History of iPhone explained in Tamil:
History of iPhone
வணக்கம்...
நம்மில் பலரின் கனவு மொபைலாக இருக்கும் மொபைல் எது?🤔... நிச்சயமாக ஆப்பிளின் iPhone-ஆகத்தானே இருக்கும். iPhone, இந்த பெயரைக் கேட்ட உடன் என்ன ஞாபகம் வருகிறது?🤔... மிக விலை அதிகம்... இது தானே ஞாபகம் வருகிறது.
இந்த மொபைல்கள் விலை அதிகம் தான். என்னதான் விலை அதிகமாக இருந்தாலும், இத்தனை Branded Android Pro மொபைல்கள் இருக்கும் போது மக்கள் ஏன் ஐபோன்களை தேடித்தேடி வாங்குகிறார்கள்?🤔...இதற்கு முக்கியமான காரணம் ஆப்பிளின் iOS-ஐ தவிர வேறு எதுவாக இருக்க முடியும்!! ஆப்பிள் என்ற மொபைலை விரும்பாதோர் யாரும் இருக்க வாய்ப்பில்லை. நம்மால் அதை வாங்க முடியாவிட்டாலும், அதில் அப்படி என்ன தான் இருக்கிறது? மக்கள் ஏன் அதைத் தேடித் தேடி வாங்குகிறார்கள்? என இந்த இணையப் பதிவில் காணலாம்.
What is iOS?
History of iPhone
iOS என்றால்... நாம் பயன்படுத்தும் Samsung, Redmi போன்ற மொபைல்களில் இயங்குதளமாக(OS) ஆண்ட்ராய்டு இருப்பது போல, ஐபோன்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளம். இவ்வளவு தான். இயங்குதளம் என்றால் மொபைலில் உள்ள ஆப்கள் மற்றும் இதர வசதிகளை இயங்க வைக்கும் ஒரு அமைப்பு ஆகும். இந்த iOS-ஐ உருவாக்கிய Apple நிறுவனத்தின் வரலாறு மற்றும் iPhone உருவாக்கப்பட்ட கதையையும் பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக் கதை!
History of iPhone
கணினிகளை அலுவலக பயன்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஒவ்வொரு கணினியும் பெரிய அளவில் ஒரு அறை முழுதையும் அடைத்துக் கொண்டிருக்கும் அளவில் இருந்த காலம் அது.இந்த காலக்கட்டத்தில் ஸ்டீவ் வோஸ்னியாக்(Steeve Wozniak) மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ்(Steeve Jobs) என்பவர்களால் சிறிய அளவிலான Personal Computers தயாரிக்க ஒரு நிறுவனம், 1300 டாலர் முதலீட்டில் 1976, ஏப்ரல் 1-ல் தொடங்கப் பட்டது.
பிற்காலத்தில் Apple நிறுவனத்தின் CEO-ஆக மாறியவர் இந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தான். இந்த ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடிய ஒரு நபராக இருக்கவில்லை. ரகளை செய்யும் நபராக, ஒற்றை programming கூட தெரியாத ஒரு நபராக தான் இருந்தார். அனைவராலும் வெறுக்கத்தக்க ஒரு மனிதராக இருந்தார்.
இவர் இந்தியாவிற்கு வந்திருந்த பொழுது புத்த மதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்தைத் தழுவினார். அவர் இந்தியா வந்த போது அவர் சந்தித்த புத்த துறவி ராமத் என்பவரின் ஆப்பிள் தோட்டம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், தனது நிறுவனத்திற்கு ஆப்பிள் என பெயர் சூட்டினார்.
ஆப்பிளின் முதல் கணினியான Apple 1 பெரிய அளவிலான வெற்றியை பெறவில்லை. ஆனால் இரண்டாவது கணினியான Apple 2 ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல் ஆர்டர்களும் குவியத் தொடங்கின. இந்த கணினி அடுத்த 16 ஆண்டுகளுக்கு கணினி உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
நம்மை நமக்கே அழகாய் காட்டிய இன்ஸ்டாகிராமின், இதுவரை நாம் அறிந்திராத கதை!
