அன்னையின் அன்பு ஈடு இணை இல்லாதது
அன்னையின் அன்பு ஈடு இணை இல்லாதது🎶
அவள் அன்பின் முன்னே எதுவுமே நிலை இல்லாதது – 2
அவள் அன்பை வாழ்த்துவோம், அவள் அன்பில் வாழுவோம்
அவள் அன்பு மகன் இயேசுவை போல் அன்பு செய்வோம் – 2
தூதர் சொன்ன செய்தி கேட்டு தன்னை தாழ்த்தினால்
தூய்மையோடு இறைவனை தன் வயிற்றில் தங்கினால் – 2
உம் மகனை எமக்கழித்த தியாக அன்னையே – உம்மை
நாளும் எங்கள் நெஞ்சில் சுமப்போம் தேவ அன்னையே – 2
சிலுவை மரத்தில் இறைவன் அன்பு சாட்சியானதே
சிலுவை அடியில் உந்தன் அன்பு காட்சியானதே – 2
உந்தன் அன்பும் இறைவன் அன்பும் எம்மில் நிறைந்திட – பிறர்
அன்பு நாளும் எம்மில் வளர்ப்போம் தேவ அன்னையே – 2
அன்புத் தந்தையே கருணை தெய்வமே
அன்புத் தந்தையே கருணை தெய்வமே🎶
எங்கள் அந்தோணியாரே
புனித நகரிலே புதுமை புரிந்திடும்
பதுவைப் புனிதரே வாழ்க
வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க
1. பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும்
வரவும் உம் வரவால்
தணியும் நோய்கள் தகரும் பிணிகள்
தலைவா உன் தயவால்
தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த
தர்மம் தான் என்றாய்
உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே
2. இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல
வழியைச் சொன்னவரே
இறை நல்வாழ்வில் நிதமும் வாழப்
பாதை தந்தவரே
எந்தன் நெஞ்சில் நீ இருந்து
உண்மை நெறி செல்ல
இறைவன் வாக்கை வாழ்ந்து காட்ட புனித நகரிலே
ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்
உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும்
மாண்பைப் போற்றுவேன்
ஆவே ஆவே ஆவே
பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே – 2
அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா – 2
தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம் – 2
மாய உலகினில் காத்திடுவாய் அம்மா – 2
ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்
ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்🎼
ஆனந்தம் ஆனந்தம் என் மனதில் ஆண்டவா உனைப்பாட
ஆண்டவா உனைப்பாட ஆண்டவா உனைப்பாட
1. வான்முகிலும் உயர்மலையும் உந்தன் புகழ்பாட
தேன் பொழியும் நறுமலர்கள் உன் பெயர் சுவை பாட (2)
வான் பொழியும் நீர்த்துளிகள் உந்தன் அருள்பாட யான்
உனது திருப்புகழை கவியால் தினம்பாட ஆண்டவா உனைப் பாட
2. பகலொளியும் பால் நிலவும் ஒளியால் உனைப்பாட
அலைகடலும் அதன் சிறப்பும் கருணையை தினம்பாட
மழலைகளின் தேன்மொழிகள் தூய்மையின் நிறம்பாட
யான் உனது திருப்புகழை கவியால் நிதம் பாட ஆண்டவா உனைப் பாட
ஆஆஆஆஆஆ
தேவனின் வழியில் சிறந்து விளங்கும்
திருச்சபையின் நேச பக்தனே
புனித குரியாகோஸே (x2)
எளிமையாய் இருக்கும் நின் கர்த்தர்
பெயரில் பொழிவீர் அன்பு ஆசிரும்
புனித குரியாகோஸே
1) விண்ணக பிதாவே பரிசுத்த ஆவியே
உம்பாதம் நாங்களும் பின் தொடர்வோம்
எம் இருள் வழியினில்
உம் பிரசன்ன ஒளியில்
நல்ல மாதிரி... எங்களுக்கு
பொன் வெளிச்சம்
2) தேவ பிதாவை அப்பா என்று அழைக்க
அன்பு கொண்டு கூப்பிடும்...
