மனிதனின் மூளைக்கு மாற்றான ஒரு கருவியைப் பற்றியதான தேடல், 23 வருடங்களுக்கு முன்பாகவே இணையத்தில் விதைக்கப்பட்டு, இன்று மிகப்பெரிய மரமாக வளர்ந்து நம் முன்னே நிற்கிறது! அது தான் கூகுள்!
வேண்டும்!' என்று கேட்ட எல்லாவற்றையும், நொடிப்பொழுதில் நம் முன்னே காட்டுகிறது கூகுள். 'நீரின்றி அமையாது உலகு' என்னும் நிலை மாறி 'கூகுளின்றி அமையாது உலகு!' என்னும் நிலை தான் தற்போது உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் கூகுளில்லாமல் ஒரு நாளை நகர்த்துதே ஒரு உலக சாதனை தான்!
கூகுள் கடந்து வந்த பாதை!...
History of Google in Tamil
1973 மார்ச் 26... அமெரிக்காவின் மிக்ஸிகனில் பிறக்கிறார் Larry Page (லாரி பேஜ்). யார் இவர்? ஆம் இவர் தான் கூகுளை உருவாக்கியவர்.
இவரது தாய், தந்தை இருவரும் கணினித் துறையில் வல்லவர்களாக இருந்ததால், சிறு வயதிலேயே கணினித் துறையில் அதிக ஆர்வமும் அறிவும் கொண்டவராகவே இருந்தார் லாரி. எப்பொழுதும் இயற்பியல், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் மற்றும் கணினிகள் சூழ்ந்த ஒரு சூழ்நிலையில் தான் வளர்ந்தார் லாரி.
History of Google in Tamil
6 வயதிலேயே வீட்டுப்பாடங்களை Word Processorல் செய்த முதல் குழந்தை லாரி. 12 வது வயதில் நிக்கோலா டெஸ்லாவின் வாழ்க்கையை பற்றி, புத்தகங்கள் மூலமாக படித்து, மிகவும் அழுதார்.
யார் இந்த நிக்கோலா டெஸ்லா? இவரது வரலாற்றை படித்து லாரி ஏன் அழ வேண்டும்?🤔... இயற்பியல், மின்னியல், வானியல் என அறிவியலின் பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் தான் நிகோலா டெஸ்லா. ரோடியோ, ரிமோட், டெஸ்லா காயில், இன்டக்ஷன் மோட்டார் என பல கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட மாமனிதர்.
History of Google in Tamil
ஆனால் இவரது கண்டுபிடிப்புகளுக்கு தகுந்த அங்கீகாரத்தை தர மறுத்தது மனித இனம். எத்தனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், அவற்றை முறையாக சந்தைப் படுத்துவது எப்படி? என்பது அவருக்கு சரியாக தெரியவில்லை. இறுதியில் தனது 83 வது வயதில் ஒரு கடனாளியாகவே இறந்து போனார் நிகோலா டெஸ்லா. இதனால் தான் அழுதாராம்...
நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக் என்பது, குடிபோதையில் உருவாக்கப்பட்ட ஒரு செயலி என்பது தெரியுமா?
1990களில் இணையம் உருவாக்கப்பட்டது. இணையத்தில் ஒரு தகவலை தேடுவதற்கான பிரௌசரை உருவாக்கினார் Tim Berners Lee. இந்த டிம் பெர்னர்ஸ் தான் URL, https, HTML போன்றவற்றை எல்லாம் உருவாக்கியவர்.
இணையம் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. 1991ல் இணையம் அனைவரும் பயன்படுத்தும் வகையில், ஒரு தகவல் களஞ்சியமாக இருந்தது. ஆனால் எல்லா தகவல்களும் குவிந்து கிடந்ததால், தேவையான தகவல்களை பெறுவதில் அதிக சிக்கல்கள் இருந்தது.
History of Google in Tamil
அப்பொழுது தான் உருவானது Search Engineகளின் முன்னோடியான YAHOO! பிறகு வரிசையாக HotPot போன்ற சர்ச் என்ஜின்களும் முளைக்க ஆரம்பித்தன. நாட்கள் செல்லச் செல்ல பல புதிய புதிய வலைதளங்களும் தகவல்களும் இணையத்தில் வந்து குவிய ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் தான், மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியாளராக படித்து முடித்து, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பிற்காக சேர்ந்தார் லாரி. இங்கு தான் லாரி, செர்கேயை (Sergey Brin) சந்திக்கிறார்.
History of Google in Tamil
செர்கே ஒரு ரஷ்ய நாட்டவர். 6 வயதில் அமெரிக்காவுக்கு குடியேறியவர். ஆரம்பத்தில் லாரிக்கும், செர்கேவுக்கும் ஒத்துப் போகவில்லையாம். எப்பொழுது பார்த்தாலும் ஒரே சண்டை தானாம்!
இந்த நிலையில் தான் லாரி, இணையம் சார்ந்த ஒரு ஆய்வை மேற்கொள்கிறார். இவருக்கு 'The Anatomy of a Large-Scale Hypertextual Web Search Engine' என்ற தலைப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது ஒரு சிறந்த தேடு பொறிக்கான வடிவமைப்பை உருவாக்குவது.
