History of Facebook explained in Tamil:
வணக்கம்...
இன்றைய 21-ம் நூற்றாண்டில் ஒரு குழந்தையிடம் கேட்டால் கூட 'தெரியும்' என சொல்லும் அளவுக்கு உலகத்தை தனது கையில் வைத்துள்ள ஒரு செயலி தான் Facebook. இது அனைத்து மொபைல்களிலும் default-ஆகவே இருக்கக் கூடிய ஒரு முக்கியமான செயலியும் கூட.
நாம் பதிவிறக்கம் செய்யாவிட்டாலும் கூட, மொபைல் வாங்கும் போதே கண்டிப்பாக பேஸ்புக் இருக்கும். இதை நாம் புதிய நண்பர்களை உருவாக்கவும், அவர்களோடு பேசவும், வீடியோ பார்க்க மற்றும் பொழுதைப் போக்க தான் பெரிதும் பயன்படுத்துகிறோம்.
பேஸ்புக் என்ற இந்த சமூக வலைதளத்தை உருவாக்கியவர் மார்க் ஜுக்கர்பெர்க் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உண்மையில் இந்த செயலி மார்க் போதையில் இருக்கும் போது உருவாக்கப்பட்ட ஒரு வலைதளத்தின் மாதிரி என்பது எத்தனை பேருக்கு தெரியும்?!! இரு பெண்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு அவர்களில் யார் அழகாக இருக்கிறார் என ஒப்பிடும் ஒரு செயலியாக தான் Facebook முதலில் இருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?!!
"மனிதர்கள் ஆயிரம் பேர் பிறக்கிறார்கள்; ஆனால் ஆளுகிறவர்கள் சிலர் தான் பிறக்கிறார்கள்". இதன்படி தனது மிக இளவயதிலேயே பேஸ்புக் மூலமாக முழு உலகையே ஆண்டு கொண்டிருக்கும் மார்க்-ன் கதை...
ஒரு காலத்தில், 'எங்களுடைய தகவல்களை சேமித்து வைத்து என்ன செய்யப் போகிறாய்?' என்று மக்களால் கேள்வி கேட்கப்பட்ட ஒரு செயலி இன்று கூகுளுக்கு இணையாக உயர்ந்துள்ளது. கூகுள் கணக்கு வைத்து உள்நுழையக்கூடிய எல்லா இடங்களிலும் Facebook கணக்கு வைத்தும் உள்நுழையலாம். பேஸ்புக் என்ற, இந்த உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு செயலியின் கதை... History of the greatest app 'Facebook' பற்றி தான் இந்த இணையப் பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
Birth of the legend :
14 மே, 1984-ல் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள வைட் பிளைன்ஸ்(White Plains) என்ற இடத்தில் Edward Zuckerberg(எட்வர்டு ஜுக்கர்பெர்க்) தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தைக்கு Mark Zuckerberg(மார்க் ஜுக்கர்பெர்க்) என பெயர் வைக்கிறார்கள்.
இவர் தான் பின்னாளில் Facebook என்ற செயலியை உருவாக்கினார் என்பது நாம் அறிந்ததே. இவருக்கு மூன்று சகோதரிகள். இவர் தான் மூத்தவர். இவரது குடும்பம் ஒரு நடுத்தர குடும்பமாக இருந்தது. சிறு வயதிலேயே தனிமை விரும்பியாக இருந்தார்.
இவருக்கு சிறு வயதிலேயே Computer Programming மீது இருந்த அளவு கடந்த ஆசையைப் புரிந்து கொண்ட இவரது தந்தை, இவருக்கு தன்னால் இயன்றமட்டும் கணினியைப் பற்றி கற்றுக்கொடுத்தார். ஒரு கட்டத்தில் மார்க் கேட்கும் கேள்விகள், அவரது தந்தையை திணறடிக்க, அவர் ஒரு சிறந்த ஆசிரியரை வைத்து கற்றுக் கொடுக்க வைத்தார். போகப்போக மார்க்-ன் கேள்விகள் அந்த சிறந்த ஆசிரியரைக் கூட கதிகலங்க வைத்தது.
First messenger :
அந்த சிறிய வயதிலேயே, தனது கணினி அறிவை வைத்து messenger போன்ற ஒரு இணையதளத்தை வடிவமைத்தார். இதற்கு Zuck Net எனப் பெயரிட்டார். இந்த இணையதள வடிவில் தான் தற்கால Facebook இருப்பதாக சொல்லப்படுகிறது.
உலகையே ஆளும் கூகுளின் வெற்றிக் கதை!
நம்மை நமக்கே அழகாய் காட்டிய இன்ஸ்டாகிராமின், இதுவரை நாம் அறிந்திராத கதை!
இவரது தந்தை ஒரு பல் மருத்துவராக இருந்ததால், நோயாளி பற்றிய விவரங்களை receptionist-னிடமிருந்து பெறுவதற்காக இந்த தளத்தை பயன்படுத்தினார். மேலும் இவரது குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்த தளத்தை தான் அந்தகாலத்தில் பயன்படுத்தினர்.
Music player :
இவர் பள்ளியில் படிக்கும் போது, பாடலைக் கேட்பவர் அடுத்த என்ன பாடலைக் கேட்பார் என யூகித்து அடுத்த பாடலை இசைக்கக் கூடிய Snapse என்ற ஒரு மியூசிக் பிளேயரை(music player) வடிவமைத்தார். இந்த மியூசிக் பிளேயரை மைக்ரோசாப்ட் மற்றும் AOL போன்ற பெரு நிறுவனங்கள் வாங்க விரும்பின. ஆனால் மார்க் இதை விற்க மறுத்தார்.
இவ்வாறு தனது திறமை மூலமாக உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்த பல்கலைக்கழகத்தில் எல்லாராலும் சேர்ந்து படிக்க முடியாது. ஒன்று பெரிய பண பலம் இருக்க வேண்டும் அல்லது நல்ல அறிவு மற்றும் திறமை இருக்க வேண்டும். மார்க் தனது திறமை மற்றும் அறிவு மூலமாக இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார், மார்க்.
ஒருநாள் மார்க் நன்றாக குடித்து போதையில் தனது கணினி முன்பாக வந்து உட்கார்ந்து, ஒரு blog எழுதுகிறார், அதில் 'தான் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களின் விவரங்கள் அடங்கிய தளத்தை ஹேக் செய்யப்போவதாக' எழுதுகிறார். இதேபோல ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களின் விவரங்கள் அடங்கிய தளத்தை ஹேக் செய்து உள்நுழைந்து, மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களைப் பார்த்தார். மாணவர்களின் விவரங்கள் அடங்கிய இந்த பட்டியலுக்கு Facebook என்று பெயர்.
மறுபடியும் ஒரு blog எழுதுகிறார், அதில் 'ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவிகளைத் பார்க்கும் போது விலங்குகளைப் பார்ப்பது போல உள்ளது' என எழுதுகிறார். இதனால் அவருக்கு திடீரென ஒரு யோசனை வந்து, ஒரு பக்கத்தில் மாணவி ஒருவரின் புகைப்படத்தையும், மறுபக்கத்தில் ஒரு விலங்கின் புகைப்படத்தையும் வைத்து வெளியிட ஒரு இணையதளத்தை உருவாக்கலாம் என எண்ணினார்.
The real Facebook born
இதே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய பண பலத்தோடு திவ்யா நரேந்திரா என்ற இந்தியர் மற்றும் அமெரிக்க இரட்டையர்களான கேமரூன் மற்றும் விங்கோஸ் ஆகிய மூன்று மாணவர்கள் படித்து வந்தனர். இவர்களுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சமூக வலைதளத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. இவர்களுக்கு எண்ணம் மட்டுமே இருந்ததேயொழிய அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், மார்க் பற்றி கேள்விப்பட்ட இவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி, தங்கள் பண பலத்தால் மார்க்-ஐ விசாரணையிலிருந்து விடுவித்தனர். அவர்கள் மார்க்-இடம் தங்களுக்கு ஒரு சமூக வலைதளத்தை உருவாக்கித் தருமாறும், அதற்காக மிகப்பெரிய தொகையை ஊதியமாகத் தருவதாகவும் கூறினர். ஆனால் மார்க் தனது உழைப்புக்கு மற்றவர்கள் முதலாளியாவதை விரும்பாமல், தனது நண்பர்கள் உதவியுடன் ஒரு சமூக வலைதளத்தை உருவாக்கினார்.
'ஐடியா என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்; ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் திறமை மற்றும் உழைப்பு சிலருக்கு மட்டும் தானே இருக்கும்'. இந்த சமூக வலைதளத்திற்கு, ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலின் பெயரான 'The Facebook' என்ற பெயரையே வைக்கிறார். இதை உருவாக்கிய போது மார்க்கின் வயது வெறும் 19.
இந்த சமூக வலைதளம் முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள், ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவும், தகவல்களைப் பரிமாறவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இது மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இப்படி தங்களது எண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைதளம் பிரபலமாவதைக் கண்ட அந்த மூன்று பணக்கார மாணவர்கள், 'எண்ணம் எங்களதே, அதனால் அந்த சமூக வலைதளமும் எங்களதே' என மார்க்-கு எதிராக வழக்கு தொடுத்தனர். இறுதியில் மார்க் வெற்றி பெற்று 'The Facebook'-ன் முதலாளி ஆனார்.
Growth of Facebook :
படிப்படியாக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சாதாரண மக்கள் மத்தியிலும் கூட 'The Facebook' பிரபலமடைய ஆரம்பித்தது. தங்கள் வீட்டு கார் பார்க்கிங் செய்யும் இடத்தை பேஸ்புக் அலுவலகமாகப் பயன்படுத்தினார், மார்க். அதிகப்படியான பயனர்கள் வர வர இந்த சிறிய அலுவலகம், குறைந்த அளவிலான கணினிகள் மற்றும் பணியாளர்கள் போதுமானதாக இல்லாததால், பேஸ்புக் மூலமாகவே தனது நண்பர்களிடம் நன்கொடைகள் வாங்கி, ஒரு அலுவலகத்தை உருவாக்கினார்.