அறிமுகமான 6 மாதங்களிலேயே 251 மடங்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தது. 1984-ல் ஆப்பிள் நிறுவனம் Mac Windows கணினி தயாரிப்பின் போது மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி ஏற்படுத்தப்பட்டு சில பல காரணங்களால் கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டது. இந்த கணினியின் விளம்பரத்துக்காக பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஒருவரை ஆப்பிள் பயன்படுத்தியது. ஆனாலும் இந்த கணினி தோல்வியையே தழுவியது. பின்னர் 1998-ல் iMac, ipod, Apple store ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
இதன் பிறகு Apple, அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த மொபைல் OS ஆன விண்டோஸ்-ன் Symbian OS-கு போட்டியாக ஒரு மொபைல் OS உருவாக்க முடிவு செய்து, iOS என்ற புதிய இயங்குதளத்தை பல புதிய வசதிகளுடன் உருவாக்கியது.
பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றிகரமாகத் தனது முதல் iPhone-ஐ 2007, ஜுன் 29-ல் வெளியிட்டது. இந்த மொபைல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் மாடலையே தொடு திரை, கேமிரா என ஒரு ultra மொபைலாக வெளியிட்டு உலகை ஒரு கலக்கு கலக்கியது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டின் மொபைல்களுக்கு அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இது மட்டுமில்லாமல் இந்த மொபைல் அறிமுகமான சில மாதங்களிலேயே 6.1 மில்லியன் மொபைல்கள் விற்றுத் தீர்ந்தன. Apple என்ற இந்த ஒரு நிறுவனத்தை சமாளிக்க கூகுள், HTC, Motorola போன்ற 85-கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் ஒன்றிணைந்தன. ஆனால் ஆப்பிளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
History of iPhone
iPhone, Apple என்றாலே அதன் logo-வான கடித்து வைக்கப்பட்ட ஆப்பிள் தானே முதலில் ஞாபகம் வருகிறது... ஒரு நாட்டுக்கு கொடி எவ்வளவு முக்கியமோ அதே போலத்தான் ஒரு நிறுவன்த்திற்கு logo என்பது மிக முக்கியம்.
முதலில் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ-ஆக நியூட்டனின் தலை மீது ஆப்பிள் பழம் விழுவது போன்ற ஒரு படமே இருந்தது. பின்பு தங்கள் நிறுவனத்திற்காக ஒரு தனித்துவமான சிறந்த logo-வை வடிவமைக்க ராப் ஜனோஃப்(Rob Janoff) என்ற சிறந்த வடிவமைப்பாளரை Apple நியமித்தது.
இவர் logo வடிவமைக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். இவர் ஆப்பிள் படம் வரையும் போது ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்களை முழுமையாக பார்க்கும் போது கிட்டத்தட்ட ஒரே போல இருப்பதாக உணர்ந்தார். மேலும் நாம் வரைந்த ஆப்பிள் ஓவியங்கள் கவரக் கூடியதாக இல்லை என உணர்ந்தாராம். அப்பொழுது தான் அவர் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆப்பிளைப் பார்த்தார். அது சிறிது கடிக்கப்பட்டது போல இருந்தது. இவ்வாறு தான் ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமான ஆப்பிள் logo உருவானது.
சும்மா ஏதேச்சையாக பார்க்கப்பட்ட அந்த கடிக்கப்பட்ட ஆப்பிள், இன்று உலகின் முன்னணி நிறுவனத்தின் அடையாளமாக உள்ளது.
மக்கள் ஆப்பிள் மொபைல் வாங்குவதற்கானக் காரணங்கள்?
History of iPhone
இது வரை ஆப்பிள் நிறுவனத்தைச் பற்றிப் பார்த்தோம். இனி மக்கள் ஏன் iPhone வாங்குகிறார்கள்? iOS-ல் அப்படி என்ன தான் இருக்கிறது? எனப் பார்க்கலாம்.
