அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவனே - உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே (2)
1. பொன்னான வாழ்வை புடமிட்டதாலே
பூவாக மணம் வீச வைத்தோம் ஆ...ஆ...(2)
புதிரான வாழ்வே எதிரானதாலே (2)
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரனே
2. அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் ஆ...ஆ...(2)
திரியாகச் கருகி மெழுகாக உருகி (2)
பலியாக வைத்தோம் ஆண்டவனே - உம்
ஒளியாக மாற்றும் தூயவனே
இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக
இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக
இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக
நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை (2) என்
பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு
காய்த்து கனிந்த கனிகளும்
ஓங்கி உயர்ந்த மரங்களும் அதைச்
சூழ்ந்து வளர்ந்த செடிகளும்
இயற்கை கூறும் கவிதைகள் யாவும்
இறைவன் தந்த கொடைகளே (2) - நினைத்தேன்…
பறந்து திரியும் பறவைகள் அவை
பாடும் கடல்வாழ் விலங்குகள்
காற்றும் கடலும் கார்முகில் வான
வில்லும் நிலவும் விண்மீன்களும்
இயற்கை கூறும் கவிதைகள் யாவும்
இறைவன் தந்த கொடைகளே (2) - நினைத்தேன்...
இறைவா படைக்கின்றேன்... இறங்கி ஏற்க வா
என்னையே தருகின்றேன்... ஏற்று மகிழ வா
வாழ்வில் உந்தன் அருட்கரம்
வடித்த பெரும் செயல்களை (2)
நினைந்து மகிழ்ந்து பாடினேன் (2) என்றும்
நினைவில் என்னையே தருகின்றேன்
அப்பமும் ரசமும் படைக்கையில்
அதன் வழி என்னை முழவதும் (2)
உன் மகன் பலியில் ஒன்றித்து (2) என்றும்
விண்ணவன் உமக்குத் தருகின்றேன்
காணிக்கை தரும் நேரம்
காணிக்கை தரும் நேரம் நான் என் மனம் தருகின்றேன் – 2
ஏற்றருளும் தெய்வமே
எளியவர் தருகின்ற காணிக்கையை – 2
படைப்புகள் பலவாகினும் பரமன் உமக்கே சொந்தம் – 2
அதில் மலராகும் என் மனம் உன்னிடத்திலே – 2
மனம் காண ஏற்றிடுமே – 2
பிறரன்புப் பணிகளெல்லாம் தலைவன் உமதன்றோ – 2
என்றும் உமதன்புப் பணியில் என் வாழ்வினை – 2
பலியாக ஏற்றிடுமே – 2
பலியென எனை தருவேன்
உம் பலியினில் எனை இணைப்பேன்
பகிர்தலில் நாளும் வளர
பணிந்தே எனை தருவேன்
1.
வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர்
எந்தன் உடல் பொருள் ஆவியெல்லாம் உமக்கே தருகின்றேன்
என்னையே ஏற்று வாழ உமதருள் கேட்கின்றேன்
2.
