பொது நூலகம் கல்லூரியைச் சேர்ந்த நூலகர் மேற்பார்வையில் செயல்படும்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரி நூலக உறுப்பினர்கள் ஆவார்.
பார்வைக்கு மட்டும் உரிய நூல்களை ஆசிரியர்கள் உட்பட எவரும் நூலகத்தை விட்டு வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். நூலகம் செயல்படும் அனைத்து நாட்களிலும் அந்நூல்களை நூலகத்திலேயே பார்வையிடலாம்.
நூலகத்தில் முழு அமைதியும் கண்ணியமும் காக்கப்படல் வேண்டும்.
கீழ்க்காணும் விதிமுறைகளின்படியே மாணவர்களுக்குப் பொது நூலகத்தில் புத்தகம் தரப்படும்.
புதிய படிவங்களில் புத்தகம் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு மாணவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகம் மட்டுமே பெறலாம்.
தாம் பெற்ற புத்தகத்தை மற்றொருவருக்குக் கொடுத்தல் கூடாது. இவ்விதியை மீறினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்.
புத்தகம் பெற்றவர் அதனை 15 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்கலாம். புத்தகத்தை திருப்பி அளிக்க வேண்டிய நாள் விடுமுறையாக இருப்பின் அதற்கடுத்த வேலை நாளில் அளிக்க வேண்டும். பருவ விடுமுறை, பருவ இடைக்கால விடுமுறை இவற்றிற்குப் பொருந்தாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் விடுமுறை தொடங்கும் நாளுக்கு முன்னரே புத்தகங்களை திருப்பி அளிக்க வேண்டும். ஒரு புத்தகத்தை நூலகரிடம் தந்துவிட்டு ஒரு மாணவர் ஏழு நாட்கள் தானே அதை வைத்திருக்க அனுமதி கோரினால் அப்புத்தகத்தை வேண்டி வேறு யாரும் விண்ணப்பித்திருக்க இல்லையெனில் நூலகர் அவ்வேண்டுகோளை ஏற்கலாம்.
குறிப்பிட்ட காலத்தில் பெரிதும் விரும்பி கோரப்படும் எந்த ஒரு புத்தகமும் நூலகத்தில் பார்வையிட மட்டும் வழங்கப்படும்.
மாணவருக்கு வழங்கப்பட்ட எந்த புத்தகத்தையும் எப்போது வேண்டுமானாலும் திரும்பக்கோர முதல்வருக்கு உரிமை உண்டு.
நூலகப் புத்தகங்களில் குறித்தல், எழுதுதல், அடிக்கோடிடுதல் முதலியவை செய்யக்கூடாது. அவ்வாறு செய்யின் புதிய புத்தகம் வாங்கித் தருமாறு அல்லது ஒறுப்புத் தொகை செலுத்துமாறு அல்லது இரண்டும் செய்யுமாறு கட்டளை இடப்படலாம்.
மாணவர் நூலகத்திலிருந்து புத்தகத்தினை பெறும்போதே அப்புத்தகம் பழுதுபடாமல் நன்னிலையில் உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ளவேண்டும். புத்தகத்தில் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ, எடுக்கப்பட்டிருந்தாலோ, கிறுக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு வகையில் அப்புத்தகம் பழுதுபட்டிருந்தாலோ அதனை உடனே நூலகரின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் இல்லையெனில் அம்மாணவரே அப்பழுதிற்குப் பொறுப்பாவார். புத்தகத்தை திரும்ப அளிக்கும்போது இறுதியாக அப்புத்தகத்தை பயன்படுத்திய மாணவரே அதிலிருக்கும் குறைகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். புத்தகத்தை திரும்ப பெறும்போது நூலகர் அவற்றைச் சோதனையிட்டு எவையேனும் குறைகள் இருப்பின் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வருவார். இவ்விதி துறை நூல்களுக்கும் பொருந்தும்.
புத்தகத்தைப் பெற்றவர் அதைத் தொலைத்து விட்டால் புத்தகத்தின் விலையில் மூன்று மடங்கும் மற்றும் முதல்வர் விதிக்கக்கூடிய ஒறுப்புத் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் யாரும் அப்பருவத்திற்குறிய பாடநூல் தவிர வேறு நூல்களை ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது.