Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendra Kula Velalars, Vellalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran,Panikkar Dr.Guruswami Siddhar
1.ஆழிமதுரை தேவேந்திரகுல வேளாளர்களின் கருப்பணசாமி குலதெய்வ வழிபாடு
2.காரைக்குடி, முத்துப்பட்டிணத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
ஆழிமதுரை தேவேந்திரகுல வேளாளர்களின் கருப்பணசாமி குலதெய்வ வழிபாடு
ஆழிமதுரை தேவேந்திரகுல வேளாளர்களின் கருப்பணசாமி குலதெய்வ வழிபாடு
தலைமை தெய்வம் அருள்மிகு கருப்பணசாமி. உடன் உள்ள சாமிகள் காளி, காமாடிச்சி, இருளாயி, அரியநாச்சி ஆகும்.
இன்றைய சிவகங்கை மாவட்டத்தில், இளையாங்குடி வட்டத்தில் அமைந்துள்ள அழியாத மதுரை என்ற ஆழிமதுரை என்ற கிராமத்தினை உருவாக்கியவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களே! அதற்கு ஆதாரமாய் விளங்குவது தேவேந்திரகுல வேளாளர்களின் கருப்பணசாமி குலதெய்வ வழிபாடுகளும், வாழ்வியலும் ஆகும்
அன்புடையீர்! 🙏 ஆன்மீகப் பாரம்பரியம் மிகுந்த தேவேந்திரகுல வேளாளர்களே! குமரிக்கண்டத்தில் தோன்றிய முதல் குடி தமிழர் குடியாகும். தமிழர் குடியில் ஏரும் போரும் செய்து நாடாண்ட தமிழ் வேந்தர்கள் பல்வேறு கோத்திரங்களைக் கொண்ட தேவேந்திரகுலத்தினரே! தமிழ்மொழி வளர்க்கவும் முதல், இடை, கடைச் சங்கம் வைத்து தமிழ் இலக்கிய வரலாறு படைத்தவர்கள் பாண்டியர்களே! குமரிகண்டத்தின் பேரழிவிற்குப் பின்னர், தற்போதைய மதுரையைத் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். கொந்தகை மற்றும் கீழடியின் அகலாய்வுகள் தமிழர்களின் பல்வேறு தொன்மை வரலாற்றினையும் வெளிப்படுத்தியது. ஆனாலும், மதுரையின் தொன்மை வரலாறும் தேவேந்திரகுலத்தார் வரலாறும் மறைக்கப்பட்டுள்ளது. அந்த தொன்மை வரலாற்றினை மீட்டு எடுக்க வேண்டும். வடநாட்டிலும் மதுரா என்ற நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் மதுரை என்ற பெயர் கொண்ட பகுதிகளை முழுமையான ஆய்விற்கு உட்படுத்திட வேண்டும். மதுரை, வடமதுரை, மானாமதுரை, அழியாமதுரை, ஆழிமதுரை போன்ற பகுதிகள் பழைய மதுரை மாவட்டதில் இருந்தன.
ஒரு காலத்தில் கீழடி கொந்தகை பகுதியில் பெரும் போர் அல்லது பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். மேலும், அந்நியர்கள் பாண்டியர்களை வீழ்த்திய போதும் போரில் பலர் மாண்டனர். போர் காலங்களில் அழிவிற்கு உள்ளான தேவேந்திரகுல மக்கள் பல்வேறு பகுதிக்கும் புலம் பெயர்ந்தனர். புலம் மெயர்ந்த போது, தங்களின் குலதெய்வ வழிபாடுகளையும் புதிதாய் குடிபெயர்ந்த பகுதியில் தொடர்வதால் பாண்டியர் வம்சம் வழிவந்த தேவேந்திரகுலத்தார் வாழ்வியல் உண்மை வரலாறுகள் வெளிப்பட்டு வருகின்றன.