1) Luxury : (ஆடம்பரம்)
மக்கள் iPhone தேர்ந்தெடுப்பதற்கான பிரதான காரணம் இது தான். ஐபோன் வாங்குபவர்களில் 50%-க்கு மேல் உள்ள மக்களுக்கு அதில் என்ன வசதிகள், எதற்கு இருக்கிறது என்று கூட தெரியாது. சமுதாயத்தில் தன்னை பெரிய ஆளாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே ஐபோன் வாங்குகிறார்கள். எல்லாரும் அல்ல சிலர்.
2) Privacy Protection : (தனியுரிமைப் பாதுகாப்பு🔒)
iPhone-களின் மிகப்பெரிய சக்தியே இதில் தான் இருக்கிறது. ஐபோனில் தனியுரிமைப் பாதுகாப்பு🔒 என்பது வேற லெவலில் இருக்கும். நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைல்கள் இந்த விஷயத்தில் ஐபோனின் கால் தூசிக்குக் கூட வராது.
ஏனென்றால் ஆண்ட்ராய்டு ஒரு திறந்த அமைப்பு ஆகும். ஆண்ட்ராய்டில் மொபைல் நிறுவனங்கள் யார் வேண்டுமானாலும், தங்கள் மொபைல் மாடலுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்து கொள்ள முடியும். இந்த ஒரு வசதி ஆண்ட்ராய்டு-ல் இருப்பதால் ஆண்ட்ராய்டு மொபைல்களை ஹேக் செய்வது எளிதான காரியம் தான். ஆனால் ஆப்பிள் மொபைல்களில் iOS இருப்பதால் இதற்கு வாய்ப்பே இல்லை.
இந்த OS ஆப்பிள் என்ற இந்த ஒரே நிறுவனத்தால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. உங்கள் தகவல்கள் உங்களிடம் மட்டுமே இருக்கும்🔒, Apple நிறுவனம் கூட உங்கள் தகவல்களைப் பார்க்காது என நிறுவனம் உறுதியாகக் கூறி உள்ளது. இந்த காரணத்தால் தான் பெரும்பாலான தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள் ஐபோன் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு முறை பாகிஸ்தான் நாட்டில் ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டாராம். அப்பொழுது அவரிடம் எவ்வளவு விசாரித்தும் உண்மையை ஒத்துக் கொள்ளவில்லையாம்.
அப்பொழுது அவரது iPhone-ஐ வாங்கி பார்த்தபோது அது லாக் ஆகி இருந்தது. அந்த தீவிரவாதியிடமிருந்து எந்தவொரு பதிலையும் வாங்க முடியாததால், இறுதியாக Apple நிறுவனத்திடம் இந்த மொபைலை அன்லாக் செய்து தருமாறு கேட்டது, பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை. ஆனால் ஆப்பிள் நிறுவனமோ, 'எங்களுக்கு எங்கள் பயனாளரின் தனியுரிமை தான் முக்கியம்; இது எங்கள் நிறுவன விதிமுறைக்கு எதிரானது; இதனால் அன்லாக் செய்து தர முடியாது' என மறுத்தது. இந்த அளவுக்கு ஆப்பிள் நிறுவனம் பயனாளரின் பாதுகாப்பில் கருத்தாக உள்ளது.
3) Software and Hardware combination and performance:
அடுத்ததாக, iPhone-களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை உருவாக்குவது மற்றும் கட்டுப்படுத்துவது வரை எல்லாமே ஆப்பிள் தான். இதனால் சப்பையான ஹார்டுவேர்க்கு கூட சரியான சாப்ட்வேர் பயன்படுத்தி சிறந்த மொபைலாக உருவாக்கி சந்தைக்கு கொண்டுவருகின்றனர்.