நாளுக்கு நாள் பேஸ்புக் மக்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது. 2005-ம் ஆண்டு The Facebook என்ற பெயர் 'Facebook' என மாற்றப்பட்டது. 2007-ம் ஆண்டு இலட்சக்கணக்கான கணக்குகள் பேஸ்புக்கில் உருவாக்கப்பட்டன. 2011-ல் உலகின் மிகப்பெரிய இணையதளங்களில் ஒன்றாக பேஸ்புக் மாறியது. படிப்படியாக Whatsapp, Instagram போன்ற தளங்களை பெரு விலை கொடுத்து வாங்கியது, பேஸ்புக் நிறுவனம
இன்றைய தேதியில் பேஸ்புக், 280 கோடி பயனர்களை, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பெற்றுள்ளது. இது இந்திய மக்கள் தொகையை விட அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவிலும் 38 கோடி மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இந்த சமூக வலைதளம் Android, iOS, Windows, Symbian என அனைத்து தளங்களிலும் செயல்படுகிறது. Facebook, Google Play Store-ல் 500 கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகள் மற்றும் 2.3 star rating-ம் பெற்றுள்ளது. இதன் லைட் வெர்சன்(lite version) 100 கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகள் மற்றும் 3.1 star rating-ம் பெற்றுள்ளது.
பேஸ்புக் மூலமாக மார்க், ஒரு நாளைக்கு 6-12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருவாய் ஈட்டுகிறார். மேலும் Facebook மூலமாக மார்க் உலகின் 5-வது மிகப்பெரிய பணக்காராகவும் மாறி இருக்கிறார். மிக இள வயதில் உலக பணக்காரராக மாறிய முதல் மனிதர் மார்க் ஜுக்கர்பெர்க் தான்.
இப்படி ஒரு கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் உருவாக்கப்பட்ட Facebook, இன்று அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க்(Menlo Park) என்னும் இடத்திலுள்ள ஒரு மிகப்பெரிய கட்டடத்தில் 58,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
உலகின் இரண்டாவது அதிகமான மக்கள் பயன்படுத்தும் தளமாக பேஸ்புக் இருந்தது. ஆனால் பேஸ்புக்-லிருந்து பயனர்களின் விவரங்கள் திருடப்பட்டது மற்றும் வாட்ஸ்அப்-ன் தகவல் பரிமாற்ற விதிகளில் ஏற்பட்ட மாற்றம் போன்றவற்றால், Facebook-ன் செல்வாக்கு சரிந்து, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பேஸ்புக்கையே அலற வைத்த வாட்ஸ்அப்பின் கதை!
வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை விற்கும் நிலைக்கு தள்ளப்படும் பேஸ்புக்!
மின்னணு உலக அரசன் சாம்சங்கின், பின்னால் உள்ள கதை!
முதல் இடத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் தளமாக கூகுள் உள்ளது. மூன்றாவது இடத்தில் இருந்த யூடியூப், பேஸ்புக்-ஐ தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சரிவை சமாளிக்க தான் Facebook, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களை தன் வசப்படுத்தியது. இது மட்டும் இல்லாமல் Messenger, Market place போன்ற பல இடங்களிலும் Facebook கால் பதித்துள்ளது.
எப்படி இருந்தாலும் பேஸ்புக் தனது மதிப்பை இழக்காமல், இன்னும் பல கோடி மக்களின் தகவல்களை சுமந்தபடியே பயணிக்கிறது என்பது யதார்த்தமான உண்மை. குடிபோதையில் உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம் இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றே.
சில நாட்கள் முன்னால் Facebook-ன் சர்வர் முடங்கிய போது, அந்த 6 மணிநேரம் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி இருந்திருக்கும்!... வெறும் ஒரு 6 மணிநேரம் கூட பேஸ்புக் சேவை இல்லாமல் நம்மால் இருக்க முடியவில்லை. இதை விட எளிதாக Facebook-ன் வளர்ச்சியை வேறு எவ்வாறு விளக்க முடியும்?.
மார்க் இந்த அளவுக்கு வளர்ந்திருந்தாலும், அவரிடம் தனிப்பட்ட தகவல்களை திருடியது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அவர்,'The biggest mistake is letting a mistake demoralize you' என்று பதிலளித்தார். அதாவது, 'மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தவறு செய்யத்தான் செய்கிறார்கள். ஆனால், தவறு செய்து விட்டோமே என அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்குவது தான் பெரிய தவறு' என கூறியுள்ளார். இந்த ஒரு தத்துவம் தான் Facebook-ன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கும் போல...
நன்றி...