அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழக விருதுகளை பெற்ற நம் பள்ளி ஆசிரியர்கள்
அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகம் வழங்கும் “நெடுநாள் ஆசிரியர்” விருது இவ்வாண்டு நம் பள்ளி ஆசிரியர்கள் மூவருக்குக் கிடைத்துள்ளது. வெங்கட் எனும் வெங்கடேசன் சீனிவாசன், சிவகாமி அண்ணாமலை, முத்தரசு எனும் முத்துராஜ் சண்முகவேல் ஆகியோர் விருது பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு இரிச்மண்டு தமிழ் மக்களின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். நம் பள்ளியில் பல ஆண்டுகள் ஆசிரியையாக இருந்து தற்பொழுது ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியிலிருந்து "நெடுநாள் ஆசிரியர்" விருது பெரும் சுனிதா சந்திரமோகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நம் ஆசிரியர்களின் தமிழ்த்தொண்டு தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பாராட்டு பெறுவது குறித்து மிக மகிழ்ச்சி.
வெங்கடேசன் சீனிவாசன் / Venkatesan Seenivasan:
ஊரார் பலரின் அன்புக்குரிய வெங்கட்; மாணவர்களின் இனிய வெங்கட்-அங்கிள் எனும் வெங்கடேசன் சீனிவாசன் இரிச்மண்டு தமிழ்ப்பள்ளியில் 12 ஆண்டுகளாக பல்வேறு வகுப்புகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமிகு வெங்கட், 2019-20 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளியின் இயக்குனராகவும் தொண்டாற்றியவர்.
சிவகாமி அண்ணாமலை / Sivagami Annamalai:
இரிச்மண்டு தமிழ்ப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழலைகள் துவங்கி எல்லோரின் அன்புக்குரிய ஆசிரியராக புன்னகை மாறாது இன்முகத்தோடு மாணவர்களைப் பயிற்றுவித்து, ஆசிரியை பணியை செவ்வனே செய்து வருகிறார்.
முத்தரசு சண்முகவேல் / Muthuraj Shanmugavel:
இரிச்மண்டு தமிழ்ப்பள்ளியில் 9 ஆண்டுகளாக ஆசிரியர் பணியை செம்மையாக செய்து வருகிறார். பள்ளி நிகழ்ச்சிகளுக்கு ஓடி ஓடி உதவி செய்வதில் ஆகட்டும், மாணவர்களை போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்கப்படுத்துவதில் ஆகட்டும், முத்தரசர் பேரரசர். தமிழ்ப் பள்ளி இயக்குனராகவும் இருந்தவர், ஆசிரியராக, தன்னார்வலராக பல காலமாகத் தொண்டாற்றிவரும் முத்து, இரிச்மண்டு தமிழ்ப் பள்ளியின் சொத்து.