Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendra Kula Velalars, Vellalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran,Panikkar Dr.Guruswami Siddhar
தளபதி வெண்ணிக் காலடி குடும்பனார் 1755
நல்ல மாடன் குடும்பனார் 1767
குலசேகரப்பட்டினம் மூப்பன் 1801
முத்துக் குடும்பனார் 1799
கட்டக் கருப்பன் காலாடி
தளபதி சுந்தரலிங்க குடும்பனார்
தாசன் ராமசாமி பண்ணாடி கோவை
யார் இந்த #தாசன்ராமசாமி பண்ணாடி
இந்திய விடுதலை போர் வரலாற்றில் குன்றின் மேல் விளக்காக இருக்க வேண்டிய அந்த வீர தளபதிகள் குடத்துக்குள் விளக்காக இவர்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது
மக்கள் உள்ளத்திலே சுதந்திர உணர்வை விதைத்து அதை வளர்தெடுக்க தங்கள் உடலை உரமாகவும் இரத்தத்தை நீராகவும் தந்து புரட்சித் தீக்கான பொறியை அளித்த அந்த வீரர்களில் முக்கியமானவர்களில் கொங்குமண்டலத்தின் புரட்சிப்படை தளபதி மாவீரர் இராமசாமி பண்ணாடியர்
1800 முதல் 1806 வரை நடந்த தென்னக புரட்சி மிகப்பெரும் தனித்தன்மை கொண்டது
ஆங்கிலேய ஆதிக்கத்தை தென்னகத்திலிருந்து அடியோடு அகற்ற ஒரு பெரும் புரட்சி திட்டத்தை "தோண்ட்ஜி வாக்" என்பவர் வகுத்தார்
இப்படையில் தென்னகமெங்கும் தூதுவர்களை அனுப்பி புரட்சிக்கூட்டமைப்பை உருவாக்கினார்.
கோவையில் தாசன் ராமசாமி தேவேந்திரர், இ.ஜா.கான், சேலம் ஈரோடு சின்னான், ஓசூர் புட்டே முகம்மது, பெல் மாவட்டத்தில் கிருஷ்ணப்பநாயக்கர் பல வட்டாரத்தலைவர் களையும் உள்ளடக்கியது இப்புரட்சிக் கூட்டமைப்பு
புரட்சிக்கூட்டமைப்பின் தளபதிகள் கூட்டம் திண்டுக்கல்லில் விருப்பாட்சி யில் 1800ம் ஆண்டு ஏப்ரல் 29ல் நடைபெற்றது முதலில் கோவையில் தாக்குதலை துவங்கி தென்னகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக புரட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கோயமுத்தூர் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடம் எனவே இப்பகுதியை கைபற்றுவதன் மூலம் இங்கு ஆங்கிலேயரின் ஆதிக்கம் அழிக்கப்படும் .
ஜுன் 3 ம் தேதி தாக்குதலை துவக்க திட்டமிட்டனர் ஏனெனில் அன்று மொகரம் பண்டிகையின் கடைசிநாள்.
இத்திட்டப்படி இராமசாமி தேவேந்திரர், மகம்மது ஹசன், அப்பாச்சிகவுண்டர் சாமைய ஆகியோர் முதல் தாக்குதலை தொடுத்தனர் மற்ற உள்ளூர்புபரட்சிப்படைகள் தயார்நிலையில் தாக்குதலை துவக்க இருந்தனர் இந்த உள்ளூர் படைகளில் பெரும்பாலனோர் இராமசாமி தேவேந்திரரின் சமூகத்தின் உறவினர்கள் ஆவர்
இச்சமூக மக்கள் பெருப்பான்மையோர்
நாடுகாக்கும் நற்பணியில் பங்கு கொண்டோர் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கிடையில் தென்னகபுரட்சிப்படையின் நட்பு தீரன் சின்னமலை அவர்களுக்கு கிடைத்தது
ஆங்கிலேயப்படையில் பெரும்பாலும் முஸ்லீம் சிப்பாய்கள் பணிபுரிந்தனர், எனவே அவர்கள் மொகரம் பண்டிகையில் இருக்கின்ற பொழுது கோவை கோட்டையை கைபற்ற வேண்டும்
இந்த விவரம் கோயமுத்தூர் தாசில்தார்க்கு தெரிந்து விடவே ஆங்கிலேயே பீரங்கி படைக்கு தகவல் அனுப்பினார்,
உடனே அப்பகுதி ஆங்கிலேய தளபதி லெப்டினென்ட் கர்னல் மேக்லிஸ்டர் இஸ்லாமிய வீரர்களை பண்டிகைக்கு அனுப்பிவிட்டு ராஜபுத்திர படைவீரர்களை கோவைகோட்டையில் நிறுத்திவைத்தான்
கோயமுத்தூரில் சத்தேகத்திற்குறிய முறையில் நடமாடுபவர்கள், உள்ளூர் புரட்சிப்படையின் முக்கிய தலைவர்கள் தளபதிகள் கைது செய்யப்பட்டனர்.
