Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendra Kula Velalars, Vellalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran,Panikkar Dr.Guruswami Siddhar
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்
சேரநாட்டு விண்ணாடர்
போற்றும்
முருகேசம் எனும்
திருமுருகன் பூண்டி
திருத்தேர் வேடுபறி பல்லக்கு திருவிழா - 27-2-2024
-----------------------
சமயக்குரவர்களான நால்வரில் ஒருவரான சுந்தரர் இறைவனை காண மேலைசிதம்பரம் காஞ்சிவாய்ப் பேரைப்பதி எனும் திருப்பேரூர் வந்டைந்து காஞ்சிமாநதியில் நீராடி திருக்கோயில் புகுந்தார் சுந்தரர்
அவர் வருவதற்கு முன்பே மள்ளன் மள்ளி யாக அவதரித்து உழுதல் நடுதல் போன்ற உழவர் தொழிலை செய்துகொண்டிருந்தனர்
பெருமானை கோவிலில் காணப்பெறாமல் சுந்தரமூர்த்திநாயனார் நந்தீசனை வினவவே ,அவர் ஈசனால் முன்பே சொல்லக்கூடாதென கட்டளையிட்டப்பட்டதனால் யாதொன்றும் கூறாமால் தன் தலையைமட்டும் திருப்பி ஈசன் உழுதொழில் செய்யும் வயலை குறிப்பால் உணர்த்தினார்
அம்மருதக் களனியிலே வயலில் பட்டிமள்ளனும் பச்சைநாயகி மள்ளத்தியையும் கண்டு வணங்கினார். ஆலயம்வந்தடைந்த சிவபெருமான் நந்தியின் தாடை மண்வெட்டியினால் வெட்டினார் தன்கட்டளையை மீறிய குற்றத்திற்காக, பின்பு வெள்ளியம்பலத்திலே திருநடனம் புரிந்தார். அந்நடனத்தை கண்டு மகிழ்ந்த நாயனார் பொன் பொருள் தரும்படி மள்ளர்பட்டீசனிடம் கேட்கவே, கொடாமல் உமது பாட்டிற்கு எமது திருநடனமே பரிசு என கூறிய மள்ளர் சிவபெருமான் இது முக்தி தலமாதலால் மற்ற தலங்களில் பொன் தருவோம்,
சேரமானுக்கு உமது செய்தி தெரிவித்தோம் அவன் தருவான் என அருளினார். விடைபெற்ற நாயனார் சேரமானை சந்தித்து பொன் பொருளினை பெற்று திரும்பி திருமுருகன்பூண்டி வந்தடைந்தார்
இவ்வழியில் வந்து திருமுருகன் பூண்டியருகே சுந்தரமூர்த்திநாயனார் தங்கியிருக்கும்போது, பொன்னும் பொருளும் பெற்றவுடன் தமது தோழரான சுந்தரர் தன்னைமறந்துவிட்டார்,
ஆகவே அவருக்கு தன் மீதான சிந்தனை வரவேண்டும் என்பதற்காக
தமது கணங்களை சிவபெருமான் வடுக வேடுவராக அனுப்பி பொன்பொருளை கவரச் செய்தார்,
சுந்தரமூர்த்திசுவாமிகள் திருமுருகேசம் கோவிலையடைந்து எம்பெருமானை வணங்கி பதிகம் பாடினார்
அப்பதிகம்
" கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்தி கூறை கொண்டாறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கைத் தன்னொடு மெத்துக்கிருந் தீரெம்பிரானீரே '"
பாட சிவபெருமானருளால் வேடுவராகிய கணங்கள் பறித்த பொருட்களையெல்லாம் திருப்பி கோவில் வாயிலிற் கொண்டு குவித்தனர்
இதை கண்டு அகம்மகிழ்ந்து இறைவனை வணங்கிப் போற்றுகிறார்
இவ்வரலாற்று நிகழ்வே சேரநாட்டு விண்ணாடர் போற்றும் முருகேசம் எனும் திருமுருகன்பூண்டியில் ஆண்டு தோறும்
தேவேந்திரகுல வேளாளப் பெருமக்களால் பல ஆண்டுகளாக கொண்ண்டாப்பட்டு வருகிறது
இந்நிகழ்வில் ராக்கியாபாளையம் கொங்கு வம்ச தேவேந்திரகுல வேளாளர்களின் நெல்வயல்கள் சுற்றிலும் பன்னெடுங்காலமாக உள்ளது இவர்களின் வயக்காடுகள் உள்ளபகுதியே சுந்தரர் தங்கிய பகுதியாகும் இங்குள்ள
வயக்காட்டு தோட்டம் கூப்பிடு பிள்ளையார் ஆலயத்தில்
சுந்தரர் உறங்குகிறார்,
இந்தநாளில் தான் திருமுருகப்பெருமானுக்கு சிறப்பு பூசைகள் தேவேந்திரகுல வேளாளப் பபெருமள்ளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது,
இம்மக்களுக்கு பரிவட்ட கட்டி மாலையணிவித்து முதல் மரியாதை திருக்கோவில் நிருவாகத்தால் வழங்கப்படுகிறது
இவ்வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு கோவை பேரூரில் நடைபெறும்
ஆனித்திருமஞ்சன நாற்று நட உற்சவ திருவிழாவின் தொடர்ச்சியாக
சேரமன்னனிடம் பொருள் பெற்று திருமுருகன் பூண்டி வருகிகிறார்
அங்கே பொருட்கள் காணாமல் போகுகிறது இறைவனை வேண்ட அதிகமான பொருட்கள் கிடைக்கிறது.
இவ்விரு விழாக்களிளும் தேவேந்திர குல வேளாளர்களே முக்கிய, பங்கு வகிக்கிறார்கள்
இவ்விழாவில் மண்ணரையை சேர்ந்த மள்ளத்திகளால் மள்ளர்களின் வள்ளிகும்மி நடன நிகழ்வு நடைபெற்றது,
அன்னதானம்
தேவேந்திர குல வேளாளர் பொதுநல அறக்கட்டளை திருப்பூர் குழுவினரால் வழங்கப்பட்டது
கொங்குமண்டலம் மட்டுமல்லாமல் தென்மாவட்டங்களிலிருந்தும் திரளான நமது உறவுகள் கலந்து கொண்டனர்
ஆன்மீக தளங்களில் நமது உரிமைகளும் வரலாற்று பெருமைகளும் உள்ளன
அவற்றை மீட்க வேண்டும் வரலாற்றை நமது அடுத்ததலைமுறை கொண்டு சேர்க்க வேண்டும்
வரலாறு தொடரும்
மள்ளர்.
மா.நித்தியானந்தன்