தேவையான தகவல்கள் உள்ள தளங்களை மட்டும் காட்டுவதற்கான, Crawler Program-ஐ உருவாக்கி, ஒரு Page rack ஐ உருவாக்கினார் லாரி. இந்த ஆராய்ச்சியில் தான் லாரியும் செர்கேவும் இணைகின்றனர்.
ஒரே தகவல் தான், ஆனால் அது பல தளங்களிலும் பல பக்கங்களிலும் இருக்கும். அந்த எல்லா பக்கங்களையும் அலசி ஆராய்ந்து, தரமான தகவல்கள் உள்ள பக்கங்களை முதலிலும், மொக்கையான தகவல்கள் உள்ள பக்கங்களை இறுதியிலும் காட்டும் வகையில் ஒரு தரம் பிரிக்கும் Algorithm-ஐ வடிவமைக்கிறார் செர்கே.
YAHOO, HotPot என பெரிய பெரிய தேடுபொறிகள் இயங்கிக் கொண்டிருந்த அந்த காலத்தில், அவற்றின் நடுவே ஒரு சிறு நட்சத்திரமாக உருவெடுத்தது கூகுள். செப்டம்பர் 27, 1998ல் இணையத்தில் ஒரு சிறு புள்ளியாக நுழைகிறது கூகுள்.
History of Google in Tamil
லாரி தனது தேடு பொறிக்கு கூகுள் என பெயர் வைக்கவே இல்லையாம். Googol என்ற பெயரை தான் முதலில் வைத்தாராம் லாரி. ஒன்றுக்கு அடுத்து 100 பூஜ்ஜியங்களை போட்டால் வரக்கூடிய எண் தான் கூகோல். தங்களது தேடு பொறி இவ்வளவு அதிகமான பக்கங்களை கூட சர்வ சாதாரணமாக நிர்வகிக்கும், என்பதை குறிக்கும் வகையில் இந்த பெயரை வைத்தார்களாம்.
இணையத்தில் Googol என்ற பெயரை பதிவு செய்யும் போது, தவறுதலாக Google என பதிவு செய்து விட்டாராம் லாரி. 'இந்த பெயர் கூட நல்லா தானே இருக்கு!' என இந்த புதிய பெயரையே தங்கள் கண்டுபிடிப்புக்கு பெயராக வைத்து விடுகிறார் லாரி. தவறுதலாக இடப்பட்ட ஒரு பெயர், ஆனால் அது தான் இன்று அவரது அடையாளம்!
கூகுளின் புதிய தொழில்நுட்பங்கள் பல மக்களை ஈர்த்தது. மெல்ல மெல்ல கூகுளும் வளர ஆரம்பித்தது. 1998ம் ஆண்டிலேயே Yahoo கூகுளை $1B டாலர்களுக்கு விலை பேசியது. ஆனால் லாரி மற்றும் செர்கே தங்கள் கண்டுபிடிப்பை விற்கும் மனநிலையில் இல்லை.
History of Google in Tamil
வருடங்கள் மெல்ல நகர்ந்தது. நிறுவனத்தை நடத்த பணம் இல்லை. லாரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் தான், செர்கேயும் அப்படிப்பட்டவர் தான். பீட்சா டெலிவரி செய்து கிடைத்த பணத்தையும் கிடைத்த கணினிகளையும் வைத்து, தங்கள் ஹாஸ்டல் அறையில் கூகுளுக்கான முதல் அடியை எடுத்து வைத்தனர் லாரியும் செர்கேவும்.
History of Google in Tamil
லாரியின் தோழியான சூசன், மென்லோ பார்க்கில் உள்ள தனது வீட்டு கேரேஜை வாடகைக்கு தர முன்வந்தார். பின்னாட்களில் சூசன் கூகுளில் தான் வேலைக்கு சேர்ந்தார். அந்த கேரேஜில் தான் 6 பணியாளர்களுடன் Google நிறுவனம் உருவாகத் தொடங்கியது. கூகுளின் முதல் பணியாளரானார் கிரேக் சில்வெர்ஸ்டைன்.
1999 மார்ச்சில், சிலிகன் வேலிக்கு (Silicon Valley) தங்கள் நிறுவனத்தை நகர்த்தினர் லாரியும் செர்கேயும். அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 3.5 மில்லியன் தேடல்களை கையாண்டிருந்தது கூகுள்.
கூகுளின் வளர்ச்சியை பார்த்த Yahoo, 2002ல் 3 பில்லியன் டாலர்களுக்கு கூகுளை விலை பேசியது. ஆனால் '5 பில்லியன் டாலர்களுக்குக் குறைவாக கூகுளை தரவே முடியாது!' என மறுத்தார் லாரி. 'ஒரு தேடு பொறியை இவ்வளவு பணம் கொடுத்து வாங்குவது simply waste' என கூறிய யாகூ நடையை கட்டியது.