புரட்சிவீரர்களின் தாக்குதலும் பலனலிக்கவில்லை. அவர்களில் பலர் மலைபகுதிகளுக்குள் சென்று விட்டனர்.
பின்வாங்கிச் சென்ற புரட்சி வீரர்கள் தாராபுரம் சத்தியமங்கலம் தலமல்லா பகுதியிலுள்ள ஆங்கிலேய முகாம்களை தாக்கி அளித்தனர்
இப்போரில் ஆங்கிலேயப்படை படுதோல்வியடைந்தது. பின்பு புரட்சிப்படையினர் மீண்டும் காடுகளுக்குள் சென்றுமறைந்தனர் காட்டிற்குள் சென்றவீரர்களை சிலரை ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தனர் அவர்களில் ஒருவர் மகம்மது ஹசன்
புரட்சிக்குழு தளபதி இராமசாமி தேவேந்திரர் கொடுத்தனுப்பிய முக்கிய கடிதங்கள் இவரிடமிருந்தன அவற்றை சிறைபிடிக்கும் முன்னரே அழித்துவிட்டார் ஆங்கிலேயரோ புரட்சிகுறித்த முக்கிய விவரங்களை தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொண்டனர் எவ்வளவே சித்ரவதை செய்தும் எவ்வித தகவலையும் இவரிடமிருந்து பெறமுடியவில்லை. தன்தானே கழுத்தை அறுத்துக்கொண்டார் மகம்மது ஹசன்
இராமசாமி தேவேந்திரரின் உற்றநண்பர் ,மற்றும் பல தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டு கடுமையான தண்டணை விதிக்கும்படி கவர்னர் கிளைவ் கலெக்டர் மார்லியார்டிக்கு கட்டளை பிறப்பித்தான் கோவை தாக்குதலில் தொடர்புடைய 42 பேர் கைதுசெய்யப்பட்டு இராணுவ நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டது,
விசாரணை நாடகம் முடிந்து 42 வீரர்களுக்கும் தூக்குத்தண்டணை விதிக்கப்பட்டது, அவர்களுள் இராமசாமி தேவேந்திரரும், அப்பாச்சி கவுண்டரும், தோண்ட்ஜி வாக் ன் தூதர்களும் மக்களை பயமுறுத்தும் வகையில் தாராபுரத்தில் 8 பேரும், சத்தியமங்கலத்தில் 7பேரும், கோவையில் 6 பேரும் மீதி 21 பேரும் பல்வேறு புரட்சி மையங்களில் பொதுஇடங்களில் தூக்கிலிட்டு கொள்ளபட்டனர் பலர் நாடு கடத்தப்பட்டனர் இதில் தீரன் சின்னமலை ஓடாநிலைக்கு திரும்பினார்
கொங்குமண்ணின் புரட்சிப் படை தளபதி இராமசாமி தேவேந்திரர் பற்றிய வரலாறுகள் நாட்டுப்புறபாடலாக அவர் வாழ்ந்த பகுதிகள் பாடப்படுகிறது
உச்சிமுடிஞ்ச புள்ள உக்கிரமா பாக்கும்புள்ள
வக்கிரமமா வந்தவன வாளெடுத் சாய்குபுள்ள
குதிரையேரி வரும்புள்ள குறிபாத்து சுடும் புள்ள
வெடிகுளாய தோளில் தாங்கி வேட்டையாட போகும்புள்ள
வெள்ள கொக்கு சுடபோனபுள்ள வீடுவந்து சேரலயே
கோட்டைக்கு ஒத்தபுள்ள
குலங்காத்த நல்லபுள்ள
பட்டத்துயாணையா எட்டுவைக்கும் எங்கபுள்ள
பகையின்னு வந்துட்டா பாயும்புலி எங்கபுள்ள
ஈட்டியா பாயும்புள்ள இந்திரனா நின்னபுள்ள