அனைவருக்கும்
தியாக திருவிருந்தை திருசமுகமாக
ஏற்படுத்தி இங்கே... புதியதொரு உலகம்
படைத்த
ஒரு கோடிப்பாடல்கள்
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூட்டுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் – 2
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே – 2
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே – 2
இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் அருள்பாடுதே – 2
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் – 2 (ஆதியும்)
உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
துலங்கிடும் உமக்கே இறைவா
நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம் (2)
இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு
இணையில்லா பலியில் இறைவனை உண்டு (2)
சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ.. 2
நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்
உண்மை வழியை உலகுக்குக் காட்ட
உலகத்தை அன்பால் ஒன்றாய்த் திரட்ட (2)
அக இருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ.. 2
அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு
கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும்
கிறிஸ்துவின் தேகமே என்னை இரட்சியும்
கிறிஸ்துவின் இரத்தமே என்னைப் பூர்ப்பியும்
திருவிலாத் தீர்த்தமே என்னைத் தூய்ப்பியும்
1. கிறிஸ்துவின் பாடுகள் என்னைத் தேற்றிட
அருள்நிறை இயேசுவே என்னைக் கேட்டிடும்
அரிய காயங்களுள் என்னை வைத்திடும்
பிரிந்திடா வண்ணமாய் என்றும் கட்டிடும்
2. பொருது சத்ருவிடம் நின்றே காத்திடும்
மரண வேளையினில் என்னைக் கூப்பிடும்
பரகதியில் நிதம் உம்மை வாழ்த்தவே
வருகவென்றன்போடு என்னை ஏவிடும்
நன்றி நன்றி நல்ல தேவனே
நன்மை புரியும் நல்ல தெய்வமே
ஏழு ஸ்வரங்களில் இனிய ராகத்தால்
ஏற்றி போற்றி புகழ்ந்து பாடுவேன்
1. உந்தன் கைகளில் எனது பெயரையே
உரிமையாய் பொரித்து வைத்தீரே (2)
முன்னும் பின்னுமே எங்கும் சூழ்ந்துமே
என்றும் என்னை பாதுகாத்தீரே
நன்றி நன்றி நல்ல தேவனே
2. உந்தள் சிறகினில் என்னை சுமந்துமே
இறுகப் பற்றி அரவணைத்தீரே (2)
எந்தன் திறமைகள் ஆற்றல் அனைத்துமே
உந்தன் அன்பில் உணரச் செய்தீரே
நன்றி நன்றி நல்ல தேவனே
நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே – 2
கோடி நன்றி பாட்டுப் பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் – 2
உயிர்கள் யாவும் வாழ நல் உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர நல் உள்ளம் உறைந்ததால்
நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனதைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள்வரங்கள் பொழிந்ததால்
பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
ஜெபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகின் வழியாய் ஆனதால்
பாடித் துதி மனமே
பாடித் துதி மனமே பரனைக் 🎼
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை //
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
தாயே ஒருநாளும் உனை மறவேன் (2)
1. கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
உலகமெலாம் அறிந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்
2. நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்
3. சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
சாதனைகள் படைத்தாலும் - 2 சரித்திரமாய் முளைத்தாலும்
கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா🎼
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே
வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா – 2
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா
ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த – 2
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே – 2
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா – 2
உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி – 2
தெய்வீகம் கமழ்ந்திடும் திருக்குடும்பம்
தெய்வீகம் கமழ்ந்திடும் திருக்குடும்பம் 🎼 📺
எங்கள் பாதுகாவல் ஆனது
தினம் தினம் அதன் புகழ் பாடுவோம்
நன்றி கூறி நாளும் வாழ்த்துவோம் (2)
1. நீதியும் நேர்மையும் நிறைந்தவர் சூசையப்பர்
வாய்மையும் தூய்மையும் நிறைந்தவர் கன்னி மரியாள்
தாழ்ச்சியும் சாந்தமும் நிறைந்தவர் இயேசு பிரான்
அன்பினில் அமைதியில் உண்மையில் உழைப்பினில்
ஆனந்த திருக்குடும்பம்(2)
2. விசுவாசம் அன்பு நிறைந்த நல் குடும்பங்களாய்
இறைபற்று மறைபற்று மிகுந்த நல் குடும்பங்களாய்
செபம் செய்து செழித்திடும் சீர்மிகு குடும்பங்களாய்
எங்கள் குடும்பங்கள் வாழ்ந்திட வளர்ந்திட
அருள் செய்யும் திருக்குடும்பம்
என் ஆன்மா இறைவனையே
என் ஆன்மா இறைவனையே
ஏத்திப் போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
1. தாழ்நிலை இருந்த தம் அடியவளை
தயையுடன் கடைக்கண் நோக்கினார் (2)
இந்நாள் முதலாம் தலைமுறைகள் (2)
எனைப் பேறுடையாள் என்றிடுமே
2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார் (2)
அவர்தம் பெயரும் புனிதமாகும் (2)
அவரில் அஞ்சுவோர் கிரக்கமாகும்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்🎼
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ… ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே… - இந்த
சின்னஞ்சிறு வயதில்