✳️ மதுரையிலிருந்து இடம் பெயர்ந்த குடும்பர் என்னும் தேவேந்திரகுல வேளாளர்கள் அழியாத மதுரை என்ற ஆழிமதுரை புதிய இருப்பிடத்தை ஏற்படுத்தி, தங்களின் தொன்மையான 21 பந்திகள் கொண்ட கருப்பணசாமி உடன் கூடிய குலதெய்வத்தையும் நிர்மாணித்து வாழ்ந்து வருகின்றனர். ஆண் தெய்வங்களான கருமலையான், இருளப்பசாமி, சோனைச்சாமி, வேடன்சாமி மற்றும் பெண் தெய்வங்களான கம்மாடிச்சி, இருளாயி, ராக்காச்சி, அரியநாச்சியார், போன்ற தெய்வங்களை தொடர்ந்து வழிபட்டு வாழ்கின்றனர். மதுரை அழகர்மலை கருப்பணசாமியை வணங்கும் தேவேந்திரகுல வேளாளர்கள் குடும்பர் மரபினர். பின்னாளில், குடும்பரில் 5 பிரிவுகளாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளனர். மூலப்பன், தாலியன், கிடாவெட்டி, பரப்படியான், மற்றும் குருவி போன்ற 5 கிளையினராக வாழ்ந்து வருகின்றனர். முற்காலத்தில் மதுரையில் வாழ்ந்த கருப்பணக் குடும்பன் என்ற தேவேந்திரகுல வேளாளர் குடும்பத்தார்களே 5 வகையான பிரிவுகளாய் பிரிந்துள்ளனர். அழியாத மதுரையில் தொடங்கிய கருப்பணசாமி வழிபாடுகள் 18 கிராமங்களில் பரவியுள்ளன. தேவேந்திரகுல வேளாளர்களுக்குப் பாத்தியப்பட்ட கருப்பணசாமி வரலாறானது பின்னாளில் பிற சமுதாயத்தினரும் வழிபடும் தெய்வமாக மாற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் கோட்டையூர், புலியூர், அழகிய பாண்டியபுரம், சிறுவாலை, ஊரப்புளி, பொன்னியேந்தல், அரியஏந்தல், நகரகுடி, நெஞ்சத்தூர், அ.புதூர், உலக்கானி, சூச்சினாங்குடி, வண்ணாரவயல் மற்றும் வானிவல்லம் போன்ற கிராமங்கள் உடனடி ஆய்விற்குரியனவாகும். ஆழிமதுரை பற்றிய அறிமுகத் தகவல்களைப் பதிவிட்டுள்ளேன்.
✳️ இத்தகவல்களை தெரிவித்தவர் திருநாவுக்கரசு என்பவர் *இளையான்குடி வட்டாரத்தில் களாய்வுகள் செய்து தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற பதிவாளர் திருமிகு.பாலு, பேராசிரியர் முனைவர்.மணிராஜ், வழக்கறிஞர்கள் திரு.சரவணக்காந்தி, திரு.அமர், போன்றவர் இணைந்து, வரலாற்று ஆய்வாளர் திருமதி.ரேனுகா மள்ளத்தி, மற்றும் முனைவர் பாண்டியன் ஆகியோர் ஆழிமதுரை கருப்பணசாமி வழிபாடு பற்றிய கள ஆய்வுகள் செய்துள்ளோம். மேலும், ஆழிமதுரை பூசாரி திருமிகு.இராமு குடும்பர், திருமிகு.ஜெயக்குமார், திருமிகு.சோழீஸ்வரன்ஜி, திருமிகு.சுரேஷ் சர்மாஜி ஆகியோர் பல்வேறு முக்கியத் தகவல்களையும் தெரிவித்தனர். அதனை விரைவில் DKV Rajas YouTube மூலம் காணொளிகளாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
ஆன்மீகப் பாரம்பரியம் கொண்ட தேவேந்திரகுல வேளாளர்களே! 🙏 மதுரையைத் தலைமை இடமாக கொண்டு ஆண்ட பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் மொழி வளர்த்தார்கள். மட்டுமல்ல, பெருந்தெய்வங்கள் வழிபாட்டிற்காகவே பெருங்கோயில்களை அமைத்தனர். தங்கள் இலட்சினையான இரட்டைமீன் சின்னங்களை திருக்கோயில்களில் அடையாளப்படுத்தியுள்ளனர். மேலும், கிராமங்களில் சிறுதெய்வங்களை வழிபடுவதற்கும் ஆதரவுகள் அளித்துள்ளனர். குலதெய்வம் வழிபாடுகள் தேவேந்திரகுல வேளாளர்களின் சமூக வாழ்வியலில் மிகவும் முக்கியமான ஒன்றாக தொன்றுதொட்டு தொடர்ந்து வருகின்றது. மருதநிலக் குடிகளின் குலதெய்வங்களே பின்னாளில் பிற குடிகளும் வணங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், மதுரையில் அழகர் கோயிலில் உள்ள 💥18 படி கருப்பணசாமி வழிபாடும், இளமனூர்- விளத்தூர் 💥பள்ளக்கருப்பசாமி வழிபாடும், உசிலம்பட்டி அருகில் அமைந்துள்ள 