ரணதீரன் பெத்தபுள்ள இராமசாமி என்றபுள்ள
தெக்கத்திகாரரோடு வாஞ்சையா நின்னபுள்ள
கிழகத்திகாரரோடு வரிஞ்சுகட்டி நின்னபுள்ள
என்ற பாடல் மூலம் இராமசாமிதேவேந்திரரின் உடலும் உள்ளஉறுதியும் மனதிடமுமம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது
இவர் தெக்கத்திகாரர்களான சுந்தலிங்ககுடும்பனார் சின்னமருது பெரியமருது உமைத்துரை கட்டிபொம்மு போன்றவர்களோடும் கிழக்கத்திக்காரரான தீரன்சின்னமலையோடும் எதிரிகளை அழிக்க கைகோர்த்து வரிஞ்சுகட்டி நின்றவர் என்பது இப்பாடல் மூலம் அறியமுடிகிறது
ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் கொண்டாடமறந்த வீரப்பெரும்தமிழன்
ராமசாமி பண்ணாடியார்க்கு நினைவேந்தல் வீரவணக்கங்கள்!!
மள்ளர்.மா.நித்தியானந்தன்
பேரையூர் பெருமாள் பீட்டர்
இந்திர குல பூவைசியர் சங்கத்தை நிறுவி மண்ணின் மைந்தர்களின் மேம்பாட்டுக்காகவும், மானுட சமத்துவத்துக்காகவும் அயராது உழைத்த பெருமகனார் ஐயா "பேரையூர் பெருமாள் பீட்டர்" அவர்களின் மறைந்த தினம் 30.05...
யார் இந்த பேரையூர் பெருமாள் பீட்டர்......
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள பேரையூர் கிராமத்தில் ஆண்டி தண்டல், சிகப்பி தம்பதியாருக்கு 07.01.1885 ல் பெருமாள் பீட்டர் பிறந்தார்
தமிழ்நாட்டில் தென்மாவட்ட மக்களின் விடுதலைக்காக அரை நூற்றாண்டுகளுக்கு மேல் போராடியவர். ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தமிழின மக்களின் மருத்துவச் சேவைக்காக சித்த மருத்துவரானவர். சித்த மருத்துவத்தில் சிறந்த நூல்களைப் படைத்தவர். பெண்களின் சமத்துவத்திற்காகப் போராடியவர்.
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் விழிப்புணர்வு அடையச் செய்ய கிராமங்கள் தோறும் இரவு பாடசாலைகளை அமைத்தவர்.
தென் தமிழகத்தில் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்குடி சமூகங்களின் உரிமைப் போராட்டங்களுக்கான அடையாளமாக, மள்ளர் சமூக இயக்கம் வேர்கொள்ளத் தொடங்கியது.
1922இல் அதாவது, "ஆப்பநாடு மறவர் சங்கம்' தொடங்கப்பட்டதன் உடனடி எதிர்வினையாக, "பூவைசிய இந்திர குல சங்கம் தொடங்கப்பட்டது.
1922ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செங்கோட்டைபட்டியில் பூவைசிய இந்திர குல சங்கம் பள்ளர் குல பெருமக்களால் தொடங்கப்பட்டது.
பேரையூர் பெருமாள் பீட்டர், இச்சங்கத்தினை பரமக்குடி வீ.பீட்டர், எல்.வேதநாயகம், மா.சாமுவேல், ப.மு.சின்னக் கருப்பன், ம.கா.பெரிய நாயகம் ஆகியோரை துணையாக கொண்டு தொடங்கினர்.
