Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendra Kula Velalars, Vellalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran,Panikkar Dr.Guruswami Siddhar
பெரம்பலுரிலிருந்து திருச்சி செல்லும் முதன்மை சாலையில் உள்ள ஆலத்தூர் கேட்டில் இருந்து 1 கி.மீ தூரத்தில் தண்டாயுதபாணி திருக்கோவில் மலை மீது உள்ளது.*
*இந்தக் கோவிலில் கோழிக் கொடியோன் கோவில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு மட்டும் பாத்தியப்பட்டதாக இருந்து வந்தது* .
*இந்த உரிமையை பறிக்க நடந்த முயற்சியை தடுக்க 1934-ல் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதி மன்றத்தில் இம்மக்கள் வழக்கு தொடர்ந்தனர்* .
*இதன் தீர்ப்பு 17-10-1936-ல் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது* .
இதன் மூலம்
*கோழிக் கொடியோன் (சேவல் கொடியோன்) உரிமை இந்தக் கோவிலுக்கு வரும் முடி காணிக்கை கோவில் மணி , உண்டியல், தண்டாயுதபாணி கோவில் தென்புறத்து படிக்கட்டு ஆகியவை தேவேந்திரகுல வேளாளர்ளுக்கு உரிமை உள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது*
*இத்தீர்ப்பின் முதல் பக்கத்தில் வழக்கு தொடர்ந்த இம்மக்களின் பெயருக்கு பின்னால் மூப்பன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்* .
இவர்களை “ *தேவேந்திரகுல மக்கள்* ’’ என்று குறிப்பிட்டுள்ளது . *ஆங்கிலேயர் ஆட்சி* செய்த காலத்தில் பள்ளன் என்று பதிவு செய்யாமல் *தேவேந்திரகுலம் என்று பதிவு செய்துள்ளது* .
*இந்த தகவல் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு ஆவணம்* .
*1937-ல் மார்ச்சு 27 அன்று தண்ணீர் பந்தல் அமைக்க தண்டாயுதபாணி மலை கோழிக்கொடியோன் சாமி ஆதினபரம்பரை தேவேந்திரகுல வேளாளர் மகாசன சங்கத்தின் தீர்மானம் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளர்கள்* .
*1937-ல் இம்மக்கள் அச்சு பதித்த அழைப்பிதழில் தேவேந்திரகுல வேளாளர் என்றே தங்களை அழைத்துக்கொண்டனர் என்பது ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது .*
நன்றி : தேவேந்திரர் மலர்