கல்லூரியின் விளையாட்டு அணிகளின் தலைவர்களையும் விளையாட்டுத்துறை மாணவர் செயலர் மற்றும் மாணவியர் சார்பாளரையும் முதல்வரின் ஒப்புதலுடன் உடற்கல்வி இயக்குநர் தேர்ந்தெடுப்பார்.
இக்கழகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் முதல்வர் (பதவி முறைத் தலைவர்) உடற்கல்வி இயக்குநர் (பதவி முறைத் செயலர்) முதல்வரால் நியமிக்கப்படும் ஆசிரியர் குழு கல்லூரி விளையாட்டுத் துறை மாணவர் செயலர் மற்றும் மாணவியர் சார்பாளர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவினரால் நியமிக்கப்படும்.