திராட்சை கொடியென்றேன் அதன் கிளைகள் நீர் என்றீர்
எனக்குள் இருப்போரெல்லாம் என்றுமே வாழ்வாரென்றீர்
பிறரையே ஏற்று வாழ உம்வரம் கேட்கின்றேன்
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே
என்னையாளும் மன்னவனன்றோ
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்
நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்? - இன்று
உனக்கு நான் எனையளித்தேன்
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உமதருட்கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும்
உன்னிலே வாழ்ந்திடுவேன்
எது வேண்டும் உனக்கு இறைவா
எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா – 2
எது வேண்டும் எது வேண்டும் – 2
மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனி யாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன் – 2
அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா (எது வேண்டும்)
பொருள் கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையே
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையே
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன் – 2
அது சிறப்பாய் இருக்குமோ இறைவா (எது வேண்டும்)
குயவனே குயவனே
குயவனே குயவனே படைப்பின் காரணரே 🎼
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால்
உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே
3. மண்ணாசையால் நான் மயங்கியே
மெய்வழி விட்டகின்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும்
பாதையில் நடத்திடுமே - குயவனே
வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்🎼
என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய்
கோதுமை மணியும் திராட்சைக் கனியும்
புது உரு பெறுவது போல் (2)
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவாய் (2)
நான் வாழ பிறரும் பிறர் வாழ
நானும் தேவை என்றுணர்ந்தேன் (2)
சமத்துவ சோதர நோக்குடனே
புதுயுகம் காண்போம் அகத்தினிலே (2)
சின்னக் குழந்தை இயேசுவுக்கு என்ன கொடுப்பது
சின்னக் குழந்தை இயேசுவுக்கு என்ன கொடுப்பது (நாம்) – 2 🎼
மலரைப் படைத்த மழலைக்கு மலரைக் கொடுப்பதா
கனியைப் படைத்த கண்மணிக்குக் கனியைக் கொடுப்பதா – 2
குரலைக் கொடுத்த குழந்தைக்கு இசையை எழுப்பவா
விரலைக் கொடுத்த விமலனுக்கு வீணை மீட்டவா – 2
புவியைப் படைத்த பரமனுக்கு புவியைக் கொடுப்பதா
பகலும் இரவும் அவன் புகழைப் பாடித் தொழுவதா – 2
தன்னை தந்த தேவனுக்கு என்னை தருகிறேன்
தரணி ஆளும் நாதனுக்கு இதயம் தருகிறேன் – 2
பலியாகவே ஜீவபலியாகவே – 2
உள்ளதெல்லாம் அவரின் பாதம் விரும்பி நான் தருகிறேன்
கல்வாரி காட்சியில் கலங்கும் உள்ளமே – அந்த கருணையுள்ள தேவனின் வாழ்வில் இணைகிறேன் – 2
அவரின் அன்பின் ஈடாக என்னை தருகிறேன்
அவரின் உறவில் எந்நாளும் மகிழ்ந்து வாழ்கிறேன்
தருகிறேன்/ மகிழ்கிறேன்/ அவரின் அன்பில் இணைகிறேன்
சொந்த மகனை தந்து கடவுள் நம்மை மீட்கிறார் – பழைய நிலைமைகளை மாற்றி புது வாழ்வு தருகிறார் – 2
மலர்தூவி மனுமகனின் பாதம் வீழ்கிறேன்
இசைமீட்டும் வீணையாக போற்றிபுகழ்கிறேன்
உள்ளமே/ அவரிலே/ புதுபாடல் பாடுமே
உந்தன் பாதம் பணிந்து நான்
வாழ வேண்டும் யேசுவே
பலியிலே… கலந்திட…
வேண்டி நின்றேன் தெய்வமே
1) அன்பில் நிலைக்கும் இதயமே.. ஆற்றல் மிகுந்ததே பணியில் உயர்ந்து வாழுமே..
புதிய உறவிலே
பிறரின் நலனில் மகிழ்ந்திட
தந்தேன் என்னை உந்தன் பாதம்
என்னை நீ ஏற்றிடுவாய்
2) மனித நேயம் மலரவே.. என்னை தருகின்றேன்
உண்மை அன்பு உயர்ந்திட உறுதி கொடுக்கின்றேன்
உந்தன் ஆட்சி மலர்ந்திட
தந்தேன் என்னை உந்தன் பாதம்
என்னை நீ ஏற்றிடுவாய்
இறைவன் படைத்த உலகம்
இறைவன் படைத்த உலகம் நானும் அவரின் செல்வம்
இயற்கை தந்த கனிகளோடு என்னைத்தருகின்றேன் (2)
மலரோடு மலராக நானும் இணை ந்தேன்
கனியோடு கனியாக நானும் கனி ந்தேன்
சநிசகா மகமபா சாசபாப மகரிசா /2
என்னையே காணிக்கையாய் நானும்தருகிறேன்
உம்மையே என்வழியாய் நானும் பகிர்கிறேன்
ஏற்று உமது பலியாய் மாற்றுமெந்தன் யேசுவே……..