என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்
அவர் வரும் நாளிலே
என்னை கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
அவர் சமுகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே🎼
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது
என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன்
1. பசியால் வாடும் ஏழையின் நிலையில்
பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி
அருளமுதை ஈந்தார்
2. ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்
அணைத்திடவே வந்தார்
ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை
மாற்றிடவே வந்தார்
3. நண்பனுக்காய் தரும் உயிர்த் தியாகம் மிஞ்சும்
நட்பெதுவும் உளதோ
என் அன்பர் இயேசு சிலுவையில் மரித்து
எனைக் காத்தார் என் சொல்லவோ அருளானந்தரே - 2
ஓரியூரின் ஒளிவிளக்கே தன்னுதின்னல் காவலரே - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே - 2
இறைவன் அரசு பரவிடவே தன்னை முழுதாய் துறந்தவரே - 2
நீதியின் ஆட்சி மலர்ந்திடவே இன்னுயிர் தியாகம் புரிந்தவரே -2
இறை இயேசுவை உம்மை போல் ஏற்று தொடர்ந்திட அருள்புரிவாய் - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே – 2
எளிய வாழ்வில் பனி புரிந்து மறவ நாட்டில் கலந்தவரே - 2
செந்நிற பூமியில் நற்செய்திக்காய் தன்னையே இழந்து ஒளிர்ந்தவா - 2
இனி உம் வழியில் யாம் நடந்திட நீரே காவலாய் தயை புரிவாய் - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே - 2
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்🎼
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை – 2
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன் – 2
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா – 2
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர் – 2
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன் – 2
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன் – 2
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா
உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்
உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்🎼
வாழ்வை என்றும் வழங்கினார் (2)
அல்லேலூயா பாடுவோம்
ஆனந்தமாய் கூவுவோம் (2)
பாதாளம் சென்று தன் நண்பனை கண்டார்
விண்ணகம் நோக்கி அவர் அழைத்துச் சென்றார் (2)
கல்லரை ஒன்று பட படக்க
சிலுவை கொடியுடன்; உயிர்த்தெழுந்தார் (2)
அல்லேலூயா பாடுவோம்
ஆனந்தமாய் கூவுவோம் (2)
அடிமை விலங்கு இன்று அறுந்துபோனதே
உரிமை வாழ்வு இன்று உதயமானதே (2)
ஏற்றத்தாழ்வு மறைகிறதே
இன்று சமுத்துவம் எங்கும் மலர்கிறதே (2)
அல்லேலூயா பாடுவோம்
ஆனந்தமாய் கூவுவோம் (2)
இசை என்னும் அமுதை இறைவனுக்கே
என்றும் சுவை தந்த செசிலியே காவலியே
இசை என்னும் அமுதை இறைவனுக்கே
பண்பல இசைத்தே பார்தனில் நாங்கள்
பணித்திட்டோம் அருள் பெறவே
தேனினும் இனிய தமிழிசையாலே
தினமும்மை புகழ்வோமே
தேவனை நாளும் புகழ்ந்து நாம் பாட
தேடும் உம் அருள் தாராய்
பாடகர் அனைவரின் காவலும் நீயே
பாடிடுவோம் தினமே
பாடலினாலே மறை பணி புரிய
பரனிடம் வேண்டிடுவாய்
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
இயேசு ராஜா முன்னே செல்கிறார்🎼
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஒசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
1. அல்லேலூயா துதி மகிமை – என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
என்றென்றும் போற்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோகோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)
இந்த பூவிலே ஒரு காலத்தில்
இந்த பூவிலே ஒரு காலத்தில்🎶
தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
சொல்லொணாததாய் புயலும் வீச
காணுணாததாய் இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா
1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார்
பிழைப்போமேல் உமக்காய்
ஒரு கோவிலைச் செய்வோமென்றார்
மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
கரை சேர்ந்திட நொடியில் கண்டார்
2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை
கண்டு வணங்கினர் தாம்
மேலும் நன்றி நவின்றனர் தாம்
மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை
அவராலயமாகப் பணிந்தார்
இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது இரக்கம் வையும்
இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது இரக்கம் வையும் - 2🎼
அளவில்லா இரக்கம் கொண்டவரே
அனுதினம் எம்மை ஆள்பவரே
ஆறுதல் என்னில் தருபவரே
அமைதியை என்னில் அளிப்பவரே
ஆபத்தில் உதவும் தூயவரே
அழைத்திடும் போது வருபவரே
அழுகையில் ஆறுதல் தருபவரே
அன்பாய் தேற்றி அணைப்பவரே
துன்புறுவோர் துயர் துடைப்பவரே
துணை வந்து எம்மை ஆள்பவரே
நிம்மதி வாழ்வில் தருபவரே
நீங்காதென்னில் நிலைப்பவரே
கண்ணீர் யாவும் துடைப்பவரே
கருணைக் கண் நோக்கிப் பார்ப்பவரே
நிலவாய் இதயத்தில் இருப்பவரே
நீங்காதென்னில் வாழ்பவரே
பாவங்கள் என்னில் தீர்ப்பவரே
பாசத்தை என்மேல் பொழிபவரே
நீதியை என்னில் தருபவரே
நிம்மதி நிலவிடச் செய்தவரே
தாயாய் என்னைக் காப்பவரே
தந்தையாய் என்னை அணைப்பவரே
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
மறந்திடாதிருக்க சிலுவையிலே அவர்
மரித்துத் தொங்கும் காட்சி
மனதில் நில்லாதோ - இயேசுவின்...
1. ஆளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
களங்கமில்லா அன்ப கருணைசேர் அன்பு (2)
கல்வாரி மலையெங்கும் கதறிடும் அன்பு
2. ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு
இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு
ஆனந்த அன்பு அபூர்வ அன்பு (2)
ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு
3. ஏனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு (2)
எனக்காக உயிரையே தந்த தேவன்வு
மகிமையின் இராஜனே மகத்துவ தேவனே
மகிமையின் இராஜனே மகத்துவ தேவனே🎶
உலகத்தை மீட்டோனே
உமக்கே ஆராதனை, உமக்கே ஆராதனை
1. உம் உடல் நீர் தந்தீர், உம் ரத்தம் எமக்களித்தீர் -2
நிலைவாழ்வின் உணவே,
உமக்கே ஆராதனை, உமக்கே ஆராதனை
2. இறையே எம் அரசே, இயேசு பெருமானே – 2
எங்கள் குல குருவே
உமக்கே ஆராதனை, உமக்கே ஆராதனை
மூவொரு இறைவா சரணம்
முழுமுதல் தலைவா சரணம் – 2
அடியேன் உன் பதம் சரணடைந்தேன்
படைப்பின் சிகரமாய் எனை மாற்றி
பதரான என் நிலை உயரச் செய்தாய் – 2
போற்றுவேன் புகழுவேன் தினம் தினம்
உன் நாமமே
பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும்
என் வாழ்விலே – 2
சோதனை சூழ்கையில் உடன் இருந்தாய்
மனவேதனை போக்கி நல் வாழ்வளித்தாய்
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் இறைவா…
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய்
அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய்
அடிமை என் மாண்பினை உயரச்செய்து
அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய் (போற்றுவேன்...)
பெயர் சொல்லி அழைத்து அருளளித்தாய்
உன் பணிதனைக் கொடுத்து உடன் நடந்தாய்
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் இறைவா…
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய்
சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய்
அமைதியின் தூதனாய் எனை மாற்றி
அருள்வழி சென்றிட துணைபுரிந்தாய்
(போற்றுவேன்...)
எங்கள் காவலாம் சூசை தந்தையின்
எங்கள் காவலாம் சூசை தந்தையின்🎶
மங்களங்கள் எங்கும் சொல்லி இங்கு பாடுவோம்
செங்கை அதிலே தங்க புஷ்பம்
தங்கும் கோலை ஏந்திடும்
1. கன்னித் தாயாரின் பர்த்தா நீ அல்லோ
உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்யனே
சென்னி மகுட முடி புனைந்த
மன்னர் கோத்ர மாதவா
2. இயேசுநாதரின் செல்வத் தாதை நீ
நேசபுத்ரர் இன்று துத்யம் பாட வந்தோமே
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசை கொண்டு பாடவே
3. தந்தை என்றுன்னை வந்து பாடினோம்
உந்தன் மைந்தர் சொந்தமென்று இன்று காத்திடாய்
அந்தி காலை வந்த வேளை
வந்து உதவி தந்திடாய்
என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா? – 2🎶
கல்வாரி காட்சியை கண்டபின்னும், நேசியாமல் இருப்பாயா – 2
பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார் – 2
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் – 2
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் நான் – 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைபாறவா – 2
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் – 2
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடிவந்தேன் மானிடனாய் – 2
வானம் திறந்து வெண்புறா போல
இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
அப்படியே இன்று நடக்கணுமே
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் - 2
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் – 2
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் – 2
அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே - 2
வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே - 2
தாயாய் என்னைக் காப்பவரே
தந்தையாய் என்னை அணைப்பவரே
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே🎼
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)
பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை (2)
கரங்களை விரித்தே கள்வனைப் போல் -2
கழுமரத்தினில் கண்டதினால்
கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே (2)
மண்ணவர்க்காகத் தன்னுயிரை -2
இன்று மாய்த்திடக் கண்டதினால்