💥அயோத்திபட்டி பள்ளக்கருப்பசாமி வழிபாடும், திருப்பாச்சேத்தி அருகில் அமைந்துள்ள 💥 மாரநாடு கருப்பணசாமி வழிபாடும், ஆழிமதுரை கருப்பணசாமி வழிபாடும் ஆய்விற்குரியனவாகும். மேற்குறிப்பிட்ட அனைத்துக் கருப்பணசாமி வழிபாட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் தான் பூசாரிகள், சாமியாடிகள், கிடா வெட்டும் உரிமை உள்ளவர்களாக ஆதிகாலம் தொட்டே விளங்குகின்றனர். பாண்டியர்கள் கட்டிய பல்வேறு கோயில்களில் முதல் மரியாதை, பரிவட்டம், தேர் உரிமைகள் உள்ளதனைப் போன்றே கிராமக் குலதெய்வ வழிபாட்டில் தேவேந்திரகுல வேளாளர்களே முதன்மையாக விளங்கினர். ஆனால், சமீப காலமாக நமது குலதெய்வக் கோயில்களை பிற சமுதாயத்தினர் அபகரித்து சொந்தம் கொண்டாடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நமது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பல்வேறு கோயில்களை இந்துசமய அறநிலையத்துறை எடுத்துக் கொண்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது. ஆதலால், நமது சமுதாயத்தினர் அனைத்து அமைப்புகள், இயக்கங்கள், அறக்கட்டளைகள் அனைத்தும் இணைந்து வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி தேவேந்திரகுல வேளாளர்களின் குலதெய்வக் கோயில்களை மீட்டு எடுக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர்கள், ஆன்மீகபலம் இறைவன் அருள் பெற்று, அரசியல் அதிகாரம் பெற்று, மீண்டும் தமிழ்நாட்டை ஆளுகின்ற ஆளுமை பெற வேண்டும்! விரைந்து செயல்படுவோம்! வெற்றி பெறுவோம்! 🙏
ஆன்மீக வரலாற்று விழுப்புணர்வுத் தகவல்கள் முனைவர். சு.பாண்டியன், மதுரை, தொடர்புக்கு: 8072739651
காரைக்குடி, முத்துப்பட்டிணத்தில் அமைந்துள்ள
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
அன்புடையீர்! தேவேந்திரகுல வேளாளர்களே! 🙏 02-04-2024 செவ்வாய்கிழமை காரைக்குடி, முத்துப்பட்டிணத்தில் அமைந்துள்ள “அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்” திருவிழாவில் தேவேந்திரகுல வேளாளர் மண்டகப்படி விழா நடைபெற்றது.
மாலை 5-30 மணியளவில் பருப்பூரணி, பிள்ளையார் கோயில் முன்பாக ஆயிரக்கணக்கான தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினைச் சார்ந்த பெண்கள் பூத்தட்டுகள் ஏந்தி புறப்பட்டு ஊர்வலமாகச் சென்று, அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலை அடைந்தவுடன், அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக திரு.N.பாலுB.A அவர்களுக்கு முதல் மரியாதை மலர்மாலை அணிவித்து, கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டினர். அதனைத் தொடர்ந்து 11 ஊர் முக்கியஸ்தர்களுக்கு மலர்மாலையும் வெள்ளைத் துண்டும் அணிவித்தனர். மேலும், விழாவிற்கு வந்திருந்த அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் வெள்ளைத் துண்டு அணிவித்தனர். விழாவில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் SVT மகாலில் அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை மகிழ்விக்க இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.
ஊஞ்சனை நாட்டு 32 அரைக் கிராமத்தினரும், காரைக்குடி நகரம், நேமம், ஆத்தாங்குடி, பழவாங்குடி, கோவிலூர், பாதரக்குடி, ஆகிய கிராமங்களின் தேவேந்திரகுல வேளாளர்களின் மண்டகப்படித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆன்மீக வரலாற்றுச் செய்தி முனைவர் சு.பாண்டியன், மதுரை, தொடர்புக்கு: 8072739651