர்நீட்டம்!க.திருநாவுக்கரசு
பெரிய பெரிய வார்த்தைகளில், மிகவும் simplistic கட்டுரை. சுருக்கமாகக் கூறுவோம். புரிந்தால் சரி. தமிழ்நாட்டில், அரசியல் நீரோட்டங்கள் கடந்த நூறு ஆண்டுகளாக மூன்று உள்ளன. ..இந்திய தேசியம், தமிழ்/திராவிட தேசியம் ( குல்லுக பட்டர் கூட தட்சிணப் பிரதேசம் சொன்னவர்தான்!),, , பொதுவுடைமை லட்சியம். இந்த மூன்று இலக்குகளில் , சுதந்திரப் போராட்ட நாட்களில் இந்திய தேசியம் வலுவாக இருந்தது. ஹிந்தி திணிப்பு அபாயத்தால், 1967 முதல் திராவிட இயக்க சிந்தனை அரசியல் வெற்றி பெற்றது. இன்றும் தொடர்கிறது. இடதுசாரி இயக்கம் , தவறான கூட்டணிகளால், செயல் முறையால், தனது வர்க்க தன்மையை இழந்து மறைந்துவிட்டது. 1990 சோவியத் யூனியன் சிதறியதும் ஒரு காரணம். எனவே இன்று மக்கள் கேள்வி , ஊழலோ, சோற்றுப் பிரச்னையோ அல்ல. இந்திய தேசியத்திற்கு உட்பட்ட தமிழ் தேசியமா அல்லது அதற்கு எதிரான தமிழ் தேசியமா என்பதுதான்.! சிறு முதலாளிய சிந்தனை தான் உழைக்கும் மக்களுக்கு வழி காட்டுகின்றது. . ,ஊழல் வேண்டாம் 'என்பதைவிட மொழி வழி தேசியம் மக்களின் ஆதரவைத் தீர்மானிக்கிறது
----------------------------------------------------------------------------------
13-5
RAGURAM RAJAN..RBI "நாம் மெதுவான ஒரு பொருளாதார முன்னேற்றத்துக்கான சூழலின் நடுவில் இருக்கிறோம். வேகமான வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகின்றன. நல்ல பருவமழை நிச்சயம் வேகமான வளர்ச்சியை முடுக்கிவிடும்.
வங்கிக் கடன் விவகாரத்தில் திவால் சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு இந்த வாராக்கடன் விவகாரத்தில் செயல்பட போதுமான சட்ட உபகரணங்கள் தற்போது உள்ளன. அனைத்தையும் கிளீன் - அப் செய்து விட்டால் கடன் அளிக்க வங்கிகளுக்கு வசதியாக அமையும்.
நம் நாட்டினால் உள்நாட்டு பணத்திலேயே சுதந்திரமாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கடன் பெற முடியும் எனும்போது டாலர்களை வாங்கும் திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டிய காரணங்கள் எதுவும் இல்லை. தொடர்ந்து உள்நாட்டிலேயே கடன் வாங்குவது தொடரும்.
நாம் அடிப்படைகளைச் சரி செய்ய வேண்டும் மற்றும் அயல்நாட்டு முதலீட்டை அதிகம் நம்பியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே நமக்கான பாடமாகும். இதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். "
----------------------------------------------------------------------------
13-5
இந்தத் தேர்தலில் , தமிழகத்தில் ,முற்றிலும் புதிய திமுக வை காண்கின்றோம். கலைஞர், ஸ்டாலின், கனிமொழி ...அனைவரின் பிரசாரமும், பண்பும், உண்மையும், உழைப்பும் நிறைந்துள்ளது. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில், தமிழ்நாட்டின் சில உயர்மட்ட அதிகாரிகள், ஸ்டாலினைக் குறிவைத்துத் தாக்கியது உண்மை. ஆனால், அதே நாட்களில், தமிழக மக்கள் அவசர நிலையை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டிருந்தும், அவரது காங்கிரஸ் மற்றும் இந்திய மதச் சார்பற்ற அரசியல் தொடர்பான அணுகுமுறை, எள்ளளவும் குறை காண முடியாமல் உள்ளது சிறப்பான அம்சம். மைய அரசுடன் மோதிக் கொண்டு மாநில அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்ற அளவில், ரத்னச் சுருக்கமாக 'no problem' என்று கூறியுள்ளார், அது மோடியுடன் no problem அல்ல. மைய அரசுடன். ! இதேதான் கலைஞர், எம்ஜிஆர் அணுகுமுறையாகவும் இருந்துள்ளது. ஆனால், 1991க்குப் பிறகு நடிகையின் அதிமுக, ஆட்சியில் பாதை மாறியது. மதிமுக பினாமித் தறுதலைகள் திக்கெட்டும் சிதறித் திகைத்தோட திமுக கூட்டணி வெற்றி பெறும
