அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் (2)
ஆர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் (2)
1. தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்
2. உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்;
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்கக் கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே 🎼
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே - (2)
அன்பு பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்பம் துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2)
எளியவர் வாழ்வில் துணை நின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே (2)
மண்ணகத்தில் பொருளை சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒழிந்து போய்விடுமே (2)
விண்ணில் பொருளை தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
ஆவியிலும் என்றும் உண்மையிலும்
ஆவியிலும் என்றும் உண்மையிலும் 🎼
வழிபட வாருங்கள் - இந்த
அவனியில் இறைவன் அரசினைக் காணும்
ஆனந்தம் பாருங்கள்
உலகின் மாந்தர்களே உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள்
இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்
இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள்
உலகின் மாந்தர்களே உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள்
வறியோருக்கு வழிகாட்டுங்கள்
வளம் பொங்கிட வகை கூறுங்கள்
கருணைக் கடலே வா கதித்த தயாபரா வா
சுரதி மறையோர்க்கு சுடரொளியே வா
1. ஆதோனாயி ஆனந்தமே ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளைச் சந்திக்க - கருணை
2. இம்மானுவேல் ஏக நாதா! எங்கள் பாவ தோசந் தீர
ஏன் இன்னும் வரத் தாமதம் - கருணை
கருணைக் கடலே வா கதித்த தயாபரா வா
கருணைக் கடலே வா கதித்த தயாபரா வா 🎼
சுரதி மறையோர்க்கு சுடரொளியே வா
1. ஆதோனாயி ஆனந்தமே ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளைச் சந்திக்க - கருணை
2. இம்மானுவேல் ஏக நாதா! எங்கள் பாவ தோசந் தீர
ஏன் இன்னும் வரத் தாமதம் - கருணை
இதய தீபம் ஏற்றுவோம் இந்த நன்னாளிலே
இதய தீபம் ஏற்றுவோம் இந்த நன்னாளிலே
இன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே
இந்த அன்பென்னும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே
இந்த சுந்தரச் சோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே
இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள்
இனிது வரைந்த கவிதையே
வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை
கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை
கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை
அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே
புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே
கற்றவையோ பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை
சத்தியமும் சந்ததியும் சாட்சியமும் தேவையில்லை
கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை
அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே
புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே
இறைவா அனைத்திற்கும் மன்னன் நீரே
இறைவா அனைத்திற்கும் மன்னன் நீரே
இறைவா இணையில்லா சக்தி நீரே
இறைவா உன் புகழ் நிலைப் பெற்றதே
இறைவா அனைத்துமே உமக்கு சரண் (2)
1. உலகனைத்தும் உம் திருப்புகழ்பாட
உமது சந்நதி வேண்டி நிற்கின்றது (2)
உமது போதனை நல்கிடும் நலனைப்
பெறக் காத்திருக்கின்றது
2. விண்ணக விருந்தில் அமர்ந்திட இங்கு
விரைவாய் இறைகுலம் காத்திருக்கின்றது (2)
விண்ணக வீட்டில் நுழைந்திட எமக்கு
கதவினை திறந்திடுவாய்
இறைவன் உறையும் புனித இல்லம்
இனிமை யாவும் நிறைந்து பொங்கும்
இணைந்து மகிழும் காலம் மலர்ந்தே
இதயம் மலரும் உறவு செழிக்கும்
இகத்தில் மனிதம் முழுமை காணும்
இறைமையாளும் உலகம் விடிந்ததே
மனங்கள் விரிப்போம் கரங்கள் குவிப்போம்
இறைபலியினில் அருள் மழையினிலே
நீங்கள் எனது மக்களென்று சொந்தமாக்கி அணைக்கின்றார்
நான் உங்கள் கடவுளென்று உரிமை வாழ்வு வழங்கினார்
தோளில் சுமக்கும் ஆயனாக தேடி நாளும் வருகின்றார்
தாயை போல மார்பில் சேர்த்து
அன்பை நாளும் பொழிகின்றார்
அவரை தொடர்வோம் அவரில் வாழ்வோம்
அவர் வழியினில் அருள் மழையினிலே
ஆ.....ஆ....ஆ
ஸஸஸ ரீரிரி ககக மபம பமகரிச
(இன்னிசையாக யாழினை மீட்டி இறைவனை போற்றுங்கள்
மெல்லிசையாக குழலினை ஊதி கடவுளை புகழுங்கள்
தேனிசையாக மத்தளம் கொட்டி தேவனை வாழ்த்துக்கள்
ஏழிசையாக கீதங்கள் இசைத்து தெய்வத்தை வழிபடுங்கள் )
இறைவன் உறையும்.....