ஒரு வேளை அன்று Yahoo கூகுளை வாங்கியிருந்தால் இன்று இத்தனை இணைய புரட்சிகள் நடந்திருக்கவே செய்யாது. இன்று யாகூ என்ற நிறுவனமே காணாமல் போய் விட்டது போல, கூகுளும் காணாமல் போயிருக்கும்
!
History of Google in Tamil
கூகுள் சிலிகான் பள்ளத்தாக்கில் இரு இடங்களில் இயங்கிக் கொண்டிருந்தாலும், அதீத வளர்ச்சியால், சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள பெரிய கட்டடத்தொகுதிக்கு 2003ல் வாடகை அடிப்படையில் மாறியது கூகுள். பிறகு மொத்தமாக 319 மில்லியன் டாலர்களுக்கு அந்த கட்டத்தொகுதியை சொந்தமாக்கியது கூகுள். அந்த கட்டடம் தான் Google Plex!
2001 செப்டம்பர் 4ல் தங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் பெற்றனர் லாரியும் செர்கேவும். நிறுவனம் எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும், வருமானம் என்பது குறைவாகவே இருந்தது. வருமானம் வரவேண்டும் என்றால் Ads காட்ட வேண்டும் என்பதை உணர்ந்தார் லாரி
.
History of Google in Tamil
ஆனால் லாரிக்கு, இணையத்தில் ஒன்றை தேடும் போது டக்கு டக்குனு விளம்பரங்கள் வருவது எரிச்சலை உருவாக்கியது. நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வருமானம் தேவை என்ற கட்டாயத்தால், இணைய பக்கங்களை சிதைக்காமல் விளம்பரங்களை காட்டக்கூடிய வகையில் புதிய புரோகிராமை 2000ல் உருவாக்கியது கூகுள்.
2004 ஆகஸ்ட் 19ல் பங்குசந்தைக்குள் முதன் முதலாக வந்தது கூகுள். 19,605,052 பங்குகளை வைத்திருந்தது கூகுள். ஒவ்வொரு பங்கும் 85 டாலர்களுக்கு இருந்தது. 271 மில்லியன் பங்குகளை தங்கள் பக்கம் வைத்திருந்தனர் லாரியும் செர்கேவும். இதனால் கூகுளின் மதிப்பு 1.67 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
ஸ்மார்ட்போன் உலகை மாற்றப்போகும் கூகுள்.. முதல் ஆளாக Samsung ஆதரவு! Fuchsia OS!
இனிமேல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்க பணம் கட்ட வேண்டுமாம்! ஃபிரீ இல்லையாம் ராஜா...
2005 ஜூன் மாதம் கூகுளின் மதிப்பு 52 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. கூகுளின் பணியாளர்களை மில்லியனர்களாக மாற்றியது கூகுள
்.
History of Google in Tamil
2004ம் ஆண்டு தமிழ் நாட்டைச் சேர்ந்த, சுந்தர் பிச்சையை கூகுள் குரோமின் தயாரிப்பு மேலாளராக பணியமர்த்தியது கூகுள். தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேடி தேடி எடுத்தது கூகுள். ஒவ்வோராண்டும் இலட்சக்கணக்கான விண்ணப்பங்களை பெறுகிறது கூகுள். எந்தவொரு விண்ணப்பத்தையும் கூகுள் புறக்கணிப்பது இல்லையாம்! எல்லாவற்றையும் ஆராய்ந்து, சிறந்த பணியாளர்களை மட்டும் வேலைக்கு எடுக்கிறது கூகு
ள்.
History of Google in Tamil
2005ல் உருவாக்கப்பட்ட யூடியூப், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. 2006 ம் ஆண்டு இந்த யூடியூப் நிறுவனத்தை மொத்தமாக 1.65 பில்லியன் டாலர்களுக்கு கைப்பற்றியது கூகுள். இதுவரை 250க்கும் மேற்பட்ட செயலிகளை தன்பக்கம் உருவாக்கி வைத்துள்ளது கூக
ுள்.
History of Google in Tamil
2015ம் ல் G என்ற எழுத்தை தங்கள் நிறுவனத்தின் குறியீடாக நிர்ணயித்தது கூகுள். G for Google.
'கூகுளை திறமையான மற்றும் நம்பகமான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்!' என நினைத்தார் லாரி. 2015 ம் ஆண்டு கூகுளின் மூத்த ஊழியரும், ஒரு தமிழருமான சுந்தர் பிச்சையை கூகுளின் CEO வாக வைத்து, கூகுளை அவரிடம் ஒப்படைத்தார் லாரி.
படிப்பு, வேலை, போக வேண்டிய இடம், சமையல், விளையாட்டு என் எதுவாக இருந்தாலும், 'இல்லை' என்ற வார்த்தைக்கே கூகுளில் இடமி
ல்லை.
History of Google in Tamil
ஹாஸ்டல் அறையில், பீட்சா டெலிவரி செய்து தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம், இன்று முழு உலகையே ஆட்சி செய்கிறது. 'கூகுளின்றி அமையாது இந்த உலகு!' சிறந்த உழைப்புக்கு என்றுமே அங்கீகாரமுண்டு! என்பதை இந்த உலகுக்கு உணர்த்தியது கூகுளின் கதை...
நன்றி!...