சாதாரண 8MP, 12MP கேமிரா கொண்ட ஐபோன்களில் கூட எடுக்கும் போட்டோக்கள் DSLR கேமிராவில் எடுக்கப்பட்டது போல பக்காவாக இருக்கும் படியாக இதன் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் மிகச் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு தெரியும் ஐபோன் எப்படி இருக்கும் என்று. ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர் ஒரு முறை ஐபோன் பயன்படுத்தினால் திரும்ப ஆண்ட்ராய்டுக்கு வரவே மாட்டார். அவ்வளவு சிறப்பாக பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ஒரு மொபைலாக ஐபோன் இருக்கிறது.
4) App performance:
அடுத்ததாக iPhone-களில் செயலிகளின் செயல்பாட்டுத் திறன் மிகச் சிறப்பாக இருக்கும். சாதாரணமாக ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரு ஆப் பயன்படுத்துவதற்கும், அதே ஆப்-யை ஐபோன்களில் பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். சாதாரண கூகுள் ஆப்களில் கூட நிறைய வித்தியாசங்கள் காண முடியும்.
5) Apple App Store
:
History of iPhone
iPhone-களின் முக்கிய சிறப்பம்சம்அதன் ஆப் ஸ்டோர். இந்த இந்த ஆப்கள் இந்த இந்த அனுமதிகள்(permissions) மட்டுமே கேட்க வேண்டும் என நிர்ணயித்து வைத்திருக்கிறது Apple நிறுவனம். இதனால் ஆப்கள் மிகக் குறைவான மற்றும் தேவையான அனுமதிகளை மட்டுமே பயன்பாட்டாளர்களிடம் கேட்கும்.
மேலும் இந்த ஆப் ஸ்டோரில் உள்ள ஆப்கள் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படும். Play store-லிருந்து குறைகள் காரணமாக ஆப்கள் நீக்கப்படுவது போல ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கப்படாது. இதற்காக முதலிலேயே கடுமையான சோதனைகளை மேற்கொள்வார்கள். பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பில் மிகவும் கவனமாக ஆப்பிள் நிறுவனம் செயல்படும்.
6) Eco-System:
History of iPhone
Apple-ன் மிகப்பெரிய வியாபார நுணுக்கமே அதன் Eco System தான். Eco System என்றால், இப்பொழுது ஒருவர் ஐபோன் வாங்கினால், அதற்கான சார்ஜர், USB மற்றும் அதனோடு தொடர்புடைய பொருள்கள் அனைத்தையும் ஆப்பிள் நிறுவனப் பொருள்களாக வாங்க வைப்பது ஆகும். ஏனெனில் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு முழுவதுமாகக் காப்புரிமை பெற்றுள்ளார்.
இதனால் தான் iPhone சார்ஜர் முனைகளைக் கூட பிற நிறுவனங்களால் காப்பி அடிக்க முடியாது. சந்தையில் ஒரு நிறுவனம் எவ்வளவு சிறந்த ஒரு பொருளை கொண்டுவந்தாலும், அதை அப்படியே காப்பி அடித்து சீனாவின் காப்பி அடிக்கும் நிறுவனங்கள் அந்த பொருளின் நகலை உருவாக்கி சந்தைக்கு கொண்டு வந்து விடும். இந்த நிறுவனங்கள் கூட ஆப்பிளிடம் வாலாட்ட முடியாது. தங்கள் நிறுவன தயாரிப்புகளின் பாதுகாப்பில் ஆப்பிள் கொண்டுள்ள அக்கறையை இதிலிருந்தே நாம் அறியலாம்.
ஆப்பிள் மேக்புக் போலவே ஜியோ உருவாக்கும் ஜியோ மேக்புக்!
இது மட்டுமில்லாமல் ஒரு iPhone-னை, ஐமேக் அல்லது ஆப்பிள் கணினியுடன் இணைத்து வேலை செய்யும் போதும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை iOS மூலமாக ஆப்பிள் வழங்குகிறது. இதனால் ஐபோன் வாங்கும் நபர்கள் ஐமேக் அல்லது ஆப்பிள் கணினி வாங்குகின்றனர். ஆப்பிள் தயாரிப்பு என்றால் அது உலகிலேயே சிறந்ததாக இருக்கும் அல்லது அந்த தயாரிப்பு ஆப்பிளிடம் மட்டுமே இருக்கும்.