வரலாற்றுத் தேவையின் பொருட்டு ஒரு சாதி சங்கமாக அல்ல, பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பில் பாதிப்பிற்குள்ளான சமூகத்தின் அரணாக, இச் சங்கத்தை தோற்றுவித்த மூத்தோனாக, மள்ளர் சமூகத்தின் முதுபெரும் தலைவராக, சிறந்த வழிகாட்டியாக இன்றும் இருப்பவர் தான் ஐயா பெருமாள் பீற்றர் அவர்கள்
சங்கத்தின் முதல் கூட்டத்திலேயே இராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஊர்களிலிருந்து பள்ளர்குல முன்னோடிகள் பங்கெடுத்துக் கொண்டனர்.பங்கேற்ற 150 ஊர்களையும் 9வட்டங்களாக பிரித்தனர்.
ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு ஊர் தலைமையாக மக்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு வட்டத்திலும் 16 முதல் 17 ஊர்கள் அடங்கியிருந்தது.
சங்கத்தின் தலைமையகமாக பேரையூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. உ.ஆ.பெருமாள் பீட்டர் சங்கத்தின் தலைவராகவும், வீ.பீட்டர் சங்கத்தின் பொதுசெயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்சங்கத்தின் அடித்தள கட்டமைப்பு மிகவும் வலுவாக அமைக்கப்பட்டிருந்தது. முறைப்படுத்தப்பட்ட சங்கமாக பூவைசிய இந்திர குல சங்கம் இயங்கி வந்தது.
சாதியச் சிக்கல்களையும், குடும்பச் சிக்கல்களையும் களையும் பணிகளில் இச்சங்கத்தினர் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.பள்ளர் குல மக்களிடம் மட்டுமின்றி ஏனைய மக்களிடமும் பூவைசிய இந்திர குல சங்கம் நன்மதிப்பைப் பெற்றது.
அந்நாட்களிலேயே பூவைசிய இந்திர குல சங்கத்தை இநதிய சங்கங்களின் பதிவுச் சட்டம் 1860 இன்படி, 1922ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் நாள் மதுரை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.பதிவு எண். 1/1924-1925.
பூவைசிய இந்திர குல சங்கம் தனது முதல் மாநாட்டை முதுகுளத்தூர் வட்டம் செங்கோட்டைப்பட்டி எனும் கிராமத்தில் நடத்தியது.
மூன்றாவது மாநாட்டை முதுகுளத்தூர் வட்டம் செங்கோட்டைப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஆம் ஆண்டு June மாதம் 6 ஆம் நாள் நடத்தியது.
இதன் மூன்றாவது மாநாடு 6.6.1923 அன்று நடத்தப்பட வேண்டிய அளவுக்கு, சாதி இந்துக்களின் குறிப்பாக, மறவர்களின் சமூக ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
.
பள்ளர் குல மக்களின் உரிமை, முன்னேற்றத்திற்காகப் பாடாற்றிய பூவைசிய இந்திர குல சங்கம் தனித்தனியான பதிவேடுகளை பராமரித்து வந்தது.மிகச் சிறந்த முறையில் இயங்கி வந்த இச்சங்கத்திற்கென 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் திங்கள்கிழமை சங்கக் கட்டிட தொடங்க வேலைகள் தொடங்கின சங்க கட்டிட திறப்பு விழா, 1961ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் நடந்தது.
பூ வைசிய இந்திர குல
சங்கம் நூற்றாண்டு கட்டிடத்தில் சிகப்பு பச்சை வண்ணக்கொடி இருந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
இந்திர குல சங்கம், இப்பகுதி வாழ் மள்ளர் சமூகத்தினரை ஒருங்கிணைப்பதையும், நெறிப்படுத்துவதையும் தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. மறவர்களின் சமூக மேலாதிக்கத்திலிருந்தும், வன்முறை நடவடிக்கைகளிலிருந்தும் தம் மக்களைப் பாதுகாப்பதில் பெருமாள் பீட்டர் அவர்களின் முழுமையான அக்கறை, வரலாற்றில் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது. அவரின் அறிவார்ந்த செயல்பாடுகள், மள்ளர் சமூகத்தினரின் வாழ்வியல் பண்புகளைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.
தமது சமூக மக்கள் அறியாமையிலிருந்தும் பலவித ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபட வேண்டுமெனில், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என, கல்வியைப் பெறுவதே ஒரே வழி என்பதை உணர்ந்தார் பெருமாள் பீற்றர். அப்போதைய அப்பகுதி ஆங்கிலேய நிர்வாகிகளிடம் தமது கோரிக்கையை விடுத்தார்.
கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் அன்றைக்குக் கிருத்தவ நிறுவனங்கள் செயலாற்றி வந்தன. இன்றும் இராமநாதபுரம் நகரில் இருக்கும் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி 200ஆண்டுகள் பழமையானது. அது போன்ற பள்ளிக் கூடங்களை தமது பகுதியில் ஏற்படுத்தி, அப்பகுதி மக்களும் எழுதப் படிக்கும் கல்வியைப் பெற வேண்டுமென முயற்சித்தார். இன்று பரமக்குடி - முதுகுளத்தூர் வட்டாரத்தில் பட்டியல் இன மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்கள், பெரும்பாலும் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்டவை.
கூரியூர் என்ற ஊரில் தேவேந்திர குல வேளாளர் அறக்கட்டளைக்கு உரிமையான ஆங்கிலேயர் ஆட்சிக்கால பள்ளிக் கூடம் இன்றும் நடைபெற்று வருகிறது. தமது மக்களின் அடிப்படைத் தேவை கல்வியே என்று உணர்ந்து, கிருத்தவ நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று, தம் கட்டுப்பாட்டிற்குள் இருந்த மக்களுடன், இந்து மதத்திலிருந்து வெளியேறி கிருத்தவத்தைத் தழுவிக் கொண்டார். பெருமாள் என்ற பெயரில் அவ் வட்டாரத்தின் புகழ்பெற்ற சித்த மருத்துவராக இருந்ததால், தனது பெயரை மாற்றிக் கொள்ளாமல், பீற்றர் என்பதை மட்டும் சேர்த்துக் கொண்டார்.
உலகம் முழுவதும் இன்று பரவி வாழும் மள்ளர் சமூகத்தினரில், எழுதப் படிக்கத் தெரிந்த அல்லது ஆங்கிலேயரின் நவீன கல்வி பெற்ற, முதல் மனிதனுக்கான வாய்ப்பை ஏற்படுத்தியவர் தான் பெருமாள் பீற்றர். இன்று பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றும், வெளிநாடுகளில் வேலை கிடைத்தும், மத்திய - மாநில அரசுகளில் கிடைத்த வாய்ப்புகளால் வாழ்க்கையை வளப்படுத்தியும், இனியும் படித்துக் கொண்டும், வேலை வாய்ப்புகளைப் பெறவும் போகும் ஒவ்வொரு மள்ளர் சமூக ஆணும் பெண்ணும், பெருமாள் பீற்றர் அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும். கொடுமை என்னவெனில், மள்ளர் சமூகத்தினரில் பலருக்கும் அவரது பெயர் கூடத் தெரியாது. தனது சொந்த வரலாற்றை அறிந்து கொள்ளாத மக்கள், அதிகாரத்தை இழந்து நிற்பார்கள் என்ற எடுத்துக்காட்டாகத் தான், இன்றைய மள்ளர் சமூகத்தின் நிலை.
தேக்கம்பட்டி பாலசுந்தர்ராஜ் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை அழைத்து மதுரையில் 29.12.1946 அன்று நடத்திய தேவேந்திர குல வேளாளர் சங்க மாநாட்டில், பெருமாள் பீட்டரோடு இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்திர குல சங்கம் பதிவு செய்யப்பட்ட இரண்டு மாதங்களில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.
பெருமாள் பீற்றரின் சமகாலத் தோழரும், சங்கத்தின் செயலாளருமான ஐயா வேதநாயகம் அவர்கள் இம்மானுவேல் சேகரனின் தந்தையார் ஆவார்.