ஏழைப்பெண்ணின் காணிக்கையாய் என்னைத்தருகிறேன்
மெல்கிசதேக் காணிக்கையாய் என்னைமாற்றுமே
சநிசகா மகமபா சாசபாப மகரிசா/ 2
குருதிசிந்தி கல்வாரி பலியாய் அர்ச்சித்தீர்
குறைகள் நிறைந்த என்வாழ்வை நிறைவாக்கவே
என்னில் எழுந்து என்னைமாற்றும் எந்தன் யேசுவே
படைத்ததெல்லாம் தரவந்தோம்
படைத்ததெல்லாம் தரவந்தோம்🎼
பரம் பொருளே உம் திருவடியில் –2
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
என் வாழ்வினிலே ஒளி வீசும்
உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே –2
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் –2
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் தருகின்றோம் –2
வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே –2
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் –2
கனிவாய் உவந்து தருகின்றோம் தருகின்றோம் –2
உன்னிடத்தில் என்ன இல்லை
என்னிடத்தில் ஒன்றும் இல்லை (2)
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க
ஏதொன்றும் சொந்தம் இல்லை
பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை (2)
1. கண்களை நான் தந்திருப்பேன்
கண்களுக்கோ பார்வையில்லை (2)
இறைவா உன் பாதத்தில்
உள்ளத்தை நான் வைக்க
உள்ளத்தில் ஞானம் இல்லை
காய்ந்தே போனேன் (2)
கண்ணீரும் கண்ணில் இல்லை
2. நெஞ்சக்குள்ளே வந்துவிடு
நிம்மதியை தந்துவிடு (2)
நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்
நெற்றிக்கு முத்தம் கொடு
நீயே என்னை காணிக்கை பெற்றுக் கொடு
காய்ந்தே போனேன் (2)
கண்ணீரும் கண்ணில் இல்லை
என்னையே தந்தேன் இறைவா
என் எளிய காணிக்கையாக
என்னையே படைத்தேன் தலைவா
என் அன்பினை அற்பணமாக்க – 2
ஏற்றிடுவாய் இறைவா
என்னை மாற்றிடுவாய் தலைவா – 2
1. கோதுமை மணியோடு நான் சேர்ந்து களிப்புடன் உடைபடுவேன்
திராட்சை ரசத்தோடு நான் இணைந்து தியாகத்தின் சுடராவேன்
இறையன்பு பிறரன்பு பாடத்தையே
என்றென்றும் நான் பயில்வேன் – 2
உமதன்பின் சாட்சியாய் திகழ்ந்திடவே
அன்றாடம் அடியேன் நிற்பேன் – 2
2. இன்பங்கள் துன்பங்கள் யாவையுமே இறைவா நான் தருகின்றேன்
உள்ளத்தின் ஏக்கங்கள்
எல்லாமுமே உம்பதம் படைக்கின்றேன்
உந்தன் திரு வார்த்தையால் பலம் கண்டு
இன்றே நான் வாழ்ந்திடுவேன் – 2
ஆறுதல் அளித்திடும் நலம் கொண்டு
அதிசயங்கள் அனுதினம் காண்பேன் – 2
காணிக்கை தர நான் வருகின்றேன்
உன் கரங்களில் என்னை தருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் (x2)
1) என்னக் கொடுத்தாலும் பயனில்லை - நான்
என்னைக் கொடுக்காமல்
பொருள் கொடுத்தால் (x2)
என்னையே தான் நீ கேட்கின்றாய்
நான் என்னையே முழுவதும் தருகின்றேன் (x2)
2) சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும்
மனம் உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (x2)
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன்
அதை பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (x2)
அடியோர் யாம் தரும் காணிக்கையை
அடியோர் யாம் தரும் காணிக்கையை🎼
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே – 2
பாவியென்றெம்மைப் பாராமல் – எம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் – 2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் – 2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய் தருகின்றோம்
ஏழை என்னை காணிக்கையாகத்
ஏழை என்னை காணிக்கையாகத்🎼
தருகின்றேன் தெய்வமே ஏற்றுக் கொள்ளுமே - 2
என் உயிரும் உடலும் உள்ளமும் சிந்தனையும் செயலும் - என்
உணர்வுகள் உறவுகள் என்னில் உள்ள திறமைகள் (2)
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்
என் கடந்த கால வாழ்க்கையும் நிகழும் வாழ்க்கையும் - நான்
எதிர் கொள்ளும் வாழ்க்கையும் அதன் வளர்ச்சி தளர்ச்சியும் (2)
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்