---------------------------------------------------------------------------------
13-5
TUTICORIN-DT - tnassemblyelections
sites.google.com
தேர்தல் விஷயம் ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் பற்றித் தெரிந்து கொள்வோம். .திருச்செந்தூர் , ......வைணவத் திருத்தலம் ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ வைகுண்டம், .கி.மு. 1000 ல் இன்றைய இஸ்ரேல் (palestine) சாலமன் ஆட்சி . முருகனின் சேவல் கொடி , வேல், இவையெல்லாம் புதை பொருளாகக் கிடக்கும் தேரி, கொற்கைத் துறைமுகம், அன்றைய பாண்டிய நாட்டின் ( மார்கோ போலோ கி.பி. 1300 ) கொற்கைக்கு வந்து, உலகிலேயே செல்வம் மிகுந்த நாடு பாண்டிய நாடு என்று குறிப்பெழுதி வைத்த வளமும், வறட்சியும் ஒருங்கே உள்ள மாவட்டம். வைப்பாறு என்ற சிற்றாறு ஒரு தொகுதி முழுவதும் ஓடியும், விவசாயத்திற்குப் பயன்படாமல், மணல் கொள்ளையர் கையில் சிக்கித் தவிக்கும் தொகுதி, விளாத்திகுளம். தாது மணல் கொள்ளை பல லட்சம் கோடி
-----------------------------------------------------------------------------------------
13-5
------
"இளைஞர்களிடம் ஆதரவு இல்லை: வைகோ விரக்தி"........இளைஞர்கள் மட்டுமல்ல!. யாருமே உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். .இடதுசாரிகள், திருமா ,'விக்கு ' மட்டும் கூட்டணி அமைத்திருந்தால், ( பா-வை வெளியே தள்ளிவிட்டு) , அது உண்மையான மாற்று அணியாக மக்கள் ஆதரவு பெற்றிருக்கும். நீங்கள் சேர்ந்த அந்த கணத்தியே , அதன் தோல்வி நிச்சயமாகிவிட்டது. உங்களது ஒரே அரசியல், இலங்கைத் தமிழருக்குத் தனிநாடும் , ஸ்டாலின் எதிர்ப்பும்.! இவை இரண்டுமே தீர்மானமாக தமிழக,இலங்கைத் தமிழ் மக்களால் நிராகரிக்கப் பட்டவை. ஸ்டாலின் 1953 ம் ஆண்டு பிறந்தவர்.சோவியத் யூனியனின் (.. கவனித்தீர்களா? பாட்டாளி வர்க்க சோஷலிஸ்ட் குடியரசுகளின் கூட்டமைப்பு என்று பொருள். நாட்டின் பெயரே அங்கு இல்லை.) சர்வதேச பாட்டாளி வர்க ஒப்பற்ற தலைவர் ஜோசப் ஸ்டாலின் நினைவாகக் கலைஞர் இவ்வாறு தன தனயனுக்குப் பெயரிட்டார். ஜோசப் ஸ்டாலின் அந்த வாரம்தான் மறைந்தார்.)மு.க. ஸ்டாலின் 14 வயதிலேயே 1967 ம் ஆண்டின் ஹிந்தி-எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்தார். இப்போது அவருக்கு 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளது. பல பொறுப்புகளை திறம்பட வகித்தவர்.. உங்களது சாதனை என்ன?
----------------------------------------------------------------------------------
13-5
இளைஞர்கள் 60 சதவீதம் பேரிடம் வரவேற்பு இல்லை. காரணம் அவர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்......இளைஞர்கள் 60 சதவீதம் பேரிடம் வரவேற்பு இல்லை. காரணம் அவர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டார்கள். பணத் துக்காக ஓட்டு போட்டுவிட்டு சாக்கடை சரியில்லை, சாலை வசதி இல்லை, பேருந்து வசதி இல்லை, பாலம் கட்டவில்லை என்று கூறினால் எதுவும் வராது. .....எங்கள் கூட்டணிக்கு 35 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும். 150 இடங்களில் வெற்றி பெறுவோம். நான் போட்டியிட்டபோது எனக்கே ஓட்டு போடவில்லை. இந்த தொகுதியில் ரகுராமனுக்கா ஓட்டு போடப்போகிறார்கள். நீதி, தர்மம் வேண்டும் என்றால் ஓட்டு போடுங்கள். ......இந்த உளறல் மன்னனைப் போய் , பெரிய படிப்பாளி, போராளி, சிந்தனையாளன், சொற்பொழிவாளன், என்றெல்லாம் நம்பும் முட்டாள்களுக்கு.
