Click here to know more about the different MTL policies!
ஒவ்வொரு வருடமும் பள்ளியில் தமிழ்மொழி வார நடவடிக்கைகள் நடத்தப்படும். இதில் தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரம் தொடர்பான பல நடவடிக்கைகள் இடம்பெறும்.
மாணவர்கள் இந்த நடவடிக்கையில் ஆர்வமுடன் கலந்துகொள்வதுடன் தமிழ் கலாச்சாரம் பண்பாடு பற்றிய பல தகவல்களையும் அறிந்து கொள்கின்றனர்.
2019 வாழை இலை உணவு
2019- இல் சமைக்கலாம் வாங்க என்ற நடவடிக்கை நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் நெய் உருண்டை செய்தல், தோசை சுடுதல், பஞ்சாமிர்தம் செய்தல் எனப் பல தமிழ் உணவுகளைப் பற்றியும் அவற்றைச் செய்யும் முறைகளைப் பற்றியும் அறிந்து அவற்றைச் செய்து மகிழ்ந்தனர்.
இல் நடைபெற்ற தமிழ் மொழி வார நடவடிக்கையில் மாணவர்கள் விளக்கிற்கு வண்ணம் தீட்டுதல், ஓவியத்திற்கு வண்ணப் பொடிகளைத் தூவி அலங்கரித்தல், உரி அடித்தல் என பல நடவடிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
2020 ஆண்டில் மாணவர்கள் தமிழ்மொழி வார விழா கொண்டாட்டத்தை ஒட்டி பல ஒப்படைப்புகளைச் செய்தனர். அதாவது கிருமித்தொற்று காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் தொடர்பான தங்கள் அனுபவங்களைப் பல வழிகளில் எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். மாணவர்கள் ஒளிக்காட்சிகள், நன்றி அட்டை தயாரித்தல்(பெற்றோருக்கு) என பல வகையான ஒப்படைப்புகளைச் செய்தனர்.
பொங்கல் கற்றல் பயணம்
இந்த கற்றல் பயணத்தில் மாணவர்கள் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற பொங்கல் கலை நிகழ்ச்சியல் கலந்துகொண்டர். உரி அடித்தல், பூக்கட்டுதல், மருதாணி இடுதல், புதிர் பொட்டி, மாடுகளை நேரில் கண்டு மகிழ்தல் எனப் பலவிதமான நடவடிக்கையில் கலந்துகொண்டு பல புதிய அனுபவங்களைப் பெற்றனர்.
2022 Mother Tongue Fortnight(தோசை சுடுதல்)