அ. கல்லூரி மாணவர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் ஒவ்வொரு பருவத்திலும் கட்டணத்தை மொத்தமாகவே செலுத்தவேண்டும்.
ஒவ்வொரு பருவத்திலும் உரிய பயிற்சிக் கட்டணத்தை ஒவ்வொரு பருவத்திலும் பத்தாவது பணி நாளுக்குள் செலுத்திவிடவேண்டும். பிற கட்டணங்கள் முதல் பருவத்திலேயே முழுமையாக கட்டவேண்டும்.
கல்லூரி அலுவலகத்தில் பணம் கட்டும் பொழுதெல்லாம் கொடுக்கப்படும் ரசீதுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆ. ஒறுப்புடன் (அபராதம்) செலுத்துதல்
குறிப்பிட்ட நாளுக்குள் கட்டணம் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு பணி நாளுக்கும் ரூ.1.00 வீதம் ஒறுப்பு விதிக்கபடும். நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் கட்டணம் செலுத்தாத மாணவரின் பெயர் பதிவேட்டில் நீக்கப்படும். அவ்வாறு பெயர் நீக்கப்பட்ட மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வகுப்புக்குள் செல்லுதல் கூடாது.
கல்லூரிக்கான எல்லா சேர்க்கையும் (Admission) தற்காலிகமானவையே. மாணவர்கள் தவறான வழிமுறைகளைக் கையாண்டோ, பொய்யான தகவல்களைத் தந்தோ கல்லூரியில் சேர்ந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் சேர்க்கை ரத்து செய்யப்படும்.