நீங்கள் எனது நண்பரென்று நட்பின் உறவில் மகிழ்கின்றார்
நாம் அவரின் சீடராக வாழ்ந்து சிறக்க பணிக்கின்றார்
திராட்சை கொடியின் கிளைகளாக ஒன்றி இருக்க விழைகின்றார்
வழியும் ஒளியும் வாழ்வுமாக
திகழ்ந்து நம்மை காக்கின்றார்
(அவரில் இணைவோம் அவர் போல் வாழ்வோம்
அவர் மொழியினில் அருள் மழையினிலே)
ஆ...ஆ...ஆ...ஸஸஸ ரீரிரி ககக மபம பமகரிச
வானும் மண்ணும் காண்பவை யாவும் இறைவனை போற்றிடுமே
ஆறுகள் மலைகள் ஆழ்கடல் பகுதிகள்
கடவுளை புகழ்ந்திடுமே
காற்றும் மழையும் நெருப்பும பனியும் தேவனை வாழ்த்திடுமே
மானிடம் முதலாய் வாழ்வன யாவும் தெய்வத்தை வழிபடுமே
இறைவன் உறையும்.....(2)
இறைவா இறைவா இறைவா இறைவா
இறைவா அனைத்திற்கும் மன்னன் நீரே
இறைவா இணையில்லா சக்தி நீரே
இறைவா உன் புகழ் நிலைப் பெற்றதே
இறைவா அனைத்துமே உமக்கு சரண் (2)
1. உலகனைத்தும் உம் திருப்புகழ்பாட
உமது சந்நதி வேண்டி நிற்கின்றது (2)
உமது போதனை நல்கிடும் நலனைப்
பெறக் காத்திருக்கின்றது
2. விண்ணக விருந்தில் அமர்ந்திட இங்கு
விரைவாய் இறைகுலம் காத்திருக்கின்றது (2)
விண்ணக வீட்டில் நுழைந்திட எமக்கு
கதவினை திறந்திடுவாய்
மகிமையின் இராஜனே மகத்துவ தேவனே
உலகத்தை மீட்டோனே
உமக்கே ஆராதனை – 2
இறையே எம் அரசே இயேசு பெருமானே – 2
எங்கள் குலகுருவே
உமக்கே ஆராதனை – 2
சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி – 2
வானகம் திறந்தோனே
உமக்கே ஆராதனை – 2
ஜெயம் பேரிகை முழங்க ஜெகதலத்தோர் களிக்க – 2
சிருஷ்டிகளெல்லாம் மகிழ
உமக்கே ஆராதனை – 2
ஓ வாரும், வாரும் இம்மானுவேலே
இஸ்ராயேலை நீர் மீட்டருளுமே!
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உம் மக்கள் பாரில் ஏங்கி தவிக்கும்
மகிழ்! மகிழ்! இம்மானுவேல்
இஸ்ராயலே உன் மீட்பர் வருகிறார்
ஓ வாரும் வாரும் தெய்வீக ஞானமே
அனைத்தையும் படைத்தாளும் வல்லமையே
காண்பியும் உமதறிவின் பாதையை
அவ்வழியை நாங்கள் கற்று வாழவே
மகிழ்! மகிழ்! இம்மானுவேல்
இஸ்ராயலே உன் மீட்பர் வருகிறார்
ஓ வாரும் வாரும் வல்ல ஆண்டவரே
முற்காலம் சீனாய் மலைமீதிலே
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ராயேலுக்களித்தீர்!
மகிழ்! மகிழ்! இம்மானுவேல்
இஸ்ராயலே உன் மீட்பர் வருகிறார்
ஓ வாரும் வாரும் விடிவெள்ளியே
எம்நெஞ்சை ஆற்றித் தேற்றிடுமே;
இருண்ட மேகம் நீக்கிடுமே
சாவிருள் நிழல் ஓட்டிடுமே
மகிழ்! மகிழ்! இம்மானுவேல்
இஸ்ராயலே உன் மீட்பர் வருகிறார்
வாருங்கள் இறைமக்களே
வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்-2 🎼
நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக அவர் புகழ் பாடிடுவோம்
நாளும் அவர் வழி வாழ்ந்திடுவோம்
1. சிறுதுளி பெருவெள்ளமாகிடுமே
எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் (2)
வறியவர் வாழ்வுகள் உயர்ந்திடுமே
வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் (2)
தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்
வாருங்கள் இறைமக்களே கடல் அலையென வாருங்கள் -2
2. அருள் ஒளி மனதினில் கலந்திடவே
கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் (2)
மனிதரில் மனிதம் மலர்ந்திடவே
எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் (2)
உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே
இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்
வாருங்கள் இறைமக்களே கடல் அலையென வாருங்கள்-2
தமிழால் உன் புகழ் பாடி
தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா – 2
எனைச்சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனையாள்பவா – 2
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு – 2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா
உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா – 2
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே -2
நாதா உன் புகழ்பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்
திருக்குலமே வாருங்கள் திருப்பலியில் கூடுங்கள்
திருக்குலமே வாருங்கள் திருப்பலியில் கூடுங்கள்🎼
இறைவன் செய்த நன்மைகளை நினைத்துப் பாருங்கள்
மகிழ்வுடனே நன்றி பலி செலுத்த வாருங்கள்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத தேவன்
தன்னையே பலியாக தருகிறார்
அவரின் தியாகத்தால் வாழ்வு பெறுகிறோம் -2
அவரன்பு பிள்ளைகளாவோம்
அவரன்பின் சாட்சிகளாவோம்
உண்மையாக தேடும் அனைவருக்கும் அருகில்
ஆண்டவர் இருக்கின்றார் வாருங்கள்
மகிழ்ச்சியோடு நாம் அவரை நாடுவோம் -2
நினைப்பதெல்லாம் நிறைவேற்றுவார்
நன்மைகளால் நம்மை நிரப்புவார்
இறைவன் படைத்த நாளில்
இணைவோம் இயேசு பெயரில்
இறைவனின் அன்பில் இறைமக்களாவோம்
கிறிஸ்துவில் இன்று புது வாழ்வு காண்போம் (2)
ஆ... ஆ... ஆ... ஆ...
1. உலகம் எல்லாம் ஓர்குலமாய்
இணைந்திட இறைவன் நினைத்தாரே - அது
நனவாகிட நம்மில் நிறைவேற்றிட (2)
அன்பாலே தேர்ந்தெடுத்தார்
2. கோடான கோடி மாந்தரிலே
கோமகன் நம்மை தேர்ந்தாரே
அவர் அன்பானது நம் உயிரானது (2)
அன்பாகச் சேர்ந்திடுவோம்
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட (2)
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
தேடியே தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார்
துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2)
(வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்)
அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2)
(வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்)
பாடுங்கள் ஆண்டவர்க்கு
புதியதோர் பாடல் பாடுங்கள் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா
1) ஆண்டவர் தம் திருத்தலத்தில்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள
மாண்புயர் வான் மண்டலத்தில்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
2) எக்காளத் தொனி முழங்க
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
வீணையுடன் யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
3) முரசொலித்து நடனம் செய்து
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
நரம்பிசைத்து குழலூதி
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
4) நாதமிகு தாளத்துடன்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
கைத்தாள ஒலி முழங்க
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
5) அவருடைய செயல்களுக்காய்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
அவருடைய மாட்சிமைக்காய்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
சுமைசுமந்து சோர்ந்திருப்போரே
சுமைசுமந்து சோர்ந்திருப்போரே🎼
என்னிடம் எல்லோரும் வாருங்கள் – 2
உங்களை நான் இளைப்பாற்றுவேன்
உங்களை நான் காப்பாற்றுவேன் – 2
உங்களை நான் தேற்றிடுவேன்
உங்களை நான் ஏற்றிடுவேன்
உங்களை நான் நடத்திச் செல்வேன்
உங்களை நான் அன்பு செய்வேன் – 2
உங்களை நான் அரவணைப்பேன்
உங்களை நான் வாழச் செய்வேன்
உங்களை நான் வளரச் செய்வேன்
உங்களை நான் ஒளிரச் செய்வேன் – 2
உங்களை நான் மலரச் செய்வேன்
உங்களை நான் மிளிரச் செய்வேன்
இயேசு அழைக்கின்றார்
ஆவலாய்த் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கின்றார்
1. இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே
இதய அமைதி இனிதே அடைய
இயேசு அழைக்கின்றார் (2)
2. கவலைப் படுவோரே கலங்கித் தவிப்போரே
கவலை நீக்கிக் கலக்கம் போக்க
கடவுள் அழைக்கின்றார் (2)