அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழக விருதுகளை பெற்ற நம் பள்ளி ஆசிரியர்கள்
அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகம் வழங்கும் “நெடுநாள் ஆசிரியர்” விருது இவ்வாண்டு நம் பள்ளி ஆசிரியர்கள் மூவருக்குக் கிடைத்துள்ளது. ஜெயகௌரி சிற்றரசன், சரவணன் ராஜமாணிக்கம் மற்றும் பிரவீனா ராம்குமார் ஆகியோர் விருது பெற்று இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு இரிச்மண்டு தமிழ் மக்களின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். நம் பள்ளி ஆசிரியர்கள் அமெரிக்கா தமிழ்கல்விக்கழகத்தினால் கௌரவிக்கப்படுவது நம் பள்ளிக்கு பெருமை. இந்த "நெடுநாள் ஆசிரியர்கள்" சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ஜெய கௌரி சிற்றரசன் / Jaya Gowri Citrarasan:
திருமிகு ஜெய கௌரி சிற்றரன் நிலை ஒன்று ஆசிரியையாக இரிச்மண்டு தமிழ்ப்பள்ளியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழ்மொழியை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறார். எல்லோரின் அன்புக்குரிய ஆசிரியராக புன்னகை மாறாது, மிகவும் பொறுமையுடன் மாணவர்களைப் பயிற்றுவித்து, ஆசிரியை பணியை செவ்வனே செய்து வருகிறார். பள்ளி விழாக்களில் எப்பொழுது உதவி தேவைப்பட்டாலும் இன்முகத்தோடு உதவுபவர்.
சரவணன் ராஜமாணிக்கம் / Saravanan Rajamanickam:
திருமிகு சரவணன் ராஜமாணிக்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக இரிச்மண்டு தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியர் பணி எனும் அறப்பணியை செவ்வனே செய்து வருகிறார். நிலை ஒன்று வகுப்பு ஆசிரியாராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த இவர் இந்த ஆண்டு நிலை ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக தொண்டாற்றி வருகிறார். முழுநேர தகவல் தொழில்நுட்ப திட்ட மேலாளர், நிழற்பட கலைஞர், இரு மகள்களுக்கு தந்தை, தோட்டக்கலைஞர், சமூக ஆர்வலர் ஆகிய பிற பிம்பங்களில், இவரை மிகவும் கவர்ந்த கடமை தமிழாசிரியராக இருப்பதே.
பிரவீனா ராம்குமார் / Praveena Ramkumar:
திருமிகு பிரவீனா ராம்குமார் ஆறு ஆண்டுகளாக இரிச்மண்டு தமிழ்ப் பள்ளியில் மழலை வகுப்பு ஆசிரியையாக சேவை செய்கிறார். மழலைகளுக்கு தமிழ் மொழியை கற்பிப்பதில் இவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மெய்நிகர் கல்வியில் படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் குழந்தைகளுக்கு உற்சாகத்துடன் தமிழ் எழுத்துக்களை பயிற்றுவிப்பது இவரின் சிறப்பு. பள்ளியில் நடைபெறும் போட்டிகளை ஆர்வத்துடன் ஒருங்கிணைத்து நடத்துவதற்கு உதவுபவர். இவருக்கு புராணங்கள் பற்றி தெரிந்து கொள்வது மற்றும் பயணங்கள் செய்வது மிகவும் பிடிக்கும்.