--------------------------------------------------------
13-5
-----
WHOSE ACHIEVEMENT , BJP IDIOTS? INDIRA GANDHI! AND C.SUBRAMANAYAM. ..DR.SWAMINATHAN. "நான் ஒரு விவசாயி என்ற வகையில் Dr .MS சுவாமிநாதன் அவர்களுடைய அருமையான பேட்டியை அளித்தமைக்குவிவசாயிகளது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 1960 களில் நமது மக்கட் தொகை 45 கோடி ஆகும்.இன்று நமது மக்கட்தொகை 125 கோடியை தாண்டிவிட்டது. ஆனால் அந்த காலகட்டத்தில் நம் மக்களுக்கு உணவளிக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலை இருந்து வந்தது
-----------------------------------------------------------
14-5-2016
1) பாண்டிய நாடு என்று தனி மாநிலம் அமைய வேண்டும். 2) மதுரை அதன் தலை நகரமாக இருக்க வேண்டும். 3) நெல்லை , இரண்டாவது முக்கிய நிர்வாக நகரமாக அமைய வேண்டும். 4) பாண்டிய நாட்டில், இப்போதுள்ள திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி ஆகிய பத்து மாவட்டங்கள் இருக்கவேண்டும். 5) நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு , நெல்லை மாவட்டம் என்ற பெயரில் அமைய வேண்டும். அவ்வாறாயின், தாமிரபரணி ( பொருணை ) ஆறு இந்த ஒரு மாவட்டத்திலேயே உற்பத்தியாகி, அந்த மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் சிறப்பு மீட்டெடுக்கப் படும். ....7) புதுக்கோட்டை, சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்கள் , முன்பு சேதுபதி மன்னரின் ஆட்சியில் இருந்தவை. இந்தியாவிலேயே , தமிழர் அல்லாத அன்னியரின் ஆட்சிக்கு வீழ்ந்து விடாமல், கி.பி. 1800 வரை தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொண்டு, அதே சமயம், அகில இந்திய தேசிய உணர்வும் கொண்ட பகுதி, வீரத்தின் விளைநிலம் சேது நாடு. (தொடரும்)
----------------------------------------------------------------------------
14-5
UNENDING BANAL WRITING FROM CHAMAS IN THINDU RAG.. எந்தக் காலத்திலுமே, தலைவர்களிடம் பக்தி இருந்துள்ளது. ..யார் தலைவர் என்பதை தொண்டர் ஒருவர் ,அவரது 'தகுதி'க்கேற்ப முதலில் தனது அரசியல் அறிவு, லட்சியங்கள், அனுபவங்கள் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அதுவும் இளைஞனாக இருக்கும்போது. ...அதன் பின்னர் அந்தத் தலைவர் காட்டிய வழியை ,முனைப்போடு பின்பற்றுகிறார். அப்படிப்பட்ட தொண்டர்கள்தாம், எந்த நாட்டிலும், எந்த இயக்கத்திலும் ,வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றனர். எதோ ஒரு சிறிய ஊரில், எதோ ஒரு 'குரு' சொன்னார் என்பது சில 'குருவி' களுக்குப் போதுமானதாக உள்ளது மிகுந்த வியப்பளிக்கிறது. ! ஒரு தலைவனது கருத்து, லக்ஷ்யம் போன்றவைகளை சிரமேற்கொண்டு, தானாகவே அந்த இயக்கத்திற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் வினையாற்றுபவன் ஒரு தொண்டன். அவனே நாளடைவில் தலைவனாகின்றான். அன்றைய சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவருமே அவ்வகையினர். ,,தலைவனைப் போற்றி புகழ் பாடி, மறக்காமல் தன் பெயர், புகைப்படம் வர விளம்பரம் தருவது, அநேகமாக அனைத்துக் கட்சிகளிலும் இன்றைய அவலம்.! மக்களாட்சி. !
=================================================
14-5
-----
அம்பேத்கர் நமக்களித்த அரசியல் சாசனத்தில், தலித் மக்களுக்கு மட்டுமே கல்வி பற்றும் வேலை வாய்ய்பில் இட ஒதுக்கீடு இருந்தது. ஈ.வெ.ரா. . அதை மற்ற பின்தங்கிய ஜாதியினருக்கும் தர வேண்டும் என்று போராட்டத்தைக் கிளப்பினார். அப்போது காமராஜர் ,நேருவிடம் பேசி, அரசியல் சட்டத்தில் முதலாவது திருத்தம் ஏற்பட காரணமானார். மேம்போக்காகப் பார்த்தால், மிகவும் நல்ல திட்டம் போலத் தெரியும். ஆனால், பிற்பட்ட ஜாதிகளில் வசதி மிக்கவர்களுக்கு இது வசதியாகப் போய்விட்டது. காமராஜர் அப்போதே , இட ஒதுக்கீடு பிற்பட்ட ஜாதிகளின் ஏழை குடும்பக்களுக்கு மட்டுமே தரவேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை .பற்பல ஆண்டுகளுக்குப் பின்னர் மண்டல் கமிஷன் பரிந்துரையை அரசியல் காரணங்களுக்காக வி.பி.சிங் ஏற்றுக் கொண்டார். இதனால் பாதிக்கப்பட்டு வருவது, பிற்பட்ட ஜாதிகளின் ஏழைக் குடும்பங்கள் என்ற உண்மை மறைக்கப் படுகிறது. எம்.ஜி.ஆர். , இந்த தவறைச் சரி செய்ய வருமான வரம்பு நிர்ணயித்தார். ஆனால், பிற்பட்ட ஜாதிகளின் பணக்காரர்கள், அவரைத் தோற்கடித்து விட்டனர்.
continued in page 3