பெருமாள் பீட்டர் அவர்களின் கடைசி மகனான திரு. வில்லியம் அவர்களின் பள்ளித் தோழரான இம்மானுவேல் சேகரன் பின்னாளில், சமூக அக்கறை கொண்டு பெருமாள் பீட்டரின் அரசியல் வாரிசாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சங்கத்தில் தன்னை இணைத்து கொண்ட இம்மானுவேல் சேகரன் மாவட்டப் பொறுப்பேற்று, இயங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
1957 இல் பசும்பொன் முத்துராமலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் பதவி விலக, மறு தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு ஆதரவாக இம்மானுவேல் பிரச்சாரம் செய்தார். ஆனால், பார்வர்டு பிளாக் வேட்பாளரான சசிவர்ண (தேவர்) வெற்றி பெற்றவுடன், மறவர்கள் முதுகுளத்தூர் பகுதியில் வன்முறையில் இறங்கினர். தேர்தலில் தமக்கு எதிராக வாக்களித்த மள்ளர் சமூக மக்களை குறிவைத்துத் தாக்கத் தொடங்கினர். இம்மோதலில் மள்ளர் சமூகத்தினர் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1957 செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முத்துராமலிங்கம் வந்தபோது, மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவித்த நிலையில், இம்மானுவேல் சேகரன் தனது மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, அத்தகைய மரியாதையைத் தரவில்லை. மேலும், தன்னைக் குறைவு படுத்திப் பேசிய முத்துராமலிங்கத் (தேவர்) துடன் சரி நிகராக நின்று, இம்மானுவேல் வாதம் புரிந்தது, மறவர் சமூகத்தினர் அவரை அடுத்த நாளே படுகொலை செய்யும் அளவிற்குத் திட்டமிடத் தூண்டிய நிகழ்வாகக் குறிப்பிடப்படுகிறது.
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் உ.முத்துராமலிங்கம் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.
உ.முத்துராமலிங்கத்திற்கு வைத்தியம் செய்து அவரது (வெப்பு) நோயை குணப்படுத்திய பேரையூர் பெருமாள் பீட்டரின் வைத்தியச் செயல்பாடு கவனமாகவே மறக்கடிக்கப்படுகிறது. உ.முத்துராமலிங்கம் 1939 -ல் சிறைப்பட்டு 1945 விடுதலையான தருவாயில் " வெப்பு நோயால் பாதிக்கப்பட்டதாக சக்திமோகனும், சசிவர்ணமும் கூறுவார்.
அந்த நோயை பேரையூர் பெருமாள் பீட்டர் குணப்படுத்தியதாக பெருமாள் பீட்டரின் மகனான. வில்லியம் கள ஆய்வின் போது தெரிவித்தார். " முதுகுளத்தூர் பயங்கரம் " இதழின் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்ம் பதிப்பிலிருந்து.
1957 ல் இம்மானுவேல் சேகரனார் அவர்களின் படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனம் வெதும்பி உடல் நலக்குறைவால் 30.05.1960 ல் இறந்தார்..
ஐயா பெருமாள் பீற்றரின் அடையாளத்தைத் தொடர்ந்து அரசியல் தளத்தில் புழங்கி, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் அவர் புகழ் பரப்பி வருபவர்கள் நாங்கள். மள்ளர் சமூகத்தின் அறிவு வழி அடையாளமாக, அவரை முன்நிறுத்துகிறோம். அறிவுக்கு மதிப்பு வழங்காத சமூகத்தில், அவரது நினைவு மங்கியிருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. கல்வி பெறுவதன் மூலம், பண்புமிக்க சமூகமாக மதிப்புப் பெற வேண்டுமென விரும்பினர் பெருமாள் பீற்றர். ஆனால் கல்வியை கடைச் சரக்காக்கி, சண்டியர் தனத்தை அரசியல் முழக்கமாக்கி, பித்தலாட்டக்காரர்களை போராளிகளாக உருவகப்படுத்தி, தன்னலப் பேர்வழிகளை தலைவர்களாகக் கொண்டிருக்கும் வரை, மள்ளர் சமூகத்திற்கு எதிர்காலம் இல்லை.
Educate - கல்விபெறு, agitate - எதிர்ப்புணர்வு கொள், Organise -அமைப்பாகத் திரள் என்ற அறிவு வழியில் பயணித்த, ஐயா பெருமாள் பீற்றரை மள்ளர் சமூகத்தின் தந்தையாகக் கொண்டாடுவோம். அவரது பணியைத் தொடரும் பயணத்தில், நாங்கள் முன் நிற்கிறோம். அதற்காகவே பெருமிதமும் கொள்கிறோம். ஐயா "பேரையூர் பெருமாள் பீட்டர்" அவர்களின் நினைவுகள் போற்றுவோம்..
இம்மானுவேல்