திரு ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி

கல்லூரியின் வரலாற்றுச் சுருக்கம்

இக்கல்லூரி காலஞ்சென்ற மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் "திரு.ஆ.கோவிந்தசாமி" அவர்களின் நினைவாக 02.07.1969 அன்று அவர் பெயரில் தொடங்கப் பெற்றது. முன்னால் உணவுத் துறை அமைச்சர் திரு .ப. உ. சண்முகம் அவர்கள் முறையாக 29.07.1969 அன்று இக்கல்லூரியை தொடங்கி வைத்தார்.

இக்கல்லூரி முதலில் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் 23.07.1972 வரை தற்காலிகமாக இயங்கியது. 24.07.1972 முதல் மேல்பாக்கம் கிராம எல்லையில் தற்போது 31 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள நிரந்திரக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

1970-71 .பி.ஏ. (வரலாறு) மற்றும் பி.எஸ்சி (கணிதம்) வகுப்புகளைத் தொடங்கியதன் மூலம் இக்கல்லூரி மேனிலைப் படுத்தப்பட்டது. 1971-72 முதல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மேலே குறிப்பிட்ட வகுப்புகள் பயிற்றுவிக்கப்படலாயின. 1972-73ல் பி.., ஆங்கில இலக்கிய வகுப்பும், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைக் கொண்ட புதுமுக வகுப்பும் தொடங்கப்பட்டன. பி.எஸ்சி., இயற்பியல் வகுப்பு 1973-74 முதல் இயங்கி வருகிறது. 1981 முதல் பி.எஸ்சி.,வேதியியல் வகுப்பும் 1984முதல் பி.காம் வகுப்பும், 1998 முதல் புவி அமைப்பியல் வகுப்பும், 2005ல் இளநிலை கணினி அறிவியல் வகுப்பும், 2010ல் முதுநிலை கணினி அறிவியல் வகுப்பும், 2011-12ஆம் கல்வியாண்டில் முதுகலை வரலாறும், 2012-13ம் கல்வியாண்டில் முதுநிலை இயற்பியல் வகுப்பும், 2013-14ல் இளங்கலை தமிழ், இளநிலை தாவரவியல், முதுநிலை கணிதம் மற்றும் கணினி அறிவியல் இளநிலை ஆராய்ச்சி பட்ட வகுப்பும், 2014-15ம் கல்வியாண்டில் வரலாறு மற்றும் இயற்பியல் துறைகளில் இளநிலை, முதுநிலை ஆராய்ச்சி பட்ட வகுப்புகளும் 2015-16ல் முதுநிலை வேதியியல் வகுப்பும் தொடங்கப்பட்டன. 2017-18ல் முதுகலை தமிழ் மற்றும் ஆங்கிலம், முதுநிலை தாவரவியல் மற்றும் புவி அமைப்பியல் ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசு ஆணைப்படி 2018-2019 கல்வி ஆண்டு முதல் பி.பி.., மற்றும் பி.எஸ்சி., புள்ளியியல் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வியல் நிறைஞர் (FT/PT) படிப்புகள், மற்றும் முனைவர் ஆராய்ச்சி (FT/PT) படிப்புகள் வேதியியல், தாவரவியல், கணிதவியல் மற்றும் தமிழ் பாடப்பிரிவுகளில் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஆணைப்படி 2007-2008 கல்வி ஆண்டு முதல் அனைத்துப்பாட பிரிவுகளுக்கும் சுழற்சி முறை அறிமுகப்படுத்தப் பட்டது. மேலும் கணினி (CLP) கற்பிக்கும் திட்டம் இக்கல்லூரியில் மேற்கொள்ளப்படுகிறது.