நாட்டு நலப்பணித் திட்டம் (N. S. S.)
சமூகப்பணி வழிக்கல்வி என்ற குறிக்கோளுடன் மாணவத் தொண்டர்களைக் கொண்ட நாட்டு நலப்பணித் திட்டத்தில் மூன்று அணிகள் நம் கல்லூரியில் செயல்பட்டு வருகின்றன.
1. இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
2. அரசு மற்றும் பல்கலைக் கழகம் மேற்க்கொள்ளும் சிறப்புப் பணித்திட்டங்களிலும் தேவைப்படும் ஏனைய சமூகப் பணிகளிலும் ஒவ்வொரு தொண்டரும் ஓராண்டில் 120 மணி நேரமாவது பணிபுரிய வேண்டும்.
3. இத்திட்டத்தில் கல்விமுறைப்பணிகள், உடலுழைப்புச் சுகாதாரப்பணிகள், சமூக நலப்பணிகள், தேசிய நலப்பணிகள் ஆகியவை அடங்கும்.
4. திட்டப் பணிகளை நிறைவேற்ற, மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர் ஒருவர் ஒவ்வொரு அணிக்கும் திட்ட அலுவலராகப் பணியாற்றுவார்.
5. இத்திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதற்கு ஒரு சான்றிதழும், 10 நாட்கள் சிறப்பு முகாமில் பங்கேற்றதற்கு ஒரு சான்றிதழும் மாணவத் தொண்டர்களுக்கு வழங்கப்படும்.
6. அரசு மற்றும் பல்கலைகழகத்தால் நடத்தப்படும் சிறப்புப் பயிற்சிகளில் பங்கேற்பவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் அவ்வப்போது வழங்கப்படும்.