பொதுக்காலம் 27-ஆம் வாரம்
03/10/2026
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
பொதுக்காலம் 27-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
MASS WILL BE HELD AT ST. CLARE HALL
ஆண்டவர் இயேசுவின் நண்பர்களே
உலகிற்கு ஒளியாய் வாழ்ந்திடவே
அன்பின் பலியினில் இணைந்திடுவோம் (2)
கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம்
ஆண்டவரின் நாளை போற்றிப் பாடுவோம்
பண்பாடுவோம் நல்ல பண்பாடுவோம்
படைத்திட்ட தேவனையே பாடிப்புகழ்வோம்
இயேசுவின் வார்த்தைகள் கேட்டிடுவோம் இதயத்தில் அதனை ஏற்றிடுவோம் அன்பெனும் மழையால் பலன் கொடுப்போம் அனைவர்க்கும் பகிர்ந்தே வாழ்ந்திடுவோம் - 2
இறைவனின் பிள்ளைகள் நாம் என்றே
இகமதில் அனைவர்க்கும் சாற்றிடுவோம் - கொண்டாடுவோம்...
பாவத்தின் சுமைகளை இறக்கி வைப்போம் பரிகாரம் புரிந்தே தூய்மையாவோம்
பிறரன்புப் பணியினில் மகிழ்ந்திடுவோம் தூயநல் ஆவியில்
கனிகொடுப்போம் - 2
உயிர்தரும் விண்ணக உணவினையே
விருந்தினில் உண்டு வாழ்வடைவோம் - கொண்டாடுவோம்…
அக்டோபர் 4
அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ்
நினைவு
முதல் வாசகம்
சீராக் நூலில் இருந்து வாசகம்
50: 1, 3-4, 6-7
ஓனியாவின் மகன் சீமோன் தலைமைக் குருவாய்த் திகழ்ந்தார்; அவர் தம் வாழ்நாளில் ஆண்டவருடைய இல்லத்தைப் பழுதுபார்த்தார்; தமது காலத்தில் கோவிலை வலிமைப்படுத்தினார்.
அவருடைய காலத்தில் நீர்த் துறை ஒன்று தோண்டப்பட்டது. அந்நீர்த்தேக்கம் கடலைப்போன்று பரந்தது. தம் மக்களை அழிவினின்று காப்பாற்றக் கருத்தாயிருந்தார்; முற்றுகையை எதிர்த்து நிற்க நகரத்தை வலிமைப்படுத்தினார்.
முகில்களின் நடுவே தோன்றும் விடிவெள்ளி போன்று விளங்கினார்; விழாக் காலத்தில் தெரியும் முழு நிலவுபோல் ஒளி வீசினார். உன்னத இறைவனின் கோவிலுக்குமேல் ஒளிரும் கதிரவன் போலவும் மாட்சிமிகு முகில்களில் பளிச்சிடும் வானவில் போலவும் காணப்பட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18
சகோதரர் சகோதரிகளே,
நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்த வரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்துகொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 16: 1-2a,5. 7-8. 11 (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2a
நான் ஆண்டவரிடம் நீரே என் தலைவர் என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி
7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி
*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30
அக்காலத்தில்
இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்🎶
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2
இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2
இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2
உந்தன் கைகளில் நான் சின்னப் பிள்ளையாய்🎼
தவழ்ந்தாட வேண்டும் செல்ல மலராய் - (2)
எந்தன் உயிரே நான் உந்தன் நிழலில்
வளர்ந்தாக வேண்டும் வளர்பிறையாய் - 2
பெற்றதாயின் அன்புக்கு மேலாகவே
வற்றாத அருளை பொழிந்தாயே - (2)
உந்தன் கரத்தில் என்னை பொறிந்தாயே
என்னை முழுதும் நீ அறிந்தாயே
இருள்நிறை பள்ளத்திலும் விழ்ந்தாலும்மே
அணைத்துஎன்னை தோள்மேல் சுமந்தாயே - (2)
கருணையினை கற்றுத்தந்தாயே
உந்தன் வரத்தால் என்னை நிறைத்தாயே
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே🎶
அன்பனே இறைவனே என்னிலே வாருமே
பகைமையுள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும்
வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்
தளர்ச்சி ஓங்கும் போது மனதிடம் தழைக்கவும்
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்
துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்
ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2
கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும்
தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும்
தாயே ஒருநாளும் உனை மறவேன் (2)
1. கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
உலகமெலாம் அறிந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்
2. நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்
3. சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
சாதனைகள் படைத்தாலும் - 2 சரித்திரமாய் முளைத்தாலும்
பொதுக்காலம் 28-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
முதல் வாசகம்
ஆண்டவர் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.
என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.
அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: “இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.” ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 6cd)
பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். – பல்லவி
3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி
5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி
6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு, எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-14, 19-20
சகோதரர் சகோதரிகளே,
எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.
எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.
என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபே 1: 18, 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14
அக்காலத்தில்
இயேசு மீண்டும் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.
அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.
அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-10
அக்காலத்தில்
இயேசு மீண்டும் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.
அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பொதுக்காலம் 28-ஆம் வாரம்
பொதுக்காலம் 29-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
புது நினைவுகள் நுழைகின்றன - அந்த
நினைவுகளின் புது வருகையிலே - நம்
நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ... (2)
1. அன்பான மகனைப் பலிகொடுத்த
ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2)
பண்பான ஆட்டினைப் பலியீந்த
ஆபேலும் இங்கே தெரிகின்றார்
2. விதவையின் காசும் தெரிகின்றது - பல
விதமான யூதரும் தெரிகின்றனர் (2)
விம்மிடும் பாவியின் குரலொலியின்
விண்ணக எதிரொலி கேட்கின்றது
முதல் வாசகம்
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 1, 4-6
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக் கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:
என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 96: 1,3. 4-5. 7-8. 9-10ac (பல்லவி: 7b)
பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். – பல்லவி
4
ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
5
மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். – பல்லவி
7
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். – பல்லவி
9
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
10ac
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், உங்கள் மனவுறுதியையும் நினைவுகூருகிறோம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5a
தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம். கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
பிலி 2: 15-16 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21
அக்காலத்தில்
பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட் படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள்.
இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்துகொண்டு, “வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.
இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள்.
அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை 🎶
தந்தேன் என்னையே அன்புடனே (2)
(சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் x2)
1. தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை
தந்தேன் என்னையே அன்புடனே (2)
(சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் x2)
2. பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை
தந்தேன் என்னையே அன்புடனே (2)
(சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் x2)
3. அப்பமும் ரசமும் தருவதன் வழியில்
தந்தேன் என்னையே அன்புடனே (2)
(சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் x2)
ஒருபோதும் உனைப் பிரியா🎶
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல் கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நிழலாக வா இறைவா
1. உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்
ஏன் என்னை நீ தெரிந்தாய்
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்
2. நீர் தேடும் மான் போலத் தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்
என்னுள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்
அன்போ டெழுவீர் இவ் வீட்டிலே
என்றென்றும் கூடி பண் கீதம் பாடி
உன் பாதம் நாடினோம்
கன்னியே சதா முன் சொன்ன சொல்லிலே பிதா
என்றென்றும் எமக்கே தந்த தாயே மாமரி
1. விஞ்ஞானம் என்ற பேரிலே - அழி
வஞ்ஞானம் சேர் புவிப் போரிலே
எஞ்ஞான்றும் நீயே மெய்ஞான ஜோதி
அம்மா எம் இராக்கினி
2. கலையின் பேரால் மானமே
கொலையுண்டேகும் ஈனமே
காணக் கண் கூச காட்சி நீ பேச
கண்டோம் தஸ்நேவிஸ் சாட்சி
3. பங்கமில் தூய தங்கம் நீ
தங்க வான்வீட்டின் இராக்கினி
இங்கு எம் இல்லம் தங்கிடும் உள்ளம்
பொங்கும் மங்களம் ஆளும்
பொதுக்காலம் 29-ஆம் வாரம்