7) Update& Designing:
நீங்கள் ஒரு பழைய iPhone வைத்திருந்தால் கூட உங்களுக்கு அது பழசு போல தெரியாத அளவுக்கு Apple அடிக்கடி அப்டேட்டுகளை(updates) அளித்துக் கொண்டே இருக்கும். ஐபோன் வாங்கி 10 வருடங்கள் ஆனாலும் iOS-ல் அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம். இந்த அப்டேட்டுகளில் பல புது புது விஷயங்களை போனுக்குள் புகுத்துவது மட்டுமில்லாமல் போனில் உள்ள சிறு சிறு குறைகளையும் களைகின்றது ஆப்பிள் நிறுவனம்.
அதுமட்டுமில்லாமல் சிறிய பட்ஜெட் மொபைல்களாக இருந்தாலும் சரி பெரிய பட்ஜெட் மொபைல்களாக இருந்தாலும் சரி அதன் வடிவமைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த 2020-ல் ஆப்பிள் அறிமுகப்படுத்திய iPhone 12 pro மொபைல் உலகையே கலக்கியதை நாம் அறிவோம்.
iPhone பயன்படுத்துபவர்கள் சிகரெட் புகைத்தால் அந்த மொபைலின் வாரன்டி 0 ஆகி விடுமாம். எப்படி என்றால், புகை பிடிக்கும் போது வெளியேறும் சிறு புகை துகள்கள் ஐபோனின் சார்ஐர், சென்சார் போன்ற துவாரங்கள் வழியே உள்ளே சென்று தங்கி விடுமாம். சர்வீஸ் சென்டரில், சிறிதளவு புகைத்துகள்கள் இருந்தாலும் அதனை சரியாக கண்டுபிடித்து, வாரன்டி-ஐ 0 ஆக்கி விடுகிறார்களாம்.
இதனால் iPhone பயன்படுத்துபவர்கள் சிகரெட் மற்றும் புகை பிடிப்பவர்களிடமிருந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுமாம். 'தங்கள் மொபைல் பயனர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த நடைமுறையைப் பின்பற்றுவதாக', Apple நிறுவனம் கூறுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போதிலும், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஆப்பிள் நிறுவனம் தான் வென்றுள்ளதா
ம்.
History of iPhone
இந்த அளவுக்கு iPhone மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை வளர்த்து உலகரங்கில் ஆப்பிளை ஒரு முன்னணி நிறுவனமாக கொண்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2011, அக்டோபர் 5-ல் காலமானார். இவர் இறப்பதற்கு முன்பு 2011, ஆகஸ்டில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு Cloud Computing முறையை அறிமுகம் செய்தார். இது தான் இவரது கடைசி பொதுக்கூட்டம்.
நாம் பார்க்கும் போது ஆப்பிள் நிறுவனம், iPhone மற்றும் அதன் பொருள்கள் இன்று உலகரங்கில் முன்னணி பொருள்களாகத் திகழ்கிறது, நல்ல வருமானம் கிடைக்கிறது, இவை தான் நமக்கு புலப்படும். ஆனால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் பல அடிகள், காயங்கள் இருப்பது நமக்கு புலப்படுவதில்லை.
இதைப் போலத்தான் இதை வாசிக்கும் உங்களது வாழ்க்கையிலும் பல தோல்விகள் இருக்கலாம். துவண்டு விட வேண்டாம். தோல்வியே வெற்றிக்கு முதற்படி😉. தோல்விகளைக் கண்டு துவளாமல், அத்தோல்விகளிலிருந்து புது விஷயங்களைக் கற்றுக் கொண்டு உங்கள் வாழ்க்கையை கட்டி எழுப்புங்கள்.
NEVER GIVE UP👍